பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 04, 2008

கலைஞர், டி.ஆர் பாலுவிற்கு உச்சநீதி மன்றம் எச்சரிக்கை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் மெத்தன மாக இருந்ததாக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர் கே.என்.நேரு உள்பட 6 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று உச்சநீதி மன்றம் இன்று எச்சரித்துள்ளது. அவர்கள் 6 பேரும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை செப்டம்பர் 22ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

சேது சமுத்திர திட்ட பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி அன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து பந்த் போராட்டத்தை நடத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும் என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அக்டோபர் 29ந் தேதி மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர் கே.என். நேரு, மாநில தலைமைச்செயலாளர், டி.ஜி.பி., போக்குவரத்து துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல் காலஅவகாசம் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தனர்.

இதனால் இந்த வழக்கு பலமுறை தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் மெத்தனமாக இருந்ததாக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இவ்வாறு காலதாமதம் செய்ததை உச்சநீதிமன்றம் கடுமையாக கருத நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

நீதிபதிகள் அப்போது கூறியதாவது:
எம்மாதிரியான ஆட்கள் நீங்கள்? நீங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வர்களா? நீங்கள் இந்த நீதிமன்றத் திற்கே கட்டளை போடுவீர்களா? இந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று முதலமைச்சருக்கு எதிராக நாங்கள் கைது வாரண்ட்டை பிறப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

இந்த காலதாமதத்திற்கான காரணத்திற்கு விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழக அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை செயலாளர் டி. சாரங்கி ஆகியோருக்கு 4 வார கால அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். வருகிற செப்டம்பர் 22ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 தேதி அன்று சேது சமுத்திர பிரச்சனை தொடர்பாக பந்த் போராட்டத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்தது. சென்ற ஆண்டு 30ந் தேதி உச்சநீதிமன்றம் சிறப்பு நிகழ்வாக கூடி மாநிலம் தழுவிய பந்த் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனால் அக்டோபர் முதல் தேதி அன்று இயல்பு நிலையை சீர்குலைக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பந்த் போராட்டம் முழுமையாக நடை பெற்றது. ஒருசில அரசு போக்குவரத்து கழக பேருந்துகளே ஓடின என்பதை தலைமைச் செயலாளரே அப்போது ஒப்பு கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி நீதிமன்ற அவமதிப்புக்கான நோட்டீஸ்களை கருணாநிதி உள்ளிட்ட 6 பேருக்கும் அனுப்பியது. பதில் மனு தாக்கல் செய்யாமல் அவர்கள் தொடர்ந்து காலஅவகாசம் கேட்டு வந்தனர்.
தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்திருப்பதால் முதலமைச்சர் தனியாக பதில் மனு தாக்கல் செய்யத் தேவையில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

ஜூலை மாதம் 30-ந் தேதி தலைமைச்செயலாளரும், தமிழக போலீஸ் டிஜிபியும் பதில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள். உச்சநீதிமன்ற உத்தரவை தாங்கள் மீறவில்லை என்று கூறியிருந்தார்கள்.

7 Comments:

Unknown said...

என்னப்ப உறுப்பினர் அட்டை வாங்கியாச்சு போல இருக்கே!

http://lh6.ggpht.com/idlyvadai2007/SGY8chW1KUI/AAAAAAAABBE/PPWiFKcYSq0/Title_25_admk.jpg

IdlyVadai said...

அப்படியே இதையும் கொஞ்சம் பாருங்க

http://lh6.ggpht.com/idlyvadai2007/SGY8btol3MI/AAAAAAAABA8/V9CkR4Cb0Cg/Title_24_dmk.jpg

Anonymous said...

இட்லி வடை விசிறி...

both the links are saying not found.. நல்லா விளையாடுறீங்க djயும் தலையும்..

Anonymous said...

இந்த சுட்டிகளை க்ளிக்குங்கள் அனானி
DMK

ADMK

Unknown said...

//both the links are saying not found.. நல்லா விளையாடுறீங்க djயும் தலையும்//

ஆமா...

இதென்னங்க கலாட்டா

M Arunachalam said...

IV,

This is what today's Hindu is reporting on the Contempt petition against Mk & gang.

I am giving only the relevant para.

NEW DELHI: Tamil Nadu Chief Secretary L.K. Tripathy while maintaining that the State government had not violated the Supreme Court’s order banning the bandh on October 1, 2007 on the Sethusamudram issue has tendered an unconditional apology if the court was of the view that the order had not been effectively implemented.

Chief Minister M. Karunanidhi did not file a separate affidavit but the State counsel told the court on Monday that the Chief Minister was adopting the stand of the Chief Secretary. The then DGP, Rajendran, filed a similar affidavit tendering an unconditional apology.

MK, who tom-tommed about his "pet" project & tried to flout the court's directive against Bandh, is now asking UNCONDITIONAL APOLOGY? What happened to his "Tamil" pride? In order to save CM post, Sethu Samudram or Tamil pride can be compromised?

What the "Tamil Veriyans" are going to say for THIS APOLOGY? When Rajini did not even ask apology, these worthies jumped from hell to earth? Now, what are they going to say?

Arun

நாரத முனி said...

DJ கரெக்கட்டா கேளுங்க, " உறுப்பினர் அட்டையை renew பண்ணிடீங்களா?"