நேற்று CNN-IBN பா.ஜனதா எம்.பி.க்களுக்கு லஞ்சம் பணம் கொடுத்த காட்சி ஒளிபரப்பினார்கள். அதன் விவரம் இங்கே
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி மத்திய அரசு நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது பாரதீய ஜனதா எம்.பி.க்கள் அசோக் அர்கல், பகன்சிங், மகாவீர் பகோடா ஆகியோர் பாராளுமன்ற அவைக்குள் ரூ. 1 கோடி பணத்தை கொண்டு வந்து காட்டினார்கள். நம்பிக்கை ஓட்டெடுப்பில் தங்களை ஓட்டு போடாமல் தடுக்க இந்த பணம் தரப்பட்டது என்று கூறினார்கள்.
சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் இந்த பணத்தை கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
லஞ்ச பணம் கொடுக்கப்பட்டதை தனியார் டெலி விஷன் ஒன்று ரகசியமாக படம் பிடித்ததாக கூறி அந்த வீடியோவை சபாநாயகரிடம் கொடுத்தனர்.
லஞ்ச பணம் தொடர்பாக விசாரணை நடத்த சபா நாயகர் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்றை நியமித்தார். இந்த குழு வீடியோ காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தனியார் டி.வி. நேற்று மாலை அந்த வீடியோ காட்சிகளை ஒளி பரப்பியது.
2 பகுதியாக இது ஒளி பரப்பப்பட்டது. இதில் முதல் பகுதியில் ஒரு வீட் டில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. ரேவதிராமன்சிங், பாரதீய ஜனதாவின் 3 எம்.பி.க்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
3 பேரையும் ரேவதிராமன் சிங், "ஒரு இடத்துக்கு வாருங்கள் அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம்'' என்று அழைக்கிறார். அதற்கு 3 பேரும் "நாங்கள் அங்கெல்லாம் வர முடியாது'' வேண்டுமானால் போனில் பேசலாம் என்கிறார்கள். இதற்கு ரேவதி ராமன்சிங் "இது போனில் பேசக்கூடிய விஷயம் அல்ல. அங்கு வாருங்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முடி யாது என்று சொல்லி விட்டு வந்து விடுங்கள்'' என்று கூறுகிறார்.
இந்த காட்சிகளும் பேச் சின் ஆடியோவும் முதல் பகுதி வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
2-வது பகுதி காட்சி அசோக்அர்கால் எம்.பி. வீட்டில் இடம் பெறுகிறது. அங்கு அமர்சிங்கின் உதவி யாளர் சஞ்சீவ் 3 எம்.பி.க் களுடனும் அமர்ந்து பேசு கிறார். ரூ.1 கோடி பணத்தை எடுத்து 3 பேரும் பார்க் கும்படி மேஜையில் வைக் கிறார்.
அடுத்து அசோக் அர்கல், மகாவீர் பகோடா இரு வரையும் யாருடனோ போனில் பேச வைக்கிறார். அப்போது மகாவீர் பகோடா "எங்களுக்கு வேறு வேலை இருப்பதால் உங்களுடைய இடத்துக்கு வர முடியாது'' என்கிறார். பின்னர் அசோக் அர்கல் அந்த போனை வாங்கி "1 கோடி ரூபாய் பணத்தை வாங்கி கொண்டோம்'' என்று சொல்கிறார்.
மறுபடி மகாவீர் பகோடா அந்த போனை வாங்கி "மீதி பணத்தையும் அசோக் அர்கல் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்'' என்று கூறுகிறார்.
இந்த காட்சிகள் அனைத் தும் 2-வது பகுதி வீடியோ வில் பதிவாகி இருக்கிறது.
இத்துடன் லஞ்ச விவகா ரத்தை சிக்க வைத்தது எப்படி என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜேட்லி விளக்கும் காட்சியும், இந்த ஊழலில் தனக்கு சம்பந்தம் இல்லை சஞ்சீவ் என்பவர் எனக்கு உதவியாளரே இல்லை என்று அமர்சிங் கூறும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் லஞ்ச விவகாரம் வெளிவந்த பிறகு படம் பிடிக்கப்பட்டதாகும்.
அருண்ஜேட்லி வீடியோ வில் கூறும்போது, "3 எம்.பி.க் களுக்கும் பணம் கொடுக்க முயலும் விஷயத்தை அந்த எம்.பி.க்கள் எங்களிடம் தெரிவித்தனர். உடனே அவர்களிடம் நீங்கள் அவர் கள் வழியிலேயே சென்று பணத்தை வாங்குங்கள். இதை மக்களிடம் அம் பலப்படுத்தலாம் என்று கூறி னோம். பின்னர் தனியார் டி.வி. நிருபர்களிடம் விஷ யத்தை சொல்லி அவர்களை வரவழைத்தோம். அவர்கள் ரகசியமாக இந்த காட்சிகளை படம் பிடித்தார்கள்'' என்று சொல்கிறார்.
3 எம்.பி.க்களுக்கும் பணத்தை நேரில் வந்து கொடுத்த சஞ்சீவ் வீட்டை யும் படம் பிடித்து உள்ள னர். வீட்டில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டி னர் பேட்டியை பதிவு செய்துள்ளனர். அவர்கள் சஞ்சீவும் அவர் மனைவியும் இங்கே தான் வசித்தார்கள். 22-ந்தேதிக்கு பிறகு இருவரை யும் காணவில்லை என்று கூறுகிறார்கள்.
இத்தனை காட்சிகளும் ஒளிபரப்பாயின. ஆனால் அமர்சிங் நேரடியாக அவர் களிடம் பேசியது போன்ற காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை.
வீடியோ காட்சிகள்
விடியோ - 1
விடியோ - 2
விடியோ - 3
விடியோ - 4
நன்றி: CNN-IBN, மாலைமலர்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, August 12, 2008
கட்டு கட்டாக லஞ்சம் பணம் கொடுத்த காட்சி - வீடியோ
Posted by IdlyVadai at 8/12/2008 02:00:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
வீடியோ தெரியவில்லை!
தெரிய வேறேதும் வாயப்பு இருக்கா
வால்பையன்
வால்பையன் இப்போது லிங்க் தந்துள்ளேன். நன்றி
Enna Kodumai Sir Idhu?
ஒரு முடிவோடதான் இருக்காங்களா?
மொத்தத்தில் நாடு உருப்படாது, ஆட்டு மந்தைக் கூட்டம் இருக்கும் வரை, நரிகள் கூட்டம் இருக்கும்.
--- வேதனையுடன் இந்தியத்தமிழன்.
பிந்திராவின் மந்திரா
http://amuthapriyan.blogspot.com/2008/08/blog-post_12.html
இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்க எல்லோரும் ரஜினியையே புடிச்சிக்கிட்டுத் தொங்குரீங்கலே? என் அருமை மூட மக்களே.......
namadhu naadayum num makkalayum nenaikum podhu migavum vedhanaya vulladhu.
Post a Comment