பந்த் நடத்துவதற்கு எதிராக கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தண்டித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கோல்கத்தாவில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பேசிய புத்ததேவ்,ஸ்ட்ரைக் நடத்துவதை தாம் ஆதரிக்கவில்லை என்றும்,கதவடைப்பு நாட்டிற்கு உதவதாது என்றும் கூறியதோடு, துரதிருஷ்டவசமாக தாம் ஸ்டிரைக்கை ஆதரிக்கும் கட்சியை சேர்ந்தவராக இருப்பதால், ஸ்டிரைக்கிற்கு தமது கட்சி அழைப்பு விடுக்கும்போது தாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியதாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
புத்ததேவின் இந்த கருத்து அவர் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஸ்டிரைக் என்பது வேலை செய்யும் பிரிவினரின் அடிப்படை உரிமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு மாறாக கருத்து தெரிவித்த புத்ததேவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில பொதுச் செயலாளர் பீமன் போஸ்க்கு அக்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதினர்.
மேலும் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் மாநில கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, புத்ததேவிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டபோது, அவர் தமது பேச்சுக்காக மன்னிப்பு கோரினார்.
இருப்பினும் புத்ததேவ் தெரிவித்த கருத்துக்காக அவரை தண்டிக்க முடிவு செய்த கட்சி மேலிடம், புத்ததேவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் ஸ்டிரைக் குறித்து புத்ததேவ் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும், ஸ்டிரைக் செய்வது வேலை செய்யும் பிரிவினரின் அடிப்படை உரிமை என்ற நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விதிப்படி, அக்கட்சியை சேர்ந்த ஒருவர் தெரிவித்த கருத்தில் பகிரங்கமாக திருத்தமோ அல்லது நீக்கமோ செய்து அறிவிப்பு வெளியிட்டால் அது, அக்கருத்தை தெரிவித்தவரை தண்டிப்பதாகும் என பொலிட் பீரோ உறுப்பினர் ஷியாமல் சக்கரபர்த்தி கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, August 29, 2008
கம்யூனிஸ்டின் கேவலமான கொள்கை
Posted by IdlyVadai at 8/29/2008 07:54:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
வேலை நிறுத்தம் என்பது கேவலமான கொள்கை என இட்லி வடை மட்டும் கூறினால் போதாது.
Commies are in fact MUMMIES in the sense that they are trying to resurrect a DEAD PRICNIPLE CALLED COMMUNISM.
So, when their very foundation is dead, whatever they do will also have the MUMMY EFFECT - DESTRUCTION, in this case, to our country's economy & reputation.
No RIP for Communism & Commies.
அப்படீனா ஒத்துழையாமை இயக்கம்னா என்னது? கொஞ்சம் யாரவது விளக்குங்களேன்..!
(*) ஒரு நாள் வேலை நிறுத்திதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது...
(*) மக்கள் அடிப்படைத் தேவைகள் கிடைக்க மறுக்கப் படுகின்றன..
(*) தொழில் சாலைகளில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைக்கு 5 மணி நேர வேலை செய்து உங்கள் எதிர்ப்பை காட்டலாம்...
"/வேலை நிறுத்தம் என்பது கேவலமான கொள்கை என இட்லி வடை மட்டும் கூறினால் போதாது./"
அப்ப யார் சொல்லனும்னு நினைகிறீங்க ? இதுக்கும் யாரவது ஒரு கம்யூனிஸ்ட்தான் சர்டிபிகேட் கொடுக்கனும்மா? புத்தேவ் பட்டாச்சார்யா தான் அப்ருவர் ஆகிவிட்டாரே. வேலை நிறுத்தம் தப்பு ! தப்பு !! தலையாலே அடிச்சிகிட்டரே. இதுக்கும் மேலயும் இன்னமுமா கம்யூனிச பித்து பிடிச்சு திரியிறீங்க.
Post a Comment