பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 13, 2008

தமிழ் புத்தாண்டு விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சித்திரைக்கு பதில், தை மாதம் 1-ந் தேதி தமிழ் புத்தாண்டு என்று மாற்றி அமைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி பொதுநலன் கருதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்...

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சித்திரை மாதம் 1-ந் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இதை பின்பற்றி வருகிறார்கள். சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு தொடங்கி பங்குனி மாதம் நிறைவடையும்.

60 ஆண்டு பஞ்சாங்க முறை உள்ளது. ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உள்ளது. இந்த 60 ஆண்டும் சுழற்சி முறையில் வரும்.

இந்த மரபுகளை மீறி, தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு சட்டத்தை இயற்றியுள்ளது. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு இல்லை என்றும், தை மாதம் 1-ந் தேதி தான் தமிழ் புத்தாண்டு என்றும் அந்த சட்டம் கூறுகிறது. மதம், மரபு போன்றவற்றில் குறுக்கிடுவதற்கு அரசுக்கு அதிகாரமில்லை.

இந்துக்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்ததை மாற்றி அமைக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு அதிகாரமில்லை. இவ்வாறு சட்டத்தை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும்.


நோட்டீசு

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீது 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புத்தாண்டுக்கு ஸ்டே என்று சொல்லாமல் இருந்தால் சரி

பழைய பதிவு: தீபாவளி தேதியை மாற்ற முடியுமா– டிராபிக் ராமசாமி கோர்ட்டில் கேள்வி

2 Comments:

Anonymous said...

அரசியல் சாக்கடையில் புரளும் அரசியல் வாதிகள் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் மாத்தி அமைக்கட்டும். ஆனால் நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு... அதை விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சி போடும் மஞ்சள் துண்டு காரர்களால் மாற்றிவிட முடியாது.

Anonymous said...

It was an open plan to evangelize the Tamil culture/Thiruvalluvar and to suck out the Hindu factor existed in the original Tamil new year day.

Manja thundu must be laughing all the way to his banks for the funds from Missionaries just for an announcement of the change. A win-win situation for him huh.