பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 23, 2008

தை 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது -

சுவாரசியமான தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் எஸ்.சிவசுப்பிரமணிய ஆதித்தன். தமிழ்நாடு முருக பக்த பேரவை பொதுச்செயலாளரான இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில்

திருச்செந்தூரில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவிலில் கடந்த 13.4.2008 அன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தவும், பொங்கல் வைக்கவும், அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் என்று போர்டு வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தேன்.

ஆனால் அவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். மேலும் அவர் தமிழக அரசு தமிழ் புத்தாண்டை தை மாதம் 1-ந் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளதாகவும், எனவே சித்திரை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்று அதிகாரி தடுப்பது எங்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும். சித்திரை மாதம் 1-ந் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். எனவே சித்திரை 1-ந் தேதி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதி மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் இப்படி கூறியிருக்கிறார்

சித்திரை 1-ந் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும். அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது. பொதுவாக நாட்காட்டிகள் சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகள் குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.

முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள்(காலண்டர்) மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.

அதே போன்று சமஸ்கிருதத்தில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் ஆலோசனை கேட்கலாம். தமிழ் மொழி தான் ஆட்சி மொழி என்று கொண்டு வர அரசுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதே போன்று தமிழ் நாட்காட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே தை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது சட்டவிரோதம் இல்லை. சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்து இருப்பது மதசாயம் பூசும் செயலாகும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.1. சித்திரை 1-ந் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் தீபாவளி, கார்த்திகை மற்றும் பல பண்டிகைகளுக்கு ஆதாரம் கிடையாது. இந்த மாதிரி கேள்வி கேட்பவர்கள் கொள்ளு தாத்தாவின் எள்ளு தாத்தாவிடம் தான் போய் கேட்கணும்.

( Source: மாலைமலர் )

36 Comments:

Anonymous said...

மொத்தத்தில் இந்த நாடு விளங்காது.
உண்மையிலேயே தைரியம் இருந்தால் கிறிஸ்துமஸ், ரம்ஜான் தினங்களை மாற்றிப் பாருங்கடா? மொத்தத்தில் இந்த நாடு விளங்காது.

--- குமுறும் இந்தியத்தமிழன்.

Anonymous said...

முட்டாள்தனமானது...

நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானால் சொல்லட்டும் ஆனால் நம் தமிழ் மக்கள் அனைவருக்கும் சித்திரை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு...அதை மறுக்க தீர்ப்பு கூறியவர்களின் மனம் என்னும் நீதிமன்றத்தால் மறுக்கவே முடியாது.

யோசிப்பவர் said...

பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறது!?!

ஹரன்பிரசன்னா said...

நல்ல காமெடியான தீர்ப்பு. ஏற்கெனவே கொண்டாடிவரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு ஏன் ஆதாரம் கேட்கிறார் எனத் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் ஆழமாக, தமிழுக்கே ஆதாரம் கேட்டிருக்கலாம். இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

IdlyVadai said...

நண்பர்களே தீர்ப்பை கன்னாபின்னா என்று விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகலாம். கவனம் தேவை
நன்றி

Anonymous said...

when the courts shame themselves, they do not need any more of that from us.

Anonymous said...

திருவாளர் இட்லி வடை அவர்களே!
இந்த காலத்தில் நீதி மன்றங்கள் கூட மஞ்சள் துண்டுக்கே ஆதரவாக செயல் படுகின்றன...சீக்கிரம் இந்த நிலைமை மாறும்.

Anonymous said...

Sir,

Your caution is timely. Because we all are NOT Powercut Veerasamy to scold judges & judgments and get away scot-free.

Having said that, when it comes to sensitive cases involving the state govt's commissions & omissions, HC seems not to antogonise the Govt. of the Day while delivering their judgments.

I think this petitioner too has to approach SC to get any relief like Kanchi Sankaracharya did to even come out on bail.

Anonymous said...

"Having said that, when it comes to sensitive cases involving the state govt's commissions & omissions, HC seems not to antogonise the Govt. of the Day while delivering their judgments.

I think this petitioner too has to approach SC to get any relief "

does this mean courts in Dravida-tamil nadu operate with different laws than what is applicable to rest of India?

vsanandan said...

Let MK and judicial systems unite the Hindu Tamils. Tamil New Year means Chiththirai 1st. Nothing can change it.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

மனுதாரரின் அடிப்படை உரிமையை வைத்தே இந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதேயன்றி நீதிபதி சொன்னது போல இதற்கு மதச் சாயம் தேவை இல்லை

மனுதாரர் தனக்குவந்த வழியில் மத சம்பிரதாயங்களைக் கைக்கொள்ளலாம். அது அவரின் அடிப்படை உரிமை. ஆனால் அரசின் பொறுப்பிலுள்ள ஓர் ஆலயத்தில் அப்படி செய்ய அவருக்கு உரிமை இருக்கிறதா எனில் இல்லை என்றே சட்டம் சொல்கிறது

தீர்ப்பின் விவரத்தினைப் படிக்காமல் செய்தி தாளில் வந்த விவரத்தினை வைத்து நீதிமன்றம் காமெடி செய்துள்ளது போன்ற விமர்சனங்கள் Contempt of Court ஆக வாய்ப்பளிக்கும்

Anonymous said...

அடடா.. இப்பொழுது நீதித்துறை கூட காமெடி செய்ய கிளம்பிவிட்டதே... ஆச்சரிய குறி..!!

IdlyVadai said...

சந்திரமௌளீஸ்வரன் அவர்களே முழு தீர்ப்பையும் நீங்க வைத்திருந்தீர்கள் என்றால் இங்கே போடுங்கள்.

//ஆனால் அரசின் பொறுப்பிலுள்ள ஓர் ஆலயத்தில் அப்படி செய்ய அவருக்கு உரிமை இருக்கிறதா எனில் இல்லை என்றே சட்டம் சொல்கிறது//

ஏன் இந்து ஆலையங்கள் மட்டும் அரசு பொறுப்பில் இருக்கிறது. மதசார்பற்ற அரசு மற்ற மத கோயில்களையும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாமே ?

//தீர்ப்பின் விவரத்தினைப் படிக்காமல் செய்தி தாளில் வந்த விவரத்தினை வைத்து நீதிமன்றம் காமெடி செய்துள்ளது போன்ற விமர்சனங்கள் Contempt of Court ஆக வாய்ப்பளிக்கும்//

இது உண்மை. நன்றி

vsanandan said...

Next year onwards, MuKa will ask his birthday as Pongal day. Be ready to celebrate that.

Anonymous said...

கோவில்பட்டியில் சித்திரை 1 திருவிழா போல எனக்கு வெவரம் தெரிஞ்சதுல இருந்து கொண்டடிட்டு இருகாங்க. அதெயும் தை 1க்கு மற்றுவர்களா.

Itsdifferent said...

When there are so many pending problems facing TamilNadu, it is very sad, that the government prefers to spend their energy on this.
It is true that the government does not have backbones to play with any other religious beliefs.
2. There had been a movement to relieve Hindu temples from Govt control (no other religious identities are owned by the government). Not sure what happened, may be we should recreate that movement to let the committees administer the temples. One of the most important drivers for such an administration is distributing the wealth to all the temples, so the ones which do not have enough income still to serve people with dignity. 2. Distribute a portion of that income to the local causes like school maintenenace, regular cleanliness of city/town/village. So many other things.
How do we revive such a movement? Talking/writing/anger is not going to help, only action will help us succeed.

மடல்காரன்_MadalKaran said...

//ஏன் இந்து ஆலையங்கள் மட்டும் அரசு பொறுப்பில் இருக்கிறது. மதசார்பற்ற அரசு மற்ற மத கோயில்களையும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாமே ? //

எப்படிண்ணே உங்களால மட்டும் இப்படி சிந்திக்க முடியுது?

”ஏன் என்ற கேள்வி மனம் கேட்காமல் வாழ்கை இல்லை ‘நான்' என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..” கவிஞர் அப்பவே சொல்லிட்டாரு.

ஓகை said...

//சித்திரை மாதம் 1-ந் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். எனவே சித்திரை 1-ந் தேதி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதி மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.//

இந்த அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால், 'சித்திரை மாதம் 1-ந் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம்.' என்பதற்கு என்ன ஆதாரம் தேவை? நான்கு இந்துக்கள் அதுதான் எங்கள் வழக்கம் என்று சொன்னால் கூட போதுமானது அல்லவா! அல்லது இந்து மதப் பெரியவர்கள் யாரேனும் சொன்னாலும் போதுமானது அல்லவா! ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதைக் கூட கணிதப் புத்தகங்களை வைத்துக் கொண்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்க வேண்டுமா? எனக்கு விளங்கவில்லை. முழு வழக்கு விபரத்தையும் படித்தால்தான் விளங்குமென்று தோன்றுகிறது.

Krish said...

In 1921 Tamil scholars who gathered under the leadership of the "Tamil Kadal" (Sea) Maraimalai Adikal researched on the subject of the Tamil New Year. This committee included Tamil veterans like Tamil Thenral V. Kalyanundaram, Tamil Kavalar K.Subramaniumpillai, Saiva Periyar Satchithananthampillai, Navalar Somasundara Barathiyar, Navalar N.M. Vegkadasami Naddar and Muthamil Kavalar K.A.P. Visvanatham. After long deliberations they unanimously arrived at the conclusion that the Tamil New Year commenced on the first day of the Tamil month "Thai." All the twelve months that followed have pure Tamil names. They also named the seven days as:

Gnayiru

Thingal

Sevai

Arivan

Viyalan

Velli

Kaari

Puthan and Sani were not accepted as Tamil words.Puradchchi Kavignan Parathithasan in one of his songs said:

Thaiye Muthal Thingal

Thai Muthale Aandu Muthal

source :
http://www.sangam.org/articles/view2/?uid=987

Anonymous said...

கிருஷ்...
நீங்க முதல்ல தமிழ்'ல எழுதிப் பழகுங்க!
பெரிய தமிழ் ஆராய்ச்சியாளர் என்று நினைப்பு!
நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குமாம்!

Anonymous said...

நல்ல வேளை முதல்வர் தை 1 ம் தேதி புத்தாண்டு அறிவித்தார். அவருடைய பொறந்த நாளை அறிவிக்காம இருந்தால் சந்தோஷம் தான்.அதையும் பொங்கல் வைச்சு பகுத்தறிவா கொண்ட்டுவாங்க கழக கண்மணிகள்.
ஆமா பொங்கல் எப்ப்டியா தமிழர் திருநாளாகும்?
நாமா தான் பகுத்தறிவுவாதிகளாச்சே..
பொங்கல் வைக்கிறது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை.
பொங்கல் வைச்சா எப்ப்டி சூரிய பகவான் சாப்பிடுவாரு. அவரு என்ன ஆடா மாடா நம்ம வைக்கிறதெல்லம் திங்க..
சூரியன் உதிக்கிறது அறிவியல் . அது ஒர் நட்சத்திரம் . அதுக்கு எப்ப்டியா பகுத்தறிவாதியான நாம் நன்றி செலுத்துவது?
நம்ம நன்றிய ஏத்துக்க அது என்ன மனுஷனா?அட எப்ப்டிதான் பொங்கல் கொண்டாரட்தது?
அன்னிக்கு நம்ம க்லைஞர் டி.வி முன்னால உக்காந்து டமில் தெரிஞ்ச வட நாடு நாயகிகளின் அரைகுடை ஆடை ஆட்டத்தை பார்த்து கொண்டாடவெண்டும்....
திருவள்ளுவர்னு ஒருத்தர் பிறந்தார்ங்க.அவரு தை 1தேதி தான் பிறந்தார்னு யாரு சாட்சி?
நம்ம பகுத்த்றிவாதிகள் பிரசவம் பார்த்தாங்களா?
அப்ப்டினா நம்ம பகுத்த்றிவாதிகள் எந்த மெடிக்கல் காலேஜல MBBS

Anonymous said...

நல்ல வேளை முதல்வர் தை 1 ம் தேதி புத்தாண்டு அறிவித்தார். அவருடைய பொறந்த நாளை அறிவிக்காம இருந்தால் சந்தோஷம் தான்.அதையும் பொங்கல் வைச்சு பகுத்தறிவா கொண்ட்டுவாங்க கழக கண்மணிகள்.
ஆமா பொங்கல் எப்ப்டியா தமிழர் திருநாளாகும்?
நாமா தான் பகுத்தறிவுவாதிகளாச்சே..
பொங்கல் வைக்கிறது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை.
பொங்கல் வைச்சா எப்ப்டி சூரிய பகவான் சாப்பிடுவாரு. அவரு என்ன ஆடா மாடா நம்ம வைக்கிறதெல்லம் திங்க..
சூரியன் உதிக்கிறது அறிவியல் . அது ஒர் நட்சத்திரம் . அதுக்கு எப்ப்டியா பகுத்தறிவாதியான நாம் நன்றி செலுத்துவது?
நம்ம நன்றிய ஏத்துக்க அது என்ன மனுஷனா?அட எப்ப்டிதான் பொங்கல் கொண்டாரட்தது?
அன்னிக்கு நம்ம க்லைஞர் டி.வி முன்னால உக்காந்து டமில் தெரிஞ்ச வட நாடு நாயகிகளின் அரைகுடை ஆடை ஆட்டத்தை பார்த்து கொண்டாடவெண்டும்....
திருவள்ளுவர்னு ஒருத்தர் பிறந்தார்ங்க.அவரு தை 1தேதி தான் பிறந்தார்னு யாரு சாட்சி?
நம்ம பகுத்த்றிவாதிகள் பிரசவம் பார்த்தாங்களா?
அப்ப்டினா நம்ம பகுத்த்றிவாதிகள் எந்த மெடிக்கல் காலேஜல MBBS
படிச்சாங்க?

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//சந்திரமௌளீஸ்வரன் அவர்களே முழு தீர்ப்பையும் நீங்க வைத்திருந்தீர்கள் என்றால் இங்கே போடுங்கள்.

தீர்ப்பின் அங்கீகரிக்கப்பட்ட நகல் உயர்நீதி மன்ற வலைத்தளத்தில் வெளியான உடன் அந்த இணைப்பை அனுப்புகிறேன்

இதில் மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மற்றும் அரசு சார்ப்பில் ஆஜரானவர் இருவரும் என் நண்பர்கள்
இருவரிடமும் தொலை பேசி விட்டே இங்கே நான் மடலிட்டேன்


மேலும் நானும் சட்டம் பயின்றவனே

ஏற்கனவே இங்கே உயர்நீதி மன்றம் சென்னையில் டிராபிக் ராமசாமி இந்த தேதி மாற்றத்தை தனியே எதிர்த்து தொடர்ந்த வழக்கும் ( எந்த ஆலயத்தையும் முன்னிறுத்தி அல்ல) தள்ளுபடி செய்யப்பட்டதனையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்

//ஏன் இந்து ஆலையங்கள் மட்டும் அரசு பொறுப்பில் இருக்கிறது. மதசார்பற்ற அரசு மற்ற மத கோயில்களையும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாமே //

வேறு மத வழிபாட்டு ஸ்தலங்கள் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என யார் உங்களுக்குச் சொன்னது

டெல்லி செங்கோட்டைக்குள் இருக்கும் முத்து மசூதி (Pear Mosque)

சென்னை தலமைச் செயலக வளாகத்தில் உள்ள தேவாலயம்

இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன இட்லி வடையாரே

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//சந்திரமௌளீஸ்வரன் அவர்களே முழு தீர்ப்பையும் நீங்க வைத்திருந்தீர்கள் என்றால் இங்கே போடுங்கள்.

தீர்ப்பின் அங்கீகரிக்கப்பட்ட நகல் உயர்நீதி மன்ற வலைத்தளத்தில் வெளியான உடன் அந்த இணைப்பை அனுப்புகிறேன்

இதில் மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மற்றும் அரசு சார்ப்பில் ஆஜரானவர் இருவரும் என் நண்பர்கள்
இருவரிடமும் தொலை பேசி விட்டே இங்கே நான் மடலிட்டேன்


மேலும் நானும் சட்டம் பயின்றவனே

ஏற்கனவே இங்கே உயர்நீதி மன்றம் சென்னையில் டிராபிக் ராமசாமி இந்த தேதி மாற்றத்தை தனியே எதிர்த்து தொடர்ந்த வழக்கும் ( எந்த ஆலயத்தையும் முன்னிறுத்தி அல்ல) தள்ளுபடி செய்யப்பட்டதனையும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்

//ஏன் இந்து ஆலையங்கள் மட்டும் அரசு பொறுப்பில் இருக்கிறது. மதசார்பற்ற அரசு மற்ற மத கோயில்களையும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாமே //

வேறு மத வழிபாட்டு ஸ்தலங்கள் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என யார் உங்களுக்குச் சொன்னது

டெல்லி செங்கோட்டைக்குள் இருக்கும் முத்து மசூதி (Pear Mosque)

சென்னை தலமைச் செயலக வளாகத்தில் உள்ள தேவாலயம்

இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன இட்லி வடையாரே

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//ஏன் இந்து ஆலையங்கள் மட்டும் அரசு பொறுப்பில் இருக்கிறது. மதசார்பற்ற அரசு மற்ற மத கோயில்களையும் தன் பொறுப்பில் வைத்துக்கொள்ளலாமே //

இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில் இல்லாத ஆலயங்களும் இருப்பதை இட்லி வடையார் அறிவாரென நினைக்கிறேன். உதாரணம் சிதம்பரம் ஆலயம்

இஸ்லாத்தின் வழிபாட்டு ஸ்தலங்களான பல தர்ஹாக்கள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வஃக்ப் வாரியத்தின் பொறுப்பில்- இந்த விவரம் இட்லி வடையாருக்கு புதுசா என்ன

மத சார்பற்ற அரசு மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போதும் கல்லணையில் தண்ணீர் திறந்து விடும் போதும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி வாசனை சகிதம் இந்து முறைப்படி வழிபாடு செய்து பின்னர் தானே செய்கிறது. இந்த பூஜை புனஸ்காரம் தண்ணீர் திறந்து விட மட்டுமல்ல பல அரசு கட்டிடங்களுக்கும் இந்து முறைப்படியே மனை பூஜை செய்யப்படுகிறது

இன்னும் கொஞ்சம் டீப்பா யோசிங்க அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் தானே இருக்கு

அப்புறம் பதவி பிரமாணம் எடுக்கும் போது கடவுளின் பெயரால் எனச் சொல்ல ஆங்கிலத்தில் In the Name of GOd என்றும் ஆனால் ஹிந்தியில் ஈஸ்வர் என்றும் ஹிந்து கடவுள் பெயரையும் தான் சொல்கிறார்கள்

வேறு கடவுள் பெயரைச் சொல்ல அனுமதி இல்லை

இதெல்லாமும் போடுங்கள் ஸ்வாமி

Anonymous said...

இந்தியில் ஈஸ்வர் என்பது பொதுவாக கடவுளைக் குறிக்கும்.

‘டெல்லி செங்கோட்டைக்குள் இருக்கும் முத்து மசூதி (Pear Mosque)

சென்னை தலமைச் செயலக வளாகத்தில் உள்ள தேவாலயம்'

ஆம்,ஏனெனில் அந்த வளாகங்கள்
அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால்.
'இஸ்லாத்தின் வழிபாட்டு ஸ்தலங்களான பல தர்ஹாக்கள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள வஃக்ப் வாரியத்தின் பொறுப்பில்-'
தர்ஹாக்கள் வேறு,மசூதிகள் வேறு.
தூய இஸ்லாம் என்று சொல்பவர்கள்
தர்ஹாக்களை மறுப்பவர்கள்.தர்ஹாக்களுக்கு மசூதிகள் போல் மார்க்க அங்கீகாரம்
கிடையாது.

‘இன்னும் கொஞ்சம் டீப்பா யோசிங்க அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம் தானே இருக்கு'

அது கோபுரம், தமிழர் மரபின் சின்னமாக இருக்கிறது, மதச் சின்னமாக அல்ல.

இந்த தீர்ப்பினை எதிர்த்து இந்து அமைப்புகள் மேல் முறையீடு
செய்யவேண்டும்.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//அது கோபுரம், தமிழர் மரபின் சின்னமாக இருக்கிறது, மதச் சின்னமாக அல்ல //

ஆக தமிழர் மரபென்பது இந்து ஆலய கோபுர வடிவமா அனானி

இஸ்லாத்தின் மத வழி முறையில் தர்ஹா இல்லையென்பது உமது யூகம். தீர்மானமாக சொல்ல துணிவு இல்லாத நிலையிலேயே அனாமதேயமாக மடலிடும் அனானியே

டில்லி செங்கோட்டையின் ஏனைய இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டிலும் முத்து மசூதி அரசின் தனிக் கட்டுப்பாட்டிலும் இருக்கு அந்த விபரம் தெரியுமா

அதே தான் இங்கே தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் சர்ச்சும்

தலைமை செயலக வளாகம் சில இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டிலும் சில இடங்கள் தொல்லியல் கட்டுப்பாட்டிலும் இருக்கு அந்த சர்ச் ராணுவக் கட்டுப்பாட்டிலோ அல்லது தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டிலோ இல்லை

சரியா அனானி

அத்தனைக்கும் பதில் சொன்னீரே அனானி அரசு மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போதும் கல்லணையில் தண்ணீர் திறந்து விடும் போதும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி வாசனை சகிதம் இந்து முறைப்படி வழிபாடு செய்து பின்னர் தானே செய்கிறது. இந்த பூஜை புனஸ்காரம் தண்ணீர் திறந்து விட மட்டுமல்ல பல அரசு கட்டிடங்களுக்கும் இந்து முறைப்படியே மனை பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லிருக்கேனே அதுக்கு பதிலே காணோம்

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//அது கோபுரம், தமிழர் மரபின் சின்னமாக இருக்கிறது, மதச் சின்னமாக அல்ல //

ஆக தமிழர் மரபென்பது இந்து ஆலய கோபுர வடிவமா அனானி

இஸ்லாத்தின் மத வழி முறையில் தர்ஹா இல்லையென்பது உமது யூகம். தீர்மானமாக சொல்ல துணிவு இல்லாத நிலையிலேயே அனாமதேயமாக மடலிடும் அனானியே

டில்லி செங்கோட்டையின் ஏனைய இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டிலும் முத்து மசூதி அரசின் தனிக் கட்டுப்பாட்டிலும் இருக்கு அந்த விபரம் தெரியுமா

அதே தான் இங்கே தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் சர்ச்சும்

தலைமை செயலக வளாகம் சில இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டிலும் சில இடங்கள் தொல்லியல் கட்டுப்பாட்டிலும் இருக்கு அந்த சர்ச் ராணுவக் கட்டுப்பாட்டிலோ அல்லது தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டிலோ இல்லை

சரியா அனானி

அத்தனைக்கும் பதில் சொன்னீரே அனானி அரசு மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போதும் கல்லணையில் தண்ணீர் திறந்து விடும் போதும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி வாசனை சகிதம் இந்து முறைப்படி வழிபாடு செய்து பின்னர் தானே செய்கிறது. இந்த பூஜை புனஸ்காரம் தண்ணீர் திறந்து விட மட்டுமல்ல பல அரசு கட்டிடங்களுக்கும் இந்து முறைப்படியே மனை பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லிருக்கேனே அதுக்கு பதிலே காணோம்

Anniyan said...

அரசு மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போதும் கல்லணையில் தண்ணீர் திறந்து விடும் போதும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி வாசனை சகிதம் இந்து முறைப்படி வழிபாடு செய்து பின்னர் தானே செய்கிறது. இந்த பூஜை புனஸ்காரம் தண்ணீர் திறந்து விட மட்டுமல்ல பல அரசு கட்டிடங்களுக்கும் இந்து முறைப்படியே
மனை பூஜை செய்யப்படுகிறது.

Good lead, We will keep this in mind, and do what is to be done, thanks for binging to our notice

Krish said...

//// கிருஷ்...
நீங்க முதல்ல தமிழ்'ல எழுதிப் பழகுங்க!
பெரிய தமிழ் ஆராய்ச்சியாளர் என்று நினைப்பு!
நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குமாம். /////

ஐயோ டா!!!! தமிழ்ல எழுதறதுல மட்டும் தமிழ் பற்று இருந்த போதாதுங்கோ!!
பின்னூட்டத்தின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மூலசெய்தியைப் பாருங்கள். எது இப்போ தமிழ் கலாச்சாரம்னு தெரியல? ஆரியக் கலாச்சாரத்தின் பதிப்பில் தான் தென்னகம் இருக்குறது

Anonymous said...

புரட்சிக் கவிஞர் பாடியதை எல்லாம் வைத்து ஆண்டை மாற்ற முடியாது கிருஷ்... அப்புறம் எல்லா "பகுத்தறிவு" கவிஞர்களும் தன் பங்குக்கு ஒரு மாதத்தை முன்வைத்தால் நாடு தாங்காது... புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. ஆனா ஊனா உடனே ஆரிய கலாச்சாரமாம்... பேச ஒன்னுமில்லயின்னா திரி கொளுத்தி போடுவிங்களா??

Anonymous said...

'சென்னை தலமைச் செயலக வளாகத்தில் உள்ள தேவாலயம்'

இல்லை இல்லை
.. தேவாலயத்தில் உள்ள


தலைமை செயலகம் என நினைக்கத் தோனுது வாசகர்களை.

Anonymous said...

//ஆக தமிழர் மரபென்பது இந்து ஆலய கோபுர வடிவமா அனானி//

Same argument. Isnt the "Gopuram" not part of Tamil's Icon? One of the standout representation of Tamils pride is the gopuram. Indicating gopuram alone is no way a prejudice for religious bias. Infact only piece which was even considered for new world wonder was a temple. Is this in a religious context? We can keep debating for every mascot whether that is the representative symbol for any purpose.


//அரசு மேட்டூரில் தண்ணீர் திறக்கும் போதும் கல்லணையில் தண்ணீர் திறந்து விடும் போதும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, ஊதுபத்தி சாம்பிராணி வாசனை சகிதம் இந்து முறைப்படி வழிபாடு செய்து பின்னர் தானே செய்கிறது. இந்த பூஜை புனஸ்காரம் தண்ணீர் திறந்து விட மட்டுமல்ல பல அரசு கட்டிடங்களுக்கும் இந்து முறைப்படியே மனை பூஜை செய்யப்படுகிறது
//
Ah Ah. Is there a government order to do pooja like that. It is some group of people follow such sentiments. If this is taken as violation, then such acts can be challenged. What is glaringly a religious bias CM in his/official capacity criticize and ill treats a specific religious group.

ps: This is a age old issue of stating a name and being annonymous. This is purely a choice and legally there is no binding that someone got to produce their info in such open forums.

Anonymous said...

Yellow is to be announced the official color of the State. Colors of Police, school, jails, koovam river all to be changed.

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

//Ah Ah. Is there a government order to do pooja like that. //

Money is spent from Govt Account

and procedures are also mentioned thro govet letters

I talk only with eveidences

Anonymous said...

The very fact is, p'ple celebrate Chithrai 1st as tamil new year.

The bloody politician only thinking of their power & make political moves like this.

Can KK answer why his TV telecast spl. programs on Chitrai 1?

Why the 'Nasthika' KK's TV telecast spl. programs on 'Deepavali' ("DeepaOli" also has same meening, though it appears to be different for the so called 'Pahuththarivu' brains.)

Just Power/Money in theis mind.. everything is money making business for KK & co.

Mere waste changing tamil new year day. Playing with (only) HINDUs sentiments.