அதிமுக மேடைகளில் இஞ்சி இடுப்பழகி போன்ற பாடல்களுக்கு கலைஞர்கள் நடனமாடக்கூடாது என்றும், எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது
நான் வரும் வழியில் என்னை வரவேற்கும் விதமாக மேடைகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டி ருந்தது. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு மேடையில் இஞ்சி இடுப்பழகி என்ற பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர். இது விரும்பத்தகாதது. நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது. கட்சியினர் பழைய பழக்க வழக்கங்களை மறக்கக்கூடாது. மாற்றக்கூடாது. இனிமேல் கட்சி மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். இஞ்சி இடுப்பழகி போன்ற பாடல்கள் இடம்பெறக்கூடாது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, September 19, 2008
நோ 'இஞ்சி இடுப்பழகி' - ஜெ அறிவுரை
Posted by IdlyVadai at 9/19/2008 05:00:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
'இனிமேல் கட்சி மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.'
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க போன்ற பாடல்களை
பாடலமா/ஆடலாமா :)
Atleast Jayamam is not giving preference for Kalai Nigalchigal like our CM MK...
Idhu varaverkathakathuthane...
அப்போ இனிமே அதிமுக மேடைகளில் MGR பாடல்களான நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க, ஜவ்வாது மேடையிட்டு, முத்தமோ மோகமோ, கண்களிரண்டும் விடிவிளக்காக, கொண்டாய் ஒரு பக்கம் குலுங்க குலுங்க..... போன்ற பாடல்களுக்கு தான் நடனம் ஆட வேண்டுமா???? நல்ல விஷயம் தான்...."Jaya mam" நல்ல வேளையாக அவரோட பாடல்களுக்கு நடனம் ஆட சொல்லலை, சொல்லியிருந்தா நிறைய அரைகுறை நடன காட்சிகள் மேடையில் நடந்திருக்கும்...நாடு பொழச்சிது.
இப்ப வருகிற பாடல்களுக்கு அந்த கால பாடல்கள் எவ்வளவோ தேவலை...சில பேரு ரொம்ப வயசான காலத்துல கூட நமிதவோட அரைகுறை ஆடை படங்களை பார்த்து ரசிக்கிறாங்க...அதுல கிண்டல் பேசும் கேலி கவிதைகளும் வருது...
இதை எல்லாம் பாக்கும் பொது அந்த அம்மா சொன்னது எவ்வளோவோ பரவாயில்லை..
Post a Comment