பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 07, 2008

சினிமா பொழுதுபோக்கும் கருணாநிதி - ராமதாஸ் பேட்டி

முதல்வர் கருணாநிதி சினிமா பார்ப்பதிலும்,சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் பொழுதைக்கழிப்பதால், கோட்டை யில் ஒரு லட்சத்துக்கும் மேல் கோப்பு கள் தேங்கியிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனத்தையடுத்த தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது அவர் கூறுகையில்,

முதல்வர் உச்சநீதிமன்ற கண்டனத் துக்கு ஆளான விவகாரம் அரசின் நிர்வாக சீர்கேடு சம்பந்தப்பட்டதாகும். நீதிமன்ற கட்டளையை ஏற்று உரிய காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது.

இது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெரும் அவமானமாகும். இதில் அப்பாவி வழக்கறிஞர்கள் பலிகடா ஆகியுள்ளனர். அதே சமயம் தொலை பேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் 3 மாதத்துக்குள் அறிக்கை பெறப்பட்டு வேகமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதியும், அவரது அரசும் ஆடம்பர விழாக்களை நடத்துவதில் காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி விழாவுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக புகார் எழுந்து உள்ளது.

1 லட்சம் கோப்புகள் தேக்கம்:

மூன்று நாட்கள் கோட்டையை விட்டு 12 அமைச்சர்களும் விழாவுக்கு சென்று உள்ளனர். இந்த விழாவை சென்னையி லிருந்தே துவக்கியிருக் கலாம். மற்றொரு விழா மதுரையில் நடந்துள்ளது. இதில் 10 அமைச்சர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் முகம் சுழிக்கும் வகையில் போக்கு வரத்துக்கு இடைஞ்சலாக விழா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

கோட்டையில் கோப்புகள் ஒரு லட்சத்துக்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக என்னிடம் ஒரு அதிகாரி தெரிவித்தார். அமைச்சர்கள் சென்னையில் இருந்தாலும், கோட்டைக்கு செல்வதில்லை. கோட்டைக்கு சென்றாலும் கோப்புகள் பார்ப்பதில்லை.

பொழுதுபோக்கும் கருணாநிதி:

முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் சினிமா பார்ப்பதிலும், சின்ன சின்ன சினிமா விழாக்களை பலமணி நேரம் அமர்ந்து கண்டு களிப்பதிலும் பொழுதைக் கழித்திருக்கிறார்.
( (எந்தெந்த நாளில் எந்தெந்த விழாக்களில் கலந்துகொண்டார் என பட்டியலை வெளியிட்டார்).

சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளக்கூடாது என கூறமாட்டேன். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல என்பதே எனது கருத்தாகும்.

இதுவரை 29 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று கூறியிருக்கிறார்கள். இதுபற்றிய புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒகேனக்கல் பகுதியை ரீசர்வே செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அப்படியானால் மைசூர், பெங்களூர், கொள்ளேகால் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளையும் ரீசர்வே செய்ய வேண்டும்.

மண்- நீர் உரிமை இழந்தோம்:

திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறிப்பாக கருணாநிதியின் ஆட்சியில் மண்ணையும்,நீர் உரிமையையும் இழந்து நிற்கிறோம். எந்த மாநிலத் னுடனான பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமையை கருணாநிதி நிலை நாட்டியது கிடையாது.

நாம் உரிமைகளை இழந்ததற்கு துணிச்சலான முடிவுகளை இந்த அரசு எடுக்காததுதான் காரணம். பெங்களூருக்கு குடிநீர் கொண்டு சென்றபோது ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தில் விடுதலைப்புலிகளை கட்டுக்குள் வைத்திருப்பதாக மக்களிடம் காட்டிக்கொள்வதற்காக முதல்வர் ஊடகங்கள் மூலம் கைது நடவடிக்கைகளை பெரிதுபடுத்தி காட்டி வருகிறார்.

இத்தனை அமைச்சர்களை வைத்துக் கொண்டு அரசு திறம்பட செயல்பட வில்லை. திறமையான அதிகாரிகள் வெளியில் அனுப்பப்பட்டு விடு கிறார்கள். இருந்தாலும் அவர்களை செயல்பட விடுவதில்லை.

கோட்டையிலும், மாவட்ட நிர்வாகத்திலும், காவல்துறை நிர்வாகத்திலும் பிற மாநிலத்தவர்கள் தான் உள்ளனர். இதுதான் இவர்களது மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி லட்சணம்

7 Comments:

Hariharan # 03985177737685368452 said...

தனது செயற்கரிய செயல்பாடுகளால் ஐந்து முறை தமிழக முதல்வரான தமிழினத்தலைவர் கருணாநிதி, கொவட்டுல ரெண்டு கொடுத்து கூட்டணியிலிருந்து தூக்கி வீசினதும் இப்போ பெரிய மரு(ந்)து பெரிசா கொரலு தர்றாரு!

இதே மருத்துவர் ஐயாவே முன்னின்று ஆசிர்வதித்து படப்பொட்டியை களவாடி என்று நேரத்தை உருப்படியா செலவு செஞ்சாரா??

மருத்துவருக்கு என்ன முத்திபோனா தானே செல்ப் பிரிஸ்கிரிப்ஷன் எழுதி பார்மஸி கடைக்காரனை மிரட்டி மருந்து மாத்திரைன்னு டிரீட்மெண்ட் ஆகிடும்.

இவர்களுக்கிடையே அகப்பட்டுக்கொண்டு அல்லல்படும் சாமானியனுக்கு இவர்கள் தரும் குடைச்சல்களுக்கு மருந்து, மாத்திரைன்னு போனா அ,ஆ,இ,ஈ சேவை வரி, வாட் வரின்னு கொள்ளையடிக்க உத்தரவிட்டு இருக்காரு இவர்கள் கூட்டணி நிதிஅரசர் / நிதிஅமைச்சர் ப.சிதம்பரம்.

மானமிழந்த தமிழக மானமிகுக்கள்! வெட்கமில்லாதவர்கள்!

Anonymous said...

நியாயமான கேள்விகள் .......
இதை கேட்டா தப்பா...??
நிறைய விழாக்கள் ......
எல்லாம் சினிமா சம்பந்தமானவை .
அதிலேயும் பாத்தீங்கன்னா ....
ஆற்காடு வீராசாமி...பொன்முடி ....அ. ராசா ....
இவர்களில் யாராவது ஒருத்தர் இருப்பாங்க...
இதான் இவங்க லட்சணம்...

Anonymous said...

ச்சே...எதிர்க் கட்சிகாரர்கள் ஆளும் கட்சியை திட்டுவதும் , அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இவர்களைத்த் திட்டுவதும் அவர்களோடு இவர்கள் கூட்டணி சேர்வதும் பின்பு கழற்றி விடுவதும்...என்ன இது ? இதனால் நாட்டிற்கு என்ன பிரயோஜனம்? மக்களுக்கு என்ன புண்ணியம்? பேசாமல் அமெரிக்காவில் உள்ளது போல் இருகட்சி ஆட்சிமுறை இருந்தால் என்ன என்பது என் கேள்வி(கனவு). என்ன பதில் சொல்கிறீர்கள்?

M Arunachalam said...

Whats wrong in Karunanidhi's watching movies? Is he not entitled to watch movies? MK is discharhing his constitutional responsibilities as a CM of TN. Thats why he doesn't find time to concentrate on trivial issues like Hogenakkal water project becsue he is too busy with "other important" works.

Nobody will question "Thamizhina(?) Thalaivar" for NOT doing the Hogenakal project. Only Rajini can be pilloried because he only will listen to all non-sense & keep quiet.

If you question MK, then DMK goondas will come after you. He..he. Thats why we are not questioning MK.

We are Thamizhans a.k.a. we are Cowards.

நாரத முனி said...

அவரு கேக்கறதுல நியாயமே இல்ல !
பெருமாள் படம் ஆடியோ ரிலீஸ், உளியின் ஓசை பட டிஸ்கசன், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு பாட்டெழுதும் வேலை, மாமனாரின் இன்ப வெறி படத்துக்கு வசனம் எழுத வேண்டிய வேலைனு எவளவோ கலை சேவை செய்யவே டயம் பத்தல, எடைய்ள சுப்ரீம் ஸ்டார் வேற கட்சி ஆரம்பிச்சுட்டாரு, இப்டிருக்கும்போது சுப்ரீம் கோர்ட் பத்தி எங்க சிந்திக்க நேரம் இருக்கும்!!

Anonymous said...

ராமதாஸைக் துணைக்கு கூப்பிடாமல்
தான் மட்டுமே இத்தனை படங்களை,
அதுவும் சென்சார் செய்யப்படாத படங்களை பார்ப்பது இந்த வயதில் கலைஞருக்கு தேவையா.

மரியாதைக்காகவாவது
ராமதாஸுக்கும் அழைப்பு வையுங்கள்
என்று படத்தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அறிவுறுத்தாமல்
இருப்பது கூட்டணி தர்மத்திற்கு விரோதமானது.

Anonymous said...

இவரு என்ன பாராட்டுரார இல்ல குத்தம் சொல்லுறாரான்னு புரியல..கூட்டணில இருந்து குடையிற மாதிரியே பேசுறாரு..ரொம்ப குசும்பு.. (இதை வடிவேல் பாணியில் படிக்கணும்..)