பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 18, 2008

இந்தியர்களை குறிவைக்கும் இ-மெயில் மோசடி

நாணயம் விகடனில் வந்த கட்டுரை.
எல்லோரும் ஒரு முறை படித்திவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ( பகைவர்களுக்கும் ) அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்....

சென்னையைச் சேர்ந்த னிவாசனின் வீட்டுக் கதவுகள் மூடிக்கிடக்கின்றன... அடித்துக்கொண்டேயிருக்கும் தொலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்... விடாது ஒலித்தால் வெறுத்துப் போய் எடுத்து, 'எதுவும் கேட்காதீங்க... நொந்து வெந்து போயிருக்கேன்... என்ன விட்டுடுங்க...' என்று குரல் கம்மப் பேசிவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் 21 லட்ச ரூபாயை இழந்துவிட்டு நின்றால் யாரால்தான் பேசமுடியும்! கம்ப்யூட்டரின் மெயின் இணைப்புவரை எல்லாவற்றையும் துண்டித்துவிட்டார். அந்த வழியாகத்தானே கொள்ளையர்கள் அவருடைய பணத்தை அள்ளிச் சென்றுவிட்டார்கள்.

'உங்கள் வங்கிக் கணக்கை அப்டேட் செய்யவேண்டும்... இந்த பட்டனை க்ளிக் செய்யுங்கள்' என்று ஒற்றை வரி இமெயிலாக வந்த தகவலை அடுத்து, னிவாசன் அந்த பட்டனை க்ளிக் செய்ய, அவருடைய வங்கிக் கணக்கு பற்றிய மொத்தத் தகவலும் களவாடப்பட்டுவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய வங்கிக் கணக்கை செக் பண்ணுவதற்காக முயற்சித்தபோது பாஸ்வேர்டு தவறு என்ற தகவலே தொடர்ந்து வந்திருக்கிறது. வங்கிக்குத் தொலைபேசி மூலமாகக் கேட்டபோதுதான் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த 21 லட்ச ரூபாய் மும்பையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்ட விபரீதம் தெரிய வந்தது.னிவாசன் போலீஸில் புகார் கொடுக்க... விசாரணை ஆரம்பமாகியிருக்கிறது. மும்பையில் உள்ள வங்கிக் கணக்கு ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அந்தப் பெண்மணி தொடர்ந்து வங்கிக்கு வந்து, 'ஒரு நிலம் வாங்குவதற்காக சென்னையில் இருந்து பெரிய தொகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்... கிரெடிட் ஆகிவிட்டதா?' என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால், கிரெடிட் ஆனவுடன் அவர் பணத்தை எடுத்துச் சென்றது யாருக்கும் உறுத்தலாக இல்லை. னிவாசனுக்கு அந்த இமெயில் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற அடிப்படையான தகவல்களைத் திரட்டியிருக்கும் காவல் துறை, இந்தப் புகாரை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருக்கிறது. சைபர் க்ரைம் பிரிவின் உதவியோடு விசாரணையில் இறங்கியிருக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவின் (வங்கி மோசடி தடுப்புப் பிரிவு) உதவி கமிஷனர் பன்னீர் செல்வம், இவ்விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.

''நெட்பேங்க்கிங் மாதிரியான விஷயங்கள் நம்முடைய வசதிக்காகத்தான் இருக்கின்றன. ஆனால், அதுபோன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது ரொம்பவே கவனமாக இருக்கணும். இப்போ 21 லட்சத்தை இழந்துட்டு நிற்கும் னிவாசன் ஒரு ரிட்டயர்ட் வங்கி அதிகாரி. அவருக்கே ஸ்லிப் ஆகிடுச்சு.

அவர் கணக்கு வெச்சிருக்கறது 'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில். அந்த வில்லங்கமான மெயில் வந்தது 'அட்மின் அட் ஐ.சி.ஐ.சி.ஐ. காம்' (admin@ICICIbank.com) என்கிற மெயில் ஐ.டியில் இருந்து. நம்முடைய வங்கிக் கணக்கை எதற்காக இன்னொரு பேங்க் நிர்வாகம் கேட்கிறதுனு ஒருகணம் யோசிச்சிருந்தா... அது போலியான இமெயில்னு புரிஞ்சிருக்கும். அவசரத்தில் பலர் இதையெல்லாம் கவனிக்கறதில்லை'' என்றார்.

''அவர்கள் எப்படி னிவாசனைக் குறிவைத்தார்கள்?'' என்று கேட்டபோது,

''பொதுவாக, இமெயில் மோசடிக்காரர்கள், எந்த ஒரு தனிநபரையும் குறிவைத்துச் செயல்படுவதில்லை. முதல்கட்டமாக ஆயிரக்கணக்கான இமெயில் முகவரிகளுக்கு ஒரு கடிதத்தை அனுப்புகிறார்கள். அதில் எந்த மீன் பதில் போட்டு சிக்குகிறதோ அதை வலையில் வீழ்த்தி விடுவார்கள். இதுதான் டெக்னிக். அதனால், நாம் இதுபோன்ற இமெயில்களுக்கு பதில் சொல்லாமல் டெலிட் செய்தாலே சிக்கலைத் தவிர்த்துவிடலாம்.

முன்பு, அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு கடைசியாக பாஸ்வேர்டு போன்ற முக்கியமான தகவலைக் கேட்டு ஏமாற்றினார்கள். இப்போது விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி, ஒரே க்ளிக்கில் அத்தனை தகவல்களையும் சுருட்டி விடுகிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் படித்தவர்கள்தான் என்றாலும், ஏமாற்று வேலை மும்முரமாக நடக்கிறது'' என்றார்.

இந்த மோசடியில் ஈடுபடும் சர்வதேச கும்பலின் இலக்கு பெரும்பாலும் இந்தியர்கள்தான். இங்குள்ள பணத்தை நேரடியாக வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லமுடியாது என்பதால், இந்தியாவில் உள்ள சிலரை அதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அதாவது, மிகச் சுலபமாக வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஒரு வழி என்று சொல்லி அவர்களுடைய வங்கிக் கணக்கை வாங்கிக் கொள்கிறார்கள். ஏமாற்றி சுருட்டப்படும் தொகை அந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்கள் சிறிய சதவிகிதத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதியை வேறு கணக்கிலோ அல்லது நேரடியாகவோ கொடுத்துவிட வேண்டும். ஏதாவது சிக்கலாகி வழக்கு அதுஇதுவென்று வந்தால் ஏமாற்றுக் கும்பல் தப்பிவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு கணக்கு எண்ணைக் கொடுத்தவர் மாட்டிக் கொள்வார்.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் சொல்லும் விஷயம் அதற்குச் சரியான உதாரணம்...

''என் அண்ணன் ராஜ்மோகனின் வங்கிக் கணக்குக்கான நெட்பேங்க்கிங் பாஸ்வேர்டை திருடிய இமெயில் மோசடிக் கும்பல், 12 லட்ச ரூபாயை வேறொரு கணக்குக்கு மாற்றிவிட்டார்கள். என் அண்ணன் சென்னை போலீஸூக்கு புகார் கொடுக்க, அவர்களும் விசாரணையில் இறங்கினார்கள்.

மும்பையில் உள்ள ஒரு ஆப்டிகல்ஸின் கணக்கில் அந்தப் பணம் மாற்றப்பட்டது தெரிந்து போலீஸ் அங்கே போனது. அந்த ஆப்டிகல்ஸ் உரிமையாளருக்கு எதுவும் தெரியவில்லை. அதன்பிறகு விசாரித்தபோது அந்தக் கடையின் மேனேஜர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்தக் கணக்கு எண்ணை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார். கடைசியில், அந்த மேனேஜருக்காகக் கடையைச் சேர்ந்தவர்கள் பணத்தைக் கட்டினார்கள்'' என்றார்.

விஞ்ஞானம் நமக்கு புதிதுபுதிதாக பல வசதிகளைக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. கூடவே, மோசடிப் பேர்வழிகள் அதற்கான குறுக்கு வழிகளையும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்.

மோசடிகள் பலவிதம் !
"நான் மேனஜராக இருக்கிற வங்கி கணக்குல நிறைய பேர் பணம் எடுக்காம இருக்காங்க.. அத உங்க அககவுண்டுக்கு மாற்றி விடுகிறேன். ஆளுக்குப் பாதியா பிரிச்சுக்கலாம். உங்க அக்கவுண்ட் நம்பரை அனுப்பி வையுங்க...!?

"உங்களுக்கு பி.எம்.டபிள்யூ. கார் பரிசு விழுந்திருக்கு.. கஸ்டம்ஸ் ட்யூட்டியை மட்டும் அனுப்பி வையுங்க...!"

"லாட்டரியில் உங்களுக்கு 100 கோடி ரூபா விழுந்திருக்கு... இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ் ட்யூட்டி கட்டணும்... 10 லட்ச ரூபாய் அனுப்பி வையுங்க..! ஒரு வாரத்துல 100 கோடிக்கு நீங்க அதிபதி..."

கோடீஸ்வரி கோமால ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்காங்க.. வாரிசு இல்லை. நான் அவரோட வக்கீல்.. அவரால செக்கில் கையெழுத்துப் போட முடியல.. நீங்க சிகிச்சைக்கு 5 லட்ச ரூபாய் மட்டும் உதவி செஞ்சா 50 லட்சமா அனுப்பி வைச்சிடுவோம்..."

"கோடீஸ்வரனான நான் உங்களை தத்துப் பிள்ளையா எடுத்துக்க விரும்புகிறேன்..."

"வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்... உங்க பேங்க் கணக்குல வந்து சேர்ற பணத்தை டிரான்ஸ்பர் பண்ணினால் போதும்... 10% கமிசன்..!"

இன்னொரு சீட்டிங்!

நெட் பேங்க்கிங் மோசடியைப் போலவே இன்னொரு இமெயில் மோசடி இருக்கிறது. அது உருக்கமான கதைகளைச் சொல்லியோ, அல்லது அதிரடி பரிசுப் போட்டியைச் சொல்லியோ ஏமாற்றுவது.

'அமெரிக்காவில் 300 கோடி டாலர் சொத்து இருக்கிறது. அதை க்ளைம் செய்ய யாருமில்லை. உங்கள் பேர், இனிஷியல் உட்பட எல்லாமே அந்தச் சொத்தின் உரிமையாளருடையதைப் போல இருக்கிறது. அந்தச் சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றிவிடலாம். அது வக்கீலாக இருக்கும் என் பொறுப்பு. புதிய டாகுமென்ட்டுகளை எழுதும் செலவு மட்டும்தான்... 1,000 டாலர் அனுப்புங்கள்' என்று மெயில் வரும். அமெரிக்காவில் சுப்பிரமணியோ, கோவிந்தசாமியோ இருக்க வாய்ப்பு இருக்கா என்று யாரும் யோசிப்பதில்லை. 300 கோடி டாலர் யோசிக்க விடாது!

ஆறு மாதம் முன்பு சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரியில் 200 கோடி டாலர் பரிசு விழுந்திருப்பதாகவும், அதற்கு இன்கம்டேக்ஸ், கஸ்டம்ஸ் டியூட்டி ஆகியவற்றைக் கட்டவேண்டும் என்று சொல்லி பணம் கேட்டிருக்கிறது ஒரு கும்பல். அவரும் அனுப்பியிருக்கிறார்.

அதன்பிறகும் விடாமல் அது இதுவென்று சொல்லி சுமார் 18 லட்ச ரூபாய்வரை கறந்திருக்கிறார்கள். கடைசியாக உங்கள் பணமெல்லாம் கன்டெய்னரில் அனுப்பப்பட்டு மும்பையில் இருக்கிறது. கஸ்டம்ஸ் க்ளியரன்ஸூக்காக 3 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்கள். எல்லா பணத்தையும் இழந்த பிறகு போலீஸூக்குப் போயிருக்கிறார் அந்தப் பெண்!( நன்றி: நாணயம் விகடன், 31 ஆகஸ்ட் 2008 )

13 Comments:

கானகம் said...

இதுவரைக்கும் எனக்கு வந்த மெயிலுக்கு கரெக்டா பணம் அனுப்பி இருந்து அவிங்களும் பணம் அனுப்பி இருந்தா பில்கேட்ஸ், மிட்டல் எல்லாம் எங்க வீட்டு காவல்காரனா கூட இருக்க முடியாது. அவ்வளவு பணம் எங்கிட்ட இருக்கும்.

அடுத்து ஒரு சூப்பர் மோசடி உங்க அப்ப்ளிகேஷன் அப்ப்ரூவல் ஆயிருச்சி.. உடனே பணம் கட்டுங்கன்னு.. எதுக்குடா அப்ரூவல்,, யார்ரா குடுத்தா அப்ப்ரூவல் அப்படின்னு நம்மளா யோசிச்சிகிட்டு இருக்க வேண்டியதுதான்..

வரும் மெயிலை ஒரு முறை நீங்கள் திறந்து பார்த்துவிடீர்களானால் அவர்கள் விடாமல் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

மத்திய கிழ்க்கு நாடுகளிலும் இந்த பஞ்சாயத்து இருக்கிறது. ஆனால் மொபைலில் எஸ் எம் எஸ் ஆக வரும்.

ஏகப்பட்ட பேர் பணம் கட்டி ஏமாந்த பின்னர் அரசு விழித்துக்கொண்டது.

ஜெயக்குமார்

manikandan said...

இத விட்டு தள்ளுங்க. உங்களுக்கு ஆப்பு வச்சாலும் வச்சிருவாங்க போல இருக்கு.
படிச்சு பாருங்க. இந்த வழக்குல தோத்து போய்ட்டா உங்க பேர கேட்டு மானநஷ்ட வழக்கு போட தமிழகமே பயங்கர ஆவலா இருக்காம்.

http://infotech.indiatimes.com/News/Google_India_faces_defamation_suit/articleshow/3375552.cms

Anonymous said...

மிகச் சரியான நேரத்தில் அனைவரையும் அலர்ட் செய்துள்ளது நாணயம்.

யூஸ்புல் போஸ்ட் இட்லிவடை


//உங்கள் நண்பர்களுக்கும் ( பகைவர்களுக்கும் ) அனுப்பி விழிப்புணர்வு....//

அதுதான் புரியலை, என்ன இதில் ஏதாவது "உள்குத்து" இருக்குதா?


சொல்லுங்க..

"கோடீஸ்வரனான நான் உங்களை தத்துப் பிள்ளையா எடுத்துக்க விரும்புகிறேன்..."

இதுக்கு நீங்க பதில் மெயில் கொடுத்ததால்தானே உங்களது "பாஸ்வேர்டு" திருடுபோனது?

நிஜம் பேசனும் இட்லிவடை. இல்லாட்டி "சாமி கண்ணைக் குத்திறும் !"

உங்களுக்கு "விழிப்புணர்வுத் திலகம்" என்ற பட்டத்தை அளிக்கிறேன்.

IdlyVadai said...

@அவணும் அவளும் - தகவலுக்கு நன்றி. நான் அதனால் தான் மற்றவர்கள் எழுதியதை எடுத்து போடறேன், நானே எழுதுவதில்லை :-).

@அனானி -
//அதுதான் புரியலை, என்ன இதில் ஏதாவது "உள்குத்து" இருக்குதா?//
நோ சான்ஸ் :-)

//நிஜம் பேசனும் இட்லிவடை. இல்லாட்டி "சாமி கண்ணைக் குத்திறும் !"//

இதெல்லாம் ரொம்ப ஓவர் :-)

ISR Selvakumar said...

உங்களை மாதிரி பல பேர், மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புதுப்புது விக்கெட் விழுந்து கொண்டே இருக்கிறது. போன மாதம் கூட என்னுடைய பழைய நண்பர் திடீரென என்னுடன் ரொம்ப நெருக்கமானார். மெதுவாக ஒரு நாள் அவர் லீக் செய்த விஷயம் இதுதான்.

"எனக்கு 5 கோடி ரூபாய் இன்டர்நெட் லாட்டரி விழுந்திருக்கிறதாம். அதை இரகசியமாக என் பேங்க் அக்கவுண்டுக்கு மாற்ற வேண்டும். உதவி செய்கிறாயா?"

Tech Shankar said...
"கோடிக்கணக்கில் பணம் தரப்போகிற ஒருவர் கேவலம் சில ஆயிரம் ரூபாய்களை நம்மிடம் எதிர்பார்க்கிறாரா?" -- இதை யோசித்தாலே எவரும் ஏமாறாமல் தவிர்த்துவிடலாம்.

இவ்வளவு கோடி ரூபாய் நான் உனக்குத் தருகிறேன். ஆனால் நீ எனக்குச் சில ஆயிரங்களை மாத்திரம் முன் பணமாகக் கொடு? முட்டாள்தனமாக இல்லையா?

ராமய்யா... said...

உழைக்காம வர்ற காச நம்ப கூடாது.. உங்க கையில் அது கிடைத்தாலும்..
இன்னும் நெறைய கூத்து நடக்குது..
என் நண்பன் ஏமாந்த தங்க காசு MLM ஒரு வகை.. நானும் அறிமுக மீட்டிங் போனேன்.. வர்ற எல்லாரும் software professionals தான்..
மயிரிழையில் நான் தப்பித்து தம்பிரான் புண்ணியம்...
எனக்கும் ஆசை வந்தது சேரலாமான்னு அவ்ளோ மூளை சலவை..
உழைக்காத பணம் குப்பைக்கு சமம்...

Anonymous said...

இந்த நியாயத்தை கேக்க யாருமே இல்லையா..
இப்படி ஒரு உபயோகமான பதிவ இ.வ போட்டுட்டாரே..
குசேலன்.. தசாவதாரம்.. சிவாஜி..ன்னு ஒரு சில வார்த்தைகளை சென்சார் பண்ணி.. என்னால தாங்க முடியல.. இ.வ க்கு ஏதோ அயிடுச்சு..
20 பதிவுக்கு ஒன்னாவது இதுபோல உபயோகமான பதிவு போடணும்னு அவரோடு சீனியர் டாக்டர் அறிவுரை வழங்கி இருக்கிறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையா இட்லி வடை?

priyamudanprabu said...

அலார்ட இரூங்கோஓஓஓஓஓஓஓஒ

Expatguru said...

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. Shell நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையிலிருந்து (என்று நான் நினைத்த) கடிதம் அது. "உங்களுக்கு ஷெல் பிரிட்டன் offshoreல் வேலை கிடைத்துள்ளது. உடனடியாக எங்களை தொடர்பு கொள்ளவும்" என்று அந்த மின் அஞ்சலில் கூறப்பட்டிருந்தது. மின் அஞ்சல் ஒரு attachmentஉடன் வந்தது. அதில் ஷெல் நிறுவனத்தின் (logo) லோகோ கூட இருந்ததால் அதை நான் உண்மை என்றே நம்பி விட்டேன்.

ஆனால், நான் நேர்முக தேர்வு கூட கொடுக்கவில்லை, என்னை எப்படி தேர்வு செய்தார்கள் என்று ஒரு நெருடல் இருந்தது. ஒரு உந்துதலில் பிரிட்டனில் உள்ள ஷெல் நிறுவனத்துக்கே மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன். அவர்கள், எனக்கு மின் அஞ்சல் அனுப்பியவனின் பெயரில் அந்த நிறுவனத்தில் யாருமே கிடையாது என்றும், அந்த கடிதமே ஒரு போலி என்றும் உடனடியாக பதிலளித்தனர்.

நல்ல வேளையாக நான் தப்பித்தேன். நாம் உஷாராக இல்லாமல் இருந்தால் நம்மை ஏமாற்றுவதற்கு தயாராக ஒரு கும்பலே உள்ளது.

Anonymous said...

Hmm... Good warning / Informative article... I totally agree that there are lots of ppl/mails which are involved in such activies...

But one thing that is concerning me is the exagration of the news... How can he loose 21 Lakh just like that... I guess not many bank will allow larger transactions so easily (Lots of bank has 1 Lakh limit per day) .. Also if there is some transaction like this happening... the will definitely call the person and check with him before they processes the transaction ( if these kind of transactions are not very frequent in that account) ...

Did the media just exagrated the incidence to make ppl read or to make the article spicy???

Anonymous said...

பல ஆண்டுகளாக எனக்கு இவ்வகை அஞ்சல்கள் வருவது வழக்கம். ஏற்கனவே இதுபோன்ற வலையில் எங்கள் ஊர் அன்பர் மாட்டி பணம் இழந்திருக்கிறார்.

எனக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு (பெரும்பாலும் ஆப்ரிக்க நாடுகளிலிருந்தே வரும்; ஊழலில் சேர்த்த பணம் அல்லது விமான விபத்தில் இறந்துபோன அரசாங்கத்துப்பெருசின் கேட்பாரற்றுக்கிடக்கும் பணம் இன்னபிற) நான் அமெரிக்க அதிபரை உதவிக்கு அழைக்கும்படி பதிலஞ்சல் அனுப்பிவிடுவது வழக்கம். இப்போதெல்லாம் 'Report as Spam' போன்ற மின்னஞ்சல் வசதியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன்.

அன்புடன்
முத்து

Rajthilak said...

நல்ல பதிவு. நன்றி.