பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 22, 2008

விஜயகாந்தை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் ரெடி

விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன்: நடிகர் வடிவேலு பேட்டி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலு வீடு மற்றும் அலுவலகம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகர் வடிவேலு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் துண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகர் வடிவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவர் ஒரு கட்சி சார்பில்தான் போட்டியிடுகிறார். நான் எல்லா கட்சிகளின் ஆதரவோடும் அவரை எதிர்த்து போட்டிட்டு ஜெயிப்பேன்.


திமுக, அதிமுக, பாமக போன்றவர்களுக்கு இல்லாத துணிவு வடிவேலுவிற்கு இருப்பதால் அவரை பாராட்டலாம்...

7 Comments:

Krish said...

வடிவுக்கு பின்னால் இருப்பது யாரோ?

Anonymous said...

Vadivelu can do only comedy...Avarala eppovume herovaga mudiyadhu...Avar sonna dialogue ellame andha azhu cinemala pesaradha ninchi pesirukkaro ennomo...

Anonymous said...

விஜயகாந்த் மீது சவால் விடுவதை பார்த்தால் ஒன்று டிராமா மாதிரியும் இரண்டு ஆட் பலமும் பண பலமும் உள்ள யாரோ வடிவேலு பிண்ணனியில் இருந்து காய் நகர்த்துவது போலவும் தோன்று்கிறது.

Anonymous said...

திரு வடிவேல் அவர்களே... நீங்கள் விஜயகாந்த் அவர்களை வைத்து காமெடி பன்னலையே....... உங்களை யாரோ ஆட்டுவிக்கிறார்கள், நீங்கள் ஆடிக்கொண்டு இருக்கீங்க. முடிவில் உங்களுக்கு தான் நஷ்டம். இது அரசியல்... ஆழம் தெரியாமல் காலை விடாதே....

கோடி கணக்கான மக்கள் உன்னுடைய சிரிப்பை ரசிக்கலாம். அதற்காக மக்கள் உன் பின்னால் இருக்கிறார்கள் என்று தப்பு கணக்கு போடாதே........ வீணாக உன்னுடைய பெயரை நீயே கெடுத்து விடாதே.

RagVar said...

chellam comedy kemedy pannaliye?????
sir comedy ellam padathoda podhum veliya press meet la adhaye soldreengaley...velaya paarungappu...
weena vaaya kuduthu vaila punnoda vooruku pogadheenga...

Anonymous said...

vadivelukku tamilnattu makkalai partthal kirukkangalmathiri theriyuthu pola,ivar veetu sandaikku electionla nikkiraram...ithellam romba athikam

Anonymous said...

he is a real time comedian..
- Raji