பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 22, 2008

ஆம்பளையா இருந்தா தனித்தனியா நில்லுங்க..- விஜயகாந்த்

"திருமண விழா மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளை விஜயகாந்த் விட்டு வைப்பதில்லை. அங்கே ஒரு மேடை போட்டு அரசியல் பேசிவிடுகிறார் என்று சொல்கிறார்கள். தி.மு.க. அந்தக்காலத்தில் இப்படித்தான் வளர்ந்தது' என்று சொல்கிறார் விஜயகாந்த்.

திருமண விழா மேடையில்...

ஈரோட்டில் நடந்த தே.மு.தி.க. கொள்கைபரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சியில்தான் விஜயகாந்த் இப்படிப் பேசினார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் அவைத் தலைவர்
பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், காங்கேயம் மாரப்பன் ஆகியோரும் கலந்துகொண்டனர். வழக்கம் போல விஜயகாந்த் பேச்சில் தி.மு.க. பற்றிய காரமான விமர்சனங்கள்
இருந்தன. அவரது பேச்சில் இருந்து சில பகுதிகள்:

""தமிழ்நாட்டு அமைச்சர்கள் கொள்ளை அடிக்கிறாங்க. காலேஜ் வாங்குறாங்க. ஆள் கடத்தல், நிலம் அபகரிப்பு... இப்படிப் பல புகார்கள் உள்ளன. முதலமைச்சரோ, "நான் விசாரிச்சேன்; ஒண்ணுமில்லை'ன்னு சொல்றார்.... மஞ்சள் துண்டு எதுக்குன்னு கேட்டால், அது நண்பர் ராமதாஸ் போட்டதுன்னு சொல்றார். அவரே கூட்டணியை விட்டுப் போயிட்டாரே, அப்புறம் எதுக்கு மஞ்சள் துண்டு?...

""எல்லா டி.வி. சேனல்களிலும் வினாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்னு சொல்றாங்க. ஆனால், கலைஞர் டி.வி.யிலே மட்டும் பாருங்க. விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சின்னு சொல்றாங்க. வினாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னா, என்ன குறைஞ்சி போயிடுவீங்க? வினாயகர் சதுர்த்தி பற்றி பேசினா, விஜயகாந்த் பி.ஜே.பி.யோட கூட்டு வைக்கிறார்னு சொல்றாங்க...

""எனக்கு அரசியல் வரலாறு தெரியுமா?ன்னு ஸ்டாலின் கேட்கிறார். நான் ஸ்டாலினைக் கேட்கிறேன். தி.மு.க.வில் இடைச்செருகலா உங்க அப்பா எப்படி உள்ளே புகுந்தாருன்ற வரலாறு தெரியுமா? கலைஞரின் திட்டங்களைப் பார்த்தா நன்றாக இருக்கிற மாதிரி தெரியும். ஆனால் கூட்டி கழிச்சி கடைசியாப் பாத்தா,
அவர் குடும்பத்துக்குத்தான் போய்ச் சேரும். இதை நான் சொல்லலை. எம்.ஜி.ஆர். சொன்னது...

""தி.மு.க.வை மட்டும் விஜயகாந்த் விமர்சிக்கிறார். அ.தி.மு.க.வை விமர்சிக்கலைன்னு சொல்றாங்க. ஆட்சியிலே இருந்திருந்தா, அவங்களையும் கேள்வி கேட்பேன்.

""கூட்டணி வெச்சா ஜால்ரா அடிச்சாகணும். நான் கைகட்டி நிற்க விரும்பலை. தமிழ்த்தாயின் தலைமகன்னு சொல்லணும். அல்லது தங்கத் தாரகைன்னு சொல்லணும். இதெல்லாம் வேண்டாம். இந்த நாட்டில் இன்னமும் பசிக்கொடுமை இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திலும் அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு நாள் கூலி 80 ரூபாய்ன்னா 40 ரூபாய், 30 ரூபாய்தான் கொடுக்கிறாங்க...

""இதை யாராவது கேட்கறாங்களா? கேட்டால், பொற்கால ஆட்சி நடத்தறோம்னு சொல்றார். தைரியமான ஆம்பளையா இருந்தா தேர்தல்லே தனித்தனியா நில்லுங்க. அண்ணா நூற்றாண்டு விழா, பெரியார் நூற்றாண்டு விழான்னு சொல்லி மக்களை ஏமாத்தாதீங்க. இதையெல்லாம் தெய்வம் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அதனால்தான் தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியா வெளியே போய்ட்டு இருக்கு. தெய்வம் சும்மா விடாது.

""காங்கிரஸைப் பார்த்து தி.மு.க. கேட்டது. "கும்பி எரியுது; குடல் கருகுது; குளுகுளு ஊட்டி ஒரு கேடான்னு'. நான் கேட்கிறேன். "கும்பி எரியுது; குடல் கருகுது; உங்களுக்கு ஏ.ஸி. கேட்குதா?'...

""மதுரையிலே உங்க மகனை கட்சியை விட்டே நீக்குனீங்க. இப்ப உங்க மகன்கிட்டே அதிகாரிங்க பூரா கையைக் கட்டி நிக்கிறாங்க. முதல்வருக்குக் கூட அந்த மரியாதை கிடையாது. மதுரையிலே ராயல் கேபிள் விஷனை பையன் நடத்தறார். அங்கே எல்லா சேனல்களையும் ஜனநாயக ரீதியா பார்க்க முதல்வர் உத்திரவிடணும்'' என்று விஜயகாந்த் தி.மு.க.வை ஒரு பிடி பிடித்தார்.

( நன்றி: துக்ளக் )

0 Comments: