பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 29, 2008

எங்கள் அணி தான் முதல் அணி - விஜயகாந்த்

கல்கியில் வந்த விஜயகாந்த் விளாசல் என்ற தலைப்பில் வந்தது...

கம்யூனிஸ்ட் தலைவர்களோடு சந்திப்பு, இளைஞரணி மாநாட்டுக்கான தயாரிப்பு, நடிகர் வடிவேலுவோடு மோதல் என பரபரப்பாகவே இருக்கிறது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் அரசியல் களம். அவர் நம்மோடு பேசியதிலிருந்து இங்கே...!

இளைஞர் மாநாடு : அதிகாரம் எங்களிடம் இல்லாவிட்டாலும், தனிப் பட்ட முறையிலும், கட்சி சார் பிலும், நிறைய உதவிகளை இளைஞர்களுக்குச் செய்து வருகிறோம். விருத்தா சலத்தில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வரு கிறோம். தி.மு.க. பிரமுகர்களின் பிள்ளை களும் படிக்கிறார்கள். சமீபத்தில் 600 கம்ப்யூட் டர்கள் வாங்கி தமிழ் நாடு முழுவதும், பயிற்சி மையங்கள் நடத்தக் கொடுத்துள் ளோம். 100 ஆட்டோக் கள் வாங்க நிதியுதவி செய்கிறோம். இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக ஒரு லட்சம் இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர இருக்கிறோம். தி.மு.க. அரசு, தொலைக்காட்சிப் பெட்டிகளை கட்சிக் காரர்களுக்குக் கொடுப்பது போல செயல் பட மாட்டோம்.

பாசமிகு கம்யூனிஸ்டுகள் : நான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் அவர்களைச் சந்தித்த வுடன், பலவிதமான யூகங்கள் உலவி வருகின்றன. கம்யூனிஸ்ட்கள் எந்தவித சுயலாபமும் எதிர்பாராமல் மக்களுக்கு உழைத்து வருபவர்கள். வறுமையையும், ஊழலையும் ஒழிக்கவேண்டுமென்று உண்மையிலேயே போராடி வருபவர்கள். “விஜயகாந்த் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குவாரா?” என்றெல்லாம் பேச்சு துவங்கிவிட்டார்கள். மூன்றாவது அணி என்று சொல்லாதீர்கள். நாங்கள் முதல் அணி. ஒன்று மட்டும் நிச்சயம். தி.மு.க. - அ.தி.மு.க.வோடு நேரடி யாகவோ அல்லது மறை முகமாகவோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம்.

தமிழன் ஏமாற்றப்படுகிறான் : தமிழர் களை கருணா நிதியும், ஜெயலலிதா வும் ஏமாற்றி, சுரண்டி அரசியலில்
பிழைப்பது ஒரு பக்கம் இருக்க,
சுற்றியுள்ள மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கின்றன. கர்நாடகம், காவிாிக்குத் தடைபோடுகிறது. பாலாற்றில் அணை கட்டப் போகிறோம் என்று ஆந்திர அரசு நம்மை மிரள வைக்கிறது. முல்லைப் பாிெயாறு பிரச்னையில் தமிழகத்தை வஞ்சிக்கிறது கேரளா. மொத்தத்தில் தேசிய நீரோட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழனை குறுகிய சிந்தனைக் குத்தள்ளிவிடு கிறார்கள் இவர்கள். எந்தப் பிரச்னையையும் தீர்க்க முயற்சி
செய்யா மல், கவிதை எழுதுவது, குடும்பத் தைக் கொஞ்சுவது என்று நேரத்தைச் செலவு செய்து கொண்டிருக்கிறார் கருணாநிதி.

வீராசாமி வெற்றுச்சாமி : கடந்த சில மாதங்களாக ஆற்காடு வீரா சாமி மீது நிறைய விமர்சனங்கள் வைத்தாகி விட்டது. ஆனால் எதற்கும் அசராமல் இருக்கிறார் அவர். ‘காற்று வீசினா கரண்ட் கிடைக்கும்’ என்று சொல்வதற்கு ஒரு அமைச்சர்! தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே, கடந்த பத்தாண்டுகளில், தமிழகத்தின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு, மின் உற்பத்தியைப் பெருக்க முயற்சி செய்ய
வில்லை. தன் குடும்ப நலத்துக்கு, தங்களுக்கு வேண்டிய இலாக் காக்கள் பெறுவதற்கு, மத்திய அரசைப் பயன்படுத்திக்கொள்ளும் கருணாநிதி, நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்துக்கு மட்டுமே என்று ஏன் போராடவில்லை? நெய்வேலி முதல்கட்ட மின்நிலையம் அமைக்கப்பட்டபோது, தமிழகம் மட்டுமே அதன் பயனாளி என்று முடிவெடுக்கப்பட்டது கருணாநிதிக்குத் தாிெ யுமா?

பள்ளிக் கணக்கு ; புள்ளிக் கணக்கு : உள்ளாட்சி அமைச்சர் ஸ்டாலின், சுயஉதவிக் குழுக்கள் துவக்கப்பட்டதற்கு காரணம் தி.மு.க. அரசு தான் என்கிறார். ஆனால் ப.சிதம்பரமோ, “காங்கிரஸ் அரசுதான் சுயஉதவிக் குழுக் களை அறிமுகப்படுத் தியது; ஆனால் பத்திாி கைகள் அதைப் போடுவதில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார். மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் பற்றிப் புள்ளிவிவரம் சொல்லிவிட்டுச் சென்றால், ஸ்டாலின், தமிழ்நாடு உச்சாணிக் கொம்பில் இருப்ப தாக அவர் ஒரு புள்ளிவிவரம் தருகிறார். இரண்டுக்கும் தொடர்பே இல்லை. பாவம், ஸ்டாலினுக்குப் பள்ளிக் கணக்கும் தாிெயலை; புள்ளிக் கணக்கும் தாிெயலை. படுத்தும் பா.ஜ.க. :இந்தக் கட்சி அதிகாரத்தில் இருக்கும் மாநிலங்களில் சிறுபான்மை யோர் மீது வன்முறை ஏவி விடப்படுகிறது. சிறுபான்மை யோரைக் காக்கும் பாிெய கடமை பெரும்பான்மையோருக்கு உண்டு. மேலும் மதமாற்றத்தில் சிறுபான்மை யோர் ஈடுபடுகிறார்கள்.. என்று சொல்வது சாியல்ல. மனிதன் மதம் மாறுவது என்பது அவனது தனிப்பட்ட உாிமை. உளப்பூர்வமாக ஒருவன் வேறு மதத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால்,
விரைவில் தாய் மதம் திரும்பிவிடுவான். மேலும் இந்தப் பிரச்னைகளை யெல்லாம் விட மனிதனின் வறுமையைப் போக்க முயலவேண்டும். இதை பா.ஜ.க. உணர்ந் தால் அந்தக் கட்சிக்கு நல்லது.

எப்படிச் சாத்தியம்? : எங்கள் செல் வாக்கை வீழ்த்தத்தான் மலிவு விலை ஒரு ரூபாய் அாிசியைக் கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுப்போம் என்று சொன்னதைக் கிண்டலடித் தார்கள். இப்போது இரண்டு கோடி பொட்டலங்கள் போட்டு மசாலா சாமான்களை எப்படிக் கொடுக்கப் போகிறார்கள்? கறவை மாடு கொடுப்போம் என்று சொன் னதற்கு சிாித்தார்கள். இப்போது வீட்டுக்கு மாடு திட்டத்தை அரசே அறிமுகப் படுத்துகிறது. அரசு ஊழியம் செய்யும் பெண்களுக்கு ஆறு மாதம் பிரசவ கால விடுமுறை கொடுக்கவேண்டும் என் றோம். மத்திய அரசு இப்போது ஆணை போட்டிருக்கிறது.

வடி(பொடி)வேலு :
சிலரது தூண்டுதலின் பாிேல் பகடைக் காயாகச் செயல்படும் வடிவேலு, இப்போது நேரடியாக என்னை வம்புக்கிழுக்கிறார். என்னுடைய படங் களில் நடிக்கும் போது, முதல்வர் என்று வசனம் பேச நான் சொன்னேன் என் றும், “அது முடியாது” என்று மறுத்ததால்தான் கோபம் என்றும் கூறுகிறார் வடிவேலு. கடைந்தெடுத்த பொய். என் படங்கள் அனைத்துமே சிரியஸான படங்கள். அவற்றில் காமெடிக்கு அதிக வேலை இல்லை. கருணாநிதி - ஜெயலலிதா என்ற இரு தலைகளை எதிர்த்து துணிந்து அரசியல் செய்துகொண்டிருப்பவன் நான். என்னை எதிர்த்துப் போட்டி போடுவேன் என்று சொல்லி சிாிக்க வைக்கிறார் வடிவேலு. அவரை எங்கள் கட்சியின் கடைக்கோடி தொண்டன்கூட தோற்கடிப்பான். எங்கள் கவனத்தைச் சிதறடிக்க வேண்டாம் என்பதே அவருக்கு என் அட்வைஸ்.




தமிழகத்தின் நலன் கருதுமா தே.மு.தி.க.? - கல்கி தலையங்கம்


யார் விரும்பினாலும் விமர்சித்தாலும், விஜயகாந்த் இன்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அரசியல் சக்தியாக விளங்குவதை மறுப்பதற்கில்லை. திரளான மக்கள் அவரது கூட்டத்துக்கு வருகின்றனர்; அவரைத் தலைவராக ஏற்றுள்ளனர்.

ஆனால், கூட்டத்துக்கு வரும் அத்தனை பேரும் தமக்குத்தான்
வாக்களிப்பார்கள் என்று விஜயகாந்த் அனுமானிப்பது தப்புக்கணக்காகி விடும். எம்.ஜி.ஆர். தனித்துக் கட்சி ஆரம்பித்தபோது எழுந்தது போன்ற ஆர்வ அலை, இப்போது தமிழக அரசியலில் இல்லை. இந்தச் சூழலில், விஜயகாந்த் தனியாகப் போட்டியிடுவதால் சில பல தொகுதிகளை வென்று நல்ல எதிர்க்கட்சியாக விளங்கலாமேயொழிய ஆட்சி அமைக்கவோ, ஆட்சி அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கவோ முடியாது. ஆனால், அவர் தனித்துப் போட்டியிடுவதால் வோட்டுகள்
பிாிந்துபோய், வலுவான அரசு அமைவதற்கான சூழல் நிச்சயம் பாதிக்கப்படும். தமிழ்நாட்டுக்கு இந்த இக்கட்டைத் தர விஜயகாந்த் விரும்புகிறாரா?

கம்யூனிஸ்டுகள் காாிேயது போல், அவர்களுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்தாலும் இதே இக்கட்டுதான் ஏற்படும். மேலும், கொள்காீைதியான மோதல்கள் ஏற்படாமல் கம்யூனிஸ்டுகளு டன் எந்தக் கட்சியும் நீடித்து ஆட்சி செய்வது துர்லபம். தி.மு.க., அ.தி.மு.க.வுடனான கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை; பா.ம.க.வும் விஜயகாந்தை ஏற்கவில்லை என்கிற சூழலில், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிற ஒரு சாத்தியக்கூறு மட்டுமே மிஞ்சுகிறது.

மைனாாிட்டி ஆட்சி அமைப்பதில் தவறில்லை என்று கருதிய தி.மு.க. தலைவர் கூட, இன்று பா.ம.க.வும் கம்யூனிஸ்டுகளும் கூட்டணியிலிருந்து விலகிவிட்ட அச்சத்தினால், காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு அளிக்க முன்வந்துள்ளார்! இதுபோன்ற ஸ்திரமற்ற நிலைமைக்கு
இடங்கொடாமல், தே.மு.தி.க. எதிர்வரும் தேர்தலில் சிறந்த முறையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்; அதன் துணையுடன் அரசு அமைப்பதாகவே பிரசாரம் செய்யலாம்.

தி.மு.க., அ.தி.மு.கவின் அரசியல் போக்கு பிடிக்காமல் சலித்துப்
போயிருக்கிற தமிழக மக்களுக்கும் இந்த மாற்றுக் கூட்டணி வரவேற்கத்தக்கதாகத் தோன்றும்.

ஆனால் ஒன்று, தி.மு.க.வில் குடும்பச் சண்டை, அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவின் ஏகபோகம், காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் என்று நிலவுவது போல் மிகப் பாிெய குறைபாடுகள் தமது கட்சியிலும் ஏற்பட விஜயகாந்த் அனுமதிக்கக்கூடாது; “ஊழலை இரவோடு இரவாக ஒழிக்க முடியாது” என்று பின்வாங்கவும் கூடாது.

“நேர்மையான ஆட்சி, தகுந்த அதிகாாிகளைக் கொண்டு தரும் சிறந்த நிர்வாகம்” என்பவை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டால், அனுபவமற்ற நடிகருக்கு வோட்டுப் போட யோசிப்போர் கூட ஆதரவு
நிலைக்கு மாற வாய்ப்பு இருக்கிறது. இலவச அரசியல் என்னும் நச்சுக் காற்றால் மாசுபட்டுள்ள தமிழகத்தில் புத்துணர்ச்சித் தென்றல் வீசும். தங்கபாலு ஏற்கெனவே விஜயகாந்துடன் கைகோப்பது குறித்து ஆர்வம் காட்டியிருக்கிறார். ராகுல் காந்தியும் சிந்திக்க வேண்டும்.
( நன்றி: கல்கி )

Read More...

சத்யநாராயணா வீட்டில் ரஜினி ரசிகர்கள் திடீர் முற்றுகை

ரஜினி ரசிகர் மன்ற பொறுப் பாளர் சத்யநாராயணா வீடு கோபாலபுரத்தில் உள்ளது. அவரது வீட்டில் ரசிகர்கள் திடீர் முற்றுகையிட்டனர். ரஜினியை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று வற்புறுத்தினார்கள். அவர்களிடம் ரஜினியிடம் பேசி ஓரிரு நாளில் தகவல் சொல்வதாக சத்யநாராயணா உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். ரஜினியை சத்யநாராயணா இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது ரசிகர்கள் விருப்பம் பற்றி எடுத்துச் சொல்கிறார். அதன்பிறகு ரசிகர்களை ரஜினி சந்திக்கும் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

ரஜினி ரசிகர்களுக்கு என்ன அட்வைஸ் கொடுக்கலாம் ?

Read More...

திமுகவின் அடுத்த திட்டம் இலவச அரிசி, கேபிள்- விஜயகாந்த் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் பகவத்சிங் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 5000 பேர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் தேமுதிக வில் நேற்று மாலை இணைந்தனர். விஜயகாந்த் பேச்சு கீழே...

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள். 5 முறை முதலமைச்ச ராக கருணாநிதி இருந்தும் விலைவாசி குறையவில்லை. எதற்கெடுத்தாலும் கவிதை எழுதும் முதலமைச்சர் விலை வாசி உயர்வுக்கு கவிதை எழுதுகிறாரா?

எது எதற்கோ மத்திய அரசை மிரட்டும் முதல்வர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஏன் மத்திய அரசை மிரட்டவில்லை.

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். இது சாத்தியமல்ல என்று கூறியவர்கள்தான் 10 மளிகை பொருட்கள் அடங்கிய பாக்கெட் 50 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அரசு 50 ரூபாய்க்கு தருவதாக கூறிய மளிகை பொருட்களை அக்டோபர் 2ம் தேதிக்கு முன்பே தேமுதிக அலுவலகத் தில் விழா நடத்தி ரூ.38க்கே என்னால் தரமுடியும். ஆனால் திமுகவினரே அதை வாங்கிச் சென்று கெட்டுப்போன பொருட்களைத் தான் விஜயகாந்த் தருகிறார் என்று குறை கூறுவார்கள். அதனால் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்.

திமுகவின் அடுத்த இலவசம் ரேஷன் அரிசியாகத்தான் இருக்கும். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கேபிள் கனைக்ஷனையும் இலவசமாக வழங்குவோம் என அறிவிப்பு வரும் என்று தகவல் கிடைத்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிரண்டு சீட்டிற்காக எதற்கு விஜயகாந்த் வீட்டு வாசலை மிதிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கூறியிருக் கிறார். இவர்களிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்றால் மட்டும் முதல்வர் பதவியா கொடுக்கப் போகிறார்கள்.

மக்கள் இன்றுள்ள நிலையில், அடுத்து தேமுதிக ஆட்சிதான் என்று நான் அடித்துச் சொல்வேன். இதேபோல் திமுகவும், அதிமுகவும் சொல்ல முடியுமா?

நான் நானாகவேதான் இருக்கிறேன். கூட்டணியைப் பற்றி யோசிக்கவே இல்லை. கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து கூட்டணிக்காக என்னை தேடி வருகிறார்கள். தேடி வருபவர்களை வரவேற்று உபசரிப்பதுதானே நமது பண்பாடு.

மதுரையில் ஒரு திரைப்படத்தை திரையிட முடியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் மறைமுகமாக மிரட்டப்படுகிறார்கள். ஆனால் முதல்வரோ அவ்வாறு ஏதும் புகார் இல்லை என்கிறார். முதல்வரின் மகனை பற்றி யார் புகார் கூறமுடியும்.

மதுரைக்கு இவர் (கருணாநிதி) முதலமைச்சரா? அல்லது இவரது மகன் முதலமைச்சரா? வல்லபாய் படேல், காந்தி போன்றவர்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திர நாட்டில் இன்று சர்வாதிகாரம் நடந்து வருகிறது.

நமது முதல்வர் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்கிறார். ஆனால் அவர் பணக்காரர்களின் சிரிப்பில் பணத்தைதான் பார்க்கிறார்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து மக்களை ஏமாற்றி வருகின்றன.

ஆட்சிக்கு வராமலேயே மக்களுக் காக சிந்திப்பதால் என்னால் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, வட்டியில்லா கடனாக ஆட்டோக்கள், படிக்காத மற்றும் படித்த ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடிகிறது.

இங்கு வந்திருக்கும் பெண்கள் நினைத்தால் நாட்டின் தலையெழுத் தையே மாற்ற முடியும். அதிமுக தோழிக்காக இருக்கிறது. திமுக குடும்பத்திற்காக இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் ஏமாற்றும் கட்சிகள். மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி தேமுதிகதான்.

Read More...

Friday, September 26, 2008

இன்னொரு இதயம் தானம்

பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் சகோதரர் மரணம் சென்னையில் தானமாக வழங்கப்பட்ட ஈரல் விமானத்தில் குஜராத் பறந்தது வெற்றிகரமாக பொருத்தியதால் நோயாளி உயிர் பிழைத்தார்

பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் சகோதரர் மரணம் அடைந்ததால் அவருடைய ஈரல் தானம் வழங்கப்பட்டு விமானம் மூலம் குஜராத் எடுத்து செல்லப்பட்டது. அங்கு ஒரு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

தானம் குறித்த விழிப்புணர்வு

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதிகளின் மகன் ஹிதேந்திரன் விபத்தில் காயம் அடைந்து பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டவுடன், அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் தானம் செய்யப்பட்டன. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

டாக்டர் தம்பதி அசோகன்-புஷ்பாஞ்சலி ஆகியோர், தாங்க முடியாத சோகத்திலும் கூட, தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய எடுத்த முடிவு இன்றைக்கு பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக சென்னையில் மற்றுமொரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

பிரபல `கார்ட்டூனிஸ்டு' மதன், சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு 2 தம்பிகள் மற்றும் 4 சகோதரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம்நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். மதனின் 2-வது தம்பி முரளி (வயது 50). இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மீனா (42) என்ற மனைவியும், அர்ஜுன் (16) என்ற மகனும் உள்ளனர். அர்ஜுன் அதே பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாசரம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, முரளி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை வீட்டில் உள்ளவர்கள் நந்தனத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

உடல் உறுப்புகள் தானம்

அங்கு, முரளியின் தலையை டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, மூளையில் ரத்தம் கசிந்தது தெரியவந்தது. உடனே, அவர் தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், முரளியின் மூளை செயலிழந்துவிட்டதாக கூறினர்.

இதனால், மரணம் உறுதி செய்யப்பட்ட முரளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் முரளியின் மனைவி மீனாவிடம் இதுகுறித்து கூறப்பட்டது. அவர் கனத்த இதயத்துடன் இதற்கு ஒத்துக்கொண்டார்.

பின்னர், அவரது மகன் அர்ஜுனிடம் கேட்கப்பட்டது. உடனே, அவர் `அய்யய்யோ... எனது தந்தையின் உடல் துண்டு துண்டாக வெட்டப்படுமா?' என்று கதறி அழுதார். உடனே, அர்ஜுனிடம், `இல்லையப்பா... உலகத்தில் நிறைய பேர் பலவித நோய்களால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உனது தந்தையின் உறுப்புகளை தானம் கொடுத்து உதவுவதால், பலரும் உயிர் பெறுவார்கள். இதனால் பல குடும்பங்களில் மீண்டும் ஒளியேற்றப்படும்' என்று கூறப்பட்டது. அதன்பின்னர், அர்ஜுனும் தந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தார்.

சென்னை ஜெ.ஜெ. நகரில் உள்ள செரியன் ஆஸ்பத்திரியில் இதய நோயால் சிகிச்சை பெற்றுவரும் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த ஒருவருக்கு, இதயம் தேவைப்பட்டது. அதேபோல், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு சிறுநீரகம் (கிட்னி) தேவைப்பட்டது.

குஜராத்தில் ஈரல் பாதிப்பால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவருக்கு, அவசரமாக ஈரல் தேவைப்பட்டது. ஈரலை பொறுத்தவரை உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டவுடன், 3 மணி நேரத்திற்குள் பயன்படுத்தியாக வேண்டும்.

எனவே, டாக்டர்கள் முரளியின் உடலில் இருந்து எடுக்கப்படும் இதயம் மற்றும் சிறுநீரகங்களை சென்னையில் உள்ளவர்களுக்கும், குஜராத்தில் உள்ளவருக்கு ஈரலை கொடுப்பதற்கும் முடிவு செய்தனர்.

சென்னையில் உள்ளவருக்கு இதயம் கொடுப்பது நடைமுறைக்கு சாத்தியம். ஆனால், குஜராத் ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒருவருக்கு எப்படி ஈரலை கொண்டுபோய் பொருத்துவது என்பது குறித்து டாக்டர்கள் விவாதித்தனர். குஜராத் டாக்டர்களுடன் கலந்து பேசினார்கள். மேலும், சென்னை செரியன் ஆஸ்பத்திரி டாக்டர்களுடனும் பேசினார்கள்.

டாக்டர்கள் முடிவு

இறுதியில் அனைத்து டாக்டர்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி, குஜராத்திற்கு விமானம் மூலம் ஈரலை பதப்படுத்தி அனுப்ப முடிவு செய்தனர். ஆனால், தேனாம்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்லவே குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும். அதன்பின்னர், அங்கு போலீஸ் சோதனையை முடித்துக்கொண்டு விமானத்திற்கு செல்லவே 30 நிமிடங்கள் ஆகும்.

எனவே, இதுகுறித்து முன்னதாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் நேரத்தில் விமான நிலையம் செல்வதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், அதிகாலை நேரத்தில் இந்த சாதனையை நிகழ்த்த டாக்டர்கள் குழுவினர் முடிவு செய்தனர்.

அதையடுத்து, நேற்று காலை 5 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முரளியின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன. உடனடியாக இதயம் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு ஜெ.ஜெ.நகர் செரியன் ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக காரில் கொண்டு செல்லப்பட்டது.

[ தேந்திரனின் இதயத்தை எடுத்து சென்றது போலவே, உதவி கமிஷனர் மனேகரன், காவலர் மோகன் இருவரும் போலீஸ் காரில் தயாராக இருந்தனர். காலை 6.07 மணிக்கு இதயத்தை எடுத்துக் கொண்டு, மதுசங்கர் வெளியில் வந்தார். சரியாக 14 நிமிடத்தில் ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்ததால்தான், இதயத்தின் பயணம் நேற்று 4 நிமிடங்கள் தாமதமானது. இதயம் கொண்டு செல்லப்பட்டதும் 48 வயதுக்காரருக்கு பொருத்தப்பட்டது.

அதே நேரத்தில், ஈரல் மற்றொரு ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு விரைவாக விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டு பகுதிக்கும் டாக்டர்கள் உடன் சென்றனர்.

2 சாதனைகள்

சென்னையில் இதய நோயால் அவதிப்பட்டவருக்கு 30 நிமிடத்திற்குள் இதயம் கொண்டுபோய் ஆபரேஷன் மூலம் பொருத்தப்பட்டது. முரளியின் ஈரல் விமானம் மூலம் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த 2 சாதனைகளும் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் நடந்தது. இறந்த முரளியின் ரத்தவகை `ஏ' பாசிட்டிவ் ஆகும். அதேபோல், இதயம், ஈரல், சிறுநீரகம் என தேவைப்பட்ட அனைவருமே, அதே ரத்தவகையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளியின் கண்கள் இரண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறந்து பலருக்கு உயிர் கொடுத்த முரளியின் உடல் நேற்று காலை 9 மணியளவில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முரளியின் மனைவி மீனா

என் கணவரை சேர்த்திருந்த அறைக்கு பக்கத்து அறையில்தான் தேந்திரன் இருந்தான்.
தேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தகவலை மறுநாள் தினகரன் நாளிதழில் படித்தேன். அதன் பின்னர்தான், கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தோம். என்னுடைய கணவரின் இதயம் யாருக்கு பொருத்தப்படுகிறது என்பதை நான் கேட்க விரும்பவில்லை. அந்த இதயம் நன்றாக வாழ்ந்தால் போதும். கணவரின் கண்கள் யாருக்காவது பயன்பட்டால் போதும்.
இவ்வாறு மீனா கூறியபோது அவரால் பேச முடியாமல் கண்கலங்கினார்.



பிற்பகல் 2.30 மணியளவில் அவரது உடல் பெசன்ட்நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அவரது அஸ்தி மாலை 4 மணிக்கு பெசன்ட்நகர் கடலில் கரைக்கப்பட்டது. உடல்தான் எரிந்து கடலில் கரைந்ததே தவிர, அவரது உடல் உறுப்புகள் உயிரோடு இருந்து, இரண்டு பேருக்கு உயிர் கொடுத்துள்ளது. 2 பேருக்கு பார்வை கொடுக்க காத்திருக்கிறது.


( செய்தி: தினத்தந்தி மற்றும் தினகரன் )

Read More...

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவிகள் வந்து சேர்ந்தது!

செஸ் வீராங்கனை மோஹனப்ப்ரியா - உதவி தேவை என்ற பதிவை பார்த்துவிட்டு பலர் மோகன பிரியாவிற்கு உதவியுள்ளார்கள். அதன் விவரம் கீழே....

-----Original Message-----
From: mohana priya [mailto:xxxxxx]
Sent: Thursday, September 25, 2008 9:03 PM
To: idlyvadai@gmail.com
Cc: xxxxxxxxxxxxxxxxxx
Subject: Chess

Thank you all for taking up the issue public and responding positively in very short span of time.

On behalf of Mohanapriya I would like to thank Gowrishankar and moderator of idlyvada for writing up this for us. I am thankfull to Gopinath for sending fund overnight immediately after reading the article. I am also thankful to Nithya for coordinating this effort. Not but not the least, we are extremely thankfull to Abdulla for turning things for us on time.

I am very glad to inform you that my daughter J.Mohana priya got sponsor to fullfill the basic requirements like Laptop,DGT chess clock and CDs from Mr.Abdulla,Director, VKG steels and energy Pvt.Ltd for the forthcoming common wealth games and Vietnam world chess championship.Mr.Abdulla assured to sponsor Rs.1,00,000/- per annum to meet the National level tournaments.We hope that we can continue our 7 year experienced chess career.

we shall keep you all posted with the results of the tournament.

My sincer thanks to you for your enormous effort for getting chess sponsor

Thanking you
N.Jayachandhar
J.Mohana Priya
________________________________

Swami Subramanian has also contributed to Mohana Priya

இட்லிவடை வாசகர்கள் வழக்கம் போல் அசர வைத்துவிட்டார்கள்.

தற்போது பதிவுகளுக்கு கீழே விளம்பரங்கள் வருவதை பார்க்கலாம். என்ன தீடீர் என்று ? என்று பலர் கேட்டார்கள். அந்த விளம்பரத்தால் சிறு தொகை வருகிறது. விளம்பரத்தில் வரும் தொகை முழுவதும் இது போல் நல்ல காரியத்துக்கு உதவ முடிவுசெய்துள்ளேன்.

உதவி செய்த அனைவருக்கும் மீண்டும் நன்றி!!


Read More...

உதவும் இதயம் ஒருநாளும் ஓயாது


நேற்றே போட வேண்டிய பதிவு.
பெற்றோருக்கு தெரியாமல் மோட்டர் சைக்கிளை எடுத்துச் சென்ற மாணவன் விபத்தில் சிக்கினான். மூளை செயலிழந்ததால் உயிரை காப்பாற்ற முடியாத நிலை.
துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவனது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர் பெற்றோர்.

மின்னல் வேகத்தில் அந்த மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார் சென்னை போலீஸ் டிரைவர்.

காத்திருந்த டாக்டர்கள் குழு அபார வேகத்தில் செயல்பட்டு, அந்த இதயத்தை ஒரு நோயாளிக்கு பொருத்தி அவருக்கு மறுவாழ்வு அளித்தது.

- திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவங்கள், பயங்கரவாதிகளின் குண்டுகள் எத்தனை உயிர்களை பறித்தாலும் மனிதாபிமானத்துக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த சம்பவம் பற்றிய கீழே...

திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில் வசிப்பவர் டாக்டர் அசோகன் (44). இவரது மனைவி டாக்டர் புஷ்பாஞ்சலி(40). திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் 'மனீஸ் கிளினிக்' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் தேந்திரன் (16). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சனிக்கிழமை தேந்திரன் தன் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் நண்பன் மோகனை பார்க்க சென்றான். பார்த்து பேசிவிட்டு, வழியில் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். திருக்குமரன் நகரில் ஒரு மீன்பாடி வண்டி கட்டுமான பொருட்களுடன் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதை ஓவர்டேக் செய்து வலதுபுறம் வீடு இருந்த திசையில் திரும்ப தேந்திரன் முயன்றபோது, மீன்பாடி வண்டியில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி இடித்துவிட்டது. வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டியது. உடனே மயங்கி விட்டான்.

அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்கு தேந்திரனை நன்றாக தெரியும். உடனே அவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அவனது அப்பாவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். தேந்திரனுக்கு நினைவு திரும்பவில்லை. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், தலையில் அடிபட்ட அதிர்ச்சியில் தேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டதாகவும், என்னதான் சிகிச்சை அளித்தாலும் மூளை மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினர். தேந்திரனின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள் என்பதால் விஷயத்தை புரிந்துகொண்டனர்.

இனி உயிர் பிழைக்க முடியாத தங்கள் மகனின் உடல், மற்றவர்களுக்காவது உயிர் கொடுக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புவதாக அப்போலோ டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

நேற்று காலை தேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத் துவமனைக்கு அனுப்பப்பட்டன. சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் ஹார்ட் பவுண்டேசனில் சிகிச்சை பெறும் ஒரு சிறுவனுக்கு பொருத்துவதற்காக தேந்திரனின் இதயத்தை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஆபரேஷன் முடிந்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள் இதயம் இன்னொருவருக்கு பொருத்தப்பட வேண்டும். ஆனால், 20 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். சென்னை நகர டிராபிக் நெரிசலில் இது சாத்தியமே இல்லை. எனவே போலீஸ் உதவ முடியுமா என்று விசாரித்தனர். அடிஷனல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உடனே உதவ முன்வந்தார். ஆம்புலன்ஸ் ரெடி பண்ணுமாறும், அதை நெரிசலில் சிக்காமல் அழைத்துச் செல்ல ஹ¨ண்டாய் போலீஸ் காரை ஒரு ஏ.சி.யுடன் அனுப்பி வைப்பதாகவும் சுனில் கூறியுள்ளார். வழி நெடுக உள்ள அனைத்து சிக்னல்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

ஆபரேஷன் முடிந்ததும் டாக்டர்கள் தேந்திரனின் இதயத்தை சிறிய ஐஸ் பெட்டியில் எடுத்துக் கொண்டு 2.50 மணிக்கு வெளியில் வந்தனர். அங்கே நின்றிருந்த அவனது தந்தை ஐஸ் பெட்டியை பார்த்ததும் துக்கம் தாங்காமல் துணியால் வாயை மூடிக் கொண்டார். ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றிருந்தது. அதை கவனிக்காத டாக்டர், அதற்கு முன் நின்றிருந்த போலீஸ் காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்து, ‘வேகமா போங்க..!’ என்று சொல்ல, உள்ளே இருந்த உதவி கமிஷனர் மனோகரன் உடனே சுதாரித்துக் கொண்டு, டிரைவர் மோகனுக்கு ஜாடை காட்ட, உடனே கார் மின்னல் வேகத்தில் பறந்தது.

ஜெ.ஜெ.நகர் செரியன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ரெடியாக இருந்தது. ஒன்பது வயது சிறுவன் மாற்று இதயம் பொருத்துவதற்காக ஆபரேஷன் தியேட்டரில் காத்திருந்தான். போலீஸ் கார் வந்ததும், அப்போலோ டாக்டர் ஐஸ் பெட்டியுடன் உள்ளே ஓடிவந்தார். 6 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. தேந்திரனின் இதயத்தை டாக்டர்கள் குழு வெற்றிகரமாக 9 வயது சிறுவனுக்கு பொருத்தியது.
‘தேந்திரன்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? - ‘இதயத்தை கொள்ளை கொள்பவன்’

‘10 நிமிடத்தில் பறந்தேன்’

அந்த பரபரப்பான நிமிடங்கள் பற்றி கார் டிரைவரும் போலீஸ்காரருமான மோகன்

‘நானும் உதவி கமிஷனர் மனோகரனும் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிச் செல்ல தயாராக இருந்தோம். எதிர்பாராமல் டாக்டர்கள் எங்கள் காரில் ஏறிவிட்டனர். ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் ஏசி ஆட்சேபிக்கவில்லை. ஒருவருக்கு உயிர் கொடுக்க போகிறோம் என்ற பதற்றம் அந்த நிமிடத்தில் தாக்கியது. காரை வேகமாக ஓட்டினேன். கிட்டத்தட்ட 120 கி.மீ வேகத்தில் கார் பறந்தது.
அண்ணாசாலை, வி.என்.சாலை, பர்கிட் ரோட்டில் ஒரு வழிப்பாதையாக இருந்தாலும், போலீசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாலும் எதிர் திசை வழியாக, மேட்லிரோடு, தி.நகர் பஸ் நிலையம், புதிய மேம்பாலம், லயோலா கல்லூரி, அண்ணா வளைவு, அண்ணாநகர் ரவுண்டானா வழியாக ஆஸ்பிடலை அடைந்த பிறகுதான் வாட்சை பார்த்தேன். 10 நிமிடம்தான் ஆகியிருந்தது. டாக்டர் நன்றி சொல்லிக் கொண்டே மருத்துமனைக்குள் ஓடினார். அதன் பிறகுதான் எனக்கு நிம்மதி.
இதுவரை இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டியதே கிடையாது. அருகில் இருந்த உதவி கமிஷனர் மைக் மூலம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே வந்ததால், ரோடு கிளியராக இருந்தது. இது என்னால் மறக்கவே முடியாத நாள்’’


பெற்றோர் உருக்கம் வலி எங்களுக்குத் தெரியும்

ஹிதேந்திரனின் பெற்றோர் அசோகன், புஷ்பாஞ்சலி

ஹிதேந்திரன் அமைதியான பையன். எப்போதும் தம்பியோடு வீட்டில் தான் இருப்பான். மற்றவர்களுக்கு ஏதாவது என்றால் ஓடிச் சென்று உதவக் கூடியவன். அவனுக்கே இப்படியொரு நிலை வரும் என்று நினைக்கவே இல்லை. அவனது மரணம் எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆனாலும் அவனது உறுப்புகளை தானம் செய்ய நாங்களாக முன்வந்தோம். இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தேவைப்படுவோரின் வலியும் வேதனையும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, எங்களது மகனின் உடலுறுப்புகளைப் பெற்றவர்கள் மூலம், அவன் உயிர் வாழ்வான். அதுவே எங்களுக்குப் போதும்.



படங்கள்
படம் 1: விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த மாணவன் தேந்திரன்.
படம் 2: மகனை பறிகொடுத்த டாக்டர் தம்பதி.
படம் 3: ஐஸ் பெட்டியில் இதயத்தை வைத்து அவசரமாக எடுத்துச் செல்கின்றனர். படம் 4: ஆம்புலன்ஸ் நிற்பதை கவனிக்காமல், போலீஸ் காரில் இதயத்துடன் புறப்படுகின்றனர்.
( நன்றி: தினகரன் )

"ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த தியாகத்துக்கு ஈடு இணையே கிடையாது" - அமைச்சர் ஸ்டாலின்

Read More...

Thursday, September 25, 2008

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 25-09-08

இந்த வாரம் முனிக்கு இட்லிவடை கடிதம்...

மைடியர் முனி,

சௌக்கியமா ?

வடிவேலு வீட்டுக்கு வந்த கும்பல் வடிவேலு ஆபீஸை அடித்து நொறுக்கியபின் சம்பந்தமேயில்லாமல் "தல அஜித் வாழ்க" என்று கோஷம் போட்டுவிட்டு போயிருக்கிறார்கள். நல்லவேளை நம் தலைகளை உருட்டவில்லை. எனக்கு ஒரு சந்தேகம், பட்டபகலில் 50 பேர் கொண்ட கும்பல் வந்து இதைச் செய்திருக்கிறார்கள். நிச்சயம் அங்கே நிறைய பேர் வேடிக்கை பார்த்திருப்பார்கள், வேடிக்கை பார்த்தவர்களில் நிச்சயம் 50 சதவிகிதம் பேராவது மொபைல் வைத்திருப்பார்கள், ஒருவர் கூடவா இவர்களைப் படம் பிடிக்கவில்லை ? (அண்ணன் வடிவேலுவிற்கு ஒரு வேண்டுகோள்: அடுத்த முறை இந்தக் கும்பல் வந்தால் ஏம்பா இவ்வளவு 'irresponsible'ஆ இருக்கீங்க, அடிக்க நான் தான் கிடைத்தேனா என்று கேட்டு அவர்களை 'வேறு திசை'யில் நடக்கும், மொட்டை மாடிக் கூட்டத்துக்கு அனுப்பிவைக்கவும்.)

குமுதம் விகடனுக்கு இனிமேல் கொண்டாட்டம்தான், எந்திரன் படபிடிப்பு ஸ்டில்கள் வர ஆரம்பித்துவிட்டன. இதை வைத்து கவர் ஸ்டோரி, பாக்ஸ் ஸ்டோரி, ஜோக்ஸ் என்று பக்கத்தை நிரப்புவார்கள். ஏதோ அவர்கள் பிழைப்பும் நடக்கட்டும்.

திருமாவளவன் ஒரு பேட்டியில், "ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட சிவராஜனும், தணுவும் எல்.டி.டி.ஈ.யின் உறுப்பினர் அட்டை வைத்திருந்தார்களா?" என்று புத்திசாலியாக (நினைத்துக்கொண்டு) ஒரு கேள்வி கேட்டுள்ளார். சயனைட் குப்பி தான் அடையாள அட்டை என்ற அடிப்படையே அவருக்குத் தெரியவில்லை. இவர் வீட்டுக்கு யாராவது திருட/அடிக்க வந்தால், "சார் உங்களிடம் திருடன்/ரௌடி என்ற அடையாள அட்டை இருக்கிறதா?" என்று கேட்பார் போலிருக்கிறது.

ஆணுறை பாக்கெட்டில் செக்ஸ் படம் இருக்க கூடாது என்று வழக்கில் சென்னை ஹைகோர்ட் தடைவிதித்தது. உச்ச நீதிமன்றம் பாக்கெட்டுகளில் `செக்ஸ்' படம் இருக்கலாம் என்று தீர்ப்பு கூறியது. ஹைகோர்ட்டுக்கு எதிராக, 'ஆணுறை செய்யும் (குடும்பக்) கட்டுப்பாடு போறும் நாம் வேற ஏன் கட்டுப்பாடு போடவேண்டும்?' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிக்குத் தோன்றியிருக்கலாம்.

இது வரை நெருப்பு போல் விலை ஏறாத பொருள் என்ன என்று பார்த்தால் அது நெருப்புப் பெட்டி தான். தற்போது நெருப்பு பெட்டியின் விலை 1/= அதாவது 14 வருஷத்துக்கு பிறகு இந்த விலை ஏற்றம் நடந்திருக்கிறது. பதினாலு வருஷத்துக்கு முன்னால் நெருப்புப் பெட்டியின் விலை 50 பைசா. அந்த வயதிலேயே நெருப்புப்பெட்டி உபயோகித்தேனோ என்று சந்தேகப் படாதே. அம்மா அடுப்புப் பற்றவைக்க ஓடிப்போய் வாங்கிவரச் சொல்வாள். அப்பா, தாத்தாக்களின் செலவுக் கணக்கு நோட்டையும் பார்க்கநேர்ந்திருக்கிறது.

1950 - 5 பைசா
1960 - 10 பைசா
1970 - 15 பைசா
1980 - 25 பைசா
1994 - 50 பைசா
2008 - 1 ரூபாய்

நம் ஜனாதிபதியின் மாத சம்பளம் 1 லட்சம் ரூபாய். கொஞ்ச நாளுக்கு முன் தான் ஏற்றினார்கள் என்று படித்தேன். அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் கிட்ட தட்ட 3 கோடி; இங்கிலாந்து ஜனாதிபதிக்கு பிரமமந்திரிக்கு 7-8 கோடி. சென்னை பிச்சை காரர்களின் வருட சம்பாதியம் 15 கோடியாம் :-). இனிமே யாரும் 'பிச்சை காசு' என்று சொல்லக்கூடாது.

(...,). இது என்ன என்று குழம்புவர்களுக்கு இது ஒரு படத்தின் டைட்டில். இந்தப் படம் முழுக்க 'பேசும்படம்' டைப் ஊமை படமாம். ஆனால் செண்டிமெண்ட், சண்டை, காதல் எல்லாம் இருக்கிறதாம். கடைசிக் காட்சியில் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் ஒரு நிமிடத்துக்குத் தோன்றி ஒரே ஒரு டயலாக் பேசுகிறாராம் ( கீதையை மேற்கோள் காட்டி). என்ன வசனம் என்பது எந்திரன் படக் கதை போல் ரொம்ப சீக்ரட். படம் வெளிவரு முன்பே தெரிந்துவிடும்.

மோகன் சந்த் சர்மாவிற்கு அரசு பத்து லட்சம் அளித்துள்ளது. அங்கங்கே கட்சி மாநாடுகளுக்கு வைக்கப்படும் அலங்கார விளக்குகளுக்கு (பொதுவிலிருந்து இலவசமாக இழுத்துக்கொள்ளும் மின்சாரச் செலவு நீங்கலாக) ஆகும் செலவுகூட பத்து லட்சம் மேல் இருக்கும். சர்மா பிழைக்கத் தெரியாதவர். இப்படி வாழ்ந்த நாளிலும் குண்டுகளோடு விளையாடாமல் யுவராஜ் போல் 6 சிக்ஸர் அடித்து ஒரு கோடியை அள்ளியிருக்கலாம். வேறு என்ன சொல்ல?

சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட், "ஆயுள் தண்டனை என்பது ஆயுட்கால தண்டனைதான்; அதை பதினான்கு வருடம் என்று வைத்துக்கொண்டு யாரும் விடுதலை கோர முடியாது," என்று தனது தீர்ப்பு ஒன்றில் கூறியது. தமிழக முதல்வர், இந்தத் தீர்ப்பைப் பற்றிய தனது மதிப்பைக் காட்டுகிற வகையில், ஏழாண்டு கால தண்டனை அனுபவித்த ஆயுள் கைதிகளை எல்லாம் விடுதலை செய்திருக்கிறார். அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்லும் வசனம்: "நீதிமன்றம் தனது கடமையைச் செய்யும்." "செய்யட்டும், அதற்குப்பின் உங்கள் விடுதலை உரிமையை கட்சி கவனித்துக்கொள்ளும்" என்ற அடுத்த வரியை நாம் தான் புரிந்துகொள்ளவேண்டும் போலிருக்கிறது. ஆனால் நேற்று நடந்த நளினி விடுதலை பற்றிய விவாததில் தமிழக அரசு அவருக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று வாதிடுகிறது தமிழக அரசு. சு.சாமி போட்ட மனுவினால் தான் இந்த நிலைப்பாட்டையாவது எடுத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

சைடில் உள்ள விளம்பரம் இரண்டு வைத்திருப்பவர்களுக்கு. இல்லாதவர்கள் கூடிய சீக்கிரம் இந்த மொபைல் வாங்கி பயன் அடையுங்கள்.

திமுக முப்பெரும் விழாவில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் கே.என்.நேரு, மதுரை மாநாட்டில், "அண்ணா
பிறந்த நாள் விழாவை 15 ஆம் தேதி நடத்தாமல், 21ஆம் தேதி நடத்துவது ஏன்?' என்று வைகோ கேள்வி எழுப்பியது பற்றிக் குறிப்பிட்டபோது, அந்தக் கேள்விக்கு உரிய பதிலைத்தான் நேரு தரப்போகிறார் என்று பத்திரிகையாளர்கள் ஆர்வமாகக் கவனிக்க, கே.என்.நேருவோ, ""அண்ணா பிறந்த நாளை என்றைக்கு கொண்டாடினால் உனக்கு என்ன? நீ மூடிக்கொண்டு போ'' என்று பேசியிருக்கார் என்று படித்தேன். அதே போல் அந்த விழாவில் "பெரியார், அண்ணாவை விட கலைஞரே சிறந்தவர்" என்கிற ரீதியில் முக்கால்வாசி பேர் பேசியிருக்கிறார்கள். ஆனால் கொடுத்த விருதுகளோ பெரியார், அண்ணா பெயரில். நல்ல கூத்து.


போனவாரம் ஒரு தொலைபேசி அழைப்பு, "இட்லிவடை, நீங்க மிகவும் குண்டாக இருக்கிறீர்கள். எங்கள் யோகா பயிற்சி நிலையத்தில் ஒரு யோகி இருக்கிறார் அவரிடம் வந்து யோகா கற்றுக்கொள்ளுங்கள்" என்றார். நான் இப்படி இருந்தால்தானேய்யா மக்கள் மதிப்பார்கள். உங்களுக்கு யார் என் நம்பரைக் கொடுத்தது, இதற்குமுன் இப்படி குண்டாக இருந்தவர்களை யாரையாவது ஒல்லியாக்கியதைப் பற்றி சொல்லுங்கள் என்று சில கேள்விகளை அடுக்கினேன். கொஞ்சம் நேரம் அமைதி. பிறகு தொலைபேசி இணைப்பு துண்டிக்கபட்டது.

சிறிதுநேரத்தில் மீண்டும் அதே அழைப்பு. அதே 'மர்மயோகி' போன். நான் எடுக்கவில்லை....

Read More...

Wednesday, September 24, 2008

கட்சி தாவல் = மத மாற்றம்

கர்நாடகாவில் ஆர்ச்புஷப் பேட்டியில் இப்படி கூறியிருக்கிறார்.

Some groups have justified the attacks, saying it is to protest against ‘forcible’ conversions to Christianity.

There cannot be forced conversion, which means it is at gunpoint or for inducement. Conversion is a relationship between God and human being. If it is under duress, I will not call that person a Christian. There should be a change of heart. There could be some inducements, such as, someone wanting to change somebody’s margin of life. If religious conversions are happening, what about political defections? Are there no inducements there? I hold an opinion, and someone succeeds in converting me to their view.


என்ன சொல்ல வருகிறார் ஆர்ச் பிஷப் ? அரசியல் கட்சி தாவல் மாதிரி தான் மதமற்றமும் என்கிறார். அப்படி என்றால் தேவ கவுடா போல் உள்ள ஆசாமிகள் தான் ஆர்ச் பிஷப்பாக இருக்கிறார்களா ?


( பேட்டி உதவி: TOI )

Read More...

Tuesday, September 23, 2008

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி விற்பனை எப்படி இருக்கிறது? - நேரடி ரிப்போர்ட்

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய் அரிசி விற்பனை எப்படி இருக்கிறது? - ஒரு நேரடி ரிப்போர்ட்

இன்று ஒரு ரேஷன் கடைக்கு போனேன்.
நன்றாகவே இருக்கிறது. நிறைய மக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச் செல்கிறார்கள்.
ஆனால் அத்தனை பேருக்கும் கலைஞர் ஒரு அதி பயங்கர அதிர்ச்சி கொடுத்திருக்கிரார்.
ஐம்பது ரூபாய் மளிகை சாமான் வாங்கினால்தான் ஒரு ரூபாய் அரிசி கிடைக்கும்.
அடகடவுளே! இது என்ன சோதனை? என்று வாய்பிளந்த மக்கள் வேறு வழியில்லாமல் ஒரு ரூபாய் அரிசி சாப்பிடுவதற்காக ஐம்பது ரூபாய் மளிகை பொருள்களையும் வாங்கினார்கள்.

அரிசியையே ஒரு ரூபாய்க்கு தருபவர் ஐம்பது ரூபாய்க்கு ஒரு மாதத்துக்கு தேவையான அனைத்து பொருள்களையும் தரவா மாட்டார்?
அவசியம் தந்திருக்கிறார்
25 கிராம் கடுகு
25 கிராம் மிளகு
25 கிராம் சீரகம்
25 கிராம் பெருங்காயம்
25 கிராம் மஞ்சள்பொடி
என்று எல்லாமே 25 கிராம் பாக்கெட். அனைத்தும் மிகவும் பழைய சரக்கு. கலரே கரேலென்றுதான் இருக்கின்றது.
இத்னால் யாரும் வருத்தப்படக்கூடாது அல்லவா? அதனால் பெருந்தன்மையுடன் 125 கிராம் மிளகாய்பொடி வழங்கப்படுகிறது ( இது மட்டும் சிகப்பாக இருக்கிறது )

தலைக்கும் கண்ணுக்கும் தேய்த்து குளித்துவிட்டு ஒரு ரூபாய் அரிசியை வடித்து சாப்பிடவேண்டியதுதான்
இப்படி ஒரு அபத்த ஏற்பாடு தேவையா? என்று மக்கள் முணுமுணுத்தபடி சென்றனர்.
( கார்ட்டூன் உதவி: துக்ளக் )

பிகு: இதை வைத்துக்கொண்டு ஒரு நல்ல சமையல் குறிப்பு தருபவர்களுக்கு 1 ரூபாய் அரிசி இலவசம். ( ஜெயஸ்ரீ மேடம் இதற்காவது ஏதாவது எழுதுங்க, ஆ.வியில் வந்தாலும் வரும் )

Read More...

தை 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக மாற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது -

சுவாரசியமான தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் எஸ்.சிவசுப்பிரமணிய ஆதித்தன். தமிழ்நாடு முருக பக்த பேரவை பொதுச்செயலாளரான இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில்

திருச்செந்தூரில் உள்ள சிவகொழுந்தீசுவரர் கோவிலில் கடந்த 13.4.2008 அன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்தவும், பொங்கல் வைக்கவும், அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் என்று போர்டு வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தேன்.

ஆனால் அவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். மேலும் அவர் தமிழக அரசு தமிழ் புத்தாண்டை தை மாதம் 1-ந் தேதி தான் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளதாகவும், எனவே சித்திரை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்று அதிகாரி தடுப்பது எங்களது அடிப்படை உரிமையில் தலையிடுவதாகும். சித்திரை மாதம் 1-ந் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். எனவே சித்திரை 1-ந் தேதி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதி மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.



இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தீர்ப்பில் இப்படி கூறியிருக்கிறார்

சித்திரை 1-ந் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும். அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது. பொதுவாக நாட்காட்டிகள் சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகள் குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன.

முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள்(காலண்டர்) மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.

அதே போன்று சமஸ்கிருதத்தில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் ஆலோசனை கேட்கலாம். தமிழ் மொழி தான் ஆட்சி மொழி என்று கொண்டு வர அரசுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதே போன்று தமிழ் நாட்காட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே தை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது சட்டவிரோதம் இல்லை. சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்து இருப்பது மதசாயம் பூசும் செயலாகும். மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.



1. சித்திரை 1-ந் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் தீபாவளி, கார்த்திகை மற்றும் பல பண்டிகைகளுக்கு ஆதாரம் கிடையாது. இந்த மாதிரி கேள்வி கேட்பவர்கள் கொள்ளு தாத்தாவின் எள்ளு தாத்தாவிடம் தான் போய் கேட்கணும்.

( Source: மாலைமலர் )

Read More...

Monday, September 22, 2008

எந்திரன் - முதல் படங்கள்

எந்திரன் முதல் இரண்டு படங்கள்..



Read More...

கொலையுண்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா – ஒரு மஹான் - – எஸ். குருமூர்த்தி

" கொலையுண்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா – ஒரு மஹான்" என்று துக்ளகில் மூன்று வாரமாக வந்த இந்த கட்டுரையை யாரும் கண்டுக்கவில்லை.
( நன்றி: துக்ளக் )

கொலையுண்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா – ஒரு மஹான்
"ஒரிஸ்ஸா மாநிலத்தில் கந்தமால் என்கிற மாவட்டத்தில் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி என்கிற ஒரு ஸந்நியாசி ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தினால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர்'. இந்தச் செய்தி பெருமளவில் நாடு முழுவதும் – உலக அளவில் கூட – பிரசுரிக்கப்பட்டு, பிரச்சாரப்படுத்தப்பட்டது. "மறுபடியும் ஒரிஸ்ஸாவில் மைனாரிட்டி கிறிஸ்தவ மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; சங்பரிவார்,
விச்வ ஹிந்து பரிஷத் ஆகிய இயக்கங்கள் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்றெல்லாம் தலைப்புச் செய்திகள், பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் நாள் தவறாமல் வெளிவந்தன.

இதனால், பாவம் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி யார் என்றே தெரியாமல் போய்விட்டது. அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தவிர, மற்ற எந்த விவரத்தையும் பத்திரிகைகள் எழுதவில்லை. "அவர் வி.ஹெச்.பி. தலைவர்' என்று நம் நாட்டில் செய்தி பிரசுரமானபோது, "அவர் ஹிந்து தீவிரவாதி' என்று வெளிநாட்டில் பிரசுரமாகியது.

ஆனால், உண்மை என்ன? அவர் பெரிய ஆன்மிகவாதி. யாருமே அவரைப் பற்றி உண்மையை எழுதாததாலும், பேசாததாலும் வெளியுலகிற்கு எதுவும் தெரியவில்லை. முதலில் அவர் யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார், அந்தக் கொலையைச் செய்தது உண்மையில் யார்? எப்படி அந்தக் கொலை பற்றிய உண்மையான செய்தி, திசை திருப்பப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி ஸ்வாமி, ஸ்வாமி தயானந்த சரஸ்வதியுடன் சக மாணவராக இருந்து ரிஷிகேஷில் வேதம், உபநிஷதம், வேதாந்தம், பிரம்மசூத்ர பாஷ்யம் போன்ற அரிய பொக்கிஷமான ஆன்மிக நூல்களைப்
பயின்றவர். அவர் படித்து முடித்த பிறகு, 1965ல் நடந்த பசுவதைத் தடுப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஸந்நியாசிகள் ஈடுபட்டபோது, அவரும் ஈடுபட்டு 19 நாட்கள் சிறைவாசம் பெற்றார். பசு பாதுகாப்பு இயக்கத்தை நடத்த 1967ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா சென்றார். 196870ஆம் ஆண்டு ஒரிஸ்ஸா கந்தமால் ஜில்லாவின் தலைநகரமான "புல்பளி'க்கு சென்றார்.

அவர் அங்கு சென்றபோது, அவரிடம் ஒரு சல்லிக்காசு கூட கிடையாது. பிச்சை எடுத்து உணவு உண்டார். கையேந்தி, செலவுக்கு ரூ.30 சேர்த்து, கந்தமால் ஜில்லாவில் சக்கபாத் என்கிற குக்கிராமத்திற்குச் சென்றார். "பகவான் பூரி ஜகன்னாதர் அருளால்தான் நான் அங்கு சென்றேன்' என்று கூறினார் அவர்.

ஏன் அவர் 1969ஆம் ஆண்டு அங்கு சென்றார் என்கிற கேள்விக்கு நாம் விடை கண்டால், அவருக்கு ஏன் இந்தக் கதி நேர்ந்தது என்பதற்கு துப்பும் கிடைத்துவிடும்.

கந்தமால் ஜில்லா, வனவாசிகள் நிறைந்த இடம். அந்தச் சமயத்தில் வெளிநாட்டுப் பண உதவியுடன் பெருமளவு மதமாற்றம் நடந்து வந்தது. பீஹார், மத்தியப் பிரதேச மாநிலங்களை ஒட்டிய வனவாசிகள் நிறைந்த ஒரிஸ்ஸா ஜில்லாக்களிலும் பெருமளவு மதமாற்றங்கள் நடந்து வந்தன. மத்தியப் பிரதேசத்தில், நீதிபதி நியோகி குழுவின் அறிக்கைப்படி, ஏமாற்றி, ஆசை காட்டி, பயமுறுத்தி மதமாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பது உறுதியானது. அதே கதைதான் ஒரிஸ்ஸாவிலும். அதனால்தான் மத்தியப் பிரதேசத்திலும், ஒரிஸ்ஸாவிலும் மதமாற்றத்தைத் தடுக்கச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இப்படி மதமாற்றம் நடப்பதைத் தடுக்கவே ஸ்வாமி லக்ஷ்மணானந்தா, கந்தமாலில் உள்ள சக்கபாத் கிராமத்திற்குச் சென்றார். இந்தக் கிராமம், ஜில்லா தலைநகரான புல்பளியிலிருந்து 30 கி.மீ. தூரம். அன்றிலிருந்து அவர் கொலையுண்ட நாள் வரை சக்கபாத் கிராமமே அவர் கர்ம பூமியாகியது. அந்தக் குக்கிராமத்திலிருந்து அவருடைய சேவை விரிவடைந்தது.

1969ஆம் ஆண்டு "சக்கபாத்' கிராமத்தில் அவர் ஒரு பள்ளிக்கூடமும், ஒரு சம்ஸ்க்ருதக் கல்லூரியும் துவங்கினார். மத மாற்றத்தைத் தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் பஜனைக் கூடங்களை நிறுவினார். மூலைமுடுக்கெல்லாம் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினார். அவருடைய சேவைகளும், சொற்பொழிவுகளும் வனவாசி மக்களிடம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தின.

"கிறிஸ்து ஸ்தானம்' ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற வேகத்தில் பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரிகளுக்கு, ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவின் சேவை பெரிய வேகத் தடையாகவும், உண்மையான எதிர்ப்பாகவும் மாறியது. எந்தெந்த மிஷனரி அமைப்புகள் திட்டமிட்டு பணிபுரிந்தனவோ, அவை தங்கள் வேலைகளில் தோல்வி அடைந்து, கந்தமால் ஜில்லாவை விட்டே வெளியேறின.

வனவாசி மக்களை முன்னேற்றும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி பெரும் வெற்றிகண்டார் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா. அதிகாரிகளையும் போலீஸையும் கண்டு, காரணமில்லாமல் பயந்த வனவாசிகளை, தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ளவர்களாக மாற்றினார். அவரது முயற்சியால் வனவாசிகள் உற்பத்தி செய்த "பீன்ஸ்' காய்கறி பிரபலமாகியது. கடிங்கா என்கிற இடத்தில்
வனவாசிகளை காய்கறி கூட்டுறவு இயக்கம் ஆரம்பிக்கத் தூண்டினார்.

மரங்களை வெட்டுவதைத் தடுத்து, காடுகளை வளர்த்தார் ஸ்வாமி. மரங்களுக்கு நம்பர்கள் கொடுத்து வெட்டுவதை நிறுத்தினார். மரத்தை வெட்ட அனுமதி கொடுக்க கிராம பஞ்சாயத்திற்கு மட்டுமே உரிமை என்ற விதி ஒன்றையும் கொண்டு வந்தார் லக்ஷ்மணானந்தா ஸ்வாமி.

மேலும் வனவாசிகளின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், சங்கீதம் உள்பட பொதுவான வாழ்க்கை முறைகள் – இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். பசு பாதுகாப்பின் அவசியத்தையும், பசு மாமிசம் உண்ணக்கூடாது என்கிற கட்டுப்பாட்டையும் வளர்த்தார். அவர்களுடைய சொந்த வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, அவர்களுடைய கோவில்களைப் புதுப்பித்தார்.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் பெயரும் புகழும் கந்தமால் ஜில்லா மட்டுமல்லாமல், ஒரிஸ்ஸா முழுவதும் பரவியது. குக்கிராமமான சக்காபாத்தில் 1986லும், 2007லும் லட்சக்கணக்கான வனவாசி மக்களைத் திரட்டி அவர்களுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் அளித்தார்.

பூரி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் மற்றும் கஜபதி மகாராஜா, ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் சேவையைப் பாராட்டி, "அதர்மத்தை எதிர்க்கும் மகாரதி' மற்றும் "வேதாந்த கேசரி' என்று பட்டமளித்துக் கௌரவித்தனர்.


அவருடைய பணியின் காரணமாக கிறிஸ்தவ அமைப்புகளின் வேலையின் வேகமும் வெற்றியும் குறைந்தது. ஏராளமாக வெளிநாட்டிலிருந்து பணம்
வந்தும் அதற்கான பெரும் பலன்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
1999லிருந்து 2003 வரை ஐந்தாண்டுகளில் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவ தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து பெற்ற தொகை ரூபாய் 183 கோடிக்கும் மேல். இந்தத் தொகையில் 10 சதவிகிதம் கூட ஹிந்து தன்னார்வ நிறுவனங்களுக்குக் கிடைக்கவில்லை.

இவ்வளவு பண பலத்துடன், மைனாரிட்டி என்கிற போர்வையில், பத்திரிகை, அரசு, போலீஸ் உதவியுடன் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ அமைப்புகள், ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியை எதிர்த்து வந்தன. இதுவரை அவர் மீது ஒன்பது முறை கொலை முயற்சிகள் நடைபெற்றன. 24.12.2007 அன்று ஒன்பதாவது முறையாக கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவாளர்கள் 200 பேர் கொண்ட கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின் காரணமாக பெரும் கலவரம் அப்போதே ஏற்பட்டது என்று ஜனவரி 2008ல் வெளியிடப்பட்ட தேசிய சிறுபான்மை அமைப்பின் ஆய்வு தெரிவித்தது.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் சேவை, மத மாற்றம் செய்யும் கிறிஸ்தவ அமைப்புகளின் கண்களை உறுத்தி வந்தது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. அவரைப் பலமுறை கிறிஸ்தவ ஆதரவாளர்கள் தாக்க முயற்சி செய்தார்கள்; தாக்கவும் செய்தார்கள் என்பது ஒரிஸ்ஸாவில் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்த நிலையில்தான் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி 24.8.2008 அன்று, ஏ.கே. 47 துப்பாக்கி மூலமாக வாரி இறைக்கப்பட்ட குண்டுகளுக்கு பலியானார். அவருக்கு வயது 84. அவருடன் மேலும் நால்வரும் மடிந்தனர். இந்தக் கொலைக்கு அந்தக் கன்யாஸ்ரமத்தில் இருந்த பெண் குழந்தைகள் சாட்சி.

இந்தக் கொலையைச் செய்தது யார் என்பது பற்றி பெரும் சர்ச்சைகிளப்பப்பட்டிருக்கிறது. திசை திருப்பும் செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன. நக்ஸலைட்டுகள்தான் இதைச் செய்திருப்பார்கள் என்று முதலில் செய்திகள் வந்தன. நக்ஸலைட்டுகள் இதை மறுத்திருக்கிறார்கள். யார் இந்தக் கொலையைச் செய்திருப்பார்கள் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

கந்தமால் "பொய்'யில் மறைக்கப்பட்ட "உண்மை'கள் !

ஒரிஸ்ஸாவிலுள்ள கந்தமால் மாவட்டம் இன்று உலகப் புகழ்பெற்ற இடமாக
மாறியிருக்கிறது. "அங்கு ஹிந்து வெறியர்களால் அப்பாவி கிறிஸ்தவ மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்' – என்று கிறிஸ்தவ மக்கள் நம்பும்படியாக நம் நாட்டிலிருந்து பிரச்சாரம் நடந்து வருகிறது. ஹிந்து வெறியர்கள் என்றால் வி.ஹெச்.பி., சங்பரிவார் என்று அர்த்தம். இது உண்மை கலந்த பொய்ப் பிரச்சாரமானதால், இதில் பொய் எது என்பதைப் பிரித்துக் கூறுவது மிகவும் கடினம். இதில் உண்மை என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

முதலில் ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவும், அவருடைய நான்கு சீடர்களும் கொலை செய்யப்பட்டார்கள்; பின்பு நடந்த கலவரத்தில் பலர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். வீடுகள், வழிபாட்டு ஸ்தலங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது உண்மை. ஆனால், இவையெல்லாம் கிறிஸ்தவ சமுதாயத்தைக் குறிவைத்து, அவர்கள் மட்டுமே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று நடக்கிற பிரச்சாரம், பொய்ப் பிரச்சாரம். இன்றைய நிலையில் – பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நாடே நினைக்கும்போது – உண்மை என்ன என்று எடுத்துக் கூறுவது நம்முடைய கடமை. இந்த உணர்வில்தான், அங்கொன்றும்
இங்கொன்றுமாகப் பத்திரிகைகளிலும் இன்டர்நெட்டிலும் வெளிவந்த உண்மைகளைத் தொகுத்து எழுதுகிறேன்.

ஒன்று – கந்தமால் மாவட்டத்தில் நடந்த கலவரத்தையும், கொலைகளையும் நம் நாட்டு யதார்த்த நிலையின்படி பார்த்தால், அவை ஹிந்து – கிறிஸ்தவ மத விரோதம்
சம்பந்தப்பட்டது மட்டுமே என்று கூற முடியாது. மதம் கலந்திருப்பது உண்மை. ஆனால், ஆதாரமான காரணம் வேறு. கந்தமாலில் மதம் மாறாத "கந்த்' என்கிற மலை வாழ் மக்களுக்கும், "பணா' என்கிற (கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்ட) தலித் சமுதாயத்துக்கும் இடையே, பாரம்பரிய நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஏற்பட்டிருக்கும் விரோதம்தான் ஆதாரமான காரணம்.

"கந்த்' சமுதாயம் எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தது; "பணா' சமுதாயம் எஸ்.ஸி. வகுப்பைச் சேர்ந்தது. அரசியல் சட்டப்படி கிறிஸ்தவராக மதம் மாறிய எஸ்.ஸி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடையாது. ஆனால், அப்படி மதம் மாறினாலும் எஸ்.டி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தொடரும். "பணா' சமுதாயம், கிறிஸ்தவ மற்றும் காங்கிரஸ் போன்ற "மதச்சார்பற்ற' கட்சிகளின் உதவியுடன் எஸ்.டி. அந்தஸ்து கேட்டுப் போராட்டம் நடத்தி வருகிறது. இதை கந்த் சமுதாயம் கடுமையாக எதிர்க்கிறது.

இதனால்தான், நெருப்பில்லாமலேயே பற்றிக் கொள்கிற ஒரு நிலை கந்தமால் மாவட்டத்தில் இருந்து வருகிறது. இவையெல்லாம் அரசாங்க ஆய்வறிக்கைகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கும் உண்மைகள். இவற்றை யாரும் மறுக்க முடியாது. ஆக, அடிப்படையாக ஹிந்துக்களாகவே வாழும் "கந்த்' எஸ்.டி. பிரிவினருக்கும், கிறிஸ்தவராக மாறிவிட்ட "பணா' பிரிவினருக்கும் இடையே, பெரிய கலவரம் வெடிக்க ஸ்வாமி லக்ஷ்மணானந்தா கொலை ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

இந்த "கந்த் – பணா' விரோதம் என்பது ஒரிஸ்ஸாவில் சங்பரிவார், வி.ஹெச்.பி.யினர் தங்கள் வேலைகளைப் பெரிய அளவில் துவங்குவதற்கு முன்னரே இருந்து வந்தது. 1992ஆம் ஆண்டு கந்தமாலில், கந்த் – பணா பிரிவினருக்கு இடையே நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல், மூன்று மாதங்கள் தொடர்ந்து நடந்தது. 20 பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள்.

அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. இயக்கங்கள் ஒரிஸ்ஸாவில் வேலையைத் துவக்குகின்றன. பஜ்ரங்தள் இயக்கம் துவங்கவே இல்லை. ஆனால், கிறிஸ்தவ மிஷனரிகள் கந்தமாலில் நுழைந்து தீவிரமாக மத மாற்றம் செய்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1961ல் 19,128லிருந்ததை, 2001ல் 1,17,757 ஆகப் பெருக்கினர். இப்படி தீவிரமாக மத மாற்றம் நடப்பதை எதிர்த்துத்தான், ஸ்வாமி லக்ஷ்மணானந்தா மற்றும் வி.ஹெச்.பி. இயக்கங்கள், 1990களில் தங்களுடைய மதமாற்ற எதிர்ப்பைத் தீவிரமாக்கினர்.

ஆக, கிறிஸ்தவ மத மாற்றம், அதை எதிர்த்து ஹிந்து இயக்கங்களின் போராட்டம்
– இப்படி மாறியது கந்தமால் நிலவரம். 1992க்குப் பின் இது ஹிந்து – கிறிஸ்தவ கலவரமாக மாறியது கொஞ்சம் உண்மை.

முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய உள்துறை அமைச்சரான
சிவராஜ் பாட்டீல் கூட "கந்தமால் கலவரம் மதக் கலவரம் அல்ல, நில உரிமை மற்றும் இட ஒதுக்கீடு காரணமானது' என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தி 6.9.2008 எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் மட்டும் வந்திருந்தது.

இந்த முறை நடைபெற்ற கலவரத்தில் கந்த், பணா – ஆகிய இருபிரிவினரும் பரஸ்பரம் பாதிக்கப்பட்டனர். இந்த இரண்டு பிரிவினரும் கொலைகள் மற்ற நாசச் செயல்களில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ சமுதாயம் மட்டுமே குறிவைக்கப்பட்டது, அல்லது பாதிக்கப்பட்டது என்று கூறுவது முழுப் பொய். "டெக்கான் கிரானிக்கிள்' பத்திரிகையின் ஆய்வு என்ன கூறுகிறது பாருங்கள். ""இந்த முறை ஹிந்து அடிப்படைவாதிகளின் தாக்குதல்களுக்குக் கிறிஸ்தவர்கள் எதிர்த்துப் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.

""கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினார்கள். மேலும், துப்பாக்கிகளால் சுட்டும் கொலைகள் செய்தார்கள். இதனாலேயே
மாவோயிஸ்டுகளான நக்ஸலைட்டுகள், கிறிஸ்தவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவி செய்தார்களோ என்று சந்தேகம் வருகிறது. கிறிஸ்தவர்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது? "கந்த்' மக்கள் கையாலும், தடியாலும், கிறிஸ்தவர்கள் துப்பாக்கியாலும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டனர். இதனால் ஒரிஸ்ஸாவில் ஒரு புதிய கோணம் உருவாகியிருக்கிறது. அதாவது, கிறிஸ்தவ பயங்கரவாதம் ஒரிஸ்ஸாவில்
துவங்கியிருக்கிறது'' என்கிற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகை. எந்த அளவுக்கு கிறிஸ்தவ பயங்கரவாதம் வளர்ந்திருக்கிறது என்பதைக் கணிக்க, ஒரிஸ்ஸா அரசு முயன்று வருகிறது – என்றும் கூறுகிறது அந்தப் பத்திரிகை.

இதிலிருந்து கந்தமாலில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஒருதலைப் பட்சமாகப் பேசுவதும் எழுதுவதும் பொய் மட்டுமல்ல, நாட்டுக்கே தீங்கு இழைக்கக்கூடிய செயல் என்பதும் நமக்குப் புரியும். வெளிநாட்டுப் பண உதவியுடன், பரஸ்பர விரோதங்களைத் தோற்றுவிக்கும் தீவிரவாத கிறிஸ்தவ அமைப்புகள் உருவாக்கும் மதமாற்றம் என்பது, கந்தமால் போன்ற மலைவாழ் மக்கள் வாழும் இடங்களில் எப்படி பெரிய பூகம்பங்களை உண்டு பண்ணுகின்றன என்பது, திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரியிலும், சென்னை லயோலா கல்லூரியிலும் படித்த ஹிந்துக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

பொதுவாக, கிறிஸ்தவ மதம், உலகையே கிறிஸ்தவ உலகமாக மாற்றுவதை தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டது. இதை எப்படிச் செய்வது என்பதில்தான் கிறிஸ்தவ இயக்கங்களுக்குள் வேறுபாடே தவிர, நோக்கத்தில் வித்தியாசமே கிடையாது. இதனால்தான் மற்ற மதங்களுடன் இணைந்து செயல்படும் குணம் கிறிஸ்தவ மதத்தில் குறைவாக இருக்கிறது – என்று சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற ஹிந்து சமய ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். ஆக, மத மாற்றம், அதன் உள்நோக்கம், அதனால் ஏற்படும் விரோதங்கள், ஏற்கெனவே இருக்கும்
விரோதங்களை நெய் ஊற்றி வளர்ப்பது போன்ற காரணங்களால்தான் கந்தமாலில் இப்படிப்பட்ட நிலை உருவாகியிருக்கிறது.

இந்தக் கொலை, கலவரங்களில் ஒரு பிரிவினர் மட்டும் குறிவைக்கப்படவில்லை; இருபிரிவினரும் கடும் குற்றங்கள் புரிந்திருக்கின்றனர். ஆக, அப்பாவி கிறிஸ்தவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது முழுப் பொய் – நாட்டு விரோத சக்திகளால், பத்திரிகைகளின் உதவியால், மதச்சார்பற்ற ஓட்டு வங்கி அரசியல் காரணமாக ஜோடிக்கப்பட்ட பொய். இது நம் நாட்டிற்கே பெரிய அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற பொய்ப் பிரச்சாரத்தை எதிர்க்க வேண்டியது, நம் நாட்டின் மீது பக்தி கொண்ட ஹிந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோருடைய கடமையாகும்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதியின் படுகொலை நடந்தது. அன்று கோகுலாஷ்டமி நாள். குறிப்பாக வட
மாநிலங்களில் விரதம் அனுஷ்டிக்கும் நாள். "அவருடைய படுகொலை, இளைஞர்களுக்கு ஆத்திரத்தையும், பெண்களுக்கு பிரமிப்பையும்
உருவாக்கியிருக்கிறது' – என்று எழுதியது "இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை.

அவருடன் ஒரு பெண் ஸந்நியாசி உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொலை நடந்த நாள், கொலைகள் செய்யப்பட்ட விதம்; கொலை செய்யப்பட்ட பெண் ஸந்நியாசியின் உடல் அவமானப்படுத்தப்பட்டது; முதலில் கைதானவர்கள் யார் யார்; பின்னணியில் யார் யார் இருக்கக்கூடும் – என்பதைப் பார்த்தால், இவையெல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது.

அந்தக் கொலைகள் நடப்பதற்கு முன் கிறிஸ்தவ அமைப்புகள், ஸ்வாமிகளை கடந்த டிசம்பர் மாதம் தாக்கினார்கள். "அவரை தீர்த்துக் கட்டினால் பெரும் கலவரம் ஏற்படும். அதன் மூலமாக கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவார்கள். அதை வைத்து "கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்' என்கிற பிரச்சாரத்தை நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் சுலபமாகச் செய்ய முடியும். இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு செக்யுலர் பத்திரிகைகள், அரசியல்வாதிகள், கட்சிகள் ஆகியோர், தங்கள் தங்கள் காரணத்திற்காக ஒத்துழைப்புத் தருவார்கள்' என்று கணித்திருக்கிறார்கள். இந்த
முறையில் நாடு முழுவதும் கிறிஸ்தவ அமைப்புகளைத் தூண்டி விட முடியும் என்று ஆழ்ந்த, திட்டமிட்ட சதியோ இது என்று தோன்றுகிறது.

இதற்குக் காரணம், இதற்கு முன்பு உண்மைகளைப் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம், குறுகிய காலத்தில் மூடி மறைப்பதை, நாட்டின் விரோத சக்திகள் செய்திருப்பதுதான். முன்கூட்டியே திட்டமிடாமல் இதைச் செய்திருக்கவே முடியாது என்பது, என்னுடன் பேசிய முன்னாள் உளவுத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் கணிப்பும் கூட. ஸ்வாமிகளின் கொலைக்குப் பின்னணி யார் என்பதைக் கண்டுவிட்டால், இந்தச் சதி ஓரளவுக்கு விளங்கும். அதுபற்றி, அடுத்த வாரம்.

லக்ஷ்மணானந்தா படுகொலை – யார் கொலையாளி ?

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா படுகொலை நடந்தது 2008, ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு சுமார் 8 மணி. நடந்த விதம் இதோ:

* சுமார் 30 அல்லது 40 பேர் கொண்ட கொலைப் படை ஆச்ரமத்தைச் சூழ்ந்து கொண்டது.

* பார்த்தவர்கள் கூறியபடி, நான்கு பேர் ஏ.கே.47 துப்பாக்கிகளும், மற்ற பலர் நாட்டுத் துப்பாக்கிகளும் ஏந்தியிருந்தனர்.

* காவலுக்கு இருந்தது தடி மட்டுமே வைத்திருந்த "ஹோம் கார்டு' போலீஸ்காரர்கள் நான்கு பேர்; அவர்களில் இருவர் இரவு உணவுக்குச் சென்றிருந்தனர். மற்ற இருவர் மட்டுமே காவல் பணியில் இருந்தனர்.

* கொலையாளிகள் அந்த இருவரையும் கை, கால்களுடன், வாயையும் மூடிக் கட்டிவிட்டனர்.

* ஆச்ரமத்தின் உள்ளே சென்ற அவர்கள் ஸ்வாமியைத் தேடினார்கள்;
குளியலறையில் இருந்த அவரை ஏ.கே.47 துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்தனர். வெளியறையில் இருந்த மூன்று ஸந்நியாசிகளையும், ஒரு பக்தரையும் கூடக் கொலை செய்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஸந்நியாசி.
இறந்த அவருடைய உடலை அவமானப்படுத்தினார்கள்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதாகாந்த் நாயக் என்பவரின் கிராமத்தில், சென்ற ஆண்டு டிசம்பரில் ஸ்வாமிகள் மீது தாக்குதல் நடந்தது. அவர் பணா எஸ்.ஸி. வகுப்பைச் சேர்ந்தவர். ப்ரமோஷன் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி – பதவி ஓய்வு பெற்று அரசியலில் சேர்ந்த கிறிஸ்தவர்; ஆனால் எஸ்.ஸி. தகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மதம் மாறியதை மறைத்து வைத்திருப்பவர். சோனியாகாந்திக்கு மிகவும் வேண்டியவர். அதனால் ஒரிஸ்ஸா காங்கிரஸில் அவருக்கு "மவுசு' அதிகம்.

ஸ்வாமிகள் மீது நடந்த தாக்குதல் அவருடைய "கைவண்ணம்' என்று பலரும் நினைக்கிறார்கள். "அவர்தான் அந்தத் தாக்குதலை நடத்தினார்' என்று ஸ்வாமிகளும் அப்போது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். அதற்கு நாயக்,
"ஸ்வாமி லக்ஷ்மணானந்தா என்று ஒருவர் எங்கள் ஜில்லாவில் இருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது' என்றார். இது அப்பட்டமான பொய் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தத் தாக்குதல் நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான், ஐந்து லட்சம் பேர் கொண்ட ஒரு மலைவாழ் மக்கள் பேரணியை, கந்தமால் ஜில்லாவில் நடத்தி ஒரிஸ்ஸாவையே கலக்கியிருந்தார் ஸ்வாமி அவர்கள்.

டிசம்பர் 24, 2007–ல் நடந்த தாக்குதலில் படுகாயமுற்ற ஸ்வாமி லக்ஷ்மணானந்தா, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குணமடைந்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இன்றுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. அதற்கு முன் ஒன்பது முறை ஸ்வாமிகள் மீது தாக்குதல் நடந்திருக்கின்றன. "இந்தத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும், புதியதாக மதம் மாறிய கிறிஸ்தவர்கள்' – என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர், தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்.

""கிறிஸ்தவ அமைப்புகளில் தொடர்புள்ள பல இளைஞர்கள் மாவோயிஸ்ட் அமைப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். டிசம்பர் 2007 கலவரத்தின்போது, ஹிந்து மலைவாழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நான்கு கிராமங்களில் நடந்த போலீஸ் சோதனையில், 47 மாவோயிஸ்ட்கள் (கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து ஹிந்துக்களைத் தாக்கியவர்கள்) கைதுசெய்யப்பட்டார்கள்.

""அவர்களிடமிருந்து 20 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதிலிருந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே உறவு இருப்பது வெளிப்பட்டது. மேலும் பல கிராமங்களில் துப்பாக்கியைக் காட்டிக் கூட மதமாற்றம் நடந்திருக்கிறது'' என்றும் எழுதியிருக்கிறார் அந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி.

""அரசாங்கத்தில் பதவியில் இருக்கும்போதே ரகசியமாக மதம் மாறிய
ராதாகாந்த் நாயக் ஐ.ஏ.எஸ். மற்றும் வெளிப்படையாக கிறிஸ்தவரான ஜான் நாயக் ஐ.பி.எஸ். இருவரும், பணா எஸ்.ஸி. மக்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

""மதமாற்றத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ அமைப்புகள், ஸ்வாமிகளைக்
குறிவைத்திருந்தனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் வாழும் இடத்தில் மதமாற்றம் நடக்கும்போது, அதன் விளைவுகள்
பயங்கரமாக மாறுகின்றன.

""அதுபோன்ற மலைவாழ் மக்களிடம் நடக்கும் மதமாற்றங்கள் நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா போன்ற இடங்களில் கிறிஸ்தவ தீவிரவாதமாகவும்,
பயங்கரவாதமாகவும் மாறி, பிரிவினை சக்திகளைக் கூட தூண்டிவிட்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. மத மாற்றத்தால், மதம் மாறுவதற்கு முன்பு அவர்களிடையே இருந்த விரோதம் அதிகமாவது மட்டுமல்லாமல், அவர்களிடையே எந்தக் கலவரம் நடந்தாலும், அது கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்று உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

""அதனால் மதம் மாறாத மலைவாழ் மக்கள் மீது அரசின் தாக்குதலும், பத்திரிகைகளின் சாடுதலும் நடக்கின்றன. அவர்களுக்கு உறுதுணையாக எந்த ஹிந்து அமைப்பு நின்றாலும் அவர்கள் "வகுப்புவாதிகள், தீவிரவாதிகள்' என்று பட்டம் கட்டப்படுகிறார்கள்; மதம் மாறாதவர்களை நிராயுதபாணிகளாகச் செய்யும் வகையில் அரசியல் சாசன அமைப்பும், பத்திரிகைகளின் போக்கும், அறிவுஜீவிகளின் போதனைகளும் அமைந்திருக்கின்றன. அதனால்தான் கிறிஸ்தவராக மதம் மாறிய "பணா' சமூகத்தினருக்கு அரசியல் சட்டத்தில் "சிறுபான்மையினர்' என்கிற பாதுகாப்பு; மதச்சார்பற்ற கட்சிகள், தலைவர்கள், பத்திரிகைகளின் பரிவு, உலக கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவு, பணம் எல்லாம் கிடைக்கின்றன.

""ஆனால், மதம் மாறாமல், தங்களுடைய வழிபாடு, கலாச்சாரம் காக்கப் போராடும்
"கந்தா' மலைவாழ் மக்கள், அரசியல் சட்டரீதியாக பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்ததால் அவர்களுக்கு எந்தவிதமான உதவியோ, அல்லது ஆதரவோ கிடையாது. அவர்களுக்கு ஆதரவாக ஸ்வாமி லக்ஷ்மணானந்தா சேவை செய்தால், அவருக்குக் கூட பாதுகாப்புக் கிடையாது.

""ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவுக்கு உதவி செய்தது ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற அமைப்புகள். அதனால் ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவுக்கு "வகுப்புவாதி' என்கிற பட்டம். கந்தமால் ஜில்லாவில் மதம் மாறியவர்கள் பாக்கியசாலிகள்; மதம் மாறாதவர்கள் துரதிர்ஷ்டம் செய்தவர்கள். இந்த நிலையில் மதம் மாறாதவர்களுக்கு ஒரே ஆதரவாக இருந்தார் ஸ்வாமி லக்ஷ்மணானந்தா. அவரைத் தீர்த்துக்கட்டி விட்டால் தங்கள் மதமாற்ற வேலைகளுக்கு எந்தத் தடையும் இல்லாமல் செய்துவிடலாம் என்பதுதான், கந்தமாலில், தீவிர எண்ணம் கொண்ட கிறிஸ்தவ அமைப்புகளின் சிந்தனையாகவும், நோக்கமாகவும் இருந்திருக்கிறது.
இந்தத் தீவிரவாதம் வளர பணா, கந்தா சமூகத்தினரிடையே வளர்ந்து வந்த விரோதம், மத மாற்றம் முக்கியமான காரணம். இதனுடன் இணைந்தன மாவோயிஸ்ட் அமைப்புகள்'' – என்று எழுதியிருக்கிறார் அந்த போலீஸ் அதிகாரி.

ஸ்வாமி லக்ஷ்மணானந்தா மீது டிசம்பர் 2007ல் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, எப்படி மாவோயிஸ்ட்களும் கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளும் இணைந்து செயல்படுகின்றன என்பதை விளக்கி, தேபசிஸ் திரிபாதி என்கிற பத்திரிகையாளர் "ஆர்கனைசர்' (ஆர்.எஸ்.எஸ்.ஆதரவுப் பத்திரிகை) பத்திரிகையில் 13.1.2008 அன்று எழுதிய கட்டுரையில் கூறுகிறார் : ""கிறிஸ்தவ பாதிரிகள் மாவோயிஸ்ட்களை அழைத்து, மதம் மாறாத மலைவாழ் மக்களைத் தாக்க வைத்தனர். அந்தப் பகுதியின் போலீஸ் சூப்பரின்டெண்டென்டாக இருந்த அபிதேந்திர நாத் சின்கா, தீவிரவாத கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, மதம் மாறாத மக்களை மாவோயிஸ்ட்கள் எப்படித் தாக்கினார்கள் என்று, தான் நேரில் கண்டதைக் கூறினார்.

""2007 டிசம்பர் 28 அன்று நான் பிராமணிகாவ் கிராமத்திற்கு, 40 பேர் கொண்ட போலீஸ் படையுடன் சென்றிருந்தேன். கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், மதம் மாறாதவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்களை நாங்கள் எச்சரித்தபோது, அவர்கள் அஞ்சாமல் எங்களை நோக்கி வந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென்று, தேர்ச்சி பெற்ற மாவோயிஸ்ட்போல துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். நான் மயிரிழையில் தப்பினேன். ஆனால், ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். பிறகு அவர்கள் "ஆட்டோமேடிக் துப்பாக்கியால்' 100 ரௌண்டுகள் சுட்டனர். இது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாவோயிஸ்ட்கள் கிறிஸ்தவ தீவிரவாதிகளுடன்
சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை'' – என்று அந்த போலீஸ் அதிகாரி கூறியதை அப்பத்திரிகையாளர் எழுதியிருந்தார். யாராலும் இது மறுக்கப்படவில்லை.

மேற்கு ஒரிஸ்ஸா போலீஸ்துறை, கந்தமால் பகுதியில், சேவை என்கிற போர்வையில் வேலை செய்யும் கிறிஸ்தவ தன்னார்வ அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று வேண்டியது. காரணம் – அவர்களுடைய பணம் மாவோயிஸ்ட்களுக்குப் பெருமளவு கொடுக்கப்படுகிறது. ஆக, மாவோயிஸ்ட்களும், கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகளும் கந்தமால் ஜில்லாவில் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பது டிசம்பர் 2007லேயே வெட்ட வெளிச்சமாகியது.

இதனால்தான் மாவோயிஸ்ட்கள் மூலமாக கிறிஸ்தவ தீவிரவாத அமைப்புகள்,
ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவைப் படுகொலை செய்திருக்கலாம் என்கிற எண்ணம் வலுத்து வருகிறது. மாவோயிஸ்ட்களில் ஒரு பகுதியினர், "கொலையைத் தாங்கள் செய்ததாக'வும்; இன்னொரு பகுதியினர், "எங்களுக்குத் தொடர்பில்லை' என்றும் கூறியுள்ளனர். "இது மாவோயிஸ்ட்களின் பொது வேலையில்லை; அதில் ஒரு
பகுதியினர் கூலிப்படையாக இருந்து இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்' – என்று மற்ற பகுதியினர் கருதுகிறார்கள்.

இந்தக் கொலை சம்பந்தமாக கிறிஸ்தவ தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்கிற விவரத்தை, கிறிஸ்தவர் ஒருவரால் நடத்தப்படும் கிறிஸ்தவ தீவிரவாதம் பற்றிய இணையதளம், 25.8.2008 அன்று வெளியிட்டது. அதன் விவரம் : "கந்தமால் ஜில்லாவிலிருந்து தப்பித்து ஓடும்போது, கிறிஸ்தவ அமைப்பில் பணியாற்றும் பிரதேஷ் குமார்தாஸ் என்பவரைப் போலீஸ் கைது செய்தது. மேலும், விக்ரம் திகில், வில்லியம் திகில் என்கிற இருவரை, கிறிஸ்தவ தீவிரவாதியான லால் திகில் என்கிறவர் வீட்டிலிருந்து போலீஸ் கைது செய்தது. ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவைத் தாக்கிய கும்பலில் அவர்கள் இருந்ததாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்'.

ஆக, ஸ்வாமி லக்ஷ்மணானந்தாவின் கொலையை கிறிஸ்தவ தீவிரவாதிகளும், மாவோயிஸ்ட்களும் சேர்ந்து செய்திருக்கின்றனர் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

Read More...

கலைஞர் தூண்டுதலின் பேரில் வழக்கு - விஜயகாந்த் குற்றச்சாட்டு

முதலமைச்சர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே என் மீதும், எனது கட்சியினர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயத்தில் நடிகர் வடிவேலு பகடைக்காயாக பயன்படுத்தப் பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தேமுதிகவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை பொறுக்க முடியாமலும் இத்தகைய பொய் வழக்குகளை போடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேமுதிகவின் இளைஞர் அணி மாநாட்டை தடுப்பதற்காக குறுக்கு வழியில் கருணாநிதி செயல்படுவ தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.



சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

என் மீதும், எனது கட்சியினர் மீதும் ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் வடிவேலு பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு மணி நேரமும் ஒரு மாதிரி மாற்றி மாற்றி சொல்லி, தப்புத் தப்பாக கூறியிருக்கிறார். இது அனைத்தும் பொய்யாகும்.

கடந்த முறை ஒரு சம்பவம் நடந்த போது நான் கோவையில் இருந்தேன். அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்ற போது, என்னுடன் வந்த டிரைவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். இதிலிருந்தே பொய் வழக்கு என்று தெரியும்.

நான் சட்டத்தை மதிப்பவன். யாருக்கும் இதுவரை இடைஞ்சல் செய்ததில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்களை காப்பாற்றித்தான் எனக்கு பழக்கம். அப்படிப்பட்ட என் மீது பொய் வழக்கு போடுவது வேதனையாக உள்ளது.

படத்தில் வரும் காமெடி போல வடிவேலு பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக போலீசும், அதிமுக போலீசும் எப்போது ஒழிகிறதோ அப்போது தான் நல்லகாலம் ஏற்படும். போலீஸ் உடையை அணிந்து நடிப்பதே எனக்கு கேவலமாக இருக்கிறது.

என் மீது எத்தனை பொய் வழக்கு தான் போடுவது. இது இளைஞர் அணி மாநாட்டை கெடுப்பதற்காக கருணாநிதி நடத்தும் மலிவான அரசியலாகும். நான் வளர்ந்து வருவதை கண்டு பொறுக்காமலும், மார்க்சிஸ்ட் தலைவர்கள் என்னுடன் பேசுவதை பொறுக்க முடியாமலும், குறுக்கு புத்தியுடன் அவர் செயல்படுகிறார்.

நான் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவித்தால், அன்றைய தினமே 10 பொருட்கள் 50 ரூபாய்க்கு நியாயவிலை கடைகளில் தரப்படும் என்று அறிவிக்கிறார். காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறி, பாண்டிச்சேரியிலும் எங்களுக்கு பங்கு தர வேண்டும் என்று சொல்கிறார். எதையாவது சொல்லி பதவியில் நீடிக்க வேண்டும் என்பதே கருணாநிதியின் எண்ணமாகும். பதவி ஆசையால் அவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை நிச்சயம் கிடைக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். யாராக இருந்தாலும் தவறுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

எனது கட்சித் தொண்டர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள். எந்த வன்முறையிலும் இறங்காதவர்கள். எனக்கு பாதுகாப்பு எனது தொண்டர்கள் தான்.

திமுக ஆட்சியில் ரவுடியிசம் பெருகி விட்டது. கருணாநிதி காவிரி பிரச்சனையிலிருந்து, பாலாறு, முல்லைப்பெரியாறு போன்ற எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை. 1974ல் கச்சதீவை தாரைவார்த்தார், வருமானவரி வழக்கிற்காக காவிரி வழக்கை வாபஸ் பெற்றார், தாண்டவராயன் நெல் கடத்தல் வழக்கே இவரைப்பற்றி கூறும். 1969 முதல் இன்று வரை அவர் குறுக்கு வழியில் தான் அரசியல் நடத்தி வருகிறார்.

எனது கல்யாண மண்டபத்தை இடித்தது முதல் பல இடையூறுகளை எனக்கு செய்து வருகிறார். என்னை எப்படி அழிப்பது என்பதிலேயே அவரது கவனம் உள்ளது. ஒரு காமெடி நடிகர் கோர்ட்டுக்கு வருவது சாதாரண விஷயம். இதற்காக ஒரு வருடம் கழித்து அவரை தாக்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன வந்தது. என்னை எதிர்த்து போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கிறார். கருணாநிதியே என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயப்படமாட்டேன்.

விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே கருணாநிதி கவனம் செலுத்தி வருகிறார். எனது தொண்டர்களிடம் மறியல் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறேன். அவர்கள் எந்த வன்முறை சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கக்கூடும். உண்மை உறங்கும் போது, பொய்கள் ஊர் சுற்றி வரும்.

ஆனால், உண்மை ஒரு நாள் வெடிக்கும் போது அதன் விளைவு தெரியும். தமிழக சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் நடக்கும். இந்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நான் தைரியமானவன். நியாயமானவன். மக்கள் பிரச்சனைக்காக சிறை செல்ல தயார். ஆனால், கெட்டதற்கெல்லாம் போலீஸ் துணை போனால் அடுத்த ஆட்சி வரும்போது, அத்தகைய போலீஸ்காரர்கள் எங்கு போவார்கள் என்று தெரியாது. அனைவரும் மாட்டிக்கொள்ளவேண்டியது வரும். மக்களுக்காக நியாயமான அரசியல் நடத்தி வருகிறேன். என்னால் எந்த வன்முறையும் எங்கும் நடந்ததில்லை

( நன்றி: மாலைசுடர் )

பிகு:

அஜீத் ரசிகர்கள் தான் வடிவேல் வீட்டை தாக்கி னார்கள் என்று செய்தி வெளியானது. என்றாலும் என்னை இதில் சேர்த்தது தவறு. இதையும் விஜயகாந்த் சொன்னார் :-)

வழக்கு பற்றிய விவரம்:

இந்திய தண்டனை சட்டப்பிரிவு 307 (கொலை முயற்சி), 506/2 (ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுப்பது), 323 (சிறு காயம் ஏற்படுத்துவது), 427 (50 ரூபாய்க் கும் குறைவான சொத்துக்களை சேதப்படுத்தி அழிப்பது), 336 (மனித உடலுக்கும், மற்றவர்கள் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்குவது), 448 (அத்து மீறி நுழைந்து தாக்குவது) 148 (கும்பலாக சேர்ந்து திட்டமிட்டு கலகம் ஏற்படுத்துவது), 147 (கும்பலாக கூடுவது), ஆகிய பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குப் பிரிவுகளில் சில ஜாமீனில் வெளிவர இய லாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்குகளின் அடிப்படை யில் தே.மு.தி.க. கட்சி நிர் வாகிகள் சிலரிடம் விசா ரணை நடத்தவும் விருகம் பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்ததும் சென்னை மாவட்ட தே.மு.தி.க. வக்கீல் பிரிவை சேர்ந் தவர்கள் நேற்று மாலை போலீஸ் கமிஷனர் சேகரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர் கள், நடிகர் வடிவேல் தன் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியதாகத் தான் புகார் கொடுத்துள்ளார். ஆனால் விருகம்பாக்கம் போலீசார் தே.மு.தி.க. வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பொய் வழக்கு. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதற்கிடையே விஜயகாந்த் மீதும் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகள்
மீதும் நடவ டிக்கை எடுக்கப்படலாம் என்று இன்று காலை தகவல் பரவியது. இதனால் தே.மு.தி.க. கட்சித் தொண்டர்கள் ஆவேசமானார்கள்.

இது குறித்து போலீஸ் கமிஷனர் சேகரிடம் கேட்கப்பட்டது.

நடிகர் வடிவேலு தனது புகாரில் விஜயகாந்த் தூண் டுதலின் பேரில் தான் மர்ம கும்பல் வீடு மற்றும் அலுவலகத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தியது என கூறியிருக்கிறார். அவரது புகார் அடிப்படையில் தான் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்கள் குறித்து போலீ சார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் முடிவில் தான், விஜயகாந்துக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர் புள்ளதா என்பது தெரிய வரும். அதன் பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுக் கப்படும்.

தற்போது விசாரணை நியாயமான முறையில் நடந்து வருகிறது.


அப்டேட்
தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மேனேஜர் உள்ளிட்ட அக்கட்சியின் 13 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Read More...

ஐந்து கதவுகள் திறந்திருக்கின்றன - எஸ்.வி.சேகர்

கடந்த ஆண்டு அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்த நேரம்! அந்தக் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. விறுவிறுவென தலைமைச் செயலகம் வரை போனார் சேகர். அவர் தி.மு.க.வில் சேரப்போவதாக ஒரு பரபரப்பு கபகபவென பற்றிப் பரவிய நிலையில், ``நான் காருக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கத்தான் போனேன்'' என்று காமெடி செய்தார் அவர்.

அது போன வருடம். இப்போது இந்த வருடமும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வழக்கம்போல எஸ்.வி.சேகருக்கு அழைப்பு இல்லை. இந்த முறையும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு எஸ்.வி. சேகர் அழைக்கப்படாத நிலையில், அவரது அடுத்த `மூவ்' என்ன? என்ற கேள்வி கிறுகிறுவெனக் கிளம்பியுள்ளது. அண்மைக் காலமாக தி.மு.க. தலைவர்களுடன் எஸ்.வி.சேகருக்கு `நெருக்கம்' இருப்பதைப் போன்ற தோற்றம் நிலவும் நிலையில், அவர் தி.மு.க.வுக்குப் போய்விடுவாரா? என்ற சந்தேகமும் லேசாக சதிராடத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சுவாமிமலைக்குக் கிளம்பத் தயாராக இருந்த எஸ்.வி.சேகரை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் நாம் சந்தித்தோம்.

`கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களுடன் மணவிழாக்களில் பங்கேற்றிருக்கிறீர்களே?' என்று முதல் கேள்வியை அவர் முன்வைத்தோம்.

``நான் கலைத்துறைக்கு வந்து 34 வருடமாகிறது. இயல்பிலேயே நான் யதார்த்தவாதி. என் 53-வது வயதில்தான் ஓர் அரசியல் கட்சியில் இணைந்தேன். ஒரு கலைஞனாக எனக்கு எல்லோரிடமும் பழக்கம் உண்டு. ஆகவே, அடிக்கடி முகமூடியை மாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனது தம்பி ராஜா வைத்தியநாதனின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, என் தம்பி மனைவி கிரிஜா வைத்தியநாதன் அரசுத்துறை செயலர் என்பதால் முதல்வர் அந்த விழாவுக்கு வந்தார். மணமகன் வீட்டார் என்ற முறையில், மேடையிலிருந்த நான் அவரை வரவேற்றேன். இது தவறா?

நடிகர் சத்யராஜ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் அவராகவே என்னை அழைத்துப் பேசினார். தி.மு.க.வினர் வந்து விட்டார்கள் என்பதற்காக நான் என்ன மேடையை விட்டா ஓடமுடியும்? நான் என்ன அரசு விழாக்களிலா கலந்து கொண்டேன்?''

`கட்சிக் கட்டுப்பாட்டை மீறி உங்களை நீங்கள் முன்னிறுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே?'

``சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.''

`அப்படியானால் சுயவிருப்பப்படி நீங்கள் சேர வில்லையா?'

``அப்படியில்லை. அம்மாவின் துணிச்சல், கடவுள் நம்பிக்கை, அவர் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அவரிடமுள்ள உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன். கருணாநிதியிடம் இருப்பது பெரும்பான்மையினரைத் துன்புறுத்தி சிறுபான்மையினரை பெருமைப்படுத்தும் மதச்சார்பின்மை.''

`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?'

``கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.''

`கடந்த இரண்டு பொதுக்குழு கூட்டங்களுக்கும் நீங்கள் அழைக்கப்படவில்லை. இதற்கு சசிகலாதான் காரணம் என்கிறார்களே?'

``நான் அப்படி நினைக்கவில்லை. காரணம், நான் கட்சியில் சேர்ந்த பிறகு அவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. ஆதிராஜாராம் மா.செ.வாக இருந்தபோது இருந்த அணுகுமுறை வேறு. இப்போது இருப்பது வேறு. எனது தொகுதியில் எட்டு முறை அ.தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை கூட என்னை அழைக்கவில்லை. போஸ்டர்களிலும் என் பெயரைப் போடவில்லை. இதெல்லாம் கட்சித் தலைமைக்குத் தெரியாமலா இருக்கும்?''

`தொடர்ந்து கட்சியிலிருந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள். ஒருவேளை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டால்.....?'

``நான் கவலைப்பட மாட்டேன். வருத்தப்பட மாட்டேன். இதுவரை அம்மாவுக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருந்த காலத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லோருக்கும் `ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும்' என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஐந்து கதவுகள் (5 கட்சிகள்?) திறந்திருக்கின்றன'' என்று கூறி முடித்துக் கொண்டார் சேகர்.

(நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Read More...

கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது

திருச்சியில் நடந்த தி.மு.க.முப்பெரும் விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது

திருச்சியில் நடந்த தி.மு.க. மு�பெரும் விழாவில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் விருதினை பொதுச்செயலாளர் அன்பழகன் வழங்கினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் விருதும், மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு அண்ணா விருதும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரை முருகனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும் வழங்கப்பட்டது.

விருது பெற்றவர்களை பாராட்டி மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்,
புள்ளியியல் துறை இணை மந்திரி ஜி.கே.வாசன்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்,
எல்.கணேசன் எம்.பி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் காதர்மொய்தீன் எம்.பி,
வக்புவாரிய தலைவர் ஐதர் அலி,
புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி,
கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் பொன்.குமார்,
தமிழ் மாநில தேசிய லீக் பொதுசெயலாளர் திருப்பூர் அல்தாப்,
திருச்சி ஜோசப் கல்லூரி அதிபர் லாசர் ஆகியோர் பேசினார்கள்.
இறுதியாக பாராட்டுக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.
- செய்தி

துக்ளக் கேள்வி பதில்
கே : தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டதற்காக, அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு துறையினரும் அவருக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பது பற்றி?

ப : கலைஞரே, கலைஞரைப் பாராட்டி, கலைஞர் விருதை அளித்து, கலைஞர் அதைப் பெற்றுக்கொண்டால் கூட – இவர்கள் எல்லாம் அவருடைய "சாதனை'க்காக, அவரை வாழ்த்துவார்கள்.

Read More...

விஜயகாந்தை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் ரெடி

விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன்: நடிகர் வடிவேலு பேட்டி

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலு வீடு மற்றும் அலுவலகம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து நடிகர் வடிவேலு விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் துண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகர் வடிவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவர் ஒரு கட்சி சார்பில்தான் போட்டியிடுகிறார். நான் எல்லா கட்சிகளின் ஆதரவோடும் அவரை எதிர்த்து போட்டிட்டு ஜெயிப்பேன்.


திமுக, அதிமுக, பாமக போன்றவர்களுக்கு இல்லாத துணிவு வடிவேலுவிற்கு இருப்பதால் அவரை பாராட்டலாம்...

Read More...

அப்படியா ? ஏன் ?

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் தகவல்களை பெற முடியாது.

தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை முதன்மை செயலாளர் இளங்கோவன் ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குனரகம் ஆகிய 2 துறைகளில் இருந்தும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு பெற முடியாது என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த 2 துறைகளிலும் பொதுமக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளை கேட்க முடியாது.

தகவல் வேண்டும் என்றால் சம்திங் கொடுக்கணும் போல :-)

யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

Read More...

ஆம்பளையா இருந்தா தனித்தனியா நில்லுங்க..- விஜயகாந்த்

"திருமண விழா மற்றும் சுபகாரிய நிகழ்ச்சிகளை விஜயகாந்த் விட்டு வைப்பதில்லை. அங்கே ஒரு மேடை போட்டு அரசியல் பேசிவிடுகிறார் என்று சொல்கிறார்கள். தி.மு.க. அந்தக்காலத்தில் இப்படித்தான் வளர்ந்தது' என்று சொல்கிறார் விஜயகாந்த்.

திருமண விழா மேடையில்...

ஈரோட்டில் நடந்த தே.மு.தி.க. கொள்கைபரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் இல்லத் திறப்பு விழா நிகழ்ச்சியில்தான் விஜயகாந்த் இப்படிப் பேசினார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் அவைத் தலைவர்
பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், காங்கேயம் மாரப்பன் ஆகியோரும் கலந்துகொண்டனர். வழக்கம் போல விஜயகாந்த் பேச்சில் தி.மு.க. பற்றிய காரமான விமர்சனங்கள்
இருந்தன. அவரது பேச்சில் இருந்து சில பகுதிகள்:

""தமிழ்நாட்டு அமைச்சர்கள் கொள்ளை அடிக்கிறாங்க. காலேஜ் வாங்குறாங்க. ஆள் கடத்தல், நிலம் அபகரிப்பு... இப்படிப் பல புகார்கள் உள்ளன. முதலமைச்சரோ, "நான் விசாரிச்சேன்; ஒண்ணுமில்லை'ன்னு சொல்றார்.... மஞ்சள் துண்டு எதுக்குன்னு கேட்டால், அது நண்பர் ராமதாஸ் போட்டதுன்னு சொல்றார். அவரே கூட்டணியை விட்டுப் போயிட்டாரே, அப்புறம் எதுக்கு மஞ்சள் துண்டு?...

""எல்லா டி.வி. சேனல்களிலும் வினாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்னு சொல்றாங்க. ஆனால், கலைஞர் டி.வி.யிலே மட்டும் பாருங்க. விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சின்னு சொல்றாங்க. வினாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சின்னு சொன்னா, என்ன குறைஞ்சி போயிடுவீங்க? வினாயகர் சதுர்த்தி பற்றி பேசினா, விஜயகாந்த் பி.ஜே.பி.யோட கூட்டு வைக்கிறார்னு சொல்றாங்க...

""எனக்கு அரசியல் வரலாறு தெரியுமா?ன்னு ஸ்டாலின் கேட்கிறார். நான் ஸ்டாலினைக் கேட்கிறேன். தி.மு.க.வில் இடைச்செருகலா உங்க அப்பா எப்படி உள்ளே புகுந்தாருன்ற வரலாறு தெரியுமா? கலைஞரின் திட்டங்களைப் பார்த்தா நன்றாக இருக்கிற மாதிரி தெரியும். ஆனால் கூட்டி கழிச்சி கடைசியாப் பாத்தா,
அவர் குடும்பத்துக்குத்தான் போய்ச் சேரும். இதை நான் சொல்லலை. எம்.ஜி.ஆர். சொன்னது...

""தி.மு.க.வை மட்டும் விஜயகாந்த் விமர்சிக்கிறார். அ.தி.மு.க.வை விமர்சிக்கலைன்னு சொல்றாங்க. ஆட்சியிலே இருந்திருந்தா, அவங்களையும் கேள்வி கேட்பேன்.

""கூட்டணி வெச்சா ஜால்ரா அடிச்சாகணும். நான் கைகட்டி நிற்க விரும்பலை. தமிழ்த்தாயின் தலைமகன்னு சொல்லணும். அல்லது தங்கத் தாரகைன்னு சொல்லணும். இதெல்லாம் வேண்டாம். இந்த நாட்டில் இன்னமும் பசிக்கொடுமை இருந்து வருகிறது. வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திலும் அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு நாள் கூலி 80 ரூபாய்ன்னா 40 ரூபாய், 30 ரூபாய்தான் கொடுக்கிறாங்க...

""இதை யாராவது கேட்கறாங்களா? கேட்டால், பொற்கால ஆட்சி நடத்தறோம்னு சொல்றார். தைரியமான ஆம்பளையா இருந்தா தேர்தல்லே தனித்தனியா நில்லுங்க. அண்ணா நூற்றாண்டு விழா, பெரியார் நூற்றாண்டு விழான்னு சொல்லி மக்களை ஏமாத்தாதீங்க. இதையெல்லாம் தெய்வம் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. அதனால்தான் தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியா வெளியே போய்ட்டு இருக்கு. தெய்வம் சும்மா விடாது.

""காங்கிரஸைப் பார்த்து தி.மு.க. கேட்டது. "கும்பி எரியுது; குடல் கருகுது; குளுகுளு ஊட்டி ஒரு கேடான்னு'. நான் கேட்கிறேன். "கும்பி எரியுது; குடல் கருகுது; உங்களுக்கு ஏ.ஸி. கேட்குதா?'...

""மதுரையிலே உங்க மகனை கட்சியை விட்டே நீக்குனீங்க. இப்ப உங்க மகன்கிட்டே அதிகாரிங்க பூரா கையைக் கட்டி நிக்கிறாங்க. முதல்வருக்குக் கூட அந்த மரியாதை கிடையாது. மதுரையிலே ராயல் கேபிள் விஷனை பையன் நடத்தறார். அங்கே எல்லா சேனல்களையும் ஜனநாயக ரீதியா பார்க்க முதல்வர் உத்திரவிடணும்'' என்று விஜயகாந்த் தி.மு.க.வை ஒரு பிடி பிடித்தார்.

( நன்றி: துக்ளக் )

Read More...

Saturday, September 20, 2008

மோகன் சந்த் சர்மாவுக்கு சல்யூட்


உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மகனுக்கு அருகில் மருத்துவமனையில் தங்கியிருந்த போதும், கடமை அழைத்ததால் பயங்கரவாதிகளை பிடிக்க சென்று வீரமரணமடைந்த டெல்லி சிறப்பு காவல் படை அதிகாரி மோகன் சந்த் சர்மாவின் கடமை உணர்ச்சி நெகிழச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


.
தெற்கு டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதி களை சுற்றிவளைத்து பிடிக்க சென்ற படைக்கு தலைமை ஏற்று சென்றவர் சர்மா.

பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் சர்மா படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கி சுடுவதில் வல்லவராக திகழ்ந்த சர்மா,இதுவரை 35 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றுள்ளார். மேலும் 80 பேரை கைது செய்துள்ளார்.

இவரது சிறப்பான காவல் பணியை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் பதக்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகள் மற்றும் பதக்கங்களை சர்மா பெற்றுள்ளார்.
சர்மாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். 8ம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடந்த மூன்று தினங்களாகவே சர்மா தனது வீட்டிற்கு செல்லாமல் மருத்துவ மனைக்கும், அலுவலகத்திற்குமாக அலைந்து கொண்டிருந்தார்.

நேற்று காலை மருத்துவமனையில் தனது மகனின் அருகில் அமர்ந் திருந்த போதுதான் ஜாமியா நகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மருத்துவமனையி லிருந்து நேராக ஜாமியா நகருக்கு சர்மா சென்றுள்ளார். வழக்கமாக துப்பாக்கி குண்டு துளைக்காத சட்டை அணிந்திருக்கும் சர்மா,மருத்துவமனையிலிருந்து நேராக சம்பவ இடத்திற்கு சென்றதால் குண்டு துளைக்காத சட்டை அணிந்திருக்கவில்லை.

பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் சர்மாவின் வயிறு, கால் மற்றும் கையில் 3 குண்டுகள் துளைத்தன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையிலிருந்து நேராக தன் கடமையை ஆற்ற சென்ற சர்மா, மாலையில் மீண்டும் மருத்துவமனைக்கு மகனை பார்க்க திரும்பி வருவார் என்று அவரது குடும்பத்தினர்கள் எதிர்பார்த்து காத்திருக்க, துரதிர்ஷ்டவசமாக அவரது உடல்தான் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

தனது மகன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மகனை கவனித்து கொள்வதற்காக சர்மா விடுப்பு கோரியிருந்தார். ஆனால் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக அவரால் விடுப்பில் செல்ல முடியாமல் போனது.

டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் விசாரணை அதிகாரியாக இருந்த அவர், பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்கு இரையாகிவிட்டார்.கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற வளாகம் தாக்கப் பட்டபோது உள்ளே இருந்த பல்வேறு தலைவர்களின் உயிரை காப்பாற்றியதில் சர்மாவுக்கும் பங்கு உண்டு என்பது நினைவு கூரத்தக்கது.

சர்மாவின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சர்மா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய போகிறோம் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.


சர்மாவின் குடும்பதிற்கு இட்லிவடையின் அனுதாபங்கள்

Read More...

தசாவதாரம் 100 - சிக்கன் 65

:-)



Read More...

Friday, September 19, 2008

நோ 'இஞ்சி இடுப்பழகி' - ஜெ அறிவுரை

அதிமுக மேடைகளில் இஞ்சி இடுப்பழகி போன்ற பாடல்களுக்கு கலைஞர்கள் நடனமாடக்கூடாது என்றும், எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது


நான் வரும் வழியில் என்னை வரவேற்கும் விதமாக மேடைகளில் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டி ருந்தது. இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு மேடையில் இஞ்சி இடுப்பழகி என்ற பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடிக்கொண்டிருந்தனர். இது விரும்பத்தகாதது. நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாதது. கட்சியினர் பழைய பழக்க வழக்கங்களை மறக்கக்கூடாது. மாற்றக்கூடாது. இனிமேல் கட்சி மேடைகளில் எம்.ஜி.ஆர். பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். இஞ்சி இடுப்பழகி போன்ற பாடல்கள் இடம்பெறக்கூடாது.

Read More...

எம்.எல்.ஏ. பதவியையே அவமானப்படுத்தி விட்டனர் - எஸ்.வி. சேகர்

பொதுக்குழுவுக்கு அழைப்பு இல்லை: எம்.எல்.ஏ. பதவியையே அவமானப்படுத்தி விட்டனர் - எஸ்.வி. சேகர் பேட்டி

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு இந்த முறையும் எனக்கு அழைப்பு அனுப்பவில்லை. எனவே நான் கலந்து கொள்ளவில்லை. பல வேலைகள் காரணமாக வெளியூரில் இருக்கிறேன்.

எனக்கு அழைப்பு அனுப்பாதது வருத்தம் அல்ல. இதை எனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக நான் கருதவில்லை. எம்.எல்.ஏ. பதவியை அவமானப்படுத்தி விட்டதாக நினைக்கிறேன்.

17 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட்டு அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தொகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ.வாக இருந்து செய்ய வேண்டிய பணிகளை மன சாட்சிப்படி சிறப்பாக செய்து வருகிறேன்.

கடந்த 1 ஆண்டுகளாக எனது தொகுதியில் நடைபெறும் கூட்டங்களுக்கு கூட போஸ்டர்களில் எனது பெயரை போடுவது கிடையாது. அழைப்பு தருவதும் இல்லை.

இதற்கு காரணம் தயாநிதி மாறனோடு ஒரு மேடையில் தோன்றியதுதான் என்பது உணர்ந்து கொண்டேன். ஆனால் இன்று அதே தயாநிதி மாறன் அ.தி.மு.க. நிகழ்ச்சிகளையே டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்புகிறார்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் அதை தவிர்க்கவும் முடியாது. இது ஜனநாயக பண்புதானே யொழிய கட்சிக்கு விரோத மான செயல் அல்ல.

அ.தி.மு.க.வில் எத்தனையோ பேர் தி.மு.க.வோடு சம்பந்தி, மாமன், மச்சான் என்று உறவுகளை வைத்துக் கொண்டு தொழில் ரீதியாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அப்படி ஏதும் தொழில் செய்கிறேனா? அல்லது கட்சிக்கு விரோதமாக ஏதாவது செய்தேனா? என் மீது வழக்குகள் இருக்கிறதா? நான் கடவுள் நம்பிக்கை உடையவன். ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள்.

ஒரு கதவல்ல ஐந்தாறு கதவுகள் திறக்கும். தொடர்ந்து தொகுதி மக்களுக்கு என்றும் போல் சேவை செய்து கொண்டிருப்பேன்.

பிகு: சில தினங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சத்யராஜியின் மகன், நடிகர் சிபிராஜின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எஸ்.வி.சேகர் சென்றிருந்த போது, அங்கு வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடன் சிரித்து பேசினார். மேலும், ஸ்டாலினும், சேகரும் சிரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

Read More...

Wednesday, September 17, 2008

கர்நாடகாவிற்கு மம்தா பரிசு ?

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனம் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் இந்த தொழிற்சாலை மூடி விட்டு வேறு மாநிலத்தில் அதை தொடங்க டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் நானோ கார் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்தில் தொடங் குங்கள் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக கர்நாடக மாநிலம் தார்வாரில் 1000 ஏக்கர் நிலம் தருவதாகவும், வேண்டிய உதவிகள் அனைத் தையும் செய்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நானோ தொழிற்சாலையை தங்களது மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என ஆந்திரா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகாண்ட், ஒரிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இலங்கையும் கூட அழைப்பு விடுத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

Read More...

மின்சார புரட்சி இன்னும் 90 நாட்களில் ஆற்காடு வீராசாமி

இனிமேல் யாரும் ஆற்காடு வீராசாமி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சொல்லக்கூடாது..

சென்னை நகர்வாசிகள் தங்கள் மின் கட்டணத்தினை இணையதளத்தின் மூலம் செலுத்தும் வசதியினை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் கூறியது..

தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு ஒவ்வொரு இடத்திலேயும் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனை எளிமைப்படுத்துவதற்காக, முதல்கட்டமாக சென்னையிலும், சென்னை புறநகர் பகுதியிலும், இன்டர்நெட் மூலம் மின் கட்டணத்தை செலுத்த,மின்சார வாரியத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அண்ணா பிறந்தநாளான செட்டம்பர் 15-ம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதம் இன்டர்நெட் மூலமாக மின்சார கட்டணம் செலுத்துவதற்கு 3 மாதங்களுக்குள் இந்த வசதிகள் முழுமையாக செய்துதரப்படும்


ஒருரே கேள்வி: இண்டர்நெட் மூலம் பணம் செலுத்த மின்சாரம் இருக்குமா ?

Read More...

திமுகவை விட்டு தயாநிதி மாறன் நீக்கம் ?

தேனியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்ட கூட்டத்தையும், மதுரையில் மதிமுக மாநாட்டில் வைகோ பேசியதையும் நேரடியாக ஒளிபரப்பியதால் திமுகவினரின் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

தயாநிதி மாறன் அவருடைய அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோருக்குச் சொந்தமான "சன்" குழுமத் தொலைக்காட்சி செய்திகளில் மாநில அரசைக் குறைகூறும் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தி.மு.க.வின் ஆதரவு தொலைக்காட்சியாக இருந்தவரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் செய்திகளை புறக்கணித்து வந்தது "சன்" தொலைக்காட்சி. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தபோது கூட, தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று வைகோ வருத்தப்படும் நிலைதான் இருந்தது.

இப்போது அவருடைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.

தேனியில் செப்டம்பர் 15-ல் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொதுக் கூட்டத்தில் பேசினார். அ.தி.மு.க.வின் ஆதரவு சேனலாக உள்ள ஜெயா தொலைக்காட்சி கூட அதை நேரடியாக ஒளிபரப்பு செய்யவில்லை. சன் நியூஸ் தொலைக்காட்சி தேனி பொதுக் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்தது.

அதற்கடுத்த நாள் மதுரையில் ம.தி.மு.க.வின் மண்டல மாநாடு நடந்தது. அதையும் சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது.

தி.மு.க.வின் எதிர் முகாமைச் சேர்ந்த அ.தி.மு.க., ம.தி.மு.க. தலைவர்களின் கூட்டங்களை இப்படி நேரடியாக ஒளிபரப்பு செய்தது தி.மு.க. தலைமைக்குக் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

செப்டம்பர் 16-ல் ரேஷனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும் சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்தது. எல்லா தலைவர்களின் நிகழ்ச்சிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்து, நடுநிலையோடு செயல்பட சன் நிர்வாகம் முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

கடந்த வாரம் தயாநிதி மாறன் தில்லி சென்று திரும்பிய பிறகுதான், தி.மு.க.வுக்கு எதிர்முகாமில் இருப்பவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி, ம.தி.மு.க.வில் முக்கிய தலைவர் ஒருவருடன் தயாநிதி நெருக்கமாக இருப்பதாகவும், அதனால்தான் மதிமுக மற்றும் வைகோவுக்கு முக்கியத்துவம் கிடைப்பதாகவும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

மக்களவையின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களே இருக்கிறது. எனவே, தயாநிதியை கட்சியைவிட்டு நீக்கினாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது என்பது திமுக தலைமைக்கு ஆறுதல் தரும் விஷயம்.

உடனடியாக தயாநிதியைக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று தலைமைக்கு நெருக்குதல்கள் அதிகரிக்கின்றன. திருச்சியில் 21-ம் தேதி நடக்கும் முப்பெரும் விழா வரை முதல்வர் பொறுத்திருப்பாரா அல்லது அடுத்த ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுப்பாரா என்பதே இப்போதைய கேள்வியாகும்.

Read More...

ஐசிஐசிஐ திவால் என வதந்தி

தூத்துக்குடி: ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகி விட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் வதந்தி பரவியதால் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸ் திவால் ஆகி விட்டது. இதையடுத்து இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகிவுள்ளது.

இந்தியாவின் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் இங்கிலாந்து பிரிவிலும் லேமேனின் முதலீடு உள்ளது.

இந் நிலையில் ஐசிஐசிஐ திவால் ஆகி விட்டதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வதந்தி பரவியது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால் ஐசிஐசிஐ வங்கியும் திவால் ஆகி விட்டதாக இன்று காலை தூத்துக்குடி, திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டனம் ஆகிய பகுதிகளில் வதந்தி பரவியது.

இதையடுத்து இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிளைகளில் குவிந்தனர். ஏடிஎம் மையங்களிலும் நீண்ட கியூ வரிசையில் நின்று பணம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் இது வெறும் வதந்தியே, ஐசிஐசிஐ வங்கி திவால் ஆகவில்லை, நல்ல நிலையில்தான் உள்ளது, யாரும் பீதி அடைய வேண்டாம் என வங்கி அதிகாரிகள் விளக்கிய பின்னரே பாதி மனதுடன் வாடிக்கையாளர்கள் கலைந்து சென்றனர்.

சிட்டி வங்கி கிரெடிட் கார்டுகளை ஏற்க மறுப்பு:

இந்த நிலையில் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை ஏற்க சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இதனால் சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்போர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் காணப்படும் வீழ்ச்சியின் பாதிப்பு மும்பை பங்கு சந்தையிலும் எதிரொலிப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., டாடா ஸ்டீல், ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, பிஎச்இஎல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

Read More...

Tuesday, September 16, 2008

ஜெ வழக்கு - குமுதம் விளக்கம்

குமுதம், விகடன் மீது ஜெ வழக்கு - அதற்கு ஜூவி ஏற்கனவே மன்னிப்பு கேட்டது, அதை தொடர்ந்து இப்போ குமுதம் விளக்கம் ( மன்னிப்பு என்று எழுதியிருந்தேன், குமுதம் விஜயகாந்த் மாதிரி மன்னிப்பு அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை )

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களுடைய அறிவுறுத்தலின்படி, தங்களின் வழக்கறிஞர் ஏ. நவநீதகிருஷ்ணன் அவர்கள் எங்களுக்கு அனுப்பியிருந்த `நோட்டீஸ்' கிடைக்கப் பெற்றோம்.

அதில், கடந்த 11.9.08 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான `எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் தி.மு.க.வில் சேர முயன்றார் ஜெயலலிதா-தூது சென்றவரின் பகீர் வாக்குமூலம்' என்ற தலைப்பில் வெளியான அட்டைப் பட பேட்டிக் கட்டுரை, இட்டுக்கட்டி எழுதப்பட்ட அப்பட்டமான பொய் என்றும், அப்படியொரு முயற்சியை தாங்கள் செய்யவில்லையென்றும் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படி மறுப்பதற்குத் தங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதை வெளியிட வேண்டிய கடமையும், நாங்கள் பிரசுரிப்பது பொய்யாக இருக்கும் நிலையில் வருத்தம் தெரிவிக்க வேண்டியதும் எங்கள் கடமை என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால், `குமுதம் ரிப்போர்ட்டர்' பத்திரிகை என்பது தங்களது `அரசியல் எதிரி' என்று தங்களால் வர்ணிக்கப்படும் திரு.கருணாநிதி அவர்களின் கட்டளைப்படியே செயல்படுவதாகவும், அந்த வகையிலேயே அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதாகத் தாங்கள் நம்புவதாகவும், தங்கள் மறுப்பில் கூறியிருப்பது குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையையே இழிவுபடுத்தும் சொற்கள் என்பதும், அதன் காரணமாக அதில் பணியாற்றும் எங்களுக்கு மட்டுமல்ல, நிகழ்காலத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கும் எந்த அளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல.

`குமுதம் ரிப்போர்ட்டர்' இதழை தொடர்ந்து வாசித்து வரும் தாங்கள், மக்கள் நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதை நாங்கள் பாரபட்சமில்லாமல் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் உணராமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் நாங்கள் திரு. கருணாநிதி அவர்களின் கட்டளைப்படி செயல்படுகிறோம் என்று தாங்கள் கூறியிருப்பது வியப்பாக இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதில் எந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது வாக்களிக்கும் மக்களே தவிர, வாக்குக் கேட்டு பிரசாரம் செய்யும் அரசியல் தலைவர்களோ, பத்திரிகைகளோ அல்ல. இந்நிலையில், வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் சந்தேகமேயில்லாமல் அமோகமாக வெற்றி பெறப்போகும் தங்கள் கட்சியின் வெற்றியைத் திசை திருப்புவதற்கென்றே, நாங்கள் (கருணாநிதியின் கட்டளைப்படி!) அந்தப் பொய்ச் செய்தியை வெளியிட்டிருப்பதாகக் கூறுவது எப்படிச் சரியாகும் என்பது உண்மையிலேயே புரியவில்லை.

அதேபோல், தாங்கள் தேசப்பற்றுமிக்க பொறுப்புள்ள குடிமகள் என்பதை நாங்கள் எந்த இடத்திலும் மறுக்கவில்லை. சந்தேகிக்கவுமில்லை. அதேசமயத்தில், தங்களைப் போலவே, நாங்களும், எங்கள் வாசகர்களும், அத்தனை ஏன்? நேர்மையாக வாழும் அனைவருமே தேசப்பற்றுமிக்க பொறுப்புள்ள குடிமக்கள்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களது பேட்டிக் கட்டுரையின் காரணமாக தங்களைப் போலவே, மனவேதனையடைந்த ஏராளமான தங்களின் நண்பர்களும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும், தங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். தங்கள் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் சுலபமாகத் தங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச முடியும் என்பது உண்மையானால் அது உண்மையிலேயே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

உண்மையிலேயே தாங்கள் மிக எளிமையாக இருந்தவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, நான் தங்களைப் பேட்டியெடுத்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். தாங்கள் மறந்திருப்பீர்கள் என்றாலும் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். காரணம், தங்களை அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். அவர்கள் நியமித்தவுடன், தாங்கள் பத்திரிகைக்குக் கொடுத்த முதல் பேட்டி எனக்குத்தான் என்பதாலும், பேட்டிக்காக என்னைத் தங்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் `இதயம் பேசுகிறது' மணியன் என்பதாலும், அதைத் தங்களால் நிச்சயமாக நினைவுபடுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

அந்தப் பேட்டியின்போது, `தமிழகத்தின் உயர் போலீஸ் அதிகாரியாக(டி.ஜி.பி) இருப்பவர், ஒவ்வொருநாள் காலையிலும் தங்கள் இல்லத்திற்கு வந்துதான் கட்டளைகளைப் பெற்றுச் செல்கிறாரா?' என்பது போன்றும், `கட்சியிலுள்ள மூத்தவர்களுக்குத் தாங்கள் மரியாதை தருவதில்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறதே?' என்பது போன்றும், தங்களைக் கோபப்படுத்துகின்ற மாதிரியான கேள்விகளைக் கேட்டபோதுகூட, தாங்கள் அதற்கு வெகு இயல்பாகவும், சகஜமாகவும் பதில் அளித்தீர்கள். அப்போது `கருணாநிதியின் கட்டளைப்படிதான் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கிறீர்களா?' என்று தாங்கள் கேட்கவில்லை. அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

வழக்கறிஞர் மூலம் மறுப்பு வெளியிடக் கோரும் தங்களின் நிலையை தாங்களாகவே அனுப்பியிருந்தாலும் அதனை உரிய முக்கியத்துவத்துடன் வெளியிட வேண்டிய பொறுப்பும், கடமையும் எங்களைப் போன்ற நடுநிலைப் பத்திரிகைகளுக்கு உள்ளது என்பதை உணர்ந்து பிரசுரம் செய்திருப்போமே!

அந்தக் காலகட்டத்தில் தங்களுக்கு மிகவும் வேண்டிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தம்மிடம் அப்படிச் சொன்னது உண்மை என்று பத்திரிகையாளர் `அசைட்' பாஸ்கர் சொன்னதை வெளியிட்ட நாங்களே, அதை முழுப் பொய் என்று மறுத்துள்ள தங்களின் மறுப்பையும், எங்களது விளக்கத்தையும் இங்கே வெளியிட்டுள்ளோம். அந்தப் பேட்டிக் கட்டுரையில் தங்கள் மனம் புண்பட்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். அது எங்கள் நோக்கமல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

-ஆசிரியர்
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Read More...