பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 07, 2008

ராமரே ராமர் பாலத்தை இடித்தாரா ? - சோ கருத்து

ராமரே ராமர் பாலத்தை இடித்தார் - கம்பராமாயணத்தில் இல்லாதது...

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில், "மரக்கலங்களுக்கு வழிவிடுவதற்காக பாலத்தில் ஒரு பிளவை ராமர் தோற்றுவித்தார்' என்று
கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதாக, சுப்ரீம் கோர்ட்டில் நாரிமன் கூறினார்.

கம்பராமாயணத்தில் இது இல்லை. மிகைப் பாடல்கள் (அதாவது ஏதோ சில பதிப்புகளில் மட்டும் இடம் பெறுகிற, இடைச்செருகல்கள்) என்று ஒரு பட்டியல்
– கம்பன் கழகத்தின் வெளியீட்டில் இருக்கிறது. அதில் இந்தப் பாடலும் ஒன்று. கம்பராமாயணத்தில், இலங்கையிலிருந்து திரும்புகிற ராமர், புஷ்பக விமானத்தில் இருந்தவாறே சீதைக்குப் பல இடங்களைக் காட்டுகிறார். அவற்றில் ஒன்று சேது (அணை, பாலம்).

அதைக் காட்டி, "இது வானர சேனை கட்டியது. இதன் தூய்மையை எடுத்துச் சொல்ல திருமாலாலும் முடியாது; பிரம்ம தேவனாலும் முடியாது; நான் எப்படிக் கூறுவது? இருந்தாலும் சொல்கிறேன். பெற்று வளர்த்த தாய் – தந்தையர்க்கும், கற்பித்த ஆசிரியனுக்கும் தீங்கு செய்த மாபாவிகளும் கூட, இந்தப் புனிதமான சேதுவைப் பார்த்த மாத்திரத்தில், பாவம் நீங்கப் பெற்றவர்கள் ஆவார்கள்'. இவ்வாறு சொல்லிவிட்டு, சேதுவின் உயர்வை மேலும் புகழ்ந்து பேசுகிறார் ராமர்.

இப்படி அவர் கூறிய பிறகு, அடுத்த பாடலாக ஒரு சில பதிப்புகளில் வருவது
– இடைச்செருகலான – மரக்கலத்திற்கு வழிவிடுவதற்காக ராமரே அந்தப் பாலத்தைப் பிளந்தார் என்பது. "மிகக் கொடிய பாவத்தை போக்கவல்லது' என்று கூறிவிட்டு, ராமரே அதை உடைப்பாரா? யார் பாவமும் நீங்கக்கூடாது என்ற கொடிய எண்ணம் படைத்தவரா அவர்? அதுமட்டுமல்ல. அந்தப் பாடல், வெவ்வேறு விதமாக, (வெவ்வேறு வார்த்தைகளுடன்) ஒவ்வொரு புத்தகத்தில் காணப்படுகிறது.
இக்காரணங்களினால், அந்த இடைச்செருகல். கம்பராமாயணத்தில் இல்லாத பாடல் என்பது தெளிவு.

இந்த என் கருத்தை ஜெயா டி.வி.யில் சொன்னேன். ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் (ஹிந்தி) ஆகிய டி.வி. சேனல்களுக்கும் பேட்டி அளித்தேன்; பத்திரிகைகளுக்கும் கூறினேன். அதன் பிறகு, நான் தவறான கருத்துக் கூறியதாகச் சிலர் எழுதினார்கள்; அவர்கள் என் கருத்தை முழுமையாகப் பார்க்காதவர்கள்.

பழைய பதிவுகள்

=>ராமர் பாலத்தை ராமரே சிதறடித்துவிட்டார் !
=>ராமர் பாலத்தை ராமரே இடித்தார் என்று கூறுவதா - ஜெ கண்டனம்
=>அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு....
=>சோமபானம் சோ பாணம் - துக்ளக் தலையங்கம்


2 Comments:

enRenRum-anbudan.BALA said...

இ.வ,
உங்க தலைப்பு misleading ஆக உள்ளது. இது நேர்மையற்ற செயல், இதனால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் :)
எ.அ.பாலா

Senthilvel said...

Where this idio so went when BJP government started the project.