பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 06, 2008

நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க - ரஜினிக்கு ஒரு ஓப்பன் லெட்டர்

ஜூவியில் வந்த கடிதம்.

சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...'நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க!'

இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...

உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள்.

இன்று வரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா? முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? பிறர் ஏற்றிவிடும் உசுப்புகளுக்கெல்லாம் எத்தனை காலம் ரணகளப்படப் போகிறீர்கள்? உங்கள் படங்களில் நீங்கள் சித்திரிக்கப்படுவதைப்போல் நீங்கள் உங்களை உண்மையிலேயே சூப்பர் மேன் என்று நினைத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் வாய்ஸ் கொடுப்பது ஆரம்பத்தில் சீரியஸாகவே இருந்தது. ஆனால், போகப் போக வடிவேலு ஜோக்கையே ஓவர்டேக் செய்து விட்டது. அடிப்படை அரசியலறிவு குறித்த தெளிவான பார்வை இல்லாத நீங்கள், போகிற போக்கில் அரசியல் விமர்சனங்களை அள்ளி வீசுவது காமெடியின் உச்சம். ஓட்டுப்போட்டு விட்டு வாக்குச்சாவடி வாசலிலேயே 'இன்ன கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்' என்று கடந்த தேர்தலில் நீங்கள் வெளிப்படையாகச் சொன்னது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்று உங்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ? ஆனால், அதுகுறித்து இதுவரை நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதுதான் உங்கள் அரசியல் ஞானமோ?

சினிமாவில் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா' என்று பில்ட் அப்களைக் கொடுக்க வேண்டியது... தமிழன் கொடுத்த தங்கக் காசுகளைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக குக்கிராமத்த்து டீக்கடை வரை செய்தியாகிக் கிடக்கிறது. நிஜ வாழ்க்கையிலும்கூட நீங்க நன்றாகத்தான் நடிக்கிறீர்கள், சார்!

தேசிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளைப் போல தண்ணீர்ப் பிரச்னை வரும்போதெல்லாம் உங்களுக்குச் சிக்கல் தான். தமிழகமா, கர்நாடகமா என்று தத்தளித்துப் போய்விடுகிறீர்கள். அந்த மாதிரி இக்கட்டான நேரத்திலெல்லாம் உங்களுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் நாங்கள் தான்.

ஆனால், 'குசேலன்' படத்துக்காக கர்நாடக மக்கள்கிட்ட நீங்க வருத்தம் தெரிவிச்சு, நீங்கள் அடகு வைத்திருப்பது உங்கள் தன்மானத்தையும் தமிழ் மக்களின் மானத்தையும்! உங்களால் ஆதாயப்படுபவர்கள் வேண்டுமானால் அதை ஆதரிக்கலாம். உங்கள் தலை உருட்டப்படும்போது எல்லாம் கடைக்கோடி தமிழன்கிட்ட இருந்து, 'எங்க தலைவனை ஏண்டா இம்சை பண்றீங்க'ன்னு ஓங்கி ஒலிக்கிற குரல், இந்தப் பிரச்னையில எங்கேயும் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒகேனக்கல் பிரச்னையில் நீங்கள், 'பொதுவா இருக்குற தண்ணீரை கொடுக்க முடியாதுன்னா, அவங்களை உதைக்கவேணாமா?' என்று உணர்ச்சி வசப்பட்டீர்கள். உடனே, தமிழகமே உங்களை தூக்கிப் பிடித்தது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தொடர்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிந்த சில நாட்களில், 'கர்நாடகத்தில் 'குசேலன்' படத்தை வெளியிடத் தடை போடப்போவதாக மிரட் டல்கள் வருகிறதே' என்று கேள்வி எழுந்தபோது, ''உலகம் முழுக்க வெளியாகிற என் படம் கர்நாடகத்தில் வெளியாகாவிட்டாலும், எனக்குக் கவலை இல்லை'' என்று நீங்கள் சொன்னபோது, 'நிஜமான தமிழன் நீங்கதான்' என புல்லரித்துப் போய்விட்டோம்.

ஆனால், கன்னட இனவெறி அமைப்புகளும், கன்னட திரையுலகமும் சில தினங்களுக்கு முன்பு 'குசேலனை திரையிட அனுமதிக்க மாட்டோம்... மீறி திரையிட்டால், தியேட்டர்களைக் கொளுத்துவோம்' என கொக்கரித்ததும் கன்னட திரையுலகினருக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதி உங்கள் பேச்சுக்கு வருத்தப்படுவதாக ஒரு ஸீன் போட்டீர்கள். கன்னடத் திரையுலகம் உங்களை மன்னிக்கத் தயாராக இருந்தாலும், கன்னட வெறியர்கள் விடுவதாக இல்லை; கலாட்டாக்களில் இறங்கி தங்கள் வன்முகத்தைக் காட்டினர்.

உடனே நீங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை யில் நடந்த 'குசேலன்' படக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விழாவில், ''கன்னட மக்கள் அனைவரையும் குறிப்பிடும்படி 'அவங் களை உதைக்க வேணாமா' என நான் பேசியிருக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கணும் என்று பேசியிருக்கவேண்டும். கர்நாடக மக்களி டம் பாடம் கற்றுக்கொண்டேன்... இனி எச்சரிக்கையாகப் பேசுவேன்''னு தலை குனிஞ்சு பேசியதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

'நடிகனை நடிகனா மட்டும் பார்க்க வேண்டியதுதானே'னு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்களெல்லாம் கேட் கலாம். நாங்கள், உங்களை நடிகராக மட்டும் பார்க்கவில்லை. எங்களில் ஒருவராகத்தான் பார்த்தோம். அதனால்தான், எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக எங்கள் இதய சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்தோம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாகத் தமிழர்களின் மொத்தத் தன்மானத்தையும் கன்னடர்களிடம் அடகு வைத்திருக்கிறீர்கள்.

எத்தனையோ சினிமாக்காரர்களை இன, மொழி வேறுபாடு பார்க்காமல்தான் தமிழகத்தில் ஆதரிக்கிறோம். அவர்களின் படத்தை ஓட வைக்கிறோம். ஆனாலும், எங்களுக்குக் கிடைத்த வரம் என்றுதான் உங்களை நினைத்தோம். உங்கள் பட ரிலீஸ்தான் எங்களுக்குப் பொங்கல், தீபாவளி! உங்கள் வார்த்தைகள்தான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்... எங்களையெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தோம். ஏனோ, கடைசிவரைக்கும் கமுக்கமாக இருந்துவிட்டீர்கள். அப்போதும் நாங்கள் உங்கள் பக்கமே இருந்தோம். ஆனால், உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று! இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா? 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு! சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது(?) மாதிரி தமிழக நலனுக்காக செலவு பண்ணியே அழித்துவிட்டீர்கள்!

'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன?


நீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே...! அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா?


- இப்படிக்கு
நேற்று வரை உங்கள் ரசிகனாக
இருந்த தமிழன்.

( நன்றி: ஜூவி )

19 Comments:

Anonymous said...

ரஜினிய கொத்து பொரோட்டா போடாம விடமாட்டீங்க போல..
நடிகன நடிகனா பார்க்க எப்போ தமிழன் கத்துக்கறானோ அப்பதான் நம்ப சமுதாயம் நல்லா ஆவதற்கு வழி பிறக்கும்..

நல்ல சமுதாய மலர்ச்சிக்காக உழைக்கும் ஒரு மானிடன்.

M Arunachalam said...

As usual, Jaundice Vikatan has published an anti-Rajini report with a JAUNDICED EYE to cash in on Rajini's name. But, like earlier, this time too, it will NOT succeed in its nefarious attempt to distance Rajini fans from their Thalaivar.

Every TRUE Thalaivar fan understands Rajini & will never ever question Rajini's integrity. People who are used to "dravidian" political ways WILL NEVER BE ABLE TO UNDERSTAND a decent person like Rajini.

Only mistake of Rajini is HE IS WEARING A LOIN CLOTH IN A STATE FULL OF NUDES.

A mafia, controlled by some morons, is working ovetime behind this matter to "somehow" discredit Rajini. I am sure all these morons will get answered in "due course".

Natural justice may be delayed but will never be denied.

Arun

இராம்/Raam said...

இட்லிவடை,

எதுக்கு மஞ்ச பெயிண்ட் அடிச்சு வைக்கிறீங்க... படிக்கிறப்போ கண் வலிக்குது... highlight பண்ணுறதுக்கு வேற எதாவது option இருக்கானு பாருங்க..

Ravi said...

I don't know when people (esp media and other actors like Sharat, Sathyaraj) will stop using Rajini as a pickle. Where he invests is his wish, why should the media or others make their assessments based on that? If a Tamilian were to buy houses in US, people hail him as raising his standards but except Rajini to invest all his money here? This is rubbish.

And even in the Hogenekkal issue, during the protest, a person of his stature should not have made such loose comments which would cause unnecessary trouble. But again, without any ego, he had apologised for his own remarks. How many other people would have the courage to do this?

Maanidan, M.Arunachalam avargal sonna maadhiri, such people still want to cash in using Rajini's name.

வெங்கட்ராமன் said...

ரஜினியை வைத்து தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதித்தை விட பத்திரிக்கைகள் அதிகம் சம்பாதித்து விட்டன.

ரோபோ படம் ஆரம்பித்து, ஸ்டில்கள் வெளியிடப்பட்டால் எல்லா பத்திரிக்கைகளும் என்ன செய்வார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

பத்திரிக்கைகளின் சுய ரூபத்தை புரிந்துகொள்ள இது ஒரு வழி.

மேலும் ரஜினியை குறை சொல்ல எந்த பத்திரிக்கைக்கும் அருகதை கிடையாது.

Anonymous said...

ரொம்ப நல்ல கட்டுரை...
இந்தியாவிற்கு ஒரு கஜினி...
தமிழ்நாட்டிற்கு ஒரு ரஜினி (சுரண்டியதில்)
அவர் வாழவைக்க வரவில்லை.
வாழ வந்திருக்கிறார்......
ஒரு நடிகன தான் முதலமைச்சர் ஆக்குவூமுன்னு அடம் பிடிக்காதீங்க
......
அப்பிடி ஒரு ஆசை யாருக்காவது இருந்தா.....
எங்க ஊர்ல "கூத்தாடி முருகேசன் " இருக்காரு
அவரை முதலமைச்சர் ஆக்குவோம்........

என்ன நான் சொல்லறது, சரி தானே

Anonymous said...

நடிகன் நடிகனா நடந்துக்கிட்டா நல்லா இருக்கும். அதவிட்டுட்டு அரசியல்ல யெல்லாம் மூக்க நுழைச்சா இப்படித்தான் மண்ணை கவ்வனும் . கமலும் ஒரு நடிகன் தானே. அதுவும் பச்சைத் தமிழன் . இப்படியா அரசியல் பேசுறாரு? அரசியல் ரீதியா அவரை யாராவது இப்படி வார முடியுமா? அதுக்கு வாய்ப்பு கொடுப்பாரா? அவர் முன்னேற்றதுக்கு அரசியலையா பயன்படுத்தினார்?

Anonymous said...

@மானிடன்
நடிகன நடிகனா பார்க்க நாங்க தயார். அவரும் நடிகராக மட்டும் இருக்கும் வரை.

நல்லதந்தி said...

//''கன்னட மக்கள் அனைவரையும் குறிப்பிடும்படி 'அவங் களை உதைக்க வேணாமா' என நான் பேசியிருக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கணும் என்று பேசியிருக்கவேண்டும். கர்நாடக மக்களி டம் பாடம் கற்றுக்கொண்டேன்... இனி எச்சரிக்கையாகப் பேசுவேன்''னு தலை குனிஞ்சு பேசியதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை//

இதில் எந்த விஷயாம் ஜூ.வி க்கு தலைகுனிவை ஏற்படுத்தியதுன்னே தெரியலையே?.
பத்திரிக்கைப் பரபரப்பிற்க்காக (விற்பனைக்காக)இந்த வேலையைச் செய்யும் இது போன்ற பத்திரிக்கைகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும்.
ஏதாவது புது முக நடிகை வந்து விட்டால் ஏதோ தமிழர்கள் அதுவரை பெண்களைக் காணாதவர்கள் போல் 'தமிழர்களின் தூக்கத்தை கெடுக்கவந்தவர்,ஜொள்ளு விடத் துண்டுகின்ற கனவுக்கன்னி என்று மிகப் பெரிதாக எழுதி அல்லது உளறி எழுதும் இம்மாதிரியான பத்திரிக்கைகள் இப்போது என்னமோ தமிழன் மானத்தைக் காக்க பாடுபடுவது சிரிப்புத்தான்!.

Anonymous said...

Being a Tamil Kannadiga myself(Notice Tamil coming first), even I got insulted by Rajni's apology.

what he said in that medai was 100% RIGHT, and his current bulti not only makes his medai statement void, but also makes the entire cause and condemnation involved in that protest meet a mere rhetoric.

Again he has proven he is here only for money.

Sri said...

I agree with arunachalam and ravi. JUVi is becoming a thrid rate magazine. Criminal Kaaduvetti Guru is a "Sooravali" for them and a honest, good person like Rajini is a cheater. ennaikkuthaan indha moodargal thirundhuvaangalo. Ivanga thaan kamarajaraiye veetukku anupinavangaache. ippadi ella nallavargalaiyum veetukku anupitta tamilnadu urupadaadhu.

Anonymous said...

அவர் எங்கே தமிழர்களின் மானத்தை அடகு வைத்தார் என்று சொல்ல முடியுமா? நானும் தமிழன் தான். சும்மா கண்ணை மூடிக்கொண்டு மற்றவர்களை ஆதரிக்க மாட்டோம். ஆனால், இந்த விசயத்தில் (மட்டும்) நமது தமிழ்நாடு மானம் போய் விட்டதா? உங்கள் பச்சை தமிழர்கள் எல்லாம் இது வரை தமிழுக்காக என்ன செய்தார்கள்? இவரிடம் மட்டும் ஏன் எதிர்பார்கறீங்க? சரி, இவரை ரொம்ப நேசிக்கறீங்கனா, அவர் தமிழ்நாட்டுக்கு தண்ணி தர வேண்டாம்னா சொன்னார்? அப்படி சொன்னா அது தப்பு. உங்களுக்கும் மனசாட்சி இருக்கு. அதை கேட்டு சொல்லுங்கள், அவர் தப்பு செய்தாரா என்று. மற்றபடி சும்மா தப்பு தப்பு சொல்லி கொண்டு இருந்தால் நிச்சயம் உங்களுக்கு விளம்பரம் கிடைக்கும், ஆனால் மதிப்பு இருக்காது.

-- நந்தகுமார்.

Anonymous said...

சந்தடி சாக்குல தமிழ்ப்பொண்ணு கமல்-ஐ தூக்கி வச்சு பேசி இருக்கார்.

இது ஒரு சாதரணமான விஷயமா எடுத்துகிட்டு போகாம, ரஜினி-ஐ ஏன்யா இப்படி படுத்தி எடுக்குறீங்க....

அடுத்து, நமக்கு நிறைய வேலை இருக்கு...ரோபோ படம் பாக்கணும்..மர்ம யோகி பத்தி படிக்கணும்..வேலைய பாருங்க மக்களே...

ரஜினி-யும் நல்லா இருப்பார்..தமிழ்நாடு-உம் நல்ல இருக்கும். நம்மளும் நல்ல இருப்போம்.

Kalyan said...

one thing is very clear, Etho appo appo rajin voice kuduthu irunthaar. . now he will not open at all.. Santhosam thana..

Kamalahasan Kumble Venum sollarthu Correct. anna rajini Avaroda own statment ah clarify panna kudutha

MK Hogennakal Issue la Congress kaga PALTI adikalam.. anna Rajini Clarify Panna kuduthu.

Sarath DMK,ADMK,OWN PARTY PALTI Adikalam. anna Rajini Clarify Panna kuduthu.

L.Ganesh BJP will samalchify when ask about another BJP'ian Yeduirappa.. anna Rajini Clarify Panna kuduthu


Pongada Venkaiyum(ONION)

Anonymous said...

நடிகரா பார்க்க தயார்ன்னு சொல்லிட்டு, ஒகேனக்கல் பிரச்சனைக்கு எதுக்கு எல்லா நடிகர்களும் காவடி தூக்கணும். போஸ்டர் கிழிச்சாங்கன்னா அதுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிச்சுட்டு கம்முனு இருந்திருக்கனும். இவுங்க ‘உண்ணாவிரதப் போராட்டம்' முடிஞ்சப்புறம். அரசியல் தலைங்க எல்லாம் சேர்ந்து கைவிரிப்பாங்க. நாம்ப இத கைய கட்டிகிட்டு பார்த்துகிட்டு இருக்கணும். அப்புறம் நடிகர்கள் நல்லா அடிச்சுகராங்களா பார்த்துகிட்டு குளிர் காயறது..

இங்க ரஜினிய பத்திதான் பேசிகிட்டு இருக்கோம் .. அதுக்குள்ள கமலு 'ஒசத்தி'.. என்னங்க இது சிறுபிள்ளதனமா இருக்கு..?

என் குழந்தை புத்திசாலினா உங்க குழந்தை மக்குனு ஆயிடுமா?

வத்திபட்டியோட சிலர் திரிஞ்சிகிட்டு இருக்காங்க.. எங்க பத்தல, எப்ப பத்தவைக்கலாம்னு..

நமக்கு கிடைச்ச இந்த சின்ன gapல திருந்தர வழிய பாருங்கையா..

இப்போ இப்பிடி எழுதினவங்கதான் அடுத்த வார இதழ்ல ‘ரஜினி அப்ரானி'ன்னு எழுதுவாங்க .. அதையும் நாம இதே இ.வ வில் படிப்போம்..

Take my words..!

Ravi said...

Appada... in a way I am happy... atleast most of the people do not take media's words seriously these days. People now are intelligent enough to know who the real fools are!!

Nandakumar, Kalyan - unga comments sooper!

Anonymous said...

ஜீ.வி கடிதம் நிஜமாகவே 'ச்சும்மா அதிருதில்ல" .

இ.வ, நீங்க ஹைலைட் செய்த இடங்கள் சூப்பரப்பு.

சூப்பர் பாஸ்ட் ! இட்லி வடை. குங்குமம் கமல் செய்தியும் போட்றீங்க, ஜீ.வி ரஜினி செய்தியும் போட்றீங்க. நீங்க ஒரு நடுசிலைவாதி(!) என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

அப்புறம் எல்லா பத்திரிக்கையிலிருந்தும் உடனே எடுத்து ப்ளாகில் போட்டால் உங்க பொழப்பு நல்லா ஒடும். அவிங்க விற்பனை என்ன ஆகிறது?

Anonymous said...

ரஜினியின் தற்போதைய நிலை உண்மையிலேயே தர்மசங்கடமானதுதான். இனி அவர் எல்லா விழாக்களிலும் மிக கவனமாகவே பேசுவார். முன்பு போல அவரின் நிலை இருக்கப் போவதில்லை.

இன்னும் ரஜினி ரசிகர் "தலைவன்" ப்ளீசீங்பவுடர் கமென்ட் காணோம். எடிட் செய்திட்டீங்களா? இட்லி வடை ரிலீஸ் செய்ங்க. அவரோட கமெண்ட் எல்லாம் சூப்பரு.

Anonymous said...

ப்ளீசிங் பவுடர், என்னப்பா வாயடைச்சி போயிருக்க? தலைவர் அரசியல்ல தலைய உட்டது தப்புன்னு தோனுதுல்ல? இல்லாட்டி குதிச்சி குதிச்சி வந்து கமெண்ட் அடிப்பியே? எங்க போய்ட்ட இப்ப?