பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 22, 2008

அப்படியா ? ஏன் ?

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் தகவல்களை பெற முடியாது.

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மை செயலாளர் இளங்கோவன் ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குனரகம் ஆகிய 2 துறைகளில் இருந்தும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு பெற முடியாது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த 2 துறைகளிலும் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கேட்க முடியாது.

தகவல் வேண்டும் என்றால் சம்திங் கொடுக்கணும் போல :-)

யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

2 Comments:

SurveySan said...

///தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மை செயலாளர் இளங்கோவன் ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குனரகம் ஆகிய 2 துறைகளில் இருந்தும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு பெற முடியாது என்று கூறியுள்ளார்////

இதெல்லாம் அவரு முடிவு பண்ற விஷயமா என்ன?
RTIஎல்லா அரசு இயந்திரத்துக்கும் பொதுவான சட்டம் இல்லியா?

ஆளாளுக்கு இப்படி, ஒவ்வொரு துறையா, இன்ஃபர்மேஷன் தரமுடியாதுன்னு சொல்லிட்டா, RTI உபயோகிச்சு, எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுது, யார யாரு வச்சிருக்கா, போன்ற நாட்டுக்குத் தேவையான விஷயம்தான் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியும். :)

வெளங்கிடும்! :(

SurveySan said...

couldnt resist