பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 11, 2008

ஜெயிடம் மன்னிப்பு கேட்டது விகடன்

குமுதம், விகடன் மீது ஜெ வழக்கு - அதற்கு Folloந்-up ( ஜூவி ஸ்டைலில் )

ஒரு செய்தி... ஒரு வருத்தம்!

கடந்த 10.9.08-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழ் கவர் ஸ்டோரியில் இடம்பெற்ற தகவல்களை முற்றிலுமாக மறுத்து, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான செல்வி ஜெயலலிதா சார்பாக அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். 'குறிப்பிட்ட அந்தச் செய்தி, வரிக்கு வரி உண்மைக்குப் புறம்பானது... உள்நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ளது' என்பதோடு, 'அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி என்பது முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி கட்சிக்காக வகுத்துள்ள விதிமுறைகளின்படியே நிரப்பப்படுகிறது. அதன் தேர்தல் நடைமுறையில் யாராலும் தலையிட்டு தவறான ஆதிக்கம் செலுத்த இயலாது' என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம். குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- ஆசிரியர்
( நன்றி: ஜூவி )

13 Comments:

Anonymous said...

//எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.//

//ஜெயிடம் மன்னிப்பு கேட்டது விகடன்//

இரண்டிற்கும் வித்தியாசம் இல்லையா?

மடல்காரன்_MadalKaran said...

தினமணி 75ம் ஆண்டு துவக்கம் பற்றி இட்லிவடையில் ஏதாவது சொல்வீர்களா?

அன்புடன், கி.பாலு.

IdlyVadai said...

அனானி - ரஜினி வருத்தம் தெரிவித்த போது பத்திரிக்கைகள் அதை மன்னிப்பு என்று தான் சொன்னது. அதே போல் தான் இதுவும்

மடல்காரன்_MadalKaran said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNR20080909125349&Title=Cartoon+Page&lTitle=L%F4oh%E5u&Topic=0&ndate=9/11/2008&dName=No+Title&Dist=0

இந்த கார்ட்டூன் பார்த்தீங்களா?

Anonymous said...

எதுக்கு விகடன் ,குமுதம் ஜெ ஜெ பற்றி எழுதுவானேன் ..மன்னிப்பு கேட்பானேன் ..குப்புற விழுந்தாலும் மீசை-ல மண் ஒட்டல மாதிரி..இதுக்கு தான் தமிழ்நாட்டுல ஈனா வானா ..ரஜினி-னு ஒருத்தர் இருக்காரே ...இவனுகளுக்கு உண்மைய எழுத துப்புஇல்ல.. நாட்டுக்கு தேவையானது பற்றிஎழுத வக்குஇல்ல பேருதான் பெத்த பேரு..அரசியல் வட்டத்துல கேள்வி பட்ட விஷயத்த எழுதுனாங்கலம் ..என்ன பொறுத்தவரை இது செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் வரும் வாசகனுக்கு செய்யும் துரோகம் .. வம்பு படிக்க வர வாசகனுக்கு தான் இந்த பத்திரிக்கை அப்டின்னு சொன்ன .. அது படிக்குறவனும் வெட்டி பய ..அத பதிபிக்குரவனும் வெட்டிபய ..இந்த விளங்காத மன்டயங்க..ஒரு நல்ல மனுஷன் வருத்தம் தெரிவிச்சத ஏதோ நாட்டுக்கு துரோகம் பண்ணமாதிரி ஒரு பொய் பிரச்சாரம் ..ஒரு படம் ஓடுமா இல்லையா னு முடிவுக்கு வர கொஞ்சம் கூட கால அவகாசம் கொடுக்காம ..படம் பார்க்க போரவன்யும் கெடுத்து... துட்டு பாக்குறாங்க

இந்த மாதிரி குப்பையெல்லாம் துட்டு கொடுத்து வேற படிக்கிற கூட்டம் இருக்குது..
என்கிட்டே நிறய பேரு சொல்லி இருகாங்க விகடன் குமுதம் எல்லாம் வருஷ கணக்குல படிசிடுகிட்டு இருக்கோம் இப்போ தான் தரம் தாழ்ந்துடுசு.. -னு ..என்ன போல புதிய வாசகர்கள் இத நம்ப தான் முடியல..நான் இந்த கருமத்த படிக்கிறது இல்ல ..எப்பவாவுது இட்லிவடை எழுதினா..கண்ணுல பட்டா..உண்டு..

என் சார்புல விகடனுக்கும் குமுதத்திற்கும் உப்பு ஒரு மூட்டை வாங்கி அனுப்பலாம் என்று உள்ளேன்..என்ன சொல்கிறீர் இட்லிவடை???

Krish said...

/// அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே ////

என்ன அரசியல் வட்டாரம்? இப்படித்தான் பல பத்திரிக்கிகைகள் சும்மா எதாவது பரபரப்புக்கு எழுதுறது.

Anonymous said...

யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை,ஆனால் கிசுகிசு,வதந்ததிகளை வைத்து
பிழைப்பு நடத்துவதால் வக்கீக் நோட்டிஸ் வந்தால் அவ்வப்போது
வருத்தம் தெரிவித்துவிடுவோம் என்று
ஒவ்வொரு இதழிலும் ஜுவியும்,ரிப்போட்டரும் அறிவித்துவிடலாம்.

Anonymous said...

Hi Idlyvadai,

Can you give us the URL for this?

M Arunachalam said...

IV,

I enjoyed your reply to anony's comment. I too thought the same way like you after reading Jaundice Vikatan's Sappai Kattu.

I had a question in my survey on JV's Unethical Journalism. It was "Why JV is NOT targeting political parties?". The options I gave were (1) Acid Attack (2) Burnt Alive (3) Auto Rickshaw to house. You know who holds the copyright (?) for inventing the first & last options.

This JV Apology episode illustrates clearly how these so-called reputed magazines are trying to present "their own views" as news & rumours. If only they have reported truth, they need not have surrendered so meekly & so quickly.

DOWN WITH JAUNDICE VIKATAN & ITS VETTI READERS.

Arun

IdlyVadai said...

மடல்காரன் - http://www.vikatan.com/jv/2008/sep/14092008/jv0502.asp

மாயவரத்தான் said...

//அனானி - ரஜினி வருத்தம் தெரிவித்த போது பத்திரிக்கைகள் அதை மன்னிப்பு என்று தான் சொன்னது. அதே போல் தான் இதுவும்//

Nethi Adi!

Anonymous said...

Hi,

My view about JV's apology

http://pathivu.wordpress.com/2008/09/11/jv/

Mohan

Selva said...

the way you have portrayed is different from the content of apology in vikatan. Why are you so biased against vikatan?