பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 19, 2008

தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை

இந்த செய்தி, "தியேட்டர் அதிபர்கள் மிரட்டல்" என்ற தலைப்புடன் தினமலரில் வந்தது. ஆனால் விடியோவை பார்த்தால் தியேட்டர் அதிபர்கள் மனிதாபிமான(?) அடிப்படையில் ரஜினியிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

குசேலன் மிக பெரிய ஃபிளாப் படம், பாபா 50% தான் நஷ்டம், ஆனால் குசேலன் 90% நஷ்டம் என்கிறார்கள் விடியோவில்...

குசேலன் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய ரஜினிகாந்த் உதவ வேண்டும்' என, தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்த "குசேலன்' படம் கடந்த முதல் தேதி வெளியானது. எதிர்பார்த்த கூட்டம் வராததால் தியேட்டர் அதிபர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

மதுரை ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்டஈடு கேட்டு கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளருக்கு நெருக்கடி ஏற்படுத்தினர். இப்பிரச்னை ஓய்வதற்குள் "குசேலன்' படத்தை வெளியிட்டுள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் நலவாழ்வு சங்கத்தினரும் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இச்சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு: குசேலன் படத்தை வாங்க தியேட்டர்காரர்கள் ஒப்பந்தம் செய்தபோது, ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என நினைக்க வேண்டாம். படம் முழுவதும் வருவது போல காட்சிகள் இருக்கும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் தான் அதிக தொகை கொடுத்து படத்தை வாங்கி திரையிட்டோம். ஆனாலும், ரஜினி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. படத்தின் வசூல் சுமாருக்கும் குறைவாகவே போனதால், திரையிட்ட அனைத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


நஷ்டத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடமிருந்து சதவீத அடிப்படையில் கணக்கு வைத்து, மினிமம் கேரன்டி தொகையை டிபாசிட்டாக வைத்துக்கொண்டு பாக்கி தொகையை தியேட்டர்காரர்களுக்கு தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்களும் கொடுக்க வேண்டும். இப்பிரச்னையில் மனிதாபிமானத்தோடு ரஜினிகாந்த் தலையிட்டு பாதிக்கப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்க வழி செய்ய வேண்டும்.


இப்பிரச்னை சுமுகமாக முடியும் வரை "குசேலன்' படத்தை தயாரித்துள்ள கவிதாலயா நிறுவனத்துக்கும், செவன் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கும் தொழில் முறையாக எவ்வித ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து பேசி முடிவு செய்ய, 23ம் தேதி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வீடியோ

( செய்தி: தினமலர், விடியோ http://www.kollywoodtoday.com/ )

16 Comments:

கலைக்கோவன் said...

இ.வ....
நீரெல்லாம் குசேலன் பத்தி ....
இத்தனை blog எழுதி என்ன ஆச்சி...
படம் ஓடலியே...

நமக்கு தான் ரஜினி வருத்தம் தெரிவிச்சது ....
பல மாதிரி சிந்திக்க தெரியும்...
ஆனா....
Mr. பொதுசனம் எப்படி எடுத்துக்கொண்டார்களோ....

SAMUTHRA said...

குசேலன் படம் குறித்து தியேட்டர் அதிபர்கள் கொடுத்த பேட்டி முழு விவரத்தையும் எமது வலைப்பூவில் வெளியிட்டுள்‌ளேன். நேரமிருந்தால் நிருபர் பிளாக்கிற்கு வந்து பேட்டியை படித்து செல்லுங்கள் நண்பர்களே..! குசேலன் படத்தால் ஏற்பட்டள்ள நஷ்‌ட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Anonymous said...

ரஜினிக்கு தண்ணிதான் கண்டம் இல்லையா மதன்?

அவர் தண்ணியடிக்கிறதை பற்றி சொல்றியா?

அதில்லை, முன்னாடி காவிரி பிரச்சனையில அவர் தலை உருண்டது. இப்போ, ஓகேனக்கல் பிரச்சனை.
எல்லாத்துக்கும் ரஜினிதானே காரணம்.

அப்படியா சொல்ற?

இதிலென்ன சந்தேகம். "ரஜினி கொள்கையளவில் ஸ்டெடியான ஆள் கிடையாது." எந்தப் பிரச்சனையானாலும் கடைசிவரை போய் பார்க்கிற பொறுமையும் கிடையாது. இது இரண்டும் அரசியலுக்கு தேவை.

ரொம்ப சரி.

இந்த இரண்டும் இல்லாமலே, ரசிகர்கள் ஆதரவை வச்சு, எப்போ எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்னு சும்மா வசனம் பேசி ரசிகர்களை உசுப்பேத்திகிட்டிருந்தார். ரஜினியின் மாஸை பயன்படுத்த நினைச்ச அரசியல்வாதிகளும் அதுக்கு ஜால்ரா போட்டாங்க.

நீ என்னதான் சொல்ல வர்ற?

அரசியல் பில்டப் பேசுற ரஜினியால பாபா படப்பெட்டியை கடத்துன பா.ம.க.வை ஏதாவது பண்ண முடிஞ்சதா? குசேலனை வெளியிட மாட்டோம்னு சொன்ன கன்னடர்களுக்கு எதிரா விரலைதான் அசைக்க முடிஞ்சதா? இரண்டு இடத்துலயும் சமாதானம்ங்கிற பெயர்ல சரணடர்தானே அடைய முடிஞ்சது.

அதனால....?

ரஜினி அரசியல் பில்டப்பை சினிமாவுல உருவாக்காம இருக்கிறதுதான் அவரது சூப்பர்ஸ்டார் இமேஜ் உடைஞ்சு போகாம இருக்க ஒரேவழி.

Anonymous said...

a True rajni fan's letter

வீராதி வீரரும், தமிழினக்
காவலருமான திரு.ரஜினி அவர்கள்,
தன்னுடைய சிரம்
தாழ்ந்த மன்னிப்பை, அதாவது
வருத்தத்தை கன்னடத் திரை
உலகிற்கும், கன்னட
மொழி வெறியர்களுக்கும்
சமர்ப்பணம் செய்து ஒரு
வரலாற்றுச் சிறப்பு மிக்க
தனது கடிதத்தை கன்னடத்தில்
தனது கைப்படவே எழுதி
தமிழர்களின் உணர்வுகளை
எல்லாம் தனது திரைப்பட
வியாபாரத்திற்காக காற்றில்
வீசி இருக்கிறார்.

வழக்கம் போலவே நமது தமிழ்க்
கண்மணிகள், அவரது புதிய
திரைப்படத்திற்கு
பால் ஊற்றுவதிலும், காவடி
எடுப்பதிலும் மூழ்கி தங்கள்
அபிமான நாயகனின்
திரைப்படத்தை வரவேற்கத் திரை
அரங்க வாயில்களில் வீரியமற்று
நின்று
கொண்டிருப்பது கொஞ்சம் வேதனை
அளித்தாலும், நமக்கான
எதிர்ப்பை, உயிர்ப்பான
தமிழுனரவைக் காட்ட
வேண்டுமே......

நண்பர் ரஜினிகாந்த அவர்களே,
நீங்கள் ஒரு இந்தியராக
இருப்பது மட்டுமே
உங்களுக்கு நல்லது, தன்
உணர்வின்றி, அவர் சொல்கிறார்,
இவர் சொல்கிறார்,
வருவாரா மாட்டாரா என்கிற
வெறியூட்டல்களில் ஒரு நிஜ
உலகக் கதாநாயகன் போல
வெளியில் வந்து வீர வசனம்
பேசுகிறீர்கள், அதே நாளில்
மாலையில் கன்னட
தொலைக் காட்சிகளுக்கு
மன்னிப்புக் கோரி பேட்டி
அளிக்கிறீர்கள்? உங்கள்
வெளி உலக நடிப்பும் நன்றாகவே
வேலை செய்து எங்கள்
இளைஞர்களின் பணத்தை
நீங்கள் கொள்ளை
அடிப்பதற்குப் பயன்படுகிறது.
நீங்கள் அடிக்கும்
கொள்ளையைக் கேட்பதற்கு
நாங்கள் வரவில்லை, நீங்கள்
அடிக்கும்
கொள்ளைகளுக்கு, எதற்காக
மொழிச் சாயம் பூசுகிறீர்கள்,
நான் ஒரு கலைஞன்,
எல்லா மொழியினர்க்கும்
பொதுவானவன் என்று ஓரிரு
வார்த்தைகளில்
முடித்துக்கொள்ளுங்கள்.
தமிழுக்கும் நன்மை, உங்கள்
தாய் மொழி
கன்னடத்திற்கும் நன்மை
பல நேரங்களில், நீங்கள் வீர
வசனம் பேசுவதை நாங்கள்
உன்னிப்பாக கவனித்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.
அம்மாவின் ஆட்சி பற்றி
திருவாய் மலர்ந்து
அருளிநீர்கள், பின்னர் அதே
அம்மாவின் முந்தானை பற்றிக்
கொண்டு ஒரு
விழாவில் நிங்கள் பேசியபோது,
நீங்கள் ஒரு ஆண்மகன் தானா
என்கிற சந்தேகம்
வந்தது எங்களுக்கு????

ஐயாவைப் பற்றி அவதூறு
சொன்னிர்கள், பின்னர் அவரிடம்
சரணடைந்து உங்கள்
கொள்ளைக்கான அதிகாரப் பூர்வ
ஆணைகளைப் பெற்றுக்
கொண்டீர்கள்.


திருமண மண்டபம் தொடர்பான
சர்ச்சை வந்தபோது, கடைசி வரை
உங்கள் சொத்தைப்
பாதுகாக்க முயன்று தோற்று
விடுவோம் என்கிற நெருக்கடி
வந்த போது, நல்ல
பிள்ளையாய் நாட்டுக்கு எழுதி
வைத்து நல்ல பெயர் தேடிக்
கொண்டீர்கள், அதே
போல நீங்கள் வாழும் போயஸ்
தோட்டத்து வீட்டை எழுதி
வையுங்களேன்
பார்க்கலாம், நானும் கூட
உங்களுக்கு பால் ஊற்றிக்
கொண்டாடி மகிழ்கிறேன்.

உங்களைத் தமிழனாக இருக்க
வேண்டும் என்று யாரும்
கட்டாயம் செய்யவில்லை,
நீங்கள் பொருள் தேடுவதற்குத்
தமிழனாக இருக்க வேண்டும்,
பின்னர் மாலை
நேரக் கன்னடராக உங்கள்
முதலீடுகளை கர்நாடகாவில்
முடக்க வேண்டும்...நல்ல
திட்டம் ஐயா.
இதற்குப் பதிலாக நீங்கள்
பிச்சை எடுத்துப்
பிழைக்கலாம்.....அல்லது பழைய
நடத்துனர் வேலையை பார்க்க
ீண்டும் செல்லலாம்.

நான் உங்களைக் கேட்பதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான், பணம் என்றால்
நீங்கள்
தமிழராகவும், உணர்வென்றால்
நீங்கள் கன்னடராகவும் வாழும்
ஒரு ஈனப்
பிழைப்பை விட்டு விட்டுக்
கொஞ்சம் தன்மானம் சார்ந்த
மனிதனாக வாழ முயற்சி
செய்யுங்கள்.....

நாளொரு மன்னிப்பும் பொழுதொரு
வேடமும் புனைந்து நீங்கள்
கொள்ளை அடித்த
பொருள் போதும், உங்கள்
வாழ்க்கையின் பொருளைத் தேடிக்
கொஞ்சம் பயணம்
செய்து பாருங்கள்..

மற்ற கலைஞர்களைப் போல நீங்கள்
ஒரு இந்தியராகவே இருந்து
விடுங்கள் ரஜினி
அவர்களே, உங்களுக்கு தமிழ்
வேடம் ஒரு போதும் பொருந்தாது,
குறைந்த பட்சம்
ஒரு நல்ல கன்னடராகவாவது
இருக்க முயலுங்கள, இரு மாநில
மக்களை
முட்டாளாக்கும் உங்கள்
நடிப்பை கொஞ்சம் ஓரம் கட்டி
வையுங்கள் ரஜினி....

உங்களை ஒரு நடிகனாக மட்டும்
பார்க்க விரும்பும், உங்கள்
திரை ரசிகனாக

கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து.

Anonymous said...

பஞ்சர் ஆன பஞ்ச் டயலாக்ஸ்:

நான் எப்போ அடிப்பேன் எதுக்கு அடிப்பேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் அடிக்க வேண்டிய நேரத்துல கரெக்டா பல்ட்டி அடிப்பேன்.

நான் ஒரு தடவ பல்ட்டி அடிச்சா நூறு தடவ பல்ட்டி அடிச்ச மாதிரி.

நான் லேட்டா அடிச்சாலும் லேட்டஸ்டா அடிப்பேன்.

அதிகமா பல்ட்டி அடிச்ச ஆம்பிளையும் அதிகமா தண்ணி அடிச்ச பொம்பளையும் உருப்பட்டதா சரித்திரம் இல்ல.

பன்னிதான் கூட்டமா பல்ட்டி அடிக்கும் சிங்கம் தனியாவே பல்ட்டி அடிக்கும்.

அந்த ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் பல்ட்டி அடிக்கிறான்.

கேட்டதுமே உதறுதில்ல.

Anonymous said...

'ரோபோ'வை பாதித்த 'குசேலன்' பிரச்சனைகள்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டும் பழமொழிக்கு 'ரோபோ' மிகவும் பொருத்தமாகியுள்ளது.

ரஜினி பேசிய வசனத்தால் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட கசப்புணர்வு, நஷ்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களிடமிருந்து கிளம்பியுள்ள எதிர்பபு என ரஜினியின் உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை குசேலன் பிரச்சனைகள் குடைந்து கொண்டிருக்கிறது.

ரோபோ படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற ரஜினி இதனால் கடந்த வாரம் சென்னைக்கு திரும்பினார். ரசிகர்களின் விருப்பப்படி குசேலனில் அவர்களை பாதித்த வசன காட்சிகளை வெட்டி எறியச்சொல்லி உத்தரவிட்டார். அதன்படி அந்தக் காட்சிகள் வெட்டப்பட்டது. நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கும் தனது சம்பளத்திலிருந்து சரிபாதியை (ரூ.10 கோடி) கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் தியேட்டர் அதிபர்களும் எங்களுக்கு 40கோடி நஷ்டம் ஏற்பட்டதாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவும் தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படியாக ஏகப்பட்ட இடியாப்ப சிக்கலில் மாட்டியுள்ளது 'குசேலன்'.

இதனால் ரஜினி மீண்டும் அமெரிக்கா செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கதாநாயகனே ஸ்பாட்டில் இல்லாதபோது இயக்குனருக்கு என்ன வேலை இருக்கிறது எனவேதான் அமெரிக்காவிலிருந்து ஷங்கரும் கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பிவிட்டார். இதனால் 'ரோபோ' படப்பிடிப்பு ஆமை வேகத்திற்கு உள்ளாகியுள்ளது.

'குசேலன்' பிரச்சனையெல்லாம் முடிக்க எப்படியும் ஒரு வாரத்திற்கு மேலாகிவிடும் என்பதால் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்திலேயே ஷங்கரும், ரஜினியும் அமெரிக்கா செல்வார்கள் என கூறப்படுகிறது.

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/19082008-5.shtml

Anonymous said...

ஐயா ! வலையுலக மக்களே !

"அன்பான" அனானிகளே !

ரஜினி பாவம். அவரை விட்டு விடுங்கள்.

மேலும் மேலும் அவரை நோகடிக்காதீர்கள்.

அன்பு

Anonymous said...

மதுரை ராம்நாடு ஏரியாவில் ரஜினியின் கடைசி 4 படங்களில் 3 படங்கள் விநியொகஸ்தர் கையை கடித்தன. (பாபா,சிவாஜி,குசேலன்). படத்தயாரிப்பு செலவை விட ரஜினியின் சம்பளம் பல மடங்கு அதிகம். நியாயமான விலையில் இப்படங்கள் விற்கப்பட்டிருந்தால் எல்லோருக்கும் லாபமே.

பாபா தயாரிப்பு செலவு 5.5 கோடி. விற்கப்பட்டது 40 கோடி

குசேலன் 6 கோடி --- 60 கோடி

யார் பணத்தை எடுத்துக்கொண்டார்களோ அவர்கள்தானே திருப்பித்தரவேண்டும்


மும்பை எக்ஸ்பிரஸ் சரியாக ஒடவில்லை. இருந்தாலும் யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அதை விற்றவிலை அப்படி.

படத்தில் அதிகம் செலவழித்திருந்தால் யாரும் தயாரிப்பாளரை நெருக்க மாட்டார்கள்

Anonymous said...

வியாபாரம்னா நஷ்டம் வர தான் செய்யும். மூணு படம் நல்லா ஒடலேனா, ஏன்யா அவர் படாத போட்டி போட்டு வாங்கறாங்க.

Anonymous said...

unnai mathiri uthavakkarai blog-kkuku vilamparam O.C devaipaduvathal nattil evvalvo prachinaigal irukkumpothu unnakku ithu devaiya?

Anonymous said...

This has nothing to do with the post. Wanted to ask you what is the meaning of Karunanidhi's kavithai in today's daily thanthi? Please publish the same with reason.

Anonymous said...

This has nothing to do with the post. Wanted to ask you what is the meaning of Karunanidhi's kavithai in today's daily thanthi? Please publish the same with reason.

R.Gopi said...

எங்கள்
இளைஞர்களின் பணத்தை
நீங்கள் கொள்ளை
அடிப்பதற்குப் பயன்படுகிறது.

This is from a anonymous person with a heading true rajini fan from Bangalore.

Sir, Rajni enna unga veettula vandhu kolla adichaaraa. noooooo. You have paid for his film as you pay for other actors too.

By degrading Rajni, you proved that you are other actors' fan.

Anonymous said...

ரஜினியின் வீழ்ச்சிக்கும், திரையுலகை விட்டு அவர் விலகவும் குசேலனின் தோல்வி உதவும் என்றால் அதுவும்
நல்லதற்கே.ரஜினி ரசிகர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.

Anonymous said...

இந்த தோல்வியைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை..ஏனெனில் போட்ட பணம் குறைவு..அடுத்த ரஜினி என்ற கோமாளி சங்கர் என்ற திருடனுடன் வரவிருக்கும் அந்த படம் இதேபோல் தோல்வி அடைந்தால்தான் அவர்களுக்கு புத்திவரும் நமக்கும்....

Anonymous said...

ரஜினியை குத்தம் சொல்லி பலன் இல்லை. ரஜினிக்கு கோயில் கட்டும், ரஜினியின் படத்திற்கு பால் ஊத்தும் மடப்பசங்க தமிழ் நாட்டில் இருக்கும் மட்டும் ரஜினி மாதிரி இன்னும் பல ரஜினிகள் வரத்தான் செய்வார்கள்.

கேட்ட தமிழன் அதை சாதிச்சுப்புட்டான் இத கீசிப்புட்டான் என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஆனா தமிழன் சாத்திச்சதெல்லா தமிழ் நாட்டுக்கு வந்த குஸ்புக்கு கோயில் கட்டினதும், ரஜினிக்கு பால ஊத்துனதும் தான். இத மாதிரி ஒரு பைத்தியக்கார கூட்டம் உலகத்துல எங்கயாவது இருக்குதா???