பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 14, 2008

ஜெ பேட்டி ( நிஜமாகவே நம்புங்க சார் )

நேற்று ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்....

கேள்வி:- சமீப காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் பல அரசியல் மாற்றங்கள் நடந்துள்ளன. நீங்கள் வெளியில் இருந்ததால் வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டதாக நினைக்கிறீர்களா?

பதில்:- ஏதோ தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் நான் இருந்தால் தான் அரசியலில் ஈடுபடுவது போலவும், வேறு எங்கேயாவது தங்கினால் ஓய்வு எடுப்பது போலவும் கூறுவது பொருத்தமானதுமல்ல. சரியானதுமல்ல. கடந்த 4 மாத காலமாக நான் எங்கேயோ போய்விடவில்லை. தமிழ்நாட்டில் தான் இருந்தேன். நான் தங்கியிருந்த இடத்திலேயே அரசியல் நடப்புகளை கூர்ந்து கவனித்து, நானும் அரசியல் நடத்திக் கொண்டிருந்தேன். அரசியல் பணி, கட்சிப் பணி ஆற்றினேன். அறிக்கைகள் மூலம் நாட்டு நடப்புகளில் என்னுடைய கருத்துகளை தெரிவித்தேன். ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் அறிவித்தேன். தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எங்கு இருந்தும் அரசியல் நடத்தலாம்.

கேள்வி:- அமர்நாத் பிரச்சினையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்று கருதுகிறீர்களா?

பதில்:- அமர்நாத் பிரச்சினையில் மத்திய அரசும் சரியாக கையாளவில்லை. அந்த மாநில அரசு இருந்த போது, அந்த மாநில அரசும் சரியாக கையாளவில்லை. இந்த பிரச்சினையில் எங்கள் நிலை தெளிவாக உள்ளது. ஒரு மாநிலத்தில் பிரபலமான புனித தலங்களுக்கு பக்தர்கள் வருவார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தருவது அந்த மாநில அரசின் கடமை. நான் முதல்-அமைச்சராக இருந்தபோது நாகூர் தர்கா, வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் இந்துக்களின் திருவிழாக்களின் போதும் பக்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறேன். இதுதான் உண்மையான மதசார்பின்மை.


கேள்வி:- தற்போது எந்த கூட்டணியில் இருக்கிறீர்கள்?

பதில்:- இப்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. கூட்டணி என்பது தேர்தலுக்கு முன்பு தான் முடிவு செய்யப்படும். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம்.


கேள்வி:- கம்யூனிஸ்டுகள், பா.ம.க. போன்ற கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா?

பதில்:- ஏன் முடியாது. நேரம் வரும்போது நட்புக் கட்சிகள், மற்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி குறித்து பேசவந்தால் பேசத் தயார்.

கேள்வி:- விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசுவீர்களா?

பதில்:- பதில் கூற விரும்பவில்லை.

கேள்வி:- விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்றவர்களின் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா?

பதில்:- அதை அவர்கள் கேட்கட்டும்.

கேள்வி:- பாரதீய ஜனதா கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதா?

பதில்:- இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த கேள்வி எழவில்லை.


கேள்வி:- மாயாவதி பிரதமராகப் போவதாக கூறியிருக்கிறாரே, உங்களுக்கு அதுபோல் எண்ணம் இல்லையா?

பதில்:- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு வரலாற்றில் இல்லாத அளவு கெட்டுவிட்டது. விவசாயிகள், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மின் தட்டுப்பாடு, மாநில பொருளாதார சீர்கேடு அடைந்துள்ளது. இவைகளை எல்லாம் அகற்ற, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது தான் எனது முதல் எண்ணம்.


கேள்வி:- ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் என்று கர்நாடக மந்திரி ஒருவர் கூறியுள்ளாரே?

பதில்:- ஒகேனக்கல் விவகாரத்தில் மீண்டும் சர்வே நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி கூறியுள்ள கருத்தை ஏற்கவே முடியாது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போதே தேவையான அளவைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒகேனக்கல் தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அனுமதி எல்லாம் பெறப்பட்டுவிட்டது. கர்நாடகம் இதில் தலையிட எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. தமிழக அரசு உறுதியாக, தைரியமாக இந்த திட்டத்தை நிறைவேற்றலாம், நிறைவேற்ற வேண்டும்.கேள்வி:- அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்ததன் மூலம் இடதுசாரிகளின் கருத்தோடு இணைந்து இருக்கிறீர்களே?

பதில்:- தேசிய அளவில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தேச நலனுக்கு உகந்த முடிவைத் தான் அ.தி.மு.க.வும், நானும் எடுத்திருக்கிறேன். இதில் வேறு எந்த காரணமும் இல்லை. இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு ஒற்றுமை.

கேள்வி:- ராம் சேது திட்டத்தில் உங்கள் கருத்து பாரதீய ஜனதாவோடு ஒத்துப்போகிறது. பொடாவை ஆதரிப்பதில் உங்கள் கருத்து கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக உள்ளது, இந்த நிலையில் கம்யூனிஸ்டுகள் எப்படி உங்களுடன் கூட்டு சேர முடியும்?

பதில்:- தேச நலனை கொண்டு தான் முடிவு எடுப்பேன் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியுடனே கூட்டணி சேர்ந்த கம்யூனிஸ்டுகளால் எங்களுடன் ஏன் இணைந்து செயல்பட முடியாது.

கேள்வி:- ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்க இருக்கிறாரே?

பதில்:- தமிழ்நாட்டில் ஏற்பட்ட வியாதி ஆந்திராவுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது.

6 Comments:

மடல்காரன்_MadalKaran said...

ஜே பேட்டியா?
ஜெ பேட்டியா?

Anonymous said...

பதில்:- தமிழ்நாட்டில் ஏற்பட்ட வியாதி ஆந்திராவுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது.
----------------------------------
அதிமுகவே அப்படிப்பட்ட ஒரு வியாதிதான்.எம்ஜிஆர் தான் சினிமா
நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து
முதல்வராக முடியும் என்று காட்டினார். அதைத் தொடர்ந்து
என்.டி.ராமாராவ்.இப்போது சிரஞ்சீவி.
ஆசை யாரை விட்டது. கையைச் சுட்டுக் கொண்ட சிவாஜி, பாக்யராஜ்
போதுமடா சாமி என்று அரசியலுக்கு
முழுக்குப் போட்டுவிட்டார்கள்.

1982ல் கட்சிக்குள் ஜெ. நுழைந்த போது எம்.ஜி.ஆர் முதல்வர்.
72 முதல் 77 வரை அதிமுக
சோதனைகளை சந்த்தித்த போது
மேடம் அரசியலில் இல்லை.
சினிமாவில் அவருக்கு இறங்கு
முகம் 76ல் துவங்கியது.
79 வரை முயன்றும் பழைய செல்வாக்கு கிடைக்கவில்லை.
கொஞ்ச நாள் எழுத்தாளர் வேடம்,
அப்புறம் அரசியல்வாதி.

கலைக்கோவன் said...

தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட வியாதியா?
ஜெயலலிதா ........என்ன சுதந்திர போராட்ட தியாகியா...?
அண்ணா , எம்.ஜி.ஆர் , கருணாநிதி,ஜெயலலிதா ......
விஜயகாந்த்,சரத்குமார் ,கார்த்திக் ........ன்னு
தமிழ்நாட்டை பிடிச்ச சினிமா சனியன் விடலியே.
இதுல ரஜினி வேற கட்சி ஆரம்பிக்கலைன்னு ஒரு கூட்டம்.....
இவங்க சொல்லரங்களா சிரஞ்சீவியை பத்தி..
ஒரு வேலை செலெக்டிவ் அம்நிஷியாவோ அவங்களுக்கு....

இது தான் தமிழ் நாட்டின் தலைவிதி....

Anonymous said...

கலைக்கோவன் & அனானி பதில்கள் நெத்தியடி!!!

Anonymous said...

jayalaitha himself is a Big virus for Tamil nadu

Anonymous said...

ivanukalai vitta namakku pozhappu illaye?sakkadaiyila pannigathana vilum.