பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 20, 2008

மணிரத்னம் படத்தில் ராமன்-ராவணனாக விக்ரம்

மணிரத்னம் படத்தில் ராமன்-ராவணனாக விக்ரம். அடுத்த சர்ச்சைக்கு ரெடியா ?

மணிரத்னம் இயக்கும் புதிய தமிழ்-இந்தி இரு மொழிப் படத்தில் ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் விக்ரம்.

ரூ.120 கோடி பட்ஜெட்டில் மணிரத்னம் பிரமாண்டமாக உருவாக்கும் இந்திப் படம் ராவண்.

ராமாயணக் கதையின் நவீன வடிவமாக மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்கள்.

இதே படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரம்-ஐஸ்வர்யா ஜோடி போடுகிறார்கள். அபிஷேக் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விக்ரம் என்ன சொல்லுகிறார் ?
மணிரத்னம் சாரின் இந்திப் படத்திலும் நான் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் அந்த வேடம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. ஆனாலும் ஒரு சின்ன ஏக்கம். முதல்முதலாக நான் நடிக்கும் இந்திப் படத்தில் ஹீரோவாக நடிக்க முடியவில்லையே என்பதுதான். ஆனால் மணிரத்னம் போன்ற ஜாம்பவான் படத்தில் எந்த வேடமும் தரமானமாதாகத்தான் இருக்கும்.

அதன் தமிழ் பதிப்பில் நான்தான் ஹீரோ. ஐஸ்வர்யா ராய்தான் நாயகி. அபிஷேக், ஐஸ்வர்யா இருவரையும் எனக்கு நன்றாக தெரியும். அவர்களுடன் சேர்ந்து நடிப்பது புது அனுபவம். குறிப்பாக உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது எனக்குக் கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஷூட்டிங் துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..

ராமர் - ராவணன்
ராமாயணத்தை அடிப் படையாக கொண்டு உருவா கும் இப்படத்தின் இந்தி பதிப்பில் அபிஷேக்பச்சன் ராமனாகவும், ஜஸ்வர்யா ராய் சீதையாகவும், விக்ரம் ராவணனாகவும் நடிக்கின் றனர். இவர்கள் தவிர கோவிந்தா மற்றும் பலர் நடிக்க உள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

அதே நேரத்தில் இப்படத் தின் தமிழ் பதிப்பில் விக்ரம் ராமனாகவும், ஜஸ்வர்யா ராய் சீதையாகவும் நடிக்கின்ற னர். வில்லனாக பிருதிவி ராஜ் நடிக்கிறார். பிருதிவி ராஜ் ஜோடியாக பிரியாமணி நடிப்பார் என கூறப்படு கிறது.

ஒரே கதை கொண்ட படத்தில் விக்ரம் ராமனாகவும், ராவணனாகவும் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக இந்திக்கும் தமிழுக்கும் மணிரத்னம் சேது பாலமாய் இருக்கிறார்

6 Comments:

Anonymous said...

"நவரசநாயகன்" கார்த்திக் மணிரத்னம் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக எங்கோ படித்த நினைவு? அது இந்தப் படம் தானா?

கார்த்திக்.... யாரா.....? அதாங்க நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் மற்றும் 35+ "பெண்களின் கனவுக் கண்ணண்". அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லையா?

இட்லி வடை நீங்களும் ஒரு காலத்தில் அவரோட ரசிகர் என்று உங்க நண்பர்(!) உண்மையா?

Anonymous said...

சேது, காசி & பிதாமகன் தவிர்த்து "வெறும் குப்பையாகத்தான்" சீயான் நடித்து வருகிறார்.

மணியின் இந்த "ராவண்" அவருக்கு ஒரு 'கடப்பாக் கல்", சாரி "மைல் கல்"ஆக இருக்கட்டும்.

செய்திகளை முந்தித் தருவது இ.வ.

- ஜெயந்தி

Hariharan # 03985177737685368452 said...

//ஆக இந்திக்கும் தமிழுக்கும் மணிரத்னம் சேது பாலமாய் இருக்கிறார்//

அட நீங்கவேற மணிரத்னம்=சேதுபாலம் கெளப்பிவிடாதீங்க!

ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் அட்வான்ஸ் கமிஷன் கட்டிங்னு வாங்கிப் போட்டு இருக்கும் டி.ஆர்.பாலு சேதுபாலத்தை இடிக்க கோர்டு, எதிர்ப்புன்னு வெறியா இருக்காரு.

மணிரத்னம்தான் சேதுபாலம் என்று அவரைக்குடாய்ஞ்சுரப்போறாய்ங்க கட்டிங் கமிஷன் கழக கண்மணிகள்!

Anonymous said...

மணிரத்னம் ராமாயணத்தை படமாக
எடுக்கிறாரா, கடவுளே ராமயணத்தை அவரிடமிருந்து காப்பாற்று :).

Anonymous said...

roba vukku potiyaa.....;)

Anonymous said...

roba vukku potiyaa.....;)