சினிமா டைரக்டர் சீமான் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சோடாபாட்டில் வீசி தாக்கினார்கள். இதைத்தொடர்ந்து டைரக்டர் சீமானை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
தி.க. பொதுக்கூட்டம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சினிமா டைரக்டர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது பெரியாரின் கொள்கைகளை விளக்கி பேசினார். ஜாதி பிரிவுகள் இருக்க கூடாது என்றும், இந்து இதிகாசங்கள் குறித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
சோடாபாட்டில் வீச்சு
தொடர்ந்து சீமான் பேசிக்கொண்டு இருந்தார். சிறிதுநேரத்தில் மேடையை நோக்கி வந்த சிலர் சோடாபாட்டில்களையும், கற்களையும் வீசினார்கள். இதனால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. போலீசார் விரைந்து சென்று, டைரக்டர் சீமானை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சோடாபாட்டில் வீசியதில் ஆறுச்சாமி, கோபால், உமேஷ், பாலன் ஆகிய 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பாதுகாப்பாக அழைத்து கொண்டு போய் 'தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடணும் )
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு பிரிவினர் வைத்து இருந்த பேனர்கள், மற்றும் சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டன. இருகோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
போலீஸ் தடியடி, மற்றும் கோஷ்டியினர் தாக்கியதில் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை பா.ஜனதா கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் மற்றும் கடவுள்கள் பற்றி பேசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து இந்து கடவுள் பற்றி விமர்சித்து பேசியதாக டைரக்டர் சீமான் மற்றும் பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நடந்த சம்பவம் குறித்து, டைரக்டர் சீமான் கூறும்போது, "முற்போக்கு சிந்தனை கருத்துகளை கூறும்போது சிலர் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜாதி பிரிவுகளால் எழுந்துள்ள நிலைமையையும், பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பதால் மனிதசமூகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் விளக்கினால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதற்காக எனது கருத்துகளை தெரிவிக்காமல் இருக்கப்போவதில்லை'' என்று கூறினார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 26, 2008
சீமான் கூட்டத்தில் சோடாபாட்டில் வீச்சு
Posted by IdlyVadai at 8/26/2008 12:26:00 PM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
Director Seeman - avarudaya mathathai pattri pesieruppara - mattar en pesavillai -en hindu mathathi pattri mattum pesavendum
Post a Comment