பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 22, 2008

எது மதச்சார்பற்ற கட்சி - திமுக ? அதிமுக ?

முரசொலி வழியாக குமுதம் ரிப்போட்டர் கட்டுரை + துக்ளக் தலையங்கம் படித்தால் ஒரளவுக்கு புரியும்.

மதச்சார்பற்ற கட்சியா அ.தி.மு.க.?

தி ராவிடக் கட்சிகள் மதவாதக் கட்சிகள் அல்ல என்று இடதுசாரி அரங்கிலிருந்து ஒரு குரல் எழுந்ததாக ஏடுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

திராவிடர் கழகம்-நிச்சயமாக மதவாதக் கட்சி அல்ல.

தி.மு.கழகம்-உறுதியாக மதவாதக் கட்சி அல்ல.

அண்ணா தி.மு.கழகம்? கேள்விக்குறி படமெடுத்து நிற்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். இருந்தவரை அந்தக் கழகம் மதவாத சக்திகளுக்கு வேலி போட்டு நிறுத்தி இருந்தது. மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி உள்பட எத்தனையோ பி.ஜே.பி. தலைவர்கள் மரியாதை நிமித்தமாவது அவரைச் சந்திக்க ஆசைப்பட்டனர். ஆனால், கடைசி வரை கதவுகள் திறக்கப் படவில்லை.

செல்வி ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்றார். தான் தலைமை ஏற்பது திராவிட இயக்க வழி வந்த கழகம் என்பது அவருக்கு தெரியாதா? தெரியும். ஆனால், தான் ஒரு இந்துத்துவா என்பதனை அவர் மறைத்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து அதன்மீது ராமருக்கு ஆலயம் அமைப்போம் என்று அத்வானி, படைதிரட்டிச் சென்றார். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட எல்லா இந்து முன்னணி அமைப்புகளும் பங்குகொண்டன. இந்தத் திருப்பணியில் அண்ணா தி.மு.கழகமும் சிம்பாலிக்காகக் கலந்து கொண்டதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பாராட்டுத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் தேசிய ஒருமைப் பாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி அவர் ஆணித்தரமாக வாதிட்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானியே அம்மாவின் வாதம் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கிவிட்டார்.

``இந்த அளவிற்கு எங்களால் கூட வாதாட முடியாது’’ என்றார்.

பாபர் மசூதியை இடித்துத்தான் அங்கே ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமா என்று பின்னர் விவாதம் எழுந்தது. அயோத்தியில் அங்கே ராமருக்கு ஆலயம் எழுப்பாமல் இத்தாலியிலா எழுப்ப முடியும்? என்று எரிசரம் தொடுத்தார் ஜெயலலிதா.

இந்துக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க அவர் அச்சப்பட்டதேயில்லை. அந்த வகையில் பி.ஜே.பி.யே அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைத் தனிமைப்படுத்த அண்ணா தி.மு.க. ஓர் அணி அமைத்தது. அந்த அணியில் இடதுசாரி கட்சிகள் அங்கம் பெற்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் ஆதரவுக் கரம் நீட்டின.

சென்னை கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கு கொண்டு, பி.ஜே.பி.யோடு உறவு கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார். இனி எந்தக் காலத்திலும் அந்தத் தவறைச் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி தந்தார். அன்றைய நிலையில் அவர் அப்படி வாக்குறுதி தந்தது காலத்தின் கட்டாயம். ஆனாலும் அவர் இந்துத்துவ ஒளி விளக்குதான்.

தேர்தலுக்குப் பின்னர் அவர் அரியணை ஏறினார். அவர் செய்த முதல் பணி என்ன? மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அன்னதானம் என்று ஆரம்பித்தார். தி.மு.க. தயவில் சட்டமன்றத்தை எட்டிப்பார்த்த பி.ஜே.பி. உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.

அடுத்து அவர் செலுத்திய ஏவுகணை தோழமைக் கட்சிகளைத் திகைக்க வைத்தது. ஆனால் இந்துத்துவா உலகம் ‘அன்னையே வாழ்க’ என எக்காளம் ஊதியது. ஆம். அவர் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தார். மையத்தில் ஆளும் போதும் மாநிலங்களில் ஆளும் போதும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவர பி.ஜே.பி.க்கு துணிச்சல் பிறந்ததில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக இப்படிச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான். அதனைப் பார்த்துதான் நரேந்திர மோடியே அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தார்.

நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். இந்தியா முழுமையும் எழுந்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் கண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாயே ஆடிப்போய்விட்டார். அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று ஆங்கில ஏடுகள் எழுதின.

ஆனால், செல்வி ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நாகபுரியிலிருந்து ஒரு குரல் எழும்பியது. அ.தி.மு.க. அரசு மீது கை வைக்காதே என்று பகிரங்கமாக வாஜ்பாய்க்கே அந்தக் குரல் கட்டளையிட்டது. அந்தக் குரல் பி.ஜே.பி.களின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைமையின் ஆவேசக் குரல்.

எங்கோ வனாந்தரத்தில் பிறந்த மூங்கில் இங்கே புல்லாங்குழலாக கண்ணனின் கரங்களில் காட்சி அளிக்கவில்லையா? அதே போல திராவிட இயக்க வழிவந்த அ.தி.மு.க. இன்றைக்கு இந்துத்துவா கோட்பாடுகளின் பூபாளம் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது.

‘படுகொலைகளுக்கு 48 மணி நேர சுதந்திரம் அளித்தவர்’, ‘சைத்தான்களுக்கு சல்லடம் கட்டி விட்டவர்’ என்றெல்லாம் நரேந்திர மோடிக்குப் பட்டங்கள் சூட்டினார்கள். ஆனால், அதற்கு அப்பால் அவர் இந்துத்துவாவின் போர்ப் படைத் தளபதி என்பதனை அவர்கள் மறந்துவிட்டனர். எனவேதான் மோடியின் முடிசூட்டு விழாவில் செல்வி ஜெயலலிதா பங்கு கொண்டார், பரிசளித்தார்.

அந்த விழாவில் பி.ஜே.பி. முதல்வர்கள் அல்லாமல் கலந்து கொண்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று பெருமை பெற்றார்.

மோடியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதா என்று இடதுசாரி கட்சிகள் கோபக் குரல் எழுப்பின. ஆனால் அதனைப் பற்றியெல்லாம் அம்மா கவலை கொண்டதில்லை. கொண்ட கொள்கையில், ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் அவர் உறுதியாகப் பயணிப்பவர்.

சேதுசமுத்திரத் திட்டம் தமிழகத்தின் ஒரு நூற்றாண்டுக்காலக் கனவுத் திட்டம். அந்தத் திட்டத்தை வலியுறுத்தாத தமிழகத் தலைவர்களே இல்லை. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் லட்சோப லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் ராமர் கட்டிய பாலத்திற்குச் சேதாரம் ஏற்படும் என்று குரல் கொடுத்து அந்தத் திட்டத்தையே தடுத்து நிறுத்தியிருப்பவர் ஜெயலலிதா.

சேதுத் திட்டமா? ராமர் பாலமா? ராமர் பாலம் சேதப்பட்டால் கோடானு கோடி இந்துக்களின் இதயம் புண்பட்டு விடும் என்று வாதிட்டு வருபவர் செல்வி ஜெயலலிதா.

அவருடைய செயல்பாடுகளெல்லாம் எந்தத் தத்துவக் கோட்டிற்குள் அடங்கும் என்று ஆராய்வது வேலை வெட்டி இல்லாதவர்கள், பொழுதெல்லாம் கட்டாந்தரையில் புல் பறிப்பதற்குச் சமம். அவருடைய அறிவிப்புக்கள் கணீரென்று வரும். செயல்கள் மத்தாப்புச் சிரிப்போடு அட்டகாசமாக வரும், மதச் சார்பற்ற கோட்பாடுகளெல்லாம் அவரைப் பொறுத்தவரையில் நமத்துப் போன வெடிக்காத பட்டாசுகள்தான்.

‘நான் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்’ என்று சட்டமன்றத்தில் அவர் சங்கநாதம் செய்தார். எங்காவது மேடையில் இப்படிப் பிரகடனம் செய்தால் காற்றோடு போயிருக்கும். சரித்திரத்தில் பதிய வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்திலேயே பதிவு செய்து விட்டார்.

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளர் ஷெகாவத்திற்குத் தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

இப்படி ஊசலாட்டமின்றி இந்துத்துவ அடிச்சுவட்டில் அ.தி.மு.க. தெளிவாக நடைபோட்டுச் செல்கிறது. எனவே, அந்தக் கழகம் மதச் சார்பற்ற கட்சியா, மதவாதக் கட்சியா என்று மூளையைக் குழப்பிக் கொள்ளலாமா?

சீட்டுப் பங்கீடு அடிப்படையில் உடன்பாடு காண விரும்புகிறவர்கள் அந்தக் கழகத்தை அணுகலாம். கூட்டணியும் தேர்தல் வரைதான். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வழியில் பயணம் செய்யலாம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஓர் அணி. தீர்ப்பிற்குப் பின்னர் வேறு அணி என்ற நிலையை அ.தி.மு.க. எடுக்கும் என்பதை அடிக்கடி சிலர் சுட்டிக்காட்டுவதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

- நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர், 24.8.2008 ( இந்த கட்டுரை முரசொலி 21.08.08ல் வந்தது )
காமெடியன்களே உஷார் ! கலைஞர் வருகிறார் !

"பாபர் மசூதி நிகழ்ச்சியால் பா.ஜ.க.வின் கொடூரத்தை நாம் புரிந்துகொண்டோம்
– அதற்குப் பிறகு நாம் எடுத்த நிலையிலே நிலையாக நிற்கப் போகிறோமா இல்லையா என்பதை முடிவு செய்தாக வேண்டும்'

– என்பது, 12.8.08 முரசொலியின் தலைப்புச் செய்தி. 11.8.08 அன்று தமிழக முதல்வர், ஆற்றிய உரையின் சம்பந்தப்பட்ட பகுதி இது :

"...எந்த நிகழ்ச்சி நம்மைக் குலுங்க வைத்தது? பாபர் மசூதி நிகழ்ச்சியால் பா.ஜ.க.வின் கொடூரத்தை நாம் புரிந்துகொண்டோமா இல்லையா? அதற்குப் பிறகு நாம் எடுத்த நிலை என்ன? அந்த நிலையிலே நாம் நிலையாக நிற்கப் போகிறோமா இல்லையா? என்பதைத்தான் நாம் முடிவு செய்தாக வேண்டும்...'

பாபர் மசூதி நிகழ்ச்சியால் "குலுங்கிய' கலைஞர், அந்த குலுங்கலை நினைத்து, இப்போது குலுங்காமல் நின்று ஆற்றியிருக்கிற வீர உரை, நம்மைப் பரவசப்படுத்துகிறது. அன்று குலுங்கிய கலைஞர், இன்று உண்மைகளைப் போட்டுக் குலுக்கியிருக்கிற குலுக்கில், நிஜம் நிலைகுலைந்து போயிருக்கிறது.

பாபர் மசூதி நிகழ்ச்சி நடந்தது – டிசம்பர் 6, 1992. அது கலைஞர் குலுங்கிய தினம். பா.ஜ.க.வின் "கொடூரம்' அவருக்குப் புரிந்த தினம். குலுங்கிப் போய், பா.ஜ.க.வின் கொடூரத்தைப் புரிந்துகொண்ட பிறகு, அவர் எடுத்த நிலை "அந்தப் பண்டாரப்
பரதேசிகளை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம்' என்பதுதான். இது ஒரு நிலை.

பிறகு, இரண்டே வருடங்களில் (அதாவது, "பண்டாரப் பரதேசி' நிலைக்குப் பிறகு இரண்டாண்டுகளில்) குலுங்கி, கொடூரத்தைப் புரிந்துகொண்ட பின் ஏழு ஆண்டுகளில், பா.ஜ.க. ஆதரவாளராக மாறினார் கலைஞர். இது இரண்டாவது நிலை.

இதையடுத்து, தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சியுடன்
இணைந்து பிரச்சாரம் செய்தார்; பா.ஜ.க.வுக்காகவும் பிரச்சாரம் செய்தார். இது
மூன்றாவது நிலை.

பின்னர், பா.ஜ.க. அமைச்சரவையில் பங்கேற்று, பதவிகளை வகித்து, மாறனின் மருத்துவச் செலவுகளுக்கு மத்திய பண்டார பரதேசிகள் கட்சி செய்த உதவிகளைப் பெற்று, மகிழ்ந்தது – நான்காவது நிலை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு சில மாதங்கள் மட்டுமே குறைவாக, மந்திரி பதவிகளை அனுபவித்து விட்டு, தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்காக, மத்திய பா.ஜ.க. அரசை விட்டு விலகியதும் – அந்த விலகலுக்கு "ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு அமைச்சர் பதவி கேட்டோம்; வாஜ்பாய் தர மறுத்துவிட்டார்; அதைக் கொடுக்காததால், விலகினோம்' என்பது உட்பட, வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு காரணங்களை கலைஞர் கூறி வந்ததும் – ஐந்தாவது நிலை.
இந்த மாதிரி பல நிலைகளை எடுத்துவிட்டு, "அப்போது நாம் எடுத்த நிலை என்ன? அந்த நிலையில் நாம் நிற்கப் போகிறோமா இல்லையா?' என்றால் என்ன அர்த்தம்? ஒன்றா இரண்டா அவர் எடுத்த நிலைகள்! அதில் எந்த நிலையை இப்போது சொல்கிறார் என்பது கடவுளுக்கு... மன்னிக்கவும்... பகுத்தறிவுக்குதான் வெளிச்சம்!

இப்படியாகத்தானே, பாபர் மசூதி நிகழ்ச்சியைக் கண்டு, குலுங்கோ குலுங்கு என்று குலுங்கி விட்டு, அலுங்காமல் குலுங்காமல் ஆட்சியில் பங்கு பெற்று, அமைச்சர் பதவிகளை வகித்துவிட்டு – இப்போது "அந்த நிலையில் நிலையாக நிற்கப் போகிறோமா, இல்லையா?' என்று கலைஞர் பேசுவதைக் கேட்டு, நாம்
குலுங்குகிறோம் – தாங்க முடியாத சிரிப்பு வந்தால் குலுங்காமல் என்ன செய்வது!

கலைஞரின் வீராவேசத்தைக் கண்டு, தமிழகம் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறது! வடிவேலு, கவுண்டமணி, விவேக்... போன்ற காமெடியன்களே, உஷார்! கலைஞர் வருகிறார்!

( நன்றி: துக்ளக் )

11 Comments:

manikandan said...

நல்லா இருங்க இட்லிவடை.

முரசொலியும், நமது எம் ஜி ஆர் படிக்க அரம்பிசீங்கனா எங்களுக்கு இன்னும் நல்லா பொழுது போகும்.

நீங்க இன்னும் துக்ளக், குமுதம் ரிப்போர்ட்டர் லெவல்லயே காமெடி பண்றீங்க.

நீங்க சென்று அடைய வேண்டிய இடம் இது அல்ல.

Anonymous said...

கருணாநிதி-ஐ போன்ற போலி மதசார்பின்மை-வாதிகளை நம்பி ஓட்டு போடும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் வாக்காளர்கள் இருக்கும் வரை எத்தனை முறை நிலை மாறினாலும் தி.மு.க தான் இனக்காவலர்கள், போலி மதசார்பின்மை-வியாதிகள். ஷபனா ஆஸ்மி சொல்கிறார் அவர் முஸ்லிமாக பிறந்ததால் தான் அவரால் மும்பையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை வாங்க முடியவில்லையாம்!

மாயவரத்தான் said...

இந்த மாதிரி ஏக்கு மாக்கா உண்மைய போட்டு உடைக்கிறதனால தான் பதில் சொல்ல முடியாம 'அவாள்' நமக்கு 'சவால்'ன்னு பெனாத்த முடியுது!

Anonymous said...

MK take different Avatharam in every election. He is keen for welfare for his Family(ies). if BJP is communal, what about him he is castiest evil force, next, why he aligned with IUML & TMMK both are communal parties. people will know his real character

Anonymous said...

2002 ல் குஜராத் பற்றி எரியும் போது அது அம்மாநில விவகாரம் என்று சொன்ன கருணாநிதி இன்று இவ்வளவும் பேசுகிறாரா. நாளைக்கே பாஜகவுடன் சேர்ந்தால்தான் சொத்துக்களைக் காப்பாற்ற முடியுமென்றால் சில காரணங்களை கண்டுபிடித்து அதை நியாயப்படுத்தி
முரசொலியில் எழுதுவார்.

Anonymous said...

ada idly vadai unakku yen pa indha vendadha velai ellam.

Anonymous said...

வார்த்தை ஜாலம் தெரிஞ்சவர் அவரு இட்லிய வடையா ஆக்குவாரு வடைய இட்லியா ஆக்குவாரு ஜாக்கரதையா இருங்க.!

Anonymous said...

madhasarpinmai enpadhu ellam kuttani matratthirkku mattumae uthavum oru ematru velai athu dmk or admk ukkum sari.

Krish said...

எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது. யார் யாருடன் வேணுமானாலும் கூட்டணி வெய்த்து கொள்வார்கள். அது அப்போதுள்ள சூழ்நிலையைப் பொருத்தது. மத்தபடி இந்த அறிக்கைகலெல்லாம் படிக்காத பாமர மக்களை ஏமாற்ற!

R.Gopi said...

மானிடன் said...

வார்த்தை ஜாலம் தெரிஞ்சவர் அவரு இட்லிய வடையா ஆக்குவாரு வடைய இட்லியா ஆக்குவாரு ஜாக்கரதையா இருங்க.!

-----------------------------------

Super comments. Yes, idlyvadai, be careful, naan ungala sonnen.

Anonymous said...

இந்த அறிக்கைகலெல்லாம் படிக்காத பாமர மக்களை ஏமாற்ற!
>>No it is to make the educated people fools. Normally rural people are more intelligent than us.