பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 29, 2008

அதிமுகவிலிருந்து எஸ்.வி.சேகர் நீக்கம் எப்போது ?

படம்

செய்தி கீழே....

திருமண விழா ஒன்றில் முதலமைச்சர் கருணாநிதியுடன், அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி. சேகர் கலந்து கொண்டதை அடுத்து அவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, நடிகர் நெப்போலியனை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர் நடிகர் எஸ்.வி. சேகர்.
தொகுதியில் நடக்கும் அதிமுக நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்காததால் எஸ்.வி. சேகர் கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு கூட்டத்திற்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. கட்சியில் தான் ஓரங்கட்டப்பட்டதை உணர்ந்து எஸ்.வி. சேகர் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா முடிவு செய்து பிப்ரவரி மாதம் 13ந் தேதி தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.

இந்த விஷயத்தை அறிந்த கட்சி தலைமை உடனடியாக ஆட்களை அனுப்பி எஸ்.வி. சேகரை அங்கிருந்து பொதுக் குழுவுக்கு அழைத்து வர உத்தரவிட்டது. அதனையடுத்து பதவியை ராஜினாமா செய்யாமல் அவர், பொதுக் குழுவில் கலந்து கொண்டார்.

சட்டமன்றத்தில் நீண்ட காலமாக பேசுவதற்கு அவருக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அவருக்கு பேச ஒருநாள் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர், அரசை கடுமையாக விமர்சிக்காமல் நகைச்சுவையுடன் பேசினார். அதை கண்டு திமுகவினரே சிரித்தனர்.

எனினும் எஸ்.வி. சேகர் அதன் பின்பும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார். எஸ்.வி. சேகரின் மகள் திருமணத்திற்கும், அவரது மகன் அஸ்வின் சேகரின் திரைப்படம் தொடர்பான விழாவுக்கும் ஜெயலலிதாவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் எஸ்.வி. சேகரின் குடும்ப திருமணத்திற்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி வந்திருந்தார். கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமியுடன் எஸ்.வி. சேகர் இருந்த புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் இன்று காலை வெளியாகியது. குறிப்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் முதல் பக்கத்தில் அந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சரை சேகர் வரவேற்று அழைத்து சென்றார்.

இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து விலக்கப்படக்கூடும் என்ற செய்தி பரவியுள்ளது.
இது குறித்து எஸ்.வி. சேகரிடம் கேட்ட போது, எனது சகோதரரின் மனைவியான கிரிஜா வைத்தியநாதன் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியாவார். அவரது மகன் திருமணத்திற்கு முதலமைச்சரை அவர் அழைத்திருந்தார். என் தந்தையின் மறைவுக்கு பிறகு எனது குடும்ப தலைவர் என்ற முறையில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நான் கவனித்து வந்தேன். திருமணத்திற்கு வந்தவர்களை கவுரவிப்பது நமது பொறுப்பு என்ற வகையில் நான், முதலமைச்சரை வரவேற்றேன் என்று கூறினார்.

அதிமுகவில் சேர்வதற்கு எனக்கு தூண்டுகோளாக இருந்தவர் ஜெயலலிதா தான். அவர் இடும் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்று கொள்வேன் என்றும் எஸ்.வி. சேகர் கூறினார்.

3 Comments:

Tech Shankar said...செம்ம ஹாட் நியூஸ் மச்சி. சுடச்சுட தருகிறீர்கள்..

IdlyVadai said...

முந்தா நாள் நியூஸ், படம் கிடைக்கவில்லை அதனால் கொஞ்சம் லேட். :-)

Anonymous said...

சேகர் அவாள் ஆயிற்றே, எப்படி
கலைஞர் அந்த திருமணத்திற்கு
சென்றா?.
என் தலைமையில் இன்னொரு முறை அவர்கள் திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்று ஜெ. சொன்னால் எஸ்.வி.சேகர் என்ன செய்வார்?