பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 07, 2008

ஞாநிக்கு சில கேள்விகள்

ஞாநிக்கு சில கேள்விகள் என்று வந்த பின்னுட்டம் தனி பதிவாக இங்கே ( நன்றி: ராஜ்குமார் )

கருத்து சார்ந்த நிலைப்பாட்டை தாண்டிய தனிமனித காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கும் ஞாநி, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.

உங்கள் மேல் பரிதாபப் படுகிறேன், இன்றோடு நீங்கள் காலி, -இப்படிப்பட்ட வாசகங்களுடன் ரஜினிக்கு முடிவுரை எழுத முயன்ற முயற்சி எத்தனை காலமாக நடந்து வருகிறது. அதையும் மீறிதானே இருந்து வருகிறார் ரஜினி.உங்களுக்கு புரிபடாத இந்த ரசிக அபிமானத்தைதானே உங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

ரஜினி உதைப்பேன் என்று சொன்னவுடன் பூச்செண்டு கொடுத்தீர்கள். இன்று வருத்தம் தெரிவித்தவுடன் குட்டு வைக்கிறீர்கள். ரஜினியின் நிலைப்பாட்டை ஒரு சினிமா நடிகருக்கான பலவீனம் .சுயநலத்திற்காக அப்படிசெய்தார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்க நான் முயலவில்லை. ஆனால் மேன்மைமிகு பத்திரிக்கை தொழில் நடத்தும் தங்களது நிலைப்பாடு என்ன..ரஜினி உதைப்பேன் என்பதற்கு பூச்செண்டு கொடுத்தீரே? உதைப்பது வன்முறைச் செயல்- நீங்கள் வன்முறையை ஆதரிக்கும் தீவிரவாதியா? ஏற்பில்லா கருத்தை சொல்லும் மனிதர்களை உதைப்பதுதான் உங்கள் நியாயமா?.

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் காணாமல் போய்விட்டது என்பது உங்களது அடுத்த கண்டுபிடிப்பு. இவ்வகையான நப்பாசையுடன் உங்களை போல எத்தனை பேர் எத்தனை வருடங்களாக அலைகிறார்கள் தெரியுமா? விடிஞ்சா கல்யாணம் விமர்சனத்தில் ஆனந்த விகடன் “அடுத்த வருட சூப்பர் ஸ்டார் சத்தியராஜ்” என்று எழுதியது. இன்று 2008- சத்தியராஜின் நிலைமை என்ன?சத்தியராஜ் மேடைகளில் கைத்தட்டல் வாங்க “கேணக் கூ---” என்று பேசிக்கொண்டிருக்கிறார்.நீங்களெல்லாம் இவ்வாறு எழுதுவது ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பிண்ணனியை அறியாததால்தான்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் பேசிய அரசியல் வசனங்கள்தான அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கி தந்தது என்று நம்பினால் உங்களை காட்டிலும் ஏமாளி வேறு யாருமில்லை. கடந்த இரு படங்களில் (சிவாஜி, சந்திரமுகி) அரசியல் வசனமே கிடையாது. அப்ப்டங்கள் மகத்தான வெற்றி பெற்றன. அதற்கும் சில சப்பைகட்டுகள் உங்களிடம் இருக்கின்றன- ஜோதிகா நடிப்புக்காகவும், ஸ்ரேயாவின் இடுப்புக்காவும் படம் ஓடியது என்று.

இந்த வாதத்தை முன்வைக்கும் அறிவு ஜீவிகளிடம் கேட்கிறேன். எழுபதுகளில் வந்த எம்.ஜி.ஆர் படங்களில் (உலகம் சுற்றும் வாலிபன் முதல் மீனவ நண்பன் வரை) அதீத கவர்ச்சி காட்சிகள் உண்டு. அந்த படங்களெல்லாம் ராதா சலூஜா,லதாவிற்காக ஓடியதா. எம்.ஜி.ஆரின் பங்கு ஒன்றுமேயில்லையா.

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மனிதர்களின் வெற்றியை அலசும்போது, அதன் பிண்ணனியில் உள்ள உளவியல் காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல்,எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது.ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி. இந்த ரஜினிக்கு ரசிகர்களானவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

இந்த ரஜினி ரசிகனுக்கு, ரஜினி என்ற மனிதனை பிடிக்கும்.அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் பிடிக்கும்.அவனுக்கு வேண்டியது தீபாவளி மற்றும் பொங்கலுக்கு ரஜினி படம்.முதல்நாள் டிக்கெட். அதன் பின்னால் அவன் பிழைப்பு அவனுக்கு.இத்தகைய ரஜினி ரசிகர்கள்தான் இன்று வரை ரஜினியின் வெற்றிக்கு காரணம். அரசியல் ஆசையில் பேனர் கட்ட வந்தவர்கள் எல்லாம்,விஜயகாந்த் கட்சிக்கு போய் விட்டார்கள். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உண்மையான ரஜினி ரசிகனை பாதிக்கலாம். ஆனால் அதன் கோபதாபங்கள் ரஜினி என்ற திரைநட்சத்திரத்தை ரசிப்பதிலிருந்து தடுக்காது.இல்லாவிடில் 1997 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி கருத்து தெரிவித்த போதே அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் காணாமல் போயிருக்க வேண்டும்.சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினியின் திரை ஆளுமைக்கு கிடைத்தது. அரசியல் நிலைப்பாடுகள் அதனை பாதிக்காது.இதனால்தான் பாபாவிற்கு பின்னால் ரஜினியால் மற்றுமொரு வெற்றியை பெற முடிந்தது.

தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க சொல்கிறீர்கள்( 49 ஓ). ஆனால் ரஜினி மற்றும் பொதுப்பிரச்சனைகளில் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற பத்திரிக்கைகாரர்கள்தான்.ரசிகர்களல்ல.

பிரகாச்ராஜ், அர்ஜுன் ஆகியோருக்கு பிரச்சனை வருவதில்லையாம்.ரஜினியின் திரை ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்நடிகர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தே உங்களது காழ்புணர்ச்சி புரிகிறது. இவர்களை போன்ற ஒரு சாதாரண நடிகனாக ரஜினியை மாற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை.

ரஜினி படத்தின் ஆபாச காட்சிகளை பற்றிய உங்கள் விமர்சனம் சிரிப்பை வரவழைக்கிறது. நீங்கள் முன்பு எழுதிய விகடனிலும் சரி, தற்பொழுது எழுதும் குமுதத்திலும் சரி,இருக்கும் அரை/முக்கால் நிர்வாணப்படங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? இத்தகைய பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையா? நீங்கள் எழுதுவதை மட்டும் வைத்து பத்திரிக்கை விற்க முடியாது என்பதால்தானே இப்படங்களையும் பத்திரிக்கைள் வெளியிடுகின்றன.

நீங்கள் குசேலனை முழுவதும் போட்டுத் தாக்காமல் இருப்பதற்கு மறைமுகக் காரணங்கள் உண்டு.இப்படம் பிரமிட் சாய்மீராவால் விநியாகிக்கப் படுகிறது. தங்களுடைய ஒற்றைரீல் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனம் பிரமிட் என்ற காரணத்தால் மட்டுமே நீங்கள் படத்தை பாராட்டுவது போல் பாசாங்கு செய்துள்ளீர்கள்.

ரஜினி என்ற சக்தியின் வீழ்ச்சியை வேடிக்க பார்க்கும் ஆசை உங்களிடம் அதீதமாயிருக்கிறது.தங்களுக்கு தற்காலிக வெற்றியும், மகிழ்ச்சியும் கூட கிடைத்து விட்டதைப் போல் தோன்றலாம். ஆனால் அது மாயை.

ரஜினியின் வேலையை அறிவு ஜீவித்தனமான வாதங்களால் சிதைக்க வேண்டும் என்பதே உங்கள் முயற்சி.நீங்கள் வேண்டுமானால் மற்றவர் தொழில் நடத்துவதில் தவறு காண்லாம்..நாங்கள் அப்படியில்லை.

பாவம் நீங்கள். உங்கள் தொழிலை நடத்துங்கள்.

( நன்றி: ராஜ்குமார் )

36 Comments:

Anonymous said...

Gnanikku eppavum than oru periya arivu jeevi endru ninaipu. Good Answer

Anonymous said...

சூப்பருங்கணா!! குட்டுன குட்டுல ஞாநி மண்ட காலிஞ்சி உள்ள் போய் வெளிய வந்திருக்கும்னு நினைக்கிறேன்

தீபக் said...

ஹா ஹா ஹா...சூப்பர் அப்பு...

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

பிரமாதம் ராஜ்குமார்..

ரஜினியின் வளர்ச்சிப்பாதையை இத்தனை எளிமையாக சொன்னதுக்கு ஒரு சபாஷ்..
வரிசையாய் கேள்வி கேட்டதுக்கு ஒரு ஷொட்டு

முத்தாய்ப்பாய் முடிச்சதுக்கு ஒரு பலே..

இட்லி வடையாரே.. சண்டைக்கு ரெடியாய்டீங்க அடுத்த வாரம் ஞாநியின் குமுதம் குட்டு உங்களுக்குத்தான்னு நினைக்கிறேன்

Venkatramanan said...

ராஜ்குமார்
அனானியாக இல்லாமல் சர்ச்சைக்குரிய கேள்விகளை பெயரோடு கேட்டதற்கும், அதைத் தனிப்பதிவாகப் போட்ட இட்லிவடைக்கும் ஒரு சல்யூட்!

//இந்த ரஜினி ரசிகனுக்கு, ரஜினி என்ற மனிதனை பிடிக்கும்.அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் பிடிக்கும்.அவனுக்கு வேண்டியது தீபாவளி மற்றும் பொங்கலுக்கு ரஜினி படம்.முதல்நாள் டிக்கெட்.//

இதுதான் ஞாநியின் (மக்கள் மேல் உண்மையான அன்புள்ள எவருக்கும்) முக்கியமான வருத்தம்! பைசாவுக்கு உபயோகமில்லாத அதீதமான தனிமனித துதிபாடல். கிட்டத்தட்ட நம் மக்களின் தாழ்ந்த நிலைக்கு மிக முக்கியமான காரணம். நேரமின்மையால் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள மற்ற கருத்துக்களை விவாதிக்க இயலாததற்கு (அவற்றில் நிறைய உண்மைகளுள்ளன) மன்னிக்கவும்.

அன்புடன்
வெங்கட்ரமணன்

Jayaprakash Sampath said...

சப்பாஷ்.... கைகுடுங்க...வெரி வெல்டன் ராஜ்குமார்...

Anonymous said...

Gnani kannukku mattum illa , kumutham vasagargal anaivarukkum intha bathil poi saentha nalla iurukkum...
I wanted every body to "enjoy" this answer..
What could be done...?

Anonymous said...

Comrade Gnani is another Prakash Karat! he can only find fault with people, and events; he may write good but it is all biased and you can stomach him only to some extent.

வெங்கட்ராமன் said...

"மேன்மைமிகு பத்திரிக்கை தொழில்" ன்னு கூகுள்ள தேடுனா, இந்தப் பதிவுதான் வருது.

அப்பன்னா "மேன்மைமிகு பத்திரிக்கை தொழில்" ன்னு ஒன்னு கிடையாதா. . .?

Anonymous said...

அப்துல் கலாம், ரஜினி போன்ற நிஜ ஞானிகளை நோன்டுபவருக்கு ஞானின்னு பேர்வேற. ஞானி சார் , உங்கக்கிட்ட நல்ல எழுத்து திறமை இருக்குன்னு ஒதுக்குகிறோம் , அத கடிதம் எழுதுறேன் பேர்வழின்னு உங்க இஷ்ட்டத்துக்கு எல்லோரையும் கொடையறது சகிக்க முடியல . உங்க பேர் தான் ஞானி, நீங்க எழுதுற விஷயமெல்லாம் வெறும் சாணி.

Anonymous said...

gnani pondra arivu jeevi pol nadikiravargalai matramudiyathu...ivarathu(gnani) pathivugalai padikkum ariyamai niraintha vasagargalukku ivarin suyanalam theriyamal poi viduvathu than ivarin balam.

Anonymous said...

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மனிதர்களின் வெற்றியை அலசும்போது, அதன் பிண்ணனியில் உள்ள உளவியல் காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல்,எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது.ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி. இந்த ரஜினிக்கு ரசிகர்களானவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.//

நான் இதுக்காகத்தான் ரஜினி ரசிகன் ஆனேன்!

Anonymous said...

You have really 'bleached Gnani's writing... Rajkumar.. True Love will never fade that is Rajini Fan's LOVE and AFFECTION.. and that is behind the success of Rajini also.

anbudan, Maanidan.

Anonymous said...

அற்புதம் ரஜினியைப்பற்றி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள், ஞானி வெறும் சாணியாகிக்கொண்டிருக்கிறார் அணு ஒப்பந்தம் ஆகட்டும் அப்துல்கலாம் ஆகட்டும் இவரின் எழுத்துக்கள் வைத்தெரிச்சலை மட்டுமே கொட்டிக்கொண்டிருக்கின்றன, அவர் என்னதான் எதிர்பார்க்கிறார் அல்லது என்ன புரிந்து கொள்கிறார் என்றே புரியவில்லை, துக்ளக்கில் சோ அற்புதமாக ரஜினி கடிதம் பற்றி எழுதியுள்ளார்,புத்திசாலியாய் இருந்தால் இது புரியும், வடிவேலுவுக்கு புரிந்தது கூட ஞானிக்கு புரியவில்லை பிரபலங்களை சாடி மேலே வரும் கேவலமான பிழைப்பை நடத்துகிறார்

Maniz said...

அன்புள்ள ஞாநிக்கு…
… அறிவுமதி…..
.
அன்புள்ள ஞாநி! உங்கள் பழைய நண்பன் அறிவுமதி பேசுகிறேன்.

அவ்வப்போது நீங்கள் செய்கிற தவறுகளை அவ்வப்போது நட்புரீதியாகவே சுட்டிக்காட்டி இப்படியெல்லாம் எழுதுதல் நாகரிகமா? நியாயமா? என்று நேரிடையாகவே தங்களிடம் கேட்டிருக்கிறேன்.

இனி அப்படியெல்லாம் எழுதமாட்டேன் என்று எனக்கு நீங்கள் சில வேளைகளில் உறுதிமொழியும் அளித்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையில் உங்களோடு உடன்பட்டு உங்கள் எழுத்துகளை உள்வாங்கி உளம் மகிழ்ந்த எங்களுக்கு…
கொஞ்சகாலமாகவே… உங்கள் எழுத்துகளில் தென்படத் தொடங்கிய ‘நொரநொரப்பு’ உங்கள் சிந்தனைகளை உள்விழுங்க விடாமல் உபத்தரவம் செய்யத் தொடங்கியது.

அப்போதே… விழித்துக் கொண்டு உங்கள் எழுத்துகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினோம்…

சிவப்புடை போட்டுக் கொண்டு
பொதுவுடைமை முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
கருப்புடை போட்டுக் கொண்டு
பெரியாரிய முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டு
அவர்களிடம் பிடிபடாமல்
தப்பித்து வந்த நீங்கள்…
புலிகளின் சீருடை போட்டுக்கொண்டு
புலிகளின் முகாமுக்குள் போய்
உளவுபார்த்துவிட்டுத்
திரும்புகையில் பிடிபட்ட
ஒருகேடு கெட்டசிங்கள உளவாளியாய்
இப்போது எங்களிடம் நீங்கள்
கையும் களவுமாய்..
பொய்யும் பூணூலுமாய்..
அகப்பட்டிருக்கிறீர்கள்…

கொஞ்ச நாள்களுக்கு முன்பு உங்களிடமும் உங்கள் எழுத்துகளிடமும் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு… இப்படியெல்லாம் ஞாநியை சந்தேகப்படலாமா? என்று கேட்டு… என் கருத்துக்கு உடன்படாமல் உங்கள் பக்கம் நின்றவர்தான் எங்கள் சுப.வீ.

தமிழ்த்தேசீய ‘தென்செய்தி’-யும் எங்கள் ஞாநி என்று தங்கள் கட்டுரையை அண்மையில் வெளியிட்டு மகிழ்ந்தது.

பெரியார் திராவிடர் கழகமும், எங்கள் ஞாநி.. பெரியார் ஞாநி என்று.. பல மேடைகள் தந்து மகிழ்ந்தது.

ஆனால்… இவர்கள் அனைவரிடமும்.. சுப.வீ-க்கு தாங்கள் எழுதிய குமுதம் மடல்வாயிலாக…

நான்..பெரியார் ஞாநியன்று..
பெரியவாள் ஞாநியே..
என்று வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ஞாநி. திண்ணியத்திலும் எரையூரிலும் ஆதிக்க சாதிகள் செய்த அட்டூழியங்களை அதட்டிக் கேட்டவர்கள்தாம் ஞாநி.. அந்தச் சிங்கள இயக்குநரையும் தட்டிக்கேட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சுப.வீ. அவரை மட்டும் தனிமைப் படுத்தி.. அவரைத் தலித்துகளுக்கு எதிரானவராகக் காட்டி…
“மொழியால்… இனத்தால் நம்மவரான விடுதலைப்புலிகள்” என்று.. எமது மொழிக்குள்… எமது இனத்திற்குள் உள் நுழைய.. உள் பதுங்க வருகிற உங்கள் சூழ்ச்சியை.. என்னவென்று சொல்வது?!

மொழியால் எப்படி நீதமிழனாவாய்?இனத்தால் எப்படி நீதமிழனாவாய்?‘நம்மவர்’ என்கிற சொல்லாடலுக்குள்தமிழர்களாகிய எங்கள் பெயர்கள் அடங்கலாம். ஞாநி என்கிற உன் பெயர் எப்படி அடங்கும்.

நீ யார்…எங்கள் தமிழர்களை எழுப்பிவிடநாங்கள் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில்…எழுகிற தமிழர்களை இடறிவிடமுயற்சி செய்கிற.. நீ யார்?பச்சைப் பார்ப்பான்!

அப்புறம் எப்படி…நீ…தமிழன் பட்டியலில்.. சேர முடியும்? ‘நம்மவர்’ என்ற சொல்லாடலுக்குள் நுழைய முடியும்?ஒரே ஒரு இரட்டை டம்ளர் டீக்கடையையாவது… என்று கேட்டிருக்கிறீர்களே ஞாநி! பல இரட்டை டம்ளர் டீக்கடைகளை அடித்து நொறுக்கி.. ஆதிக்க சாதித் திமிரை ஓடஓட விரட்டிய எம் பெரியார் பிள்ளைகள் தாமய்யா அங்கு வந்து… எங்கள் இனவரலாற்றை இப்படி இழிவு செய்யலாமா என்று எதிர்த்துக் கேட்டது! தனித்த சுப.வீ மட்டும் இல்லை.

சிறுபான்மை பிரிவினரைக் குறித்து ரொம்பவும் அக்கறையாக கவலைப்பட்டு இருக்கிறீர்கள். அந்தச் சிறுபான்மை பிரிவில் பிறந்து மிகச் சிறந்த இடத்திற்கு வந்த அய்யா அப்துல் கலாம் பற்றி எவ்வளவு கேவலமாக எவ்வளவு இழிவாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பதை மறுக்க முடியுமா ஞாநி!“மாற்றாக தம்பி சீமானுடன் சேர்ந்து பதில் படம் எடுங்கள்….” எவ்வளவு எளிதாக எழுதிவிட்டீர்கள் ஞாநி!

“காற்றுக்கென்ன வேலி” எடுத்த தம்பி புகழேந்தி பட்டபாடு தெரியாதா ஞாநி!இந்தச் சிங்கள இயக்குநருக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு வருகிற உங்களை… அன்றைய பட்டினிப் போராட்டங்களில் எல்லாம் எங்களால் பார்க்க முடியவில்லையே ஞாநி!ஈழப் பிரச்சனை குறித்துத் திரிபுபடுத்தித் திரைப்படமெடுத்த பார்ப்பன இயக்குநருக்கு தேசிய விருது. அதை குறித்து வெறும் மேடையில் பேசிய தமிழர்களுக்கு 19 மாத பொடா சிறை தண்டனை…
அந்தத் தண்டனையை அனுபவித்தவர்களில் சுப.வீ-யும் ஒருவர். அவரைப் போய் அதே போல கொதிக்காதது ஏன் என்று எகத்தாளமாக கேள்வி கேட்கிறீர்கள்? எத்தனை முறை சுப.வீ சிறைக்குச் சென்றுள்ளார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்காகச் சிறைக்குச் சென்றுள்ளார் என்கிற பட்டியலை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம் ஞாநி! அவரைப் போய் கொதிக்காத ஆள் என்று கொழுப்பாக எழுதுதல் பிழையில்லையா ஞாநி!
பொடா கொடுமை பற்றி சுப.வீ எழுதிய வலி சுமந்த தொடரை.. தொடரவிடாமல் தடுத்த நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?
“என் கருத்துகளை… எல்லோரும் பயன்படுத்தலாம், குமுதம் குழுமம் மட்டும் பயன்படுத்தக் கூடாது” என்று கூறிய நீங்களா ஞாநி, கருத்துரிமை பற்றி பேசுவது?

“பத்திரிகையில்,தொலைக்காட்சியில்,ஊடகங்களில், அவ்வளவு ஏன் உங்கள் சகோதரர் எஸ்.பி.முத்துராமன் உட்பட, தமிழ்த்திரைப்படப் படைப்பாளிகள் சினிமாவில் சொல்லாமல்விட்ட பெண்ணடிமைக் கருத்துகள் ஏதும் மீதம் இருக்க முடியாதே!” என்று எழுதியுள்ளீர்களே ஞாநி!

தாங்கள்.. தங்கள் முற்போக்கான கருத்துகளைத் தங்கள் வலைத்தளத்தில் எழுதுவது, ‘தீம்தரிகிட’ என்கிற தங்களுக்கான இதழில் மட்டுமே எழுதுவது என்ற பத்தியத்தோடுதான் இருக்கிறீர்களா ஞாநி!

நன்றி ஞாநி..

எந்தச் சூழ்நிலையிலும்..நாம் கருத்துக்குக் கருத்து வைத்து..தெளிவுகளை நோக்கிவிவாதிப்போம்… மற்றபடி உங்கள்மீது எங்களுக்கு எவ்வித வன்மமும் இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக.. உங்களை உழைக்கவிடாமல் உட்காரவைத்துச் சோறு போட்ட.. போடுகிற.. சமூகம் தமிழ்ச் சமூகம். அந்தச் சமூகத்திற்கு சிறிதும் நன்றியில்லாமல் நீங்கள் செய்கிற இந்த ஈனக் காரியங்கள் குறித்து உங்களுக்கு வெட்கமே இல்லாமல் போயிற்றே! அது தான் ஞாநி வருத்தமாக இருக்கிறது!

சிங்கள இயக்குநருகாக வன்முறை என்று வரிந்து கட்டிக்கொண்டு வருகிற நீங்கள்…தில்லை நடராசர் கோயிலில்.. ஆறுமுக சுவாமி அவர்களை, தீட்சிதர்கள் அடித்து நொறுக்கிய போது.. வன்முறை என்று வாயைத் திறக்கவில்லையே.. ஏன் ஞாநி?

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது!

நன்றிகளுடன்….
அறிவுமதி
சென்னை
08-ஏப்ரல்-2008

Nilofer Anbarasu said...

//எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற பத்திரிக்கைகாரர்கள்தான்.ரசிகர்களல்ல.
//

Romba Correct

Anonymous said...

ஞாநி தெரிகிறது. அது யாருங்க ராஜ் குமார்?. ஞாநியை கிழிகனும்னா கிழிங்க. ஆனா அதுக்காக ரஜினியை , அவரின் தமிழ் மக்களின் அறியாமையாலும் அதீத வெறியாலும் கிடைத்த வெற்றியை தவறாக தன் சுயநலத்துக்கு பயன்படுத்தும் செயல்பாடை நியாப்படுத்த முடியாது. கட்டுரையாளர் சொல்வது போல ரஜினி யாரோடும் ஒப்பிட முடியாத ஒப்பிட கூடாத ஆள் ஒன்றும் கிடையாது. ரஜினி ஒன்றும் வானத்திலிருந்து குதித்து வந்துவிடவில்லை. நாம்தான் உயரத்தில் உயர்த்தி பிடித்து வைத்துள்ளோம். இதை மறந்துவிட்டு ரஜினியாகட்டும் ராஜ்குமாராகட்டும் யாரையும் தெய்வீக நிலைக்கு மாற்றவேண்டாம். பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமாவுக்கு செய்ததை விட ரஜினி தமிழுக்கோ அல்லது தமிழ் நாட்டிற்கோ ஒன்றும் செய்துவிடவில்லை. இது நிஜம். ராஜ்குமார் அவர்களே, ஞாநியை விமர்சிக்க வேறு சப்ஜெக்ட் தேடுங்கள். நானும் ஞாநியின் நிலை கண்டு சில வருடங்களாக சினம் கொண்டுதான் உள்ளேன்.ஆனாலும் உங்களின் ரஜினியின் துதி பாடலை உங்கள் உள்ளதிலேயோ அல்லது வீடோடுவோ வைத்து கொள்ளுங்கள். சினிமாகாரர்களுக்கு பல்லக்கு தூக்குவது கருணாநிதி காலத்தோடு முடியட்டும். தமிழ் சமுதாயம் தழைக்கட்டும். அடுத்த தலைமுறை செழிக்கட்டும்.

Anonymous said...

//ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல்,எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது.ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி.//

இந்த ஒரு காரணத்திற்க்காகவே ஞாநிக்கு (எந்த மார்க்ஸியவாதிக்குமே) ரஜினியை பிடிக்காது. சாதாரண சூழ்னிலையில் வளர்ந்து வாழ்வில் உயர்ந்த எவரின் மீதும் இவர்களுக்கு வெறுப்பு தான் வரும்.

வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடச்சொல்லும் தங்களுடைய புரட்சி அஜன்டாவை தூக்கி கடாசி விட்டு முன்னேறிவிட்டானே என்னும் வயிற்றெரிச்சல்.

இதே காரணம்தான் அப்துல் கலாம் மீதும், நாராயண மூர்த்தி மீதும் இவர்கள் மாற்றி மாற்றி பொழியும் வசைமொழிகளுக்கு மூல காரணம்.

Anonymous said...

ரஜினி மெளனத்தை தனக்கு சாதகமாகக் கொண்டு ஊடகங்கள்
தனக்கு முக்கியத்துவம் கொடுத்தபோதெல்லாம் அதை
அனுபவித்தவர்.இப்போது ஊடகங்களும், ரசிகர்களில் சிலரும்
அவர் எழுதிய கடிதத்தையும், பேசியதையும் விமர்சிக்கும் போது
அதற்கு பதில் கூற வேண்டியது
அவர்தான்.அரசியலுக்கு வர வேண்டும்
என்ற எண்ணமும், தன் புகழையும்,
செல்வாக்கையும் அரசியல் கட்சிகளிடம் பயன்படுத்தி மறைமுக
அரசியல் செய்தவர் அவர்தானே.
2005ல் தூர்தர்ஷனில் டிசம்பர்
மாதம் அவர் பிறந்த நாளுக்கு
சிறப்பு விளம்பரதாரர் நிகழ்ச்சி
எப்படி சாத்தியமாயிற்று.
2006ல், 2008ல் ‘வாய்ஸ்'
கொடுக்காமல் ஒதுங்கியிருந்தாரா.
பின்னர் தைரியலஷ்மி என்று
ஜெவை புகழ்ந்ததும் யார்.
சராசரி மனிதனை விட பதவி
ஆசையும், சபலமும் கொண்டவர்தான்
ரஜினி.துணிந்து முடிவெடுக்க பயம்,
அரசியலில் நுழைந்தால் சேர்த்த சொத்துக்களுக்கு பிரச்சினை வருமோ
என்ற அச்சம் ஆகியவையே அவரால்
ஒரு தீர்மானகரமான முடிவிற்கு
வராதத்திற்கு காரணம்.கமல் ஒதுங்கி
நிற்பவர்.இரு பொருள்தரப் பேசுவது,
அரசியல்வாதிகளுடன் திரைமறைவு
பேச்சுவார்த்தை, பன்ச் டையலாக்
போன்றவை இல்லாமல் நான் ஒதுங்கி
இருப்பவன் என்று தெளிவாகச் சொன்னவர்.ரஜினியால் ஏன் அதைச்
சொல்ல முடியவில்லை.1998ல் முதலில் ஒன்றும் சொல்லாமல்
பின்னர் ‘வாய்ஸ்' கொடுத்தது ஏன்.
எனவே ரஜினியை விமர்சிப்பது சரிதான்.
-----------------------------
ராஜ்குமார் எழுப்பியுள்ள கேள்விகளை ஞாநிக்கு அனுப்பிவையுங்கள்.

Anonymous said...

Mr Rajkumar , simply superb what u told is right . we are the fans of rajini.

Anonymous said...

ராஜ்குமார் ! யாருய்யா! பாவம்? நீதான்யா பாவம். நீதான் ரஜினி என்கிற மாயையில் இருந்து பினாத்திட்டுக் கிடக்கிற.

உண்மையைச் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வருது. உங்க தலைவனோட முகத்தைதிரையை கிழித்து எறிந்திருக்கிறார் ஞானி. அவர் கேட்ட கேள்விகளுக்கு முதல்ல உங்க தலைவனை பதில் கொடுக்கச் சொல்லு. அவரே பதில் சொல்ல முடியாமதான் அமைதியாக இருக்கிறார். நீ ஏன் குதிக்கிறாய்?


இதுல உன்னய பாராட்டி வேற கமென்ட்ஸ். இந்த தமிழனை எத்தனை "பெரியார்" வந்தாலும் காப்பாற்ற முடியாது. வெங்காயம் !!

போங்கடா.. நீங்களும் உங்க ரஜினியும். நல்லா பல்லக்குத் தூக்குங்கடா அந்த கன்னடனுக்கு.

இப்படிக்கு,

ஏமாற்றப்பட்டத் தமிழன்.

Anonymous said...

நிஜத்தை எழுதினால் ஞானி 'பாப்பான்'னு சொல்லிடுவீங்க.

ரஜினியே மராட்டிய பாப்பான்தான்டா. தமிழ்நாட்டு பாப்பான் என்றால் கசக்கும். ஆனால் கன்னட பாப்பான் என்றால் இனிக்குமா?

என்னே உங்க பகுத்தறிவு?

தமிழ்நாட்டு மக்களின் சினிமா மோகத்தையும், ரஜினி மாயயையும் அந்த ஆண்டவனே வந்தாலும் கலைக்க முடியாது.

நல்லா தூக்குங்க கூஜா ரஜினிக்கு. இட்லி வடை நீங்களும் ரஜினி சொம்பு என்று நன்றாக தெரிந்து விட்டது.

அடுத்து 'ரோபோ'ன்னு ஒரு அடாசு படம் ரஜினி கொடுப்பார். போய் பல்லைக் காட்டிட்டு. ரத்தம் சிந்தி உழைத்த காசை இதே தமிழன் கொடுப்பான் அந்த "கன்னட" குடிமகனுக்கு.

M Arunachalam said...

Yemaatrapatta Thamizh Mundam,

Un Periyar is also a Kannadiga. May be thats why are you calling yourself a cheated Tamizhan?

Arun

M Arunachalam said...

All these parasites calling themselves as Tamils are actually anti-national elements trying to create a wedge between Rajini & his fans by portraying as if Rajini is anti-Tamil.

Their grouse is (1) Rajini is a True Nationalist and (2) These vayitherichal fellows are afraid that even without stepping onto the roads, Rajini commands so much following. If only he decides to jump onto the field, all their "business" and other nefarious activities like clandestinely helping Tamil terorist outfits will suffer & become a dream.

But their efforts will not succeed because today's youngsters are smarter than they think & they will NOT allow these scoundrels to succeed in their anti-national activities at any cost.

Arun

Anonymous said...

உண்மையிலேயே அவர் ஞானி அல்ல..சாணி தான்.. அவரோட ஒ பக்கங்கள் மொழியில் சொல்லப்போனால்..

இந்தவார செருப்படி சாணிக்கு...இல்ல..மன்னிக்கவும்.. ஞானிக்கு..

Anonymous said...

"ஆனி புடுங்கி கொண்டிருக்கும்" ப்ளீசிங்க் பவுடரை இங்கு வருக வருக!! என்று வரவேற்கிறேன். தலைவா ஏன் இந்த மொளனம்? புகுந்து விளையாடுங்க.

அறுபது வயதை தொட்டு இவ்வருடம் "ஷஷ்டியப்த பூர்த்தி காண இருக்கும் "ரஜினி தாத்தாவுக்கு" அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

30 வருடங்களாக தமிழ்நாட்டை சுரண்டி உங்க 10 தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவிட்டீர்கள். நம்ம மாநிலத்திற்கு நீங்க என்னதான் செஞ்சீங்க? நதிநீர் இணைப்புக்கு 1 கோடி தருகிறேன் என்று சொன்னீங்க. என்னாச்சு? உங்க பெங்களூரு பேங்க் அக்கவுன்ட்ட்ல அந்தப் பணம் தூங்குதா? நல்லா இருங்க ரஜினி ! ராஜ்குமார், இட்லி வடை & பலர் சப்போர்ட் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை, எத்தனை முறை யும் "அடிடா ராமா, 'பல்டி' அடிடா ராமா "

Anonymous said...

What is all these blabbering man? Is anyone asking why all the tamin NRI's living in US are buying properties in US? Are they being asked whey they are investing in US? Every tamilan wants to go abroad to work. So, why cant a non-tamilan come to Tamilnadu and work?

critize Raniji as you critize Kamal, as an artist . do not bring regionalism here.

So, the great satiyaraj is asking, why are tamil people worshipping Ragavendra. Sri Ragavendra was born in Buvanagiri. Regardless, will he ask why are muslims praying to Allan and Christins to Christ, since these two gods were born outside Tamilnadu?

Jai Hind!

Anonymous said...

http://www.rediff.com/movies/2008/aug/08sskuselan.htm

Anonymous said...

என்னாது........
ஒரு பெரிய உரிமை போரே நடக்குது.
இட்லி வடை ....
நீர் ரொம்ப ராசியான கைய்யா.....
ஆரம்பிச்சு வைச்ச அடிதடி
முடியற மாதிரி தெரியலியே......
........................
அட்ரா அட்ரா நாக்க முக்க
நாக்க முக்க
நாக்க முக்க

Anonymous said...

தமிழ் உணர்வே இல்லாத உங்களை போன்ற ரஜினி ரசிகர்களால் தான் . தமிழன் சொரணை இன்றி அலைகிறான். ரஜினியை பாராட்டி எழுதியிருக்கும் ராஜ்குமார் கண்டிப்பாக ஒரு கன்னடனாக மட்டுமே இருக்க முடியும். ரஜினியை பாராட்டி கமெண்ட் எழுதி இருக்கும் மற்றவர்கள் சொரணை உள்ள தமிழர்களா?

Rj.Umabalan said...

தமிழ் உணர்வே இல்லாத உங்களை போன்ற ரஜினி ரசிகர்களால் தான் . தமிழன் சொரணை இன்றி அலைகிறான். ரஜினியை பாராட்டி எழுதியிருக்கும் ராஜ்குமார் கண்டிப்பாக ஒரு கன்னடனாக மட்டுமே இருக்க முடியும். ரஜினியை பாராட்டி கமெண்ட் எழுதி இருக்கும் மற்றவர்கள் சொரணை உள்ள தமிழர்களா?

Anonymous said...

appo rajini panninathu sari-nnu sollavareengala idlyvadai(plz do answer)? ungalukku gnani mela kovam-na athai nera-ve sollalam ille? rajniyoda suyanala-thukku neenga ellam sappai kattu kattureenga.. yemba poi velayappaarungappa..

Unknown said...

Hahahaha ...

Ingu sila per Rajini Tamil Naattirku enna seiythaar endru ketkiraargal. Aanaal avargal ithey kelviyai Tamil Nattile poranthu-velarntha maththa nadigargalai yen ketkavillai?

Naan avangalai ketkum oru kelvi, intha hogenakkal vishayathule Rajini enna thavaru seiythaar?

Hogenakkal prachanaiyotti Tamil cinemavai Karnatakavil thaakkiyathi kandiththu Tamil Cinema ulagam nadathiya unnavrithathil thaan pesiya "Udhaikka Vendaam" endra iru varthaigalukku vilakkam aliththu athai oru medai pechchil upayogithathukku varutham therivithathu oru kuttrama?
Ithu avar Tamil Naattirku senja drohama?

Avar enna Hogenakkal thannerai Tamil Naatirku kudukkathey endra sonnar?

Indru Rajiniyai kuttram saattubavar, andru intha Hogenakkal thittathai Karnataka therthal mudiyumvarai dhideerendru thalli vaitha Tamilaga muthalvar Kalaignarai yen kelvi ketkavillai?
Mudalvarain intha seyal droham endru thonaathavargalukku Rajini seiythathil enna droham therinthathu?

Athu sari yenokkoru santhegam. Bangaloril velai seiyum aththanai Tamilargal Kaveri prachnaiyil entha pakkam nirpaar?

"Naan Tamilan. Nee Kanndakaaran." - endra nenappai vittuttu "Naam Indiyargal" endru ennaikkuthaan ninaippomo?

Anonymous said...

உலகம் எவ்வளவு வேகம் முன்னே சென்று கொண்டு இருக்கிறதோ, தமிழ்நாடு சினிமா மோகத்தால் அவ்வளவு வேகம் தங்கிப்போய் உள்ளது. சுயமாக சிந்திக்க தெரியாத ஜடமாகத்தான் ரஜினி ரசிகர்கள் போன்றவர்கள் உள்ளனர். சினிமாவை பொழுதுபோக்காக பார்க்க தெரியாத மடையர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு அறிவு வரும்வரை ரஜினி, விஜயகாந்த், இப்பொழுது விஜய், போன்றவர் இப்படி ஏமாற்றி கொண்டுத்தான் இருப்பார்கள்.

Anonymous said...

well said kr.. im counting "idlyvadai" into that madaiyargal list as he's keeping silence(kulla nari?)

Nanda Kr B said...

Thiru Arivmathi avargal kadaisiyaga sonna karuthu migavum arumai... enakum ithu pondru athangam undu ... irunthalum verum athangam etharkum uthavathu endrum theriyum....Enathu ennangalai ungal Mozhi nadaiyil Velipadithiyatharku Nanri....