குமுதம், விகடன் மீது ஜெ வழக்கு - அதற்கு ஜூவி ஏற்கனவே மன்னிப்பு கேட்டது, அதை தொடர்ந்து இப்போ குமுதம் விளக்கம் ( மன்னிப்பு என்று எழுதியிருந்தேன், குமுதம் விஜயகாந்த் மாதிரி மன்னிப்பு அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை )
அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களுடைய அறிவுறுத்தலின்படி, தங்களின் வழக்கறிஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் அவர்கள் எங்களுக்கு அனுப்பியிருந்த `நோட்டீஸ்' கிடைக்கப் பெற்றோம்.
அதில், கடந்த 11.9.08 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான `எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் தி.மு.க.வில் சேர முயன்றார் ஜெயலலிதா-தூது சென்றவரின் பகீர் வாக்குமூலம்' என்ற தலைப்பில் வெளியான அட்டைப் பட பேட்டிக் கட்டுரை, இட்டுக்கட்டி எழுதப்பட்ட அப்பட்டமான பொய் என்றும், அப்படியொரு முயற்சியை தாங்கள் செய்யவில்லையென்றும் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படி மறுப்பதற்குத் தங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதை வெளியிட வேண்டிய கடமையும், நாங்கள் பிரசுரிப்பது பொய்யாக இருக்கும் நிலையில் வருத்தம் தெரிவிக்க வேண்டியதும் எங்கள் கடமை என்பதிலும் சந்தேகமில்லை.
ஆனால், `குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிகை என்பது தங்களது `அரசியல் எதிரி' என்று தங்களால் வர்ணிக்கப்படும் திரு.கருணாநிதி அவர்களின் கட்டளைப்படியே செயல்படுவதாகவும், அந்த வகையிலேயே அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதாகத் தாங்கள் நம்புவதாகவும், தங்கள் மறுப்பில் கூறியிருப்பது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையையே இழிவுபடுத்தும் சொற்கள் என்பதும், அதன் காரணமாக அதில் பணியாற்றும் எங்களுக்கு மட்டுமல்ல, நிகழ்காலத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் எந்த அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல.
`குமுதம் ரிப்போர்ட்டர்' இதழை தொடர்ந்து வாசித்து வரும் தாங்கள், மக்கள் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதை நாங்கள் பாரபட்சமில்லாமல் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் நாங்கள் திரு. கருணாநிதி அவர்களின் கட்டளைப்படி செயல்படுகிறோம் என்று தாங்கள் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதில் எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது வாக்களிக்கும் மக்களே தவிர, வாக்குக் கேட்டு பிரசாரம் செய்யும் அரசியல் தலைவர்களோ, பத்திரிகைகளோ அல்ல. இந்நிலையில், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தேகமேயில்லாமல் அமோகமாக வெற்றி பெறப்போகும் தங்கள் கட்சியின் வெற்றியைத் திசை திருப்புவதற்கென்றே, நாங்கள் (கருணாநிதியின் கட்டளைப்படி!) அந்தப் பொய்ச் செய்தியை வெளியிட்டிருப்பதாகக் கூறுவது எப்படிச் சரியாகும் என்பது உண்மையிலேயே புரியவில்லை.
அதேபோல், தாங்கள் தேசப்பற்றுமிக்க பொறுப்புள்ள குடிமகள் என்பதை நாங்கள் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. சந்தேகிக்கவுமில்லை. அதேசமயத்தில், தங்களைப் போலவே, நாங்களும், எங்கள் வாசகர்களும், அத்தனை ஏன்? நேர்மையாக வாழும் அனைவருமே தேசப்பற்றுமிக்க பொறுப்புள்ள குடிமக்கள்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது பேட்டிக் கட்டுரையின் காரணமாக தங்களைப் போலவே, மனவேதனையடைந்த ஏராளமான தங்களின் நண்பர்களும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும், தங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். தங்கள் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் சுலபமாகத் தங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முடியும் என்பது உண்மையானால் அது உண்மையிலேயே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
உண்மையிலேயே தாங்கள் மிக எளிமையாக இருந்தவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் தங்களைப் பேட்டியெடுத்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். தாங்கள் மறந்திருப்பீர்கள் என்றாலும் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். காரணம், தங்களை அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். அவர்கள் நியமித்தவுடன், தாங்கள் பத்திரிகைக்குக் கொடுத்த முதல் பேட்டி எனக்குத்தான் என்பதாலும், பேட்டிக்காக என்னைத் தங்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் `இதயம் பேசுகிறது' மணியன் என்பதாலும், அதைத் தங்களால் நிச்சயமாக நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
அந்தப் பேட்டியின்போது, `தமிழகத்தின் உயர் போலீஸ் அதிகாரியாக(டி.ஜி.பி) இருப்பவர், ஒவ்வொருநாள் காலையிலும் தங்கள் இல்லத்திற்கு வந்துதான் கட்டளைகளைப் பெற்றுச் செல்கிறாரா?' என்பது போன்றும், `கட்சியிலுள்ள மூத்தவர்களுக்குத் தாங்கள் மரியாதை தருவதில்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறதே?' என்பது போன்றும், தங்களைக் கோபப்படுத்துகின்ற மாதிரியான கேள்விகளைக் கேட்டபோதுகூட, தாங்கள் அதற்கு வெகு இயல்பாகவும், சகஜமாகவும் பதில் அளித்தீர்கள். அப்போது `கருணாநிதியின் கட்டளைப்படிதான் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கிறீர்களா?' என்று தாங்கள் கேட்கவில்லை. அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
வழக்கறிஞர் மூலம் மறுப்பு வெளியிடக் கோரும் தங்களின் நிலையை தாங்களாகவே அனுப்பியிருந்தாலும் அதனை உரிய முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களைப் போன்ற நடுநிலைப் பத்திரிகைகளுக்கு உள்ளது என்பதை உணர்ந்து பிரசுரம் செய்திருப்போமே!
அந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு மிகவும் வேண்டிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தம்மிடம் அப்படிச் சொன்னது உண்மை என்று பத்திரிகையாளர் `அசைட்' பாஸ்கர் சொன்னதை வெளியிட்ட நாங்களே, அதை முழுப் பொய் என்று மறுத்துள்ள தங்களின் மறுப்பையும், எங்களது விளக்கத்தையும் இங்கே வெளியிட்டுள்ளோம். அந்தப் பேட்டிக் கட்டுரையில் தங்கள் மனம் புண்பட்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். அது எங்கள் நோக்கமல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
-ஆசிரியர்
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 16, 2008
ஜெ வழக்கு - குமுதம் விளக்கம்
Posted by IdlyVadai at 9/16/2008 04:24:00 PM
Labels: அரசியல், பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
இ.வ. இதில் அவர்கள் மன்னிப்போ, (அ) வருத்தமோ தெரிவித்ததாகத் தெரியவில்லையே?!
Rightly as Kumudam said, it was not their intention to hurt Jayalalitha's feelings. Their intention was to increase their profits by publishing unverified sensational news, so that the owners can take their family to switzerland for holiday and they can buy another house at ECR. Finally, their intention was to make fools out of public.
Also, they are not bothered if Rajinikanth's feelings were hurt, because Kumudam knows for sure he will not file a case against them.
Kumudam publishers must have shit in their pants after seeing the lawyers notice. I hope they publish a similar regret letter to everyone who have been hurt by Kumuram. Then and only then we can accept this magazine as a unbiased publication. Till then, it is not better than toilet paper. It is just gossip magazine, not to be treated seriously.
ஓஒ இதுக்குத் தான் மன்னிப்புன்னு சொல்லுவாங்களோ? நல்ல இருக்கே... இதுக்கே மறுபடி ஒரு வழக்கு போட்ட்ருவாங்கையா புரட்சித் தலைவி..
(போட்டுப் புரட்டி எடுத்துட்டாரு ஆசிரியர்)
//// குமுதம் ரிப்போர்ட்டரின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் எந்த அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது////
ஆமாம். இந்த மாதிரி ஆதாரமற்ற செய்திகளைப் படிக்கும் போது மன உளைச்சல் தான் ஏற்படுகிறது
யோசிப்பவர் மற்றும் பலர் கேட்ட புத்திசாலித்தனமான கேள்வியால் தலைப்பை மாற்றியுள்ளேன்.
குமுதம் விஜயகாந்த் மாதிரி அவர்கள் மன்னிப்பு அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை :-).
( குஷ்பு, கே.பி ஏப்ரல் ஃபூல் மேட்டர் தவிர்த்து )
//// குமுதம் ரிப்போர்ட்டரின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் எந்த அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது////
ஆமாம். இந்த மாதிரி ஆதாரமற்ற செய்திகளைப் படிக்கும் போது மன உளைச்சல் தான் ஏற்படுகிறது
நூறு சதவிகிதம் உண்மை
ஜீவி,ரிப்போட்டர் இரண்டின் மீதும் வாசகர்கள்தான் வழக்குத் தொடர
வேண்டும்.
Post a Comment