பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 09, 2008

கிள்ளி எறிய வேண்டும்

ராஜ் மிரட்டல்-மன்னிப்பு கேட்ட ஜெயா பச்சன்

ஹிந்தியில் பேசியது தவறுதான் என்றும் அதற்கு பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்பதாகவும் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் அறிவிதச்துள்ளார்.

மும்பையில் நடந்த புதுப்படத் துவக்க விழாவில் பேசிய ஜெயா பச்சன், நாங்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்துள்ள குடும்பம். எங்களுக்கு இந்தி மட்டும்தான் பேசத் தெரியும். அதற்காக மராத்தியர்கள் தவறாக நினைக்கக் கூடாது. மற்றபடி எங்களை விமர்சிக்கும் ராஜ் தாக்கரே யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு ராஜ் தாக்கரேவி்ன் மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் நடித்த படங்கள், அவர்கள் தொடர்புள்ள விளம்பரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே புறக்கணிக்க வேண்டும் என பகிரங்கமாக மிரட்டியது.

அதோடு நில்லாமல் மும்பை தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த அமிதாப்பின் தி லாஸ்ட் இயர் பட போஸ்டர்கள் மீது ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் தார் பூசியும், சாணி அடித்தும் எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஐயோ இப்படி நடந்துவிட்டதேன் என்று நினைக்க வேண்டாம், நம் தமிழ் நாட்டில் பார்க்காததா ?

இதைத் தொடர்ந்து ஆங்கிலப் பத்திரிக்கையொன்றில் தனது நிபந்தனையற்ற மன்னிப்பைத் தெரிவித்துள்ளார் ஜெயா பச்சன்.

நான் இந்தியில் பேசியது, மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வசிக்கும் மராத்தியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

துரோணா ஆடியோ விழாவில் நான் பேசியதா சிலர் தவறாக சித்தரித்துள்ளார்கள். நானும் இந்த மும்பையைச் சேர்ந்தவள்தானே... எங்களுக்கு எல்லாமும் தந்த இந்த நகரை என்னால் எப்படி அவமதிக்க முடியும்?


அது சரி, தமிழ் நடிகைகள் எல்லாம் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள், ஆனால் தமிழ் அல்லாத நடிகைகள் ( கஷ்டப்பட்டாவது ) தமிழில் பேசுகிறார்கள். இவர்களை என்ன செய்யலாம் ?


கொசுறு-1: ஒருமுறை ரஜினியின் மகள் சவுந்தரியா பிரஸ் மீட் போது ஆங்கிலத்தில் பேசினார், பிரஸ் மக்கள் மேடம் தமிழில் பேசுங்கள் என்று சொன்னவுடன், லதா ரஜினி காந்த் "என் மகளுக்கு தமிழ் அவ்வளவு சரியாக பேச வராது என்று (பெருமையுடன்) சொன்னார்.
கொசுறு-2: அதே போல் இந்த வீடியோவை பார்த்தால் கமல் மகள் எப்படி திக்குமுக்கு ஆடுகிறார் என்று உங்களுக்கே புரியும்.
( பார்க்க : http://in.youtube.com/watch?v=P6d_rgh06yo&feature=related )

கொசுறு-3: முன்பு திரிஷா "எனக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது என்று சொன்னதற்கு" நம்ம டி.ஆர் ஒரு வாங்கு வாங்கினார்.

கொசுறு-4: சரத்குமார் மகள் வரலட்சுமி தன் தந்தை ஆரம்பித்த கட்சியின் பெயரை ஒரு பேட்டியின் போது சொல்ல சிரமபட்டார்.

பிகு: போன மாசம் தான் சுதந்திர தினம் கொண்டாடினோம்.


18 Comments:

Krish said...

ரஜினி, கமலை விடுங்கள்...சராசரி சென்னை வாழ் தமிழ்ப் பொண்ணுங்களே தமிழ் பேசுவதில்லை. நிறைய பேருக்கு பேசத் தெரியலே. நிறைய சென்னை வாழ் ஆண்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களின் சின்னத்திரை பேட்டியைக் காணும் போது வேதனையாக உள்ளது. தப்பு தப்பாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். காபி வித் அணு போன்ற மேல் தட்டு மக்கள் அதிகம் பங்கு பெரும், அதிகம் கண்டுக் களிக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தாலே புரியும்.

Anonymous said...

paththa vechutiye parattai!

Sambar Vadai said...

எரிய ? எறிய ? :-)

ஒருவர் சொன்னார். "நான் பெங்காலி, எனது மனைவி உ.பி (இந்தி). எனது குழந்தைகள் (சிறுவர்கள்) பேசுவதோ இரண்டு தென்னிந்திய மொழிகள் (மற்ற சிறுவர்களுடன் பள்ளியில் படிப்பதால்/விளையாடுவதால்). இப்போ நாங்க எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என தெரியவில்லை"

கமலே தமிழ் பேசினால் புரிவதில்லை. அவருடைய பெண்களிடம் ஆங்கிலம் பேசிதான் வளர்த்திருப்பார். மொழி கலப்புத் திருமணம் செய்தால் இந்தப் பிரச்னைகள் வரத்தான் வரும்.

அதுமாதிரி ரஜினியோ மராட்டி-கன்னடம். மனைவியோ ஐயங்கார் தமிழ். குழந்தைகளை தமிழ்நாட்டில் வளர்த்திருந்தாலும் ஆஸ்ரம் பள்ளியில் படிப்பில் ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி இதுதான் இருக்கும்.

இதற்கெல்லாம் சிறந்த உதாரணம் சிவகுமார் தான்.


அபிஷேக் பச்சனுக்கும் (உபி இந்தி) ஐஸ்வர்யாராய்க்கும் (துளு) பிறக்கும் குழந்தைகள் மும்பையில் வளர்ந்தால் மராத்தி பேசுமா ? இந்தி பேசுமா ? துளு பேசுமா ?

கலப்பு மணம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்தின் குழந்தைகளும் பெற்றோரும் இந்த இக்கட்டை (?!) சந்திக்க நேரும். கடைசியில் எந்த கலாச்சாரத்துடன் ஐக்கியபடுத்திக்கொள்ள முடியாமல் போகும்.

Arun said...

//போன மாசம் தான் சுதந்திர தினம் கொண்டாடினோம்//

மறந்தே போச்சு!!

நாரத முனி said...

நாயை அடிப்பானேன் "எதையோ" சுமப்பானே

Anonymous said...

தோமையார் வழி வந்த 2000 ஆண்டுத் தமிழ் கலாசாரத்துக்கு சினிமா நடிகையர் தமிழ்த்தொண்டு ஆட்டுவது ஏன் அவ்வளவு முக்கியமாகிப் போனது?

ChamathuSiva said...

Un-invited comment from Jaya Bachan and childish behaviour from the concerned party. At this rate, there will be enough news for our newspapers (blog sites like IdlyVadai too will have a field day) to survive with improved popularity and readership for rest of the year and even well into next year too!!

யு.எஸ்.தமிழன் said...

>>>>போன மாசம் தான் சுதந்திர தினம் கொண்டாடினோம்.


இதுக்கும் யாரோ எதோ ஒரு மொழி பேசுவதற்கும் பேசாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? சுதந்திரம் வாங்காமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதா?

Anonymous said...

"கிள்ளி எறிய வேண்டும்"
மிக சரியாக சொன்னீர்கள்.

Anonymous said...

இ.வ,

இந்த கொசுறு நியூஸ் எல்லாம்.. இந்த பொண்ணுங்க..வேணும்னே பீட்டர் வுடறது.. உள்ளுக்குளே பேட்டை ரேஞ்சுக்கு பேசுறது.. வெளியிலே.. "எனிக்கு..தமிள் சரியா வராது" ன்னு பிலிம் காட்டுறது... எதை எதையோ நோண்டுற பா.ம.க, மற்றும் தெருமா வளவன் எல்லோரும், இதை நோண்டினா நல்ல இருக்கும்..

தமிழ் பொண்ணா இருந்தாலும், திரிஷா, சரத்குமார் பொண்ணு, கமல் பொண்ணு எல்லாம் ஒரு புளிப்புக்காக இப்படி பேசுறது அவங்க ஆயி அப்பனுக்கே உரைக்கணும்.. டி.ஆர் ஐ யாராவது லேசா நிமிண்டி விடுங்க..இந்த பிரச்சினையை சொல்லி .. இப்போதைய நிலைமையிலே அவர் தான் சரி.. :))

Anonymous said...

http://www.charuonline.com/sep08/NextChiefMinister.html

Super article by Charu. Hope you will agree with this atleast.

Anonymous said...

You have to learn from European to preserve your language. There are lot of marriage between different ethnic groups speaking different language and having culture. We instead of having love to our mother tongue have created hatred to other languages. For example in Denmark, every one speak only Danish and also learn in Danish. They speak very good English but only when required. If you are there for a short stay then you can survive with English but for long stay (more than 3 years), you need to learn Danish. Every sign board will be in Danish. All official communication is also in Danish. When required Govt. provides a translater in your language (even in Tamil). In school, if you are a foreigner and staying for less than 3 years, you can put your childrens in International English Medium School. For long stay you need to learn Danish and you will have to go to Danish School. You will also be taught English in Danish medium school. Only in India, you never learn any language (including English). You mix up different language and speak something ...
The worst thing is it becomes a style.

When you want to marry a Dane, then you have to learn Danish if you want to live in Denmark and if the Dane want to live in India, he/she will learn your language. Even if they are visiting another country they will learn that language a little bit. I have seen a CEO of a company learning Hindi and Chinese since they had offices in India (Delhi) and China ...

Not only in Denmark but also I have seen this in Swiss, Italy, Sweedan, and France also ... I have seen an american lady speaking Hindi with me in Zurich Airport. But only I was not able to speak with her as I don't know Hindi.

Anonymous said...

nice

Anonymous said...

தினமலர் பத்திரிகை இணைய தளத்தை மேற்படியான்கள் நாட்டிலே தடை செய்து விட்டார்களாம். அதனாலென்ன? ஏற்கனவே உலக நடப்பு தெரியாதவன்கள். இன்னும் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று கத்தட்டுமே?

அடுத்தவர்கள் கடவுள்களை இந்த நாதாறிகள் எவ்வளவு திட்டுகிறான்கள்? வலி என்றால் என்ன என்று ஒவ்வொருவரும் இப்போது திருப்பி அடிக்கும் போது தான் அவனுங்களூக்கு புரியும். அமெரிக்கா, தினமலர் போல பலர் வர வேண்டும்.

Unknown said...
This comment has been removed by the author.
R.Gopi said...

Anonymous said...

தினமலர் பத்திரிகை இணைய தளத்தை மேற்படியான்கள் நாட்டிலே தடை செய்து விட்டார்களாம்.

-----------------------------------

Unmai seidhi. I read it in the morning, but within 1 hour, its blocked.

Vaazhga PAGUTHARIVU, Vazhga MANJAL KAVIGNAR (MK)

Anonymous said...

SPB used to say, that everyone should learn the language as their own which gives them a career and life. He's absolutely right.

Anonymous said...

இந்தி எதிர்ப்பை கிள்ளி எறிய வேண்டும் என்று கூறிய நீங்கள் ஒரிசா மட்டும் குஜாராத படுகொலைகளை கிள்ளி எறிய வேண்டும் என்று கூறவில்லையே.

உங்களின் credibility முற்றிலும் போய் விட்டது