பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 12, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 12-09-08

நீண்ட நாட்களுக்கு பிறகு முனி கடிதம்.

மை டியர் இட்லிவடை,

முதலில் ஒரு கேள்வி : காந்திக்கு பிறகு அதிகம் பாதயாத்திரை போனவர் யார் ? விடை கடைசியில சொல்றேன்...

ஹேப்பி ஓணம். காலை எஸ். எஸ். ம்யூசிக் பார்த்தியா? ஓணம் ஸ்பெஷல். ஜிலுஜிலுன்னு எல்லாமே முண்டு கட்டிய பெண்டுகள் பாட்டா போட்டான். பண்டிகைகளை இப்படித்தான் செலிபரேட் செய்யணுமா? ஒரு தார்மீகக் கோபம் வந்தாலும் ப்ரோக்ராமை விடாம பார்த்து முடிச்சிட்டுத்தான் எந்திரிச்சிப் பல் விளக்கப் போனேன்.

ஆய்வுச் சாலை Big Bang நியூஸ் படிச்சியா? ப்ளாக் ஹோல் பிரச்னை அது இதுன்னு பலபேர் பீதி கிளப்பிட்டுத் திரியறாங்க. நீ அதுக்கெல்லாம் பயப்படாத. பிரபஞ்சம் உருவான விதத்தை ரொம்ப சின்ன சைஸ்ல செஞ்சி பாத்திருக்காங்க. அவ்ளோதான். அப்படியே ஒரு ப்லாக் ஹோல் உருவானா, தொட்டு எடுத்து நெத்தில பொட்டா வெச்சிக்கலாம். பெரிய ப்ராப்ளம் எதுவும் இல்லை. ஆனா இந்த சம்பவத்த வெச்சி ஒரு நல்ல சயின்ஸ் ஃபிக்‌ஷன் எழுதலாம்னு தோணுது. சே, இந்த சமயம் பாத்து சுஜாதா செத்துப் போயிட்டாரு. சுஜாதாவுக்கு அடுத்தபடியா வாசகர் வட்டம் உள்லதா சொல்லிக்கறவங்களுக்கு சயின்சும் தெரியாது, ஃபிக்‌ஷனும் தெரியாது. அதான் ப்ராப்ளம். சரி விடு.

அமெரிக்க சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று.

அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின்வெட்டுன்னு ஆற்காடு வீராசாமி சும்மா பூந்து விளையாடறாரு. மக்க்ள் ரொம்ப கொதிச்சிப் போய் இருக்கறதா பத்திரிகைக்காரங்க நியூஸ் போடறாங்க. இப்ப ஏதாவது எலெக்‌ஷன் வந்தா கழக ஆட்சி பூட்டகேசாம். பேசிக்கறாங்க. கலைஞர் என்னடான்னா ரேஷன் கடைல உளுத்தம் பருப்பு என்ன விலை, பயத்தம்பருப்பு என்ன விலைன்னு அரைப்பக்க அட்வர்டைஸ்மெண்ட் குடுத்துக்கிட்டிருக்கார். கூடிய சீக்கிரம் பீகார், ஒரிசா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்ல எல்லாம் நம்மைவிட அதிக நேரம் பவர்கட்னு புள்ளிவிவரத்தோட அரைப்பக்க விளம்பரம் குடுக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்காராம். ஆனா ஒரு விஷயம் தெரியுமா உனக்கு? எங்க எவ்ளோ நேரம் பவர்கட்டாக இருந்தாலும் கட்சிக் கூட்டங்கள்ள நல்லாவே லைட்ஸ் எரியுது. குறிப்பா தி.மு.க. கூட்டங்கள். போன சண்டே ஒரு பக்தன் ஸ்பெஷல் பிரியாணி படையல்னு கூப்பிட்டான். நாக்கு செத்துக் கிடக்கறனேன்னு ஒண்ணாம் நம்பர் பஸ் பிடித்து மந்தைவெளிலேருந்து திருவொற்றியூர் வரைக்கும் போனேன். சொன்னா நம்பமாட்டே. நல்ல சூரிய வெளிச்சம் இருந்த நேரத்துலேருந்து, மிட்நைட் வரைக்கும் ரோடு ஓரம் கொம்பு நட்டு டியூப் லைட்ஸ் எரியவிட்டுக்கிட்டிருந்தாங்க. மொத்தம் எப்படியும் நூறு லைட் இருக்கும். குறைஞ்சது ஏழு மணிநேரம் எரிஞ்சிது. மேடைல யார் யாரோ பேச்சாளர்கள் பேசினாங்க. இலவச கலர் டிவி பத்தி ரொம்பப் பெருமையா பேசினாங்க. டிவிய குடுத்துட்டு கரெண்ட் கட் செஞ்சதப் பத்தி மட்டும் கவனமா பேச மறந்துட்டாங்க.


சரோஜா பார்த்தியா? படம் நல்லா இருக்குனு ரிப்போர்ட். இங்கிலீஷ் பட காப்பின்னு சிலபேர் சொல்றதெல்லாம் பொறாமைல கிளப்பி விடறதாம். அம்மா க்ரியேஷன்ஸ் சிவாவுக்கு ரொம்ப நாளுக்கப்பறம் இது ஒரு நல்ல ப்ரேக்காம். தொடர்ந்து நிறைய படம் செய்யப்போறார்னு என் கோடம்பாக்க ஃப்ரெண்ட் குவார்ட்டர் சுப்புராயன் சொன்னான். பைதவே, சுப்ரமணியபுரம் ஹீரோ ஜெய் சம்பளம் இப்ப எழுவது லட்சமாமே? கேள்விப்பட்டியா? ஒரு படம் ஹிட் ஆகிட்டா உடனே ஏத்திடறாங்க. ஹும். நானும் எத்தனையோ வருஷமா முனி உத்தியோகம் செஞ்சிக்கிட்டிருக்கேன். இன்னும் ஹாஃப் ப்ளேட் ப்ரியாணி, 90 மில்லி சரக்குக்கு மேல யாரும் படையல் போடறதே இல்லை.

இன்னொரு சினிமா நியூஸும் சொல்லிடறேன். இன்னும் ரிலீசே ஆகாத ‘காதலில் விழுந்தேன்’ படம் அந்த நாக்கமுக்க பாட்டால பிரபலமாச்சு இல்லையா? இப்ப அந்த பாட்டை மட்டும் ரீஷூட் செய்து ரெகுலரா சன் டிவில ஆட் போடறாங்க. என்னடானு பாத்தா கலாநிதி மாறன் வழங்கும் சன் பிக்சர்ஸ் வெளியீடாம்! பல காலமா ப்ரொடக்‌ஷன்ல இருந்த படம் அது. பாட்டு ஹிட் ஆனதால வந்த வாழ்வு! சன் டிவி வாங்கிட்டாங்க போல இருக்கு.


தமிழ்நாட்டின் வால் மார்ட் சரவணா ஸ்டோர்ஸ் பற்றி எரிஞ்சத கேள்விப்பட்டேன். ரொம்ப வருத்தமா இருந்திச்சி. அந்தமாதிரி ஒரு நெரிசலான இடத்துல இப்படியெல்லாம் விபத்து நடந்தால் எத்தனை பேருக்கு கஷ்டம்? ஆனா சம்பவத்துக்கு அப்பறம் வர்ற நியூசெல்லாம் ரொம்ப டேமேஜிங்கா இருக்கு. அண்ணன் தம்பிங்களுக்கு நடுவுல பெரிய பகையாம். டிவி விளம்பரங்கள்ள ஹனுமான் மாதிரி குதிச்சி வந்து கைகூப்பிக்கிட்டு இருந்த செல்வரத்தினம் அண்ணாச்சி செத்துப் போனப்ப, அவரோட புள்ளை, தன்னோட சித்தப்பாமார்கள் பத்தி ஏகப்பட்ட புகார் செஞ்சாராம். தன்னோட அப்பா ஏகப்பட்ட மனப்புழுக்கத்தோடதான் செத்ததாகவும், அவரை நிம்மதியா வாழவிடாம சொத்தை அபகரிக்க நினைச்ச அவரோட தம்பிகள் கூடிய சீக்கிரம் என் வயிறு எரியறமாதிரி எரிஞ்சி போவாங்கன்னு அழுதுக்கிட்டே சாபம் விடாராம். அந்த சாபம்தான் இப்ப பத்தி எரிஞ்சிதாம்! எனக்கென்ன தெரியும்? ரங்கநாதன் தெருவுல பேசிக்கிட்டாங்க. நான் பொட்டுக்கடலை சாப்பிட்டுக்கிட்டே நைசா காதைக் கொடுத்துக் கேட்டதுதான்.

டிவிட்டர் பக்கம் போறியா? அது ஒரு வேலைக்காகாத கண்டுபிடிப்புன்னு எனக்குத் தோணுது. ஆரம்ப மயக்கம் சீக்கிரம் தீர்ந்துடும். பொதுத் தகவல்களுக்கு வலைப்பதிவு இருக்கு. தனித்தகவல்களுக்கு ஈமெயில் இருக்கு. உடனே பேசணும்னா மெசஞ்சர். இது எதுவுமில்லாம எல்லாம் கலந்துகட்டி ஒரு மாதிரி கிக் சேராத காக்டெயில் சரக்கா தெரியுது எனக்கு. பேஜர் மாதிரி சீக்கிரம் வழக்கொழிந்துவிடும் என்று தோணுது. உன் கருத்தென்ன?

படம் வருவதற்கு முன்பே பெண் ரசிகர்களுக்கு என்ன கோபமோ :-)விடை: இந்திய பயணம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுதாளர் தான் :-)

இப்படிக்கு,
முனி

24 Comments:

Anonymous said...

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம். மற்றபடி, இட்லிவடை ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்த தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம்.

வெண்பூ said...

//அமெரிக்க சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று.//

செம நக்கல் இது இ.வ. கலக்கலான கமெண்ட்..

//விடை: இந்திய பயணம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுதாளர் தான் :-)
//
இதுல இருக்குற உள்குத்து என்னான்னு புரியல தல...

யோசிப்பவர் said...

இன்னிக்கு காலைலேதான் நினைச்சேன். என்னடா, ரொம்ப நாளா முனி கடிதம் ஒன்னும் காணோமேன்னு. உங்களுக்கு எப்படி அதுக்குள்ள தெரிஞ்சுது?!;-)

இலவசக்கொத்தனார் said...

//இந்திய பயணம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுதாளர் தான் :-)//

என்னது? வெயிட் கோ, சாரி, வைகோ இல்லையா?

Anonymous said...

hey, naan first comment :)
sooper letter after a long time..

//
அமெரிக்க சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று.
//

laughed a lot :)

ammam, who is that writer ? neenggalla ;) ?

ees said...

//சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று//


கலக்கிடீங்க போங்க!!

Anonymous said...

Already there is a Science Fiction about CERN's this project on Antimatter by DAN BROWN as Angels & demons.

seethag said...

தேதியை ஒழுங்க எழுதுங்க இட்லிவடை.நீங்க இந்தியாவுல தானே இருக்கீங்க?அமேரிக்கா மாதிரி எழுதி கொழப்பாதீங்க.இல்லை முனி அமேரிக்காவுல இருக்காரா?

Anonymous said...

அடுத்ததும் திமுக ஆட்சிதான் இலவச ஜெனரேட்டரும் UPS உம் தர்ராங்கலாம்

ஹரன்பிரசன்னா said...

//
அமெரிக்க சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று.
//

:)))))

//இந்திய பயணம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுதாளர் தான் :-)//

:))

ஒரு முக்க்கியமான இடத்தில் கட்டம் கட்டமாக வந்திருக்கிறது. அக்கன்னா இல்லாமல் அந்த வரியை எழுதவும்.:)

Anonymous said...

நல்ல இடுகை.ஆனால் திருஸ்டி பொட்டுபோல் ரஜினி மேட்டர் போட்டு,ரசிகர்களைகடுப்பு அடித்து விட்டீர்கள்

ஹரன்பிரசன்னா said...

//அடுத்ததும் திமுக ஆட்சிதான் இலவச ஜெனரேட்டரும் UPS உம் தர்ராங்கலாம்//

கூடவே கரண்ட்டும் தர்றாங்களாம், வாங்கிடுங்க.

Anonymous said...

அமெரிக்க சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று.

Soooooper :)))

Sa.Thirumalai

Anonymous said...

நிறைய எழுத்து பிழை உள்ளது. சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்கவும்.

IdlyVadai said...

சுந்தசேரன் நன்றி. சுட்டிக்காட்டியதில் எனக்கு மகிழ்ச்சியே.

Arun said...

ப்லாக் ஹோல் - பவர் கட்டான தமிழ்நாடு

ultimate comment! பட்டைய கெளப்பிட்டீங்க..

இனிமே உங்க பதிவுல "ஆர்காடு” வீராசாமிக்கு பதிலா, “மின்வெட்டு” வீராசாமினு போடுங்களேன்.. படிக்கரதுக்கு கரண்ட் இல்லைனாலும் நல்லாவாவது இருக்கும்.. ;-)

அப்பரம்.. என்ன ரொம்ப நாட்களா உங்க ப்ளாக்ல ”புரட்சி” கலைஞர் பத்தி செய்தியே வர்ரது இல்ல?? ஏதாவது விரோதமா?! :D

R.Gopi said...

இந்திய பயணம் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் எழுதாளர் தான்
-----------------------------------

Idhu avaraa irukkumooh, hmm, nichayam avaru thaan..... confirmed

Mothathula Bodyguard Muneeswaran letter superrrrrr IDLYVADAI.

M Arunachalam said...

IV,

Nowadays, are TN donkeys started wearing sarees? (Photo showing donkeys eating poster)

Arun

Anonymous said...

பாஸ்டன் பாலா இட்லிவடை குழுவில் இருக்கிறார் என்பதை
டிவிட்டர் பற்றிய குறிப்பு உறுதி
செய்கிறது.இ.வ பிளாக்
இடுகை தலைப்பை டிவிட்டரில்
போடுவது அதிகபிரசங்கித்தனம்.

Anonymous said...

இட்லிவடையில் ஒருத்தர் அமெரிக்காவில் இருக்கிறார்.
அவருக்கு தேதி எப்போதும்
குழப்பம்தான் :).

Anonymous said...

காந்திக்கு பிறகு அதிகம் பாதயாத்திரை போனவர் யார் ? விடை கடைசியில சொல்றேன்...


அந்த எழுத்தாளர் காரில் போய்க்கொண்டிருக்கிறார்,கால்தேய
பாதயாத்திரை போகவில்ல.

Anonymous said...

'Nowadays, are TN donkeys started wearing sarees? (Photo showing donkeys eating poster)'

It is better to be a donkey than being a stupid fan of rajinikanth.
Donkeys have some self respect which these fans lack.

M Arunachalam said...

Anony,

If you have so-called self-respect, then why are you commenting as anonymous? Are you ashamed to openly tell your name which is so unself-respecting to you?

You anonymous perverts don't have any moral right to talk about donkeys or self-respect - leave alone a noble soul like Rajinikanth.

Arun

Hariharan # 03985177737685368452 said...

//அமெரிக்க சாட்டிலைட் ஒன்று இந்தியாவின் தெற்கு பக்கம் பெரிய ப்லாக் ஹோல் இருக்கு என்று அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளது. உடனே அமெரிக்காகாரர்கள் பிளைட்டை பிடித்து வந்து பார்த்திருக்கிறார்கள். பார்த்தவுடன் தான் அவர்களுக்கு விஷயம் தெரிந்ததாம் - அது பவர் கட்டான தமிழ்நாடு என்று.//


ஈவெராமசாமியின் பகுத்தறி"வினை" தமிழ்நாட்டில் கருப்புச்சட்டை அணிந்த மானமிகுக்களால் பரப்பியதை கழக அரசு மொத்த தமிழகத்தையுமே அமாவாசை கருப்பாக்கி பகுத்தறிவின் புகலிடமாக்கி ஏற்றம் கொண்டுவந்ததை உணராத சோற்றால் அடித்த பிண்டங்களாய் இருப்பாய தமிழினமே??

தமிழினமே முனீஸ்வர முகமூடி தரித்த எழுத்தான இதிலிருந்து "அவாள்" நமக்கு எப்பவுமே சவால்தான்" என்று உணர்வாய்!