பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 15, 2008

அதிமுகவிலிருந்து எஸ்.வி.சேகர் நீக்கம் ? - பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, எஸ்.வி.சேகர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வருகின்ற 19-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இவருக்கு அது வரவில்லை என்று நான் சொல்ல வேண்டாம்.

இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க.வில் இருந்து, நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் நீக்கப்பட்டதாக தகவல் பரவியது.

பேட்டி:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகின்ற 19-ந் தேதி நடக்கிறது. ஆனால், எனக்கு இதுவரை அழைப்பிதழ் வரவில்லை. நான் முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் போட்டோ எடுத்துக் கொண்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ன முடிவு எடுத்தாலும் நான் வருத்தப்பட மாட்டேன். எனக்கு தேசம், நாடு, சாதி தான் முக்கியம். பிறகுதான் மற்றவை எல்லாம். எனது வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் என்பதை நான் பிறக்கும் போதே இறைவன் எழுதி வைத்துவிட்டார்.

நான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டால் உடனே காஞ்சீபுரம் சென்று சங்கராச்சாரியாரைத்தான் பார்ப்பேன். ஏனென்றால், அவர்தான் என்னை அ.தி.மு.க.வில் சேரச்சொன்னார். கடந்த பொதுக்கூட்டத்தின்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்னிடம், `நான் இருக்கிறேன் சேகர், கவலைப்படாதீங்க' என்று கூறினார். எனவே, அவர்கள் எடுக்கும் முடிவுக்கு பிறகுதான், என்ன செய்யலாம் என்று யோசிப்பேன்.

நீங்க இவ்வளவு அப்பாவியா ?

3 Comments:

Anonymous said...

'எனது வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் என்பதை நான் பிறக்கும் போதே இறைவன் எழுதி வைத்துவிட்டார்.'

தீர்மானிக்க ஜெயலலிதா இருக்கும் போது இறைவன் எழுதி வைத்ததாக சொல்கிறாரா, இவரை கட்சியிலிருந்து இதற்காகவே தூக்க வேண்டும் :).

Anonymous said...

என்ன கொடுமைய்யா இது? இத்லி வத'ன்னு மலையாளத்துல இருக்கு. வதன்னா வதைன்னு அர்த்தம். :-)

A Blog for Edutainment said...

உண்மையிலேயே புலிவருது கதைதானா? இல்லை வேறு எதுவும் உண்மையிலேயே நடந்துவிட்டதா?