கீழே உள்ள கலைஞர் கவிதை இப்போது யாருக்குமே புரியாத புதிராக மாறியுள்ளது. பலருடைய பெயர்களை இணைத்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்கு முதல்வரின் கவிதை தள்ளி விட்டுள்ளது. எப்போதும் கலைஞர் கவிதை படித்தால் சிரிப்பு தான் வரும், ஒரு மாறுதலுக்கு இந்த கவிதை தமிழர்களை சிந்திக்க வைத்துள்ளது. தமிழர்களை சிந்திக்க வைத்த கலைஞர் வாழ்க...
அரசியலில், பொது வாழ்வில் ஏன், தனி வாழ்வில் கூட, அனைவரையும் நம்பி விடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு.
அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன...காலைப் பிடிப்பது தான் என்ன?
அடித்தது "சான்ஸ்''; கிடைத்தது "வாய்ப்பு'' என்றதும் "ஆத்துக்காரன்'' காட்டிய அன்பும், நன்றியும் கூட ஆலாய்ப் பறந்து விடும்; ஆவியாகி மறைந்து விடும்.
ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி, அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; "அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்.
அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப் பார்த்தேன்; அடிமரம் ஒட்டிய கிளையொன்றை! அடடா-கொடிய பூச்சிகளும், கொட்டும் தேள் கூட்டமும்...
படிப்படியாக அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக் கண்ட பின்பே
உணர்ந்து கொண்டேன்; "அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை! உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-
கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின் நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
பிகு: இந்த கவிதைக்கு அர்த்தம் பின்னூட்டதில் சொல்லலாம், மருத்துவ செலவிற்கு இட்லிவடையிடம் பணம் கொடுக்காது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, August 20, 2008
புரியாத புதிர் - கலைஞர் கவிதை
Posted by IdlyVadai at 8/20/2008 01:07:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
21 Comments:
May be MK wrote about Vaali.
http://feedproxy.google.com/~r/oneindia-thatstamil-all/~3/nq_YapaJ064/tn-karunanidhi-poem-creates-hot-debate.html
முதல்வர் கருணாநிதி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்து பூடகமாக எழுதியுள்ள கவிதை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி தனது கவிதையில் சாடியிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜனைத்தான் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் கவிதைகள் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவதுண்டு. ஆனால் நேற்று அவர் வெளியிட்டுள்ள கவிதை ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அந்தக் கவிதையில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் குறித்து கருணாநிதி பூடகமாக சாடியுள்ளார். யார் அந்தத் தலைவர் என்பது யாருக்குமே புரியவில்லை. இதனால் இந்தக் கவிதை பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இந்தக் கவிதை முதல்வர் அவாள் என்று கூறியிருப்பது யாரை என்பதுதான் இப்போது யாருக்குமே புரியாத புதிராக மாறியுள்ளது. பலருடைய பெயர்களை இணைத்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்கு முதல்வரின் கவிதை தள்ளி விட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனை சொல்கிறாரா (வரதராஜன் பிராமணர் என்பது பலருக்கும் தெரியாது) அல்லது தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதியை சொல்கிறாரா அல்லது தயாநிதி மாறனின் மனைவி பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களை தாக்கியுள்ளாரா என்பது குறித்து பெரும் விவாதமே நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களிலும் கருணாநிதியின் கவிதைதான் இன்று விவாதப் பொருளாகியுள்ளதாம். யாருடைய பெயரை இப்படி மறைமுகமாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார் என்று டீயை விட படு சூடாக இருக்கிறதாம் விவாதம்.
ஆனால் முதல்வரின் கவிதையைப் படித்தால் அது ஒன்று திரிபாதியாக இருக்க வேண்டும் அல்லது வரதராஜனாக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள். திரிபாதி சமீபத்தில் முதல்வரின் கோபத்திற்கு ஆளானார். அவருக்கு இணையாக புதிதாக உருவாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல தமிழகத்தில் காங்கிரஸுக்கு அடுத்த எதிரி திமுகதான் என்று சமீபத்தில் இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் கோபம் கொண்டு வரதராஜனைத்தான் முதல்வர் தனது கவிதையில் மறைமுகமாக சாடியிருப்பாரோ என்றும் அசை போடப்படுகிறது.
மொத்தத்தில் முதல்வரின் கவிதை அத்தனை பேரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு விட்டது என்பது மட்டும் நிச்சயம். முதல்வரே முன்வந்து விளக்கினால்தான் உண்டு.
இது முதலில் கவிதையா ?
என்னமோ பார்த்திபன் ரம்பாவைப் பார்த்து சொல்லும்
கவிதை மாதிரி அல்லவா இருக்கிறது
(நம்ம கவிதை எப்படி)
RBVS MANIAN?
யாரையாவது தெரியாம திட்டனும்னா
இப்பிடி எழுதலாம்.
ஏன்னா ...
அவருக்கும் யாரையோ திட்டின மகிழ்ச்சி.
வெளி ஆளுக்கும் யாரை திட்டினாங்கன்னு தெரியாதில்லையா
...இதுதான் கவிதை சாணக்கியம்
திரிபாதின்னா "அவாள்" பதம் ஏன்? ஆரிய மாயை, வடநாட்டான்...
முதலில் திரிபாதி கருணாநிதி நினைத்தால் தன் அதிகாரத்தினால் உடனே மாற்றிவிடக்கூடிய ஆள்!
காம்ரேடு வரதராஜன் சட்டைக்குள்ளே தோளில் இன்னும் நெளிகிறதா பூணூல்??
காம்ரேடு = கழுதை எனவே "அவாள்'னு பூடகமே எழுதினா காம்ரேடு கழுதை வரதராஜனுக்கு என்ன தெரியப்போகிறது??
பேராண்டி தயாநிதி, கலாநிதி இப்போ அரை அவாள் என்றும், பேராண்டிகளின் மதர் மல்லிகா "அவாள்" என்றும் தாத்தா பகுத்தறிவுக்கு உரைத்திருக்கிறது போலிருக்கிறது!
[edited]
போய் வேற வேலையப் பாருங்கப்ப்பா!
[ edited, by idlyvadai ]
சாமி, எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும். இது கவிதையா, காமெடியா??
edited...
thats good...I.V
//http://thandhi.blogspot.com/2008/08/blog-post_20.html//
மேற்கண்ட திரு நல்ல தந்தி எனபவரின் பதிவில் விரிவான விளக்கம் கொடுத்து இருக்கிறார் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
நான்கூட எனக்கு மட்டும்தான் புரியல, அரசியல் அறிவு கம்மியாயிடுச்சோன்னு கவலப் பட்டுகிட்டு இருந்தேன். இந்த பதிவ போட்டு இன்னும் இத்தன பேருக்கு புரியலன்னு காட்டி என்னை ஆனந்ததில் ஆழ்த்திய இட்லிவடைக்கு இன்னொரு செட் பூரி பார்சல்....:)
தசாவதாரத்தனமா ஒரு பதில்..
" இது கவிதை இல்லன்னு சொல்லல ஆனா கவிதையா இருந்திருதிருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்"
ராம்ஜி
//பிகு: இந்த கவிதைக்கு அர்த்தம் பின்னூட்டதில் சொல்லலாம், மருத்துவ செலவிற்கு இட்லிவடையிடம் பணம் கொடுக்காது.//
கலைஞரின் கவிதைக்கு கஷ்டப்பட்டு நான் கண்டுபிடித்த அர்த்தம்.கீழே பதிவிடுகிறேன்.எனக்கும் காசு எதுவும் வேண்டாம்.யாரும் என்னிடமும் எதற்கும் பணம் கேட்கப்படாது.
ந்ன்றி அருவை பாஸ்கர்.:)
அவாள்-சவால் கதறவைக்கும் கலைஞரின் கண்ணீர்க் கவிதை!
ஒவ்வொரு வரியாக பத்தி பிரித்துப் எழுதியிருப்பதால் கவிதை என்றே கண்டுணர்க!......
அவர் கவிதை எழுதி சம்பந்தப் பட்டவர்களுக்கு துன்பம் கொடுக்கிறாரோ இல்லையோ,அந்த கவிதையை பிரசுரிக்கும் பத்திரிக்கைகளின் அச்சகங்களில் அச்சு கோர்ப்பவரில் இருந்து,வாங்கிப் படிப்பவர்கள்,அனைவருக்கும் ஜன்னி,பேதி வருவது சர்வ நிச்சயம்!.
இந்த கவிதையில் அவர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கட்டி கலைஞர் தொலைக்காட்சியைப் பார்கின்ற பரவசத்தையும் அளிக்கிறார்!.
அய்யர்களைத் திட்டுவது மாதிரி இருந்தாலும் திட்டு வாங்குபவர்கள் மாறன் மகன்கள் என்பது போலத் தெரிகிறது.அவர்கள் பிராமணர்களா?(தாய் வழியில்).அதனால்தான், தாசில்தார் கலைஞர், அவர்களுக்கு புது சாதிச் சான்றிதழ்(வழக்கம் போல் பிடிக்காத மற்றவர்களுக்கு கொடுப்பது போல) கொடுக்கிறாரா தெரியவில்லை!
கவிதைக்கு அர்த்தம் கண்டுபிடித்தவர்கள் தயவு கூர்ந்து கீழ் கண்ட முகவரிக்கு ஒரு வரி எழுதிப் போட்டு விடவும்!.
திரு.அச்சுக் கோர்ப்பவர்
முரசொலி அச்சகம்
கோடம்பாக்கம்
சென்னை.
பி.கு: கவிஞர் கனிமொழியின் கவிதைகளைக் கண்டு(!) பிடித்து படித்தவர்கள்
படிக்கும் போதே கண்களில் சொர்கம் தெரிவதாகத் பரவசத்துடன் கூறியதாக, கேள்வி!.
பின்னே என்னத்துக்காக கவிதையைப் போட்டாய்? என்பவர்களுக்கு... யான் பெற்ற இ(து)ன்பம்! பெறுக இவ்வையகம் என்ற பரந்த மனப்பான்மைதான்! src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/1.gif">
உஷார். .....இனி கவிதை அரங்கேறும் நேரம்!...
அரசியலில் பொதுவாழ்வில்; ஏன், தனி வாழ்வில் கூட;
அனைவரையும் நம்பிவிடும் "அறியாமை'' என்றைக்கும் அடியேனுக்கு உண்டு!
(ஸ்ஸ்.....பெரியவங்க பேசும் போது சிரிக்கக்கூடாது!)
அடடா; அவர்கள் காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன.....
அம்மவோ; காலைப்பிடிப்பது தான் என்ன? என்ன? என்ன?
(ரொம்ப நொந்துட்டார் போலிருக்கே...)
அடிச்சது "சான்ஸ்'' கிடைச்சது "வாய்ப்பு'' என்றதும் "ஆத்துக்காராள்'' காட்டிய
(இது முரசொலி மாறனின் மனைவிக்கு!)
அன்பும் நன்றியும் கூட ஆலாய்ப்பறந்துவிடும்; ஆவியாகி மறைந்து விடும்.
ஆயிரத்தில் ஒருவன் இவர்-ஆயுள் மட்டும் மறக்க மாட்டார்! அனுபவிக்கும் பதவி,
அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல; "அவன் போட்ட பிச்சை'' யென்று அன்றாடம் நினைத்திருப்பார்;
(இது முரசொலி மாறனின் மகன்களுக்கு)
அப்படியொரு அழுத்தமான எண்ணங்கொண்டு அசைத்துப்பார்த்தேன்
அடிமரம் ஒட்டிய கிளையொன்றை!
அடடா-கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்
படிப்படியாய் அளந்து போட்டது போல் பாவி மனிதன் தலையிலிருந்து
படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக்கண்ட பின்பே
(அய்யய்யோ அவ்வளவு சிரமம் குடுத்திட்டீங்களா? பிரதர்ஸ்!)
உணர்ந்து கொண்டேன்; "அவாள்'' நமக்கு எப்போதும் "சவால்'' தான் என்ற உண்மை!
(அடடடா!. இப்பதான் அவர்கள்(அம்மா வழியில்) அய்யர்கள்ன்னு கண்டுபிடித்தாராம்)
உம்மையும் ஏமாற்ற உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கடும் விஷம் மொண்டு-
கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின்
நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள் கூட சிரிக்குமய்யா!
(யோவ்...வாங்கையா!...நாமும் சிரிச்சிடுவோம், இல்லையன்னா அடுத்த கவிதை ரெடியாயிரும்!........)
may be kamalhasan???
ஒருவேள உங்களபத்தியாவே இருக்க போகுது இட்லிவடை! சமிபத்துல அவர திட்டி இருக்கற பின்னூடங்கள நீங்க அனுமதிச்துனாலய இருக்கும்
இளங்கோவன் "எதையுமே ஊதுவதில் இந்தாளு கில்லாடி"ன்ன போது இந்தாளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் இப்படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அடிக்கடி மட்டம் தட்டி பேசுவது போல நினைத்துக் கொண்டு பிதற்றும் இந்த ஆளெல்லாம் நம் தமிழ் நாட்டுக்கு முதல்வராகித் தொலைத்திருக்கிறாதே என்று நினைக்கும் போது வேதனை தான் வருகிறது.
from Dinamalar (Teakadai Bench)
""அவாள் நமக்கு எப்போதும் சவால் தான்னு முதல்வர் ஒரு கவிதை எழுதிருந்தாரே... அது யாரை மனசுல வைச்சு எழுதிருக்கார்னு கண்டுபிடிச் சேளா ஓய்...'' என கேள்வி எழுப்பினார் குப்பண்ணா.
""பதவி கொடுத்ததா சொல்லிருக்கார்... அடிமரத்தை அசைச்சுப் பார்த்தேன்னு சொல்லிருக்கார்...
"அவாள்'னும் சொல்லிருக்கார்... இதைப் பற்றி கட்சி வட்டாரங்களிலும், எல்லா தரப்பிலும் பெரிய விவாதமே நடத்தி முடிச்சுட்டாவ...
""இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் பொருத்தமான ஆளா, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் தான் வர்றார்... அதனால, அவரைத் தான் முதல்வர் சொல்லிருக்கணும்னு எல்லா தரப்பும் ஏகமனதா தீர்மானிச்சுட்டாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.
""முதல்வர் மன வருத்தம் அடையற அளவுக்கு அவர் அப்படி என்ன செஞ்சார் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.
""சமீபத்துல நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்துல, "தி.மு.க., கூட்டணியில இருக்கவே கூடாது'ன்னு "ஸ்டிராங்'கா பேசினதா சொல்லுதாக... அதுமட்டுமில்ல, ரெட்டணை போலீஸ் தடியடி தொடர்பா விசாரிக்கப்போன ரங்கராஜன், அரசுக்கு எதிரா நிறைய பேசியிருக்கார்... எல்லாத்தையும் சேர்த்து வைச்சு தான் முதல்வர் கவிதை பாடிட்டார்னு நினைக்கேன்...'' என்றார் அண்ணாச்சி. பெஞ்ச் சிரித்தது.
கலைஞர் கருணாநிதியின் திமிங்கலக் கவிதையைப் படிக்க இங்கே வாருங்கள்.
ரசினா
www.rassena.blogspot.com
தசாவதாரத்தனமா ஒரு பதில்..
" இது கவிதை இல்லன்னு சொல்லல ஆனா கவிதையா இருந்திருதிருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்"
ராம்ஜி
Ramji, this is good one......... May be we can forward this to MK.
According to IPC, its an un-bailable offence to mock or insult a communuity or a group of people. Pretty ironic that this old fanatic keeps on doing this for all of his useless decades despite being an elected leader in a respectable position.
his use of brahmin community as a scapegoat for his personal troubles shows his mental maturity
http://www.youtube.com/watch?v=hN6XC_WK9HI&feature=related
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..!
Post a Comment