பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 20, 2008

ஜெ - சர்வே + தலையங்கம்

ஆனந்த விகடன் தலையங்கம் + ஜூவி சர்வே

அடேங்கப்பா! என்னவோர் ஆர்ப்பாட்டம்... எத்தகைய கோலாகலம்!

கோவையிலும் சென்னையிலும் விமான நிலையம் தொடங்கி வழி நெடுக மேளதாளம்... பட்டாசு வெடித்து, பூரண கும்பத்துடன் வரவேற்பு! 'வெற்றிகரமாக' 125 நாட்கள் ஓடி முடிந்திருக்கின்றன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'குளுகுளு கொடநாடு எஸ்டேட் ஓய்வு'க் காட்சிகள்!

திடீரென்று ஒரு நாள் சட்டசபை வந்து கையெழுத்திட்டார்; தடபுடலாக சபைக்குள் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்தினார்; விமானம் ஏறிக் கிளம்பினார். அதோடு சரி...

விலைவாசிப் பாம்பு கடித்து, தொண்டை வரை விஷம் ஏறி பொதுஜனம் துடித்தபோதும், அணு சக்தி ஒப்பந்தம் மத்திய அரசையே ஆட்டிப் பார்த்தபோதும், கொடநாட்டிலிருந்து வெளியான அறிக்கைகளும் போராட்ட அறிவிப்புகளும் மட்டுமே 'ஜெயலலிதா என்ற எதிர்க்கட்சித் தலைவியும் இருக்கிறார்' என்று நினைவூட்டின!

இதற்கு முன் முதல்வராக இருந்தபோது, 'ஒருநாளைக்கு இருபது மணி நேரம் உங்களுக்காக உழைக்கிறேன். தூங்கும்போதுகூட இந்த நாட்டை முதல் நிலைக்குக் கொண்டுசெல்வது பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறேன்!' என்று அவர் சொன்ன வார்த்தைகள் அத்தனை சீக்கிரம் மறந்துவிடுமா என்ன?

'முதல்வர் பதவியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டினால், பொது வாழ்க்கைப் பணி செய்வேன்; இல்லையேல், எஸ்டேட்டில் ஓய்வெடுப்பேன்' என்றால் எப்படி?
'கடைசி நேரம் வரை களத்துக்கே வராமல் இருந்துவிட்டு, தேர்தல் நெருக்கத்தில் வெளியே வந்து, ஆளுங்கட்சிக்கு எதிராகத் தீப்பறக்க சபதங்கள் போட்டு, புளித்துப் போன பழைய வாக்குறுதிகளையே மறுபடி கொடுத்தால் போதும்... மக்களின் மறதியை மூலதனமாக்கி, அவர்களின் உணர்வுகளை உசுப்பி, மறுபடி வோட்டுகளைக் குவித்துவிடலாம்' என்று 'அற்புத சித்தாந்தம்' வைத்திருக்கிறாரோ அம்மையார்?

பதவியில் இல்லாத காலத்தில் விதைக்கின்ற உழைப்புதான், மக்களின் மனதைக் கவர்ந்து மறுபடியும் அரியணையில் அமரவைக்கும். விதைக்கிற நேரத்தில் ஊருக்குப் போய்விட்டால்... அறுக்கிற நேரத்தில் ஆள் தேவையில்லாமல் போகும். அம்மையார் படிக்க மறந்த பாடம் இது!
( நன்றி: ஆனந்த விகடன் )
( நன்றி: ஜூவி )

7 Comments:

Anonymous said...

Oh.Great.The speed with which, the article from Ju.Vi. had been uoplaoed here - in a matter of aboyt 5.00 hrs - is really coomendable.Congrats.
DR.G.Palani

Anonymous said...

சர்வே 5, 6, 10 நூற்றுக்கு நூறு உண்மை.

அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.

இவற்றைப் படித்தாவது "அம்மா" அவர்கள் வேகமான,விவேகமான அரசியல் நடத்துவாரா?

தற்போதைய ஆளுங்கட்சியின் மீது மக்களின் அதிருப்தி திரும்பியுள்ளது. அதை முழுவதுமாக எதிர்ப்பு ஒட்டாக மாற்றி அடுத்த "டெல்லி கிங் மேக்கராக" மற்றும் தமிழக சி.எம்மாக அம்மா அமர்வார்களா? மில்லியன் டாலர் கேள்வி இது. இது அந்த பெருமாளுக்கே(!) வெளிச்சம். சாரி அந்த அம்மாவுக்கே வெளிச்சம்.

உறுதியாக அம்மாவுக்கு இன்னும் ஒரு முறை சான்ஸ் இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க இட்லி வடை?

கலைக்கோவன் said...

நீ ஆயிரம் தான் சொல்லு...,
தமிழ் நாட்டு மக்களை நம்ப முடியாது.
இரட்டை இலையும் ....
M.G.R பேரும் ....
இருக்கிற வரை .....
எத்தனை கருத்து கணிப்பு போட்டாலும்
அதெல்லாம் பொய்யாக்கி
அம்மாவை C.M ஆக்கிவிடுவார்கள்.
..........................
ஜெயா டிவியில் ரபி -யோட
program பாருங்க..
முதுகெலும்பு உடைஞ்ச முட்டாள்கள்
எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரியும்.
அப்படி ஒரு இ(செ)யற்கை.

ஆனந்த் தூரன் said...

அம்மா ஆட்சியில் சிலர் மட்டுமே ஆடிகொண்டிருப்பார்கள். ஆனால் இப்ப பாருங்க! ஆளாளுக்கு ஆட்டம். பூங்கோதையம்மா லஞ்ச ஒழிப்புத்துறையை மிரட்டராங்க முன்னாள் கைத்தறி ராஜா தனி நீதித்துறை மற்றும் நில அளவை துறை வைத்திருக்கிறார். இந்த அவலமெல்லாம் அப்போது இல்லை. எந்த அறிகுறியும் இல்லாமல் விறுவிறுவென்று உள்ளேயே வளர்ந்து ஆளைக்கொல்லும் நோய் போன்ற ஒன்று இன்றைய ஆட்சியில் வளர்ந்துகொண்டிருப்பது கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இது மிக மிக அபாயகரமானது. நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் தொல்லை நிச்சயம் உண்டு.

Anonymous said...

sariyana adi.

நாரத முனி said...

ஆனா ஒரு விஷியம் ஒத்துக்கணும், there was a trackablity of all her minister's activities when she was the CM. நேத்துவரைக்கும் மந்திரி இனிக்கி நீ எந்திரினு ஒரு கண்ட்ரோல் இருந்தது. whereas கலைஞருக்கு சினிமாக்கு வசனம் எழுதவே நேரம் பத்தல பாவம்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இதிலிரிந்து அறிந்துகொள்வது ஒன்றே ஒன்று தான் .
விகடன் குழுமத்தார் கருணாநிதியை நன்றாக சந்தோசப்படுத்துவதக்காக மட்டுமே இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார்கள் . இது அனைத்து நடுநிலையாலருக்கும் தெரியும் .