பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 23, 2008

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி விற்பனை எப்படி இருக்கிறது? - நேரடி ரிப்போர்ட்

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி விற்பனை எப்படி இருக்கிறது? - ஒரு நேரடி ரிப்போர்ட்

இன்று ஒரு ரேஷன் கடைக்கு போனேன்.
நன்றாகவே இருக்கிறது. நிறைய மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
ஆனால் அத்தனை பேருக்கும் கலைஞர் ஒரு அதி பயங்கர அதிர்ச்சி கொடுத்திருக்கிரார்.
ஐம்பது ரூபாய் மளிகை சாமான் வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி கிடைக்கும்.
அடகடவுளே! இது என்ன சோதனை? என்று வாய்பிளந்த மக்கள் வேறு வழியில்லாமல் ஒரு ரூபாய் அரிசி சாப்பிடுவதற்காக ஐம்பது ரூபாய் மளிகை பொருள்களையும் வாங்கினார்கள்.

அரிசியையே ஒரு ரூபாய்க்கு தருபவர் ஐம்பது ரூபாய்க்கு ஒரு மாதத்துக்கு தேவையான அனைத்து பொருள்களையும் தரவா மாட்டார்?
அவசியம் தந்திருக்கிறார்
25 கிராம் கடுகு
25 கிராம் மிளகு
25 கிராம் சீரகம்
25 கிராம் பெருங்காயம்
25 கிராம் மஞ்சள்பொடி
என்று எல்லாமே 25 கிராம் பாக்கெட். அனைத்தும் மிகவும் பழைய சரக்கு. கலரே கரேலென்றுதான் இருக்கின்றது.
இத்னால் யாரும் வருத்தப்படக்கூடாது அல்லவா? அதனால் பெருந்தன்மையுடன் 125 கிராம் மிளகாய்பொடி வழங்கப்படுகிறது ( இது மட்டும் சிகப்பாக இருக்கிறது )

தலைக்கும் கண்ணுக்கும் தேய்த்து குளித்துவிட்டு ஒரு ரூபாய் அரிசியை வடித்து சாப்பிடவேண்டியதுதான்
இப்படி ஒரு அபத்த ஏற்பாடு தேவையா? என்று மக்கள் முணுமுணுத்தபடி சென்றனர்.
( கார்ட்டூன் உதவி: துக்ளக் )

பிகு: இதை வைத்துக்கொண்டு ஒரு நல்ல சமையல் குறிப்பு தருபவர்களுக்கு 1 ரூபாய் அரிசி இலவசம். ( ஜெயஸ்ரீ மேடம் இதற்காவது ஏதாவது எழுதுங்க, ஆ.வியில் வந்தாலும் வரும் )

13 Comments:

Anonymous said...

மஞ்சள் பொடியின் நிறமும் கரேலென்றுதான் இருக்கிறதா?

மாயவரத்தான் said...

ஆமாம்.. 'மஞ்சள்' எப்போதுமே கருப்பு தான்.

Anonymous said...

ORU RUPAAIKKU 1kg ARISI....ELLAM SUTTHA PETHAL...

Anonymous said...

Karuppu sivappunnu oru vela avingha katchi kodiya kaatturaaingalo?

Anonymous said...

ரேஷன் அரிசியில பிரைடு ரைஸ்..
நான் ஒரு ஆர்கெஸ்டிரா வில் கி போர்டு வாசிப்பவன்.. சமீபத்தில்..சென்னை புற நகரில் ஒரு கச்சேரிக்கு சென்ற பொது.. திரும்பி வர லேட் ஆனா பட்சத்தில்.. ஒரு சாலையோர உணவு விடுதியில் சிக்கன் பிரைடு ரைஸ் ஆர்டர் செய்தோம்.. வந்தது.. உண்ட போது..ஐயோ ..ஹா ஹா...தாங்க முடியவில்லை நாற்றம்..(அரிசியிலிருந்து) கடைக்காரனிடம் கேட்டபோது.. சிக்கன் பிரைடு ரைஸ் 15 ரூ பிளேட் விக்கிற பொது என்ன பாஸ்மதி அரிசியா போட முடியும்னு கேட்டாரு.. பின்ன என்ன அரிசியில பிரைடு ரைஸ் போடுறீங்க ன்னு கேட்ட போது.. எல்லாம் தலைவர் போட்ட ஒத்த ரூபா கிலோ அரிசி தான்.. மாசம் 10 கார்டு பிடிச்சிடுவோம்லன்னு சொன்ன போது.. எனக்கு தோணிச்சி.."பேசாம பீய தின்னிருக்கலாம், இந்த பிரைடு ரைஸ் க்கு பதிலான்னு"..வீசிட்டு நடையை கட்டினோம்..சென்னையை பாக்க..

ப்ரியா கதிரவன் said...

ஜெயஸ்ரீ அவர்களைக் காணுமேன்னு தேடிக்கிட்டு இருக்கேன் ரொம்ப நாளா.....:-(
எங்க அவங்க?

Anonymous said...

கோழி கூட திங்காது - ஒரு ரூபாய் அரிசியை - நொய் நிறைய இருக்கிறது.

Anonymous said...

IV,

Idhu unmaya?

http://www.nathiyosai.com/2008/09/top-10.html

Anonymous said...

அவருக்கு பிடித்த நிறம் மஞ்சள்தாங்க..அதுக்குப்போய் இப்படி அலுத்துக்கிரிங்க!!!!..இன்னக்கி நேத்தா இது நடக்குது?..இட்லிவடை முதன்முதலாக ரேசன் கடைக்கு போய்ருகீங்க போல அரசியோட மணம் தெரியுமுல!!..போங்கப்பா வேற பொழப்பு இருந்த பொய் பாருங்கங்க!!!!

பின்குறிப்பு: கார்ட்டூன் நல்லா இருக்கு

R.Gopi said...

Yaaravadhu

Manjal Kavignar (MK), their family members, cabinet personnel family membersa indha Rs.1/- arisi saapida vaikka mudiyumaaa???

கிரி said...

//தலைக்கும் கண்ணுக்கும் தேய்த்து குளித்துவிட்டு ஒரு ரூபாய் அரிசியை வடித்து சாப்பிடவேண்டியதுதான்//

ஹா ஹா ஹா

Anonymous said...

Cartoon chancae illa... ha ha ha

Anonymous said...

இக்கடச்சூடு....
http://www.hindu.com/2008/09/24/stories/2008092455330700.htm