பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 05, 2008

தவறு செய்தது வக்கீல்கள்; நீக்கம் - கலைஞர்

தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து உரிய முறையில் தகவல் தெரிவிக்காமல், பதில் மனு தாக்கல் செய்யத் தவறியது வக்கீல்கள். அந்த இரு வக்கீல்களும் நீக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அறிக்கை கீழே...

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படக் கோரி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஏன் முதல்வரும், மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் பாலு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் தகவல் அறிந்து, அதுகுறித்து உடனடியாக விசாரித்தறிந்தேன்.

டெல்லியில் பணியாற்றும் தமிழக அரசின் வக்கீல்கள் இவ்வழக்கு குறித்து உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததுதான் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்படக் காரணம் என்றும், வழக்கு குறித்து என் கவனத்திற்கு உரிய காலத்தில் கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிய வந்தது.

கழக அரசு எப்போதும் நீதியின் மாட்சிமையை மதித்து வரும் பண்பை உடையது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வக்கீல்கள் வி.ஜி.பிரகாசம் மற்றும் ஹரீஷ்குமார் ஆகியோர் முக்கியமான இவ்வழக்கு குறித்து என் கவனத்திற்குக் கொண்டு வராமைக்கும், உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாமைக்கும், அதன்காரணமாக சுப்ரீம் கோர்ட்டு என் மீது கூறியுள்ள மிகக் கடுமையான விமர்சனத்திற்கும் பொறுப்பேற்று அந்த இருவரும் தங்களின் பதவிப் பொறுப்பிலிருந்து விலகிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர்

7 Comments:

தீபக் said...

ஹையோ ஹையோ...ரூம் போட்டு யோசிப்பாங்க போல...

manikandan said...

காமெடிக்கு அளவே இல்ல சாமி.

இட்லிவடையார் :- இது நீங்களே போட்ட செய்தியா ? இல்லாட்டி உண்மையாவே கலைஞர் இப்படி சொல்லி இருக்காரா ?

Anonymous said...

What a drama by the great actors!
the scapegoats were Tripathi and the two senior officials at Delhi, would they have delayed submitting an affidavit, without an okay from these wily politicians? I am sure the two officials would have been amply compensated for their sacrifice? It is the joke of the year that both the CM and Baalu were law abiders??

M Arunachalam said...

When his CM gaddi itself is under threat, MK has found scapegoats to cover up his own mistakes.

Why those two lawyers could not tell him about the necessasity of filing a reply to SC? Actually they would have contacted his office. But his office people told the lawyers that CM is attending some IMPORTANT KUTHTHATTAM or seeing MOVIE PREVIEW SHOW & he can't be disturbed for silly matters like reply to SC, etc.

Anonymous said...

Is he a Chief Minister!!!??? His speech is like T.Rajendar...

Anonymous said...

The two officials will sleep peacfully tonight. We can't expect more than this from our government (it may be DMK / ADMK / Congress / BJP / Communist / etc.). It looks like a childplay. We expect more from the ELDEST leader in Tamil Nadu (Like this). Thanks god the honorable chief minister not sued the advocates for not filing the affidavit with SC. May God Bless our Country. RAGHAVAN, NIGERIA

Anonymous said...

From Dinakaran

காலையிலேயே பீட்டர் மாமா வீட்டுக்கு வந்திருந்தார், பங்கஜம் மாமி.

“சுப்ரீம் கோர்ட்ல இப்படி கேள்வி மேல கேள்வி கேட்ருக்காளே... சீஃப் மினிஸ்டருக்கு வாரன்ட் போட்டுடுவோம்னு சொல்ற அளவுக்கு மேட்டர் ரொம்ப சீரியஸா போயிருக்கே.. இங்கே இருக்கற அதிகாரிகள் எல்லாரும் என்ன பண்ணிண்டு இருந்தா..?Ó என்று பங்கஜம் மாமி ஆரம்பித்தார்.

“அதையேதான் சீஃப் மினிஸ்டரும் கேட்டுருக்கார். முந்தாநாள் அவர் கோட்டைல இருந்து மத்தியானம் வீட்டுக்கு போன பிறகுதான் விஷயம் தெரியுமாம். சாப்பாட்டு நேரத்துல சி.எம்.கிட்ட அதை சொல்லி மூடை கெடுக்க வேணாம்னு இருந்தாங்களாம். ஆனா டீவில காட்டினதால அவருக்கு தெரிஞ்சுருச்சாம். கூப்பிட்டு விசாரிச்சுருக்கார். செம கோபமாம்.

சாயங்காலம் தூத்துக்குடி கிளம்பினப்போ வழியனுப்ப தலைமை அதிகாரியும் போயிருக்கார். அவரை காய்ச்சிட்டாராம்... மினிஸ்டர்ஸ், கட்சிக்காரங்க எல்லாம் ஷாக்காயிட்டாங்களாம். வழக்கமா பெட்டில ஏறி உள்ள போய் வணக்கம் போட்டு வழி அனுப்புறவங்க, சி.எம். கோபத்தை பாத்துட்டு அந்த பக்கமே போகலையாம்...Ó என்றார் பீட்டர் மாமா.

“அந்த கேஸ்ல ஆஜராகுற வக்கீல்கள் ரெண்டு பேரையும் சி.எம். டிஸ்மிஸ் பண்ணிட்டார்னு நியூஸ் படிச்சேன்.. அவங்க பொறுப்பா நடந்துருந்தா இந்த மாதிரி நிலைமை வந்துருக்காது, இல்லையா.?Ó என்று சுசி மாமி கேட்டாள்.

“அதப் பத்தி டெல்லில இருந்து கிடைச்ச தகவல் வேற மாதிரி இருக்கு, சுசீ.. டெல்லில நடக்குற கேஸ்கள்ல நம்ம கவர்ன்மென்ட் தரப்புல ஆஜராகுற வக்கீல்களுக்கு 16 லட்ச ரூபாய் பாக்கி இருக்கு, அதை செட்டில் பண்ணுங்கோன்னு தலைமை செயலாளருக்கு ஃபேக்ஸ் வந்துதாம். உடனே அனுப்பிடுங்கோன்னு அவரும் சட்டத் துறைக்கும் நிதித் துறைக்கும் இன்ஸ்டிரக்ஷன் குடுத்தாராம். ஆனா, போதுமான விவரங்கள் இல்லாம டிமாண்ட் வச்சா பணம் அனுப்ப முடியாதுன்னு இவங்க தரப்புல சொல்லிட்டாங்களாம். அதனால டெல்லில உள்ளவங்க இந்த கேஸ்ல ரொம்ப இன்வால்வ் ஆகாம இருந்துட்டங்கன்னு ஒரு தகவல் கேள்விப்பட்டேன்.
எவ்வளவு தூரம் உண்மைன்னு சி.எம்.தான் கண்டு பிடிக்க முடியும்..Ó என்றார் பீட்டர் மாமா.