பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 06, 2008

ஐராவதம் மகாதேவன் - வரலாறு.காம் ஐந்து ஆண்டுகள்

வரலாறு.காம் சார்பாக லலிதா ராம் அனுப்பிய அறிவிப்பு:

Any fool can make history. It takes a Genius to Write it. என்றார் Oscar Wilde.
அவ்வாக்கை மெய்யாக்கும் வண்ணம், தன் பெயரை கலயத்தில் கிறுக்கிய நக்கன், தான் தமிழ் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கப் பொகிறோம் என்று அறிந்திருக்க நியாயமில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பின் தோன்றிய ஐராவதம் மகாதேவன் என்ற கல்வெட்டாய்வாளரின் ஐம்பது வருட உழைப்பும் முனைப்பும், நக்கனின் கிறுக்கலுக்கும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழிகத்தில் பரவி இருந்த எழுத்தறிவிற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, நம் முன்னோரின் பெருமையை உலகமே உணர வகை செய்திருக்கிறது.....

எந்த ஒரு துறை ஆயினும், அந்தத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாமக்கள் என்று சிலர் இருப்பர். அந்த வகையில், வரலாற்றுத் துறையில் தபொன் விழா நாயகராய் விளங்கும் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரை (felicitation volume) வெளிக் கொணர்வதில் varalaaru.com பெருமகிழ்ச்சி அடைகிறது. இம் மலர், வரலாற்றார்வலர்களுக்கு விருந்தாய் அமையும் என்பது திண்ணம்.

தமிழகமே ஐராவதம் மகாதேவனுக்குக் நன்றிக் கடன்பட்டிருப்பினும், இம்மலர் அவரது புகழ் பாடுவதற்காக மலரவில்லை. வரலாற்றில் எந்தப் பின்புலமும் இல்லாதவரால் ஒரு தரமான ஆய்வைச் செய்து முடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம் பலருக்கு இருக்கும். எந்தவொரு பின்புலமும் இல்லாமல், வேதியியலையும் சட்டத்தையும் கற்றுத் தேர்ந்து, வரலாற்றில் எந்தவொரு பட்டமும் பெறாமலேயே, உலகம் போற்றும் ஓர் ஆய்வாளராக உருவெடுத்திருக்கும் ஒரு மனிதரை உதாரணம் காட்டி, அத்தகைய தயக்கத்தைக் களைவதுதான் இந்நூலின் முக்கிய நோக்கம். தணியாத ஆர்வமும் சீரிய முயற்சியும் உடைய எவரும் தாம் எடுத்துக்கொண்ட துறையில் முன்னணிக்கு வரமுடியும் என்பதற்கு ஐராவதம் மகாதேவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.


மலரில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளின் முன்னோட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

http://varalaaru.com/Default.asp?articleid=727
http://varalaaru.com/Default.asp?articleid=728
http://varalaaru.com/Default.asp?articleid=729

இம் மலரின் வெளியிடும் வேளையில், varalaaru.com - இன் ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இவ்விரு நிகழ்வுகளையும் வரலாற்றார்வலர்களருடன் இணைந்து, வரும் 16-ஆம் தேதி, சனிக்கிழமை, சென்னைப் பல்கலைக்கழக பவழ விழக் கலையரங்கில் கொண்டாட முடியுமெனில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம். விழாவுக்கு வர விரும்பவர்கள் விவரங்களை அழைப்பிதழில் காணலாம்.


அழைப்பிதழ்

1 Comment:

Anonymous said...

Aiyya idlyvadai, nan tamilil blog ezhutha virumbugiren, eppadi ezhutha vendum endru konjam coora iyaluma?
by
amuthapriyan@gmail.com