பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 09, 2008

ஜிலேபியில் ஊறப்போட்ட ஜாங்கிரி

ரஜினி மேட்டர் ரொம்ப சீரியஸாக போவதால் ரிலாக்ஸ் செய்ய வாலி கவிதை.
அழகிரி விழாவில் - டி.எம்.எஸ்., அழகிரி, கலைஞர் ஆகியோரைப் பற்றி கவிஞர் வாலி வாசித்தடி.எம்.எஸ்
டி.எம்.எஸ். என்றால் டாஸ்மாக் ஷாப்
சாரீரத்தில் சாராயம் காய்ச்சுகிறார்.
அதை தமிழர்களின் காதுகளில் பாய்ச்சுகிறார்.
அது நாட்டுச் சரக்கல்ல.
பாட்டுச் சரக்கு.
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்
பாட்டெழுத வாய்ப்புக் கேட்டு உன் வீட்டு
வாசலுக்கு நான் படையெடுத்தேன் கஜினியாக.
நீதான் இந்த குசேலனை குபேரனாக்கிய ரஜினி

அழகிரி
அஞ்சா நெஞ்சன் ஓர் அன்பு பழகிரி.
ஈரம் நிறைந்திருக்கும் நீலகிரி.
அழகிரி தெற்கில் உதித்திருக்கும் அருணகிரி
அழகிரி அறியாத சொல் ஆங்கிரி (கோபம்)
ஜிலேபியில் ஊறப்போட்ட ஜாங்கிரி
கழகத்தின் முகவரி
மதுரையில் வாழும் மற்றொரு
கலைஞர்
நீ மந்திரியாக இல்லாவிட்டாலும்
மக்களின் மணங்களில் மன்னனாக இருக்கிறாய்

கலைஞர்
கலைஞர் 2 காலால் நடக்கும் முன்றாம் தமிழ்
5 விரல்களை அகலவிரித்துக்காட்டி
ஐந்துமுறை அரியணை
ஏறிய ஆறாம் அறிவு
அரசியல் அரங்கில்
குத்துப்பாடுகளுக்கு நடுவில்
குன்றாமல் நிமிர்ந்து இருக்கும்
பத்துப்பாட்டு
மறுபடியும் மதுரை
வந்திருக்கும் தமிழ்ச்சங்கம்
எல்லோருக்கும் நீ கலைஞர்
எனக்கு நீ கடவுள்
என் உயிர் எனும் பயிர்
நிமிர்ந்து இருப்பது உன்னால்
எங்கள் பாட்டரசை பாராட்ட
வந்திருக்கும் நாட்டரசு
உறுதியானது உன் கூட்டணி
தலைவர் என்று உன்னை
தலைமேல் தாங்க
தமிழகம் தவம் இருக்கும்
தமிழ்மணம்
இருக்கும்போது
திண்டிவனம் எதற்கு
உழவர்பால் உருகிய உனது
சிந்தை உருவாக்கியது
உழவர்சந்தை
விவசாயிகளை பற்றி
விஜயகாந்த் கேட்க
நீ பதில் சொல்ல
வேண்டியது இல்லை
சமத்துவபுரம் சமைத்தவன் நீ
சரத்துமாருக்கு பதில் சொல்ல
வேண்டியது இல்லை
எப்படி பறப்பது என்பதௌ
விட்டில் பூச்சிகள்
சொல்லிக்கொத்தா
விமானத்துக்கு தெரியவேண்டும்
நீ மூத்த தலைவன், புகழ்
பூத்த தலைவன்
தடியில்லாத பெரியார்
பொடியில்லாத அண்ணா
இருவரும் உன்வடிவில்
இருக்கிறார்கள் ஒண்ணா

இவ்வாரு கவிதை படித்துவிட்டு, கலைஞருக்கு சால்வை அணிவித்து, அவர் காலிலும் விழுந்தார் வாலி. ( கவிதையே காலில் விழுந்த எஃபெக்ட் )

பிகு: கூகிளில் 'வாலி' என்று தேடும் போது இந்த படம் தான் கிடைத்தது :-)

11 Comments:

Anonymous said...

Superb comments....

சில பிரைவேட் கம்பெனில MDக்கு ஜால்ரா போடர மாதிரி நம்ம வாலி கருநாநிதிக்கு போடறாரு...

Koodave Azhagirukkuma.....!!!

Anonymous said...

k.k. - kalaignar kooja!!

ஹரன்பிரசன்னா said...

வாலி ஏன் இன்னும் கனிமொழி, கயல்விழி, உதயநிதிக்கெல்லாம் பாட்டு எழுதாமல் இருக்கிறார் என்று வருத்தமாக இருக்கிறது.

Anonymous said...

அழகிரி அறியாத சொல் ஆங்கிரி (கோபம்)

Azhagiri would have been angered by this.

மாயவரத்தான் said...

Haranprasanna comment in Idly vadai..?

mm.. nadakkattum, nadakkattum.

Nilofer Anbarasu said...

பின் குறிப்பையும் படத்தையும் வெகுவாக ரசித்தேன். அருமையான இட்லிவடை டச்.

Anonymous said...

வாலி ஏன் இன்னும் கனிமொழி, கயல்விழி, உதயநிதிக்கெல்லாம் பாட்டு எழுதாமல் இருக்கிறார் என்று வருத்தமாக இருக்கிறது

waiting for you to say this :)

Anonymous said...

பிகு: கூகிளில் 'வாலி' என்று தேடும் போது இந்த படம் தான் கிடைத்தது :-)

கவலையே படாதீர்கள், இனிமேல் வந்துவிடும்!

Anonymous said...

"ஸ்ரீ ரங்கநாதரின் பாதம்" - மஹாநதி.

"முகுந்தா" - தசாவதாரம்
'கல்லைமட்டும்" -தசாவதாரம் போன்ற "சத்தான" பாடல்களை எழுதிய வாலி எழுதியி, படித்த இந்த கவிதை ஒரு "வெத்தான" கவிதை.

"ஜால்ரா" ரொம்ப ஒவராக இருக்கிறது. "கேப்டனை" தாக்கி கவிதை சொல்லியவர், 'வருங்கால முதல்வரை கேப்டனை", அவர் முதல்வரான(!) பிறகு எப்படி புகழ்ந்து ஜால்ரா அடிக்கப் போகிறார் பாருங்க.

திரைஉலகில் 4 & 5 தலைமுறை கடந்து நிலைத்து நிற்பது வாலியின் உண்மையான சாதனை.

Hariharan # 03985177737685368452 said...

//ஜிலேபியில் ஊறப்போட்ட ஜாங்கிரி//

கவிதையில் பொருள் குற்றம் இருக்கிறதே!

ஜிலேபி என்பதும் ஒருவகை ரேண்டம் டிஸைன் ஜாங்கிரிதானே!

ஜீராவில் ஊறப்போட்ட என்றிருக்க வேண்டும்.

தமிழின் தமிழ் கருணாநிதியை வைத்துக்கொண்டே பொருள் குற்றம் கொண்ட கவிதையை இயற்றி இருக்கிறார் வாலி!

தமிழின் தமிழ்வாரிசை வடநாட்டு இனிப்புடன் ஒப்பிட்டுப்பாடி தன்விசுவாசம் வடநாட்டில் என்று சொல்ல வருகிறாரா வாலி!

இல்லை தன் ரவுடி மகனைப் புகழ்ந்து பாடப்பட்ட மயக்கத்தில் தமிழின் தமிழ் கருணாநிதி சென்றுவிடுவார் எனும் துல்லியமான கணிப்பா?

எப்படியோ தனது ஆட்சியில், இப்படி பாடலின் பொருள்குற்றத்துக்காக நக்கீரனை எரித்து மீட்ட பொற்றாமரைக்குளம் இருக்கும் மதுரை மீனாஷி கோவிலுக்குள் பங்க்கடை காஷ்மீரிகளால் குண்டுவெடிப்பு மிரட்டல் காரணமாக
நவீன செண்பகப்பாண்டியன் /ராஜராஜசோழன் தமிழின் தமிழ் கருணாநிதி வருவதற்கு அஞ்சுவார் எனும் உண்மை தரும் தைரியம்தானெ வாலியை இப்படிப் பொருள் குற்றத்துடனான பாடலோடு சத்தமாக ஜால்ரா அடிக்கவைக்கிறது??!!

Erode Nagaraj... said...

//கலைஞர் 2 காலால் நடக்கும் முன்றாம் தமிழ்//
இல்லையில்லை... மூன்று காலால் நடக்கும் இரண்டாம் (தர) தமிழ்...