பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 07, 2008

அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா திடீர் நீக்கம்

நில ஆக்கிரமிப்பு, ஆள் கடத்தல் புகாரை அடுத்து கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரையும், அவரது குடும்பத்தினரையும் கடத்தியதுடன், அவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக தமிழக கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.


இது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அவரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அவர் வகித்து வந்த கைத்தறி மற்றும் துணி நூல்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என கவர்னர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

``என்னை ராஜினாமா செய்யச்சொல்ல முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லை''
- ராஜா சில நாட்களுக்கு முன்பு சொன்னது

இதற்கு முன் அமைச்சர் பூங்கோதை

1 Comment:

Anonymous said...

neethikku kidaitha vetri.