பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 25, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-09-08

இந்த வாரம் முனிக்கு இட்லிவடை கடிதம்...

மைடியர் முனி,

சௌக்கியமா ?

வடிவேலு வீட்டுக்கு வந்த கும்பல் வடிவேலு ஆபீஸை அடித்து நொறுக்கியபின் சம்பந்தமேயில்லாமல் "தல அஜித் வாழ்க" என்று கோஷம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள். நல்லவேளை நம் தலைகளை உருட்டவில்லை. எனக்கு ஒரு சந்தேகம், பட்டபகலில் 50 பேர் கொண்ட கும்பல் வந்து இதைச் செய்திருக்கிறார்கள். நிச்சயம் அங்கே நிறைய பேர் வேடிக்கை பார்த்திருப்பார்கள், வேடிக்கை பார்த்தவர்களில் நிச்சயம் 50 சதவிகிதம் பேராவது மொபைல் வைத்திருப்பார்கள், ஒருவர் கூடவா இவர்களைப் படம் பிடிக்கவில்லை ? (அண்ணன் வடிவேலுவிற்கு ஒரு வேண்டுகோள்: அடுத்த முறை இந்தக் கும்பல் வந்தால் ஏம்பா இவ்வளவு 'irresponsible'ஆ இருக்கீங்க, அடிக்க நான் தான் கிடைத்தேனா என்று கேட்டு அவர்களை 'வேறு திசை'யில் நடக்கும், மொட்டை மாடிக் கூட்டத்துக்கு அனுப்பிவைக்கவும்.)

குமுதம் விகடனுக்கு இனிமேல் கொண்டாட்டம்தான், எந்திரன் படபிடிப்பு ஸ்டில்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதை வைத்து கவர் ஸ்டோரி, பாக்ஸ் ஸ்டோரி, ஜோக்ஸ் என்று பக்கத்தை நிரப்புவார்கள். ஏதோ அவர்கள் பிழைப்பும் நடக்கட்டும்.

திருமாவளவன் ஒரு பேட்டியில், "ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட சிவராஜனும், தணுவும் எல்.டி.டி.ஈ.யின் உறுப்பினர் அட்டை வைத்திருந்தார்களா?" என்று புத்திசாலியாக (நினைத்துக்கொண்டு) ஒரு கேள்வி கேட்டுள்ளார். சயனைட் குப்பி தான் அடையாள அட்டை என்ற அடிப்படையே அவருக்குத் தெரியவில்லை. இவர் வீட்டுக்கு யாராவது திருட/அடிக்க வந்தால், "சார் உங்களிடம் திருடன்/ரௌடி என்ற அடையாள அட்டை இருக்கிறதா?" என்று கேட்பார் போலிருக்கிறது.

ஆணுறை பாக்கெட்டில் செக்ஸ் படம் இருக்க கூடாது என்று வழக்கில் சென்னை ஹைகோர்ட் தடைவிதித்தது. உச்ச நீதிமன்றம் பாக்கெட்டுகளில் `செக்ஸ்' படம் இருக்கலாம் என்று தீர்ப்பு கூறியது. ஹைகோர்ட்டுக்கு எதிராக, 'ஆணுறை செய்யும் (குடும்பக்) கட்டுப்பாடு போறும் நாம் வேற ஏன் கட்டுப்பாடு போடவேண்டும்?' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிக்குத் தோன்றியிருக்கலாம்.

இது வரை நெருப்பு போல் விலை ஏறாத பொருள் என்ன என்று பார்த்தால் அது நெருப்புப் பெட்டி தான். தற்போது நெருப்பு பெட்டியின் விலை 1/= அதாவது 14 வருஷத்துக்கு பிறகு இந்த விலை ஏற்றம் நடந்திருக்கிறது. பதினாலு வருஷத்துக்கு முன்னால் நெருப்புப் பெட்டியின் விலை 50 பைசா. அந்த வயதிலேயே நெருப்புப்பெட்டி உபயோகித்தேனோ என்று சந்தேகப் படாதே. அம்மா அடுப்புப் பற்றவைக்க ஓடிப்போய் வாங்கிவரச் சொல்வாள். அப்பா, தாத்தாக்களின் செலவுக் கணக்கு நோட்டையும் பார்க்கநேர்ந்திருக்கிறது.

1950 - 5 பைசா
1960 - 10 பைசா
1970 - 15 பைசா
1980 - 25 பைசா
1994 - 50 பைசா
2008 - 1 ரூபாய்

நம் ஜனாதிபதியின் மாத சம்பளம் 1 லட்சம் ரூபாய். கொஞ்ச நாளுக்கு முன் தான் ஏற்றினார்கள் என்று படித்தேன். அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் கிட்ட தட்ட 3 கோடி; இங்கிலாந்து ஜனாதிபதிக்கு பிரமமந்திரிக்கு 7-8 கோடி. சென்னை பிச்சை காரர்களின் வருட சம்பாதியம் 15 கோடியாம் :-). இனிமே யாரும் 'பிச்சை காசு' என்று சொல்லக்கூடாது.

(...,). இது என்ன என்று குழம்புவர்களுக்கு இது ஒரு படத்தின் டைட்டில். இந்தப் படம் முழுக்க 'பேசும்படம்' டைப் ஊமை படமாம். ஆனால் செண்டிமெண்ட், சண்டை, காதல் எல்லாம் இருக்கிறதாம். கடைசிக் காட்சியில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு நிமிடத்துக்குத் தோன்றி ஒரே ஒரு டயலாக் பேசுகிறாராம் ( கீதையை மேற்கோள் காட்டி). என்ன வசனம் என்பது எந்திரன் படக் கதை போல் ரொம்ப சீக்ரட். படம் வெளிவரு முன்பே தெரிந்துவிடும்.

மோகன் சந்த் சர்மாவிற்கு அரசு பத்து லட்சம் அளித்துள்ளது. அங்கங்கே கட்சி மாநாடுகளுக்கு வைக்கப்படும் அலங்கார விளக்குகளுக்கு (பொதுவிலிருந்து இலவசமாக இழுத்துக்கொள்ளும் மின்சாரச் செலவு நீங்கலாக) ஆகும் செலவுகூட பத்து லட்சம் மேல் இருக்கும். சர்மா பிழைக்கத் தெரியாதவர். இப்படி வாழ்ந்த நாளிலும் குண்டுகளோடு விளையாடாமல் யுவராஜ் போல் 6 சிக்ஸர் அடித்து ஒரு கோடியை அள்ளியிருக்கலாம். வேறு என்ன சொல்ல?

சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட், "ஆயுள் தண்டனை என்பது ஆயுட்கால தண்டனைதான்; அதை பதினான்கு வருடம் என்று வைத்துக்கொண்டு யாரும் விடுதலை கோர முடியாது," என்று தனது தீர்ப்பு ஒன்றில் கூறியது. தமிழக முதல்வர், இந்தத் தீர்ப்பைப் பற்றிய தனது மதிப்பைக் காட்டுகிற வகையில், ஏழாண்டு கால தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளை எல்லாம் விடுதலை செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லும் வசனம்: "நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும்." "செய்யட்டும், அதற்குப்பின் உங்கள் விடுதலை உரிமையை கட்சி கவனித்துக்கொள்ளும்" என்ற அடுத்த வரியை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆனால் நேற்று நடந்த நளினி விடுதலை பற்றிய விவாததில் தமிழக அரசு அவருக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று வாதிடுகிறது தமிழக அரசு. சு.சாமி போட்ட மனுவினால் தான் இந்த நிலைப்பாட்டையாவது எடுத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

சைடில் உள்ள விளம்பரம் இரண்டு வைத்திருப்பவர்களுக்கு. இல்லாதவர்கள் கூடிய சீக்கிரம் இந்த மொபைல் வாங்கி பயன் அடையுங்கள்.

திமுக முப்பெரும் விழாவில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் கே.என்.நேரு, மதுரை மாநாட்டில், "அண்ணா
பிறந்த நாள் விழாவை 15 ஆம் தேதி நடத்தாமல், 21ஆம் தேதி நடத்துவது ஏன்?' என்று வைகோ கேள்வி எழுப்பியது பற்றிக் குறிப்பிட்டபோது, அந்தக் கேள்விக்கு உரிய பதிலைத்தான் நேரு தரப்போகிறார் என்று பத்திரிகையாளர்கள் ஆர்வமாகக் கவனிக்க, கே.என்.நேருவோ, ""அண்ணா பிறந்த நாளை என்றைக்கு கொண்டாடினால் உனக்கு என்ன? நீ மூடிக்கொண்டு போ'' என்று பேசியிருக்கார் என்று படித்தேன். அதே போல் அந்த விழாவில் "பெரியார், அண்ணாவை விட கலைஞரே சிறந்தவர்" என்கிற ரீதியில் முக்கால்வாசி பேர் பேசியிருக்கிறார்கள். ஆனால் கொடுத்த விருதுகளோ பெரியார், அண்ணா பெயரில். நல்ல கூத்து.


போனவாரம் ஒரு தொலைபேசி அழைப்பு, "இட்லிவடை, நீங்க மிகவும் குண்டாக இருக்கிறீர்கள். எங்கள் யோகா பயிற்சி நிலையத்தில் ஒரு யோகி இருக்கிறார் அவரிடம் வந்து யோகா கற்றுக்கொள்ளுங்கள்" என்றார். நான் இப்படி இருந்தால்தானேய்யா மக்கள் மதிப்பார்கள். உங்களுக்கு யார் என் நம்பரைக் கொடுத்தது, இதற்குமுன் இப்படி குண்டாக இருந்தவர்களை யாரையாவது ஒல்லியாக்கியதைப் பற்றி சொல்லுங்கள் என்று சில கேள்விகளை அடுக்கினேன். கொஞ்சம் நேரம் அமைதி. பிறகு தொலைபேசி இணைப்பு துண்டிக்கபட்டது.

சிறிதுநேரத்தில் மீண்டும் அதே அழைப்பு. அதே 'மர்மயோகி' போன். நான் எடுக்கவில்லை....

11 Comments:

Anonymous said...

சரக்கு இல்லை.செய்திகளை இட்டு
ஒப்பேற்றியிருப்பது பளிச்சென்று
தெரிகிறது.

கிரி said...

//குமுதம் விகடனுக்கு இனிமேல் கொண்டாட்டம்தான், எந்திரன் படபிடிப்பு ஸ்டில்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதை வைத்து கவர் ஸ்டோரி, பாக்ஸ் ஸ்டோரி, ஜோக்ஸ் என்று பக்கத்தை நிரப்புவார்கள். ஏதோ அவர்கள் பிழைப்பும் நடக்கட்டும்.//

இவர்கள் எல்லாம் வெட்கப்படுவதே இல்லை...

//இது வரை நெருப்பு போல் விலை ஏறாத பொருள் என்ன என்று பார்த்தால் அது நெருப்புப் பெட்டி தான். தற்போது நெருப்பு பெட்டியின் விலை 1/= அதாவது 14 வருஷத்துக்கு பிறகு இந்த விலை ஏற்றம் நடந்திருக்கிறது.//

கிராமத்து பகுதிகளில் இதை அனைவரும் பேசி கொண்டு உள்ளார்கள்..எதிர் கட்சி மீட்டிங்குகளில் இது முக்கிய பங்கு வகிக்கும்

//சென்னை பிச்சை காரர்களின் வருட சம்பாதியம் 15 கோடியாம் :-)//

அப்படின்னா! மும்பை யை நினைத்தால் தலை சுத்துதே ..நம்மை விட அங்கே அதிக வசூல் என்று படித்து இருக்கிறேன்

//தனது கடமையைச் செய்யும்." "செய்யட்டும், அதற்குப்பின் உங்கள் விடுதலை உரிமையை கட்சி கவனித்துக்கொள்ளும்" என்ற அடுத்த வரியை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும் போலிருக்கிறது//

சூப்பர் ;-))))

Anonymous said...

> இங்கிலாந்து ஜனாதிபதிக்கு 7-8 கோடி

- Yaarunga adhu?

Anonymous said...

தமிழ்ப் புத்தாண்டையே மாற்றியவர்களுக்கு அண்ணா பிறந்தநாள் எம்மாத்திரம்?

Anonymous said...

இ.வ,

இங்கிலாந்துக்கு ஜனாதிபதி உண்டா? பிரதமரும் , அரசியும் தானே! தவறிருந்தால் சொல்லவும்!

Kalyan said...

"இங்கிலாந்து ஜனாதிபதிக்கு 7-8 கோடி."

Small typo i think, should be PM...
--------
Phone panna kuda ongal ellarum Idlyvadai'nu than kupuduvangala ongaloda BMI evalu?
-------------------

மணிகண்டன் said...

/////// அவர்களை 'வேறு திசை'யில் நடக்கும், மொட்டை மாடிக் கூட்டத்துக்கு அனுப்பிவைக்கவும்.) ///////

உங்களுக்கு என்ன அவ்வளவு கடுப்பு சாரு/பத்ரி மேல ?

இல்லாட்டி நீங்க தான் அவரா >?

Anonymous said...

// இவர் வீட்டுக்கு யாராவது திருட/அடிக்க வந்தால், "சார் உங்களிடம் திருடன்/ரௌடி என்ற அடையாள அட்டை இருக்கிறதா?" என்று கேட்பார் போலிருக்கிறது.//

ha ha ha ...
Good joke.

Anonymous said...

:)

Anonymous said...

in old days match box sticks quantity is 100. But now-a-days it comes to 40 to 50.

SurveySan said...

//சென்னை பிச்சை காரர்களின் வருட சம்பாதியம் 15 கோடியாம் :-). //

really?