சிரஞ்சீவி பற்றிய செய்தி தொகுப்பு....
* தினந்தோறும் ஆயிரக் கணக்கான பெண்கள் அவ ரது கட்சியில் சேர்ந்து வருகி றார்கள். நேற்று மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினராக சேர்ந்தார்கள். சிரஞ்சீவி கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று பெண்களை உறுப் பினராகச் சேர்த்து வருகிறார்கள். தெலுங்கு தேசம், காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கள் கூட சிரஞ்சீவி கட் சிக்கு தாவி வருகிறார்கள்.
( இவர் ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கு 33% கொடுக்கணும் போல )
* பாஜக தலைவர் அத்வானி, தொலைபேசி மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இருவரும் தொலை நேற்று தொலைபேசியில் பேசினர். அப்போது கூட்டணி அமைப்பது குறித்தும் அத்வானி பேசியதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
( சிரஞ்சீவி ஜாக்கிரதையாக இருப்பது நல்லது )
* `தனது கட்சி அனுபவம் பெற்ற மூத்தவர்களையும், இளைஞர்களையும் சரிவிகிதத்தில் கொண்டதாக இருக்கும்' - சிரஞ்சீவி
( முதல்வன் அர்ஜுன் மாதிரி சொல்றீங்க )
* காங்கிரஸ்-தெலுங்கு தேசம், கம்யூனிஸ்டு கட்சி களை சேர்ந்த தொண்டர் களும் திரண்டு வந்து கட்சியில் உறுப்பினராக சேர விருப்பம் தெரிவித்தனர். விரைவில் அவர்கள் சிரஞ்சீவி கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்படுகிறார்கள்.
( அரசியலவாதிகளுக்கு எந்த கட்சியும் சிரஞ்சீவி கிடையாது )
* ``சிரஞ்சீவியின் தலைமையில் புதிய கட்சி வந்து இருக்கிறது. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் நாங்கள் ஏற்கனவே எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டோம். அவர்களால் புதிதாக என்ன கொடுக்க முடியும்'' - ஆந்திரா மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி
சோனியா காந்தியிடம் இது மாதிரி பேசுவதற்கு பர்மிஷன் வாங்கியாச்சா ?
* ``சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்குவதற்கு உரிமை இருக்கிறது. அதற்காக நாங்கள் பயப்படவில்லை. காங்கிரஸ் கட்சி 123 ஆண்டு பழமையான கட்சி. இன்னும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது'' - காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு குழுத் தலைவர் வீரப்ப மொய்லி
பயம் கண்ணில் தெரியும் என்பார்கள், இவருக்கு பேச்சில் தெரிகிறது
``சமீபத்தில் நான் நடத்தி முடித்திருக்கிற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பொது மக்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த தேர்தலில் எங்கள் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்'' - தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு
அட்சி என்று பேப்பரில் எழுதி அதை பிடிக்க வேண்டியது தான்
* ``அவரது அரசியல் பிரவேசம் இந்த மாநிலத்தின் தற்போதைய நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும்'' - ஆந்திரா மாநில பா.ஜனதா தலைவர்
கூட்டணி வேண்டும் என்று நேரா சொல்ல வேண்டியது தானே
``அவர் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது கட்சியுடன் கூட்டணி வைப்போமா என்பதை தெரிவிக்க முடியும்'' - ஆந்திரா மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.நாராயணன்
கூட்டணி வேண்டுமா என்று சிரஞ்சீவி தான் சார் சொல்லணும்
"தெலுங்கானா தனி மாநிலத்தை சிரஞ்சீவி ஆதரித்தால் அவரது கட்சியுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாக தல்லி தெலுங்கானா கட்சி தலைவியும், நடிகையுமான விஜயசாந்தி கூறியுள்ளார்.
நடிகை ரோஜா எதுவுமே சொல்லாதது வருத்தமாக இருக்கிறது
* சிரஞ்சீவி கட்சியின் மகளிர் அணித் தலைவி பொறுப்பு நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினிக்கு வழங்கப்படவுள்ளது. இப்பதவியை ஏற்க அவர் தனது சம்மதத்தை வழங்கி விட்டதாகவும் தெரிகிறது.
ஐயோ, இது என்ன கூத்து
* 'சொன்னால் முறைக் கக் கூடாது. 'தலைவர் அரசியலுக்கு வரணும்' என்று ரஜினியின் ரசிகர்களில் ஒரு அணி யினர் மறுபடி குரல் கொடுக்க ஆரம்பித் திருக்கிறார்கள். எல்லாம், ஆந்திர சிரஞ்சீவியைக் காட்டிதான்! 'இனியும் நீங்க வராட்டி, இதுவரை எல்லாம் வெறும் பேச்சு என்றாகிவிடும். அரசியலுக்கு வந்து உங்கள் பொதுவாழ்க்கை ஆர்வத்தை நிரூபியுங்கள்' என்று கேட்டு... 'உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம்' போன்ற ஆயத்தங்களுக்குத் தயாராகிறதாம் அந்த ரசிகர் கூட்டம்! 'நான் சினிமாவில் வசனம் பேசியதெல்லாம் இன்னொருத்தர் எழுதிக் கொடுத்த வசனம்' என்று 'குசேலனில்' சொல்லியிருந்த ரஜினி, இவர்களுக்கு என்ன பதில் சொல்வாரோ தெரியவில்லை.' - ஜூவி கழுகார்
கழுகாருக்கு வேற என்ன வேலை
படம்: ரஜினியுடன் சிரஞ்சீவி, இதை பார்த்திவிட்டு ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அந்த காலி இடத்தை விஜயகாந்த் பிடித்துவிட்டார் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, August 20, 2008
சிரஞ்சீவி ஆந்திராவின் விஜயகாந்த்.?
Posted by IdlyVadai at 8/20/2008 03:22:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
// ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அந்த காலி இடத்தை விஜயகாந்த் பிடித்துவிட்டார்//
என்ன சொல்ல வர்றீங்க இட்லிவடை?
அரசியலில் ரஜினி பிடிக்க நினைத்தது காலி இடத்தை என்றா?
இல்லை விஜய்காந்து தமிழக அரசியலில் பிடித்தது காலி இடத்தை என்றா??
எல்லாம் சரி! ரஜினியால் புடிக்க முடியாத தான் புடிச்ச அரசியல் காலி இடத்தை பட்டா போட்டாச்சா விருத்தாசலம் விஜய்காந்து??
ரஜினி அரசியலுக்கா ...
வாய்ப்பு ஒரு முறை தான் கதவை தட்டும்..
அது அவருக்கு 1996 -ல் வந்தது.
அதுக்கப்புறம் ...,
வீரப்பனை சம்ஹாரம் செய்வேன்னு பேசி ....
காவேரி உண்ணாவிரதம் இருந்து ...
கன்னட கடிதம் எழுதி.....
வருத்தம் தெரிவிச்சு ....
............
எல்லாம் போச்சு
இட்லி வடையாரே நீர் எப்போ கட்சி ஆரம்பிக்கபோரீர்? இல்ல நீர் கட்சி ஆரம்பிக்க போகும் விஷியம் தெரிஞ்சுதான் கலைஞர் அந்த "அவாள்" கவித எழுதினாரா?
rajini rasikarkalukku kaduppu.
rajini eppavum news la iruppar.arasiyalil illatium ,irukkar
//அவர் தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது கட்சியுடன் கூட்டணி வைப்போமா என்பதை தெரிவிக்க முடியும்'' - ஆந்திரா மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.நாராயணன்
கூட்டணி வேண்டுமா என்று சிரஞ்சீவி தான் சார் சொல்லணும் //
ஹா ஹா ஹா டாப்பு
//ரஜினியுடன் சிரஞ்சீவி, இதை பார்த்திவிட்டு ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அந்த காலி இடத்தை விஜயகாந்த் பிடித்துவிட்டார் :-)//
ரஜினிய நோண்டுலைனா உங்களுக்கு தூக்கம் வராது போல :-)
sivaji ganesan...bagyaraj...t.rajendar... intha listla rajiniya rpatharkku romba try pannuraa anbu rasiga peru makalluku ethhala nanri solllurathunetheriyaliyaeee
அப்படியானால் விஜயகாந்த் தமிழ்நாட்டின் சிரஞ்சீவியா ?.
தமிழ்நாட்டில் இருவரும் கூட்டணி வைத்துக் கொள்வார்களோ :)
* `தனது கட்சி அனுபவம் பெற்ற மூத்தவர்களையும், இளைஞர்களையும் சரிவிகிதத்தில் கொண்டதாக இருக்கும்' - சிரஞ்சீவி
( முதல்வன் அர்ஜுன் மாதிரி சொல்றீங்க )
Yes. Chirajeevi would have acted many roles like this in his movies.
Post a Comment