பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 11, 2008

அபினவ் பிந்த்ரா - முதல் தங்கம்

தமிழக வீரர்கள் குசேலன் பற்றி பேசிக்கொண்டிருக்க பஞ்சாப் வீரர் பிந்த்ரா இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

* ஒலிம்பிக் போட்டியின் 3-வது நாளான இன்று துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

* தகுதி சுற்றில் அவர் 596 புள்ளிகள் பெற்றார். இறுதிப் போட்டியில் 104.5 புள்ளிகள் பெற்றார். மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்தார்.

* சீன வீரர் குயான் 699.7 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹாக்கின் 699.4 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கமும் பெற்றனர்.

* ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா தனி நபர் பிரிவில் இதுவரை தங்கப் பதக்கம் பெற்றது கிடையாது. முதல் முறையாக அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாறு படைத்தார்.

* துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கப் பதக்கம் பெற்றது. 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் பெற்று இருந்தார்.

* 2000ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முறை யாக பங்கேற்றார். உலக துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. 2002ம் ஆண்டு காமன் வெல்த் போட்டியில் அணி கள் பிரிவில் தங்கப் பதக்கமும், தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

* 2001ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 2002ம் ஆண்டு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும் பெற்றார்.

* ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற 9-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

* ஆக்கிப்போட்டியில் 8 தங்கம் கிடைத்து உள்ளது. 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் கிடைத்து இருந்தது.

* 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.

* கடைசியாக 1980 ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த பாஸ் கரன் தலைமையில் ஆக்கிப் போட்டியில் தங்கம் வென்று இருந்தது.

18 Comments:

Anonymous said...

Congratulations!!

Anonymous said...

அபினவ் !

நீங்க இந்திய மக்களை தலை நிமிரச் செய்து விட்டீர்கள்.

தொரட்டும் உங்கள் வெற்றிகள்.

இது கொண்டாடுவதற்கான நேரம்.

மடல்காரன்_MadalKaran said...

கலக்கலான தொடக்கம்.. தொடரட்டும்..இந்த வெற்றிகள்.

அன்புடன், கி.பாலு.

SK said...

வாழ்த்துக்கள் அபினவ்

இதை தான் நான் செய்தியாக போடலாம்னு இருந்தேன். நீங்க போட்டுடீங்க.

Anonymous said...

வாழ்த்துகள் அபினவ் பிந்த்ரா!

//

Yellow
Green
Blue
Light Green
//

இது எதற்கு? வாசகர்களுக்கு கலர் பிளைண்ட்நெஸ் இருக்கான்னு சோதிக்கறீங்களா?

M Arunachalam said...

Congrats Abhinav Bindra.

You have made all INDIANS (not Tamil Perverts) proud.

Let your performance inspire more & more Indians & may your tribe increase in our country in the coming years.

Arun

IdlyVadai said...

பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

அப்படியே 無所事事地 旱谷 வாழ்த்துக்கள் :-)

மாயவரத்தான் said...

翻译: 英语 » 西班牙语

资料idlyvadai 万字涉及英语和法语两个语种,质量验收合格,成为其指定翻译公司。

与NEC信息系统(中国)有限公司成为长期合作伙伴关系.

IdlyVadai said...

மாயவரத்தான் - -什么您评论了,我不可能了解。

R.Gopi said...

My hearty congratulations to Abhinav Bindhra

He made entire India proud today and lets hope that others also get some medals this time so that we will not end up only with a lone medal.

Best wishes to Abhinav Bindra and other contestants to get more medals.........

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

இதைத்தான் one in a billion என்று சொல்வார்களோ?

Anonymous said...

வாழ்த்துக்கள் பிந்த்ரா .
/தமிழக வீரர்கள்/
வீரர்கள்!?......

Anonymous said...

இட்லி வடை சீனாவிலும் கடைய திறந்துட்டீங்க போல..
பன்மொழித் தலைவன் இட்லி வடை வாழ்க..
எங்களுக்கும் கத்து கொடுக்கறது.. ?

Anonymous said...

Heart congratulations to Abhinav.

It was a pain to see the opening march when India with population of 1.1B people was fielding only 56(FIFTY SIX) athletes,while other countries with lesser population (in some cases less than one-tenth of India's) were fielding more than 100,200 athletes.

Vikram (a proud Indian!)
PS : If India had qualified for hockey,our team count would have been increased by 18!

Anonymous said...

இட்லி வடை

இந்தியாவின் மானம் கேவலமாகக் கப்பலேறிக் கொண்டிருப்பதைக் கவனியாமல் என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது?

சீன ஒலிம்பிக்ஸுக்கு பங்களாதேச, ஸ்ரீலங்க, பாக்கிஸ்தானிய, பர்மிய என்று அனைத்து நாட்டுத் தலைவர்களும் முறைப்படி அழைக்கப் பட்டிருக்கின்றனர். ஏன் நேற்று உருவான நேபாள தலைவருக்கும் கூட ராஜமரியாதையான அழைப்பு. ஆனால் 1.2 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப் பெரிய தேசமான இந்தியப் பிரதமருக்கோ, ஜனாதிபதிக்கோ அழைப்பு அனுப்பாமல் வேண்டுமென்றே அவமானப் படுத்தியிருக்கிறது சீனா. அதை விடப் பெருத்த அவமானம் முறையான அழைப்பை நாட்டின் பிரதமருக்கோ ஜனாதிபதிக்கோ அனுப்பாமல் சோனியா என்னும் ஒரு கட்சித் தலைவிக்கு மட்டுமே அனுப்பியிருக்கிறது. இந்தியா அவமானப் படுத்தப்பட்டதை கண்டு கொள்ளாமல் வெட்கம் இல்லாமல் சோனியாவும் குடும்பத்துடன் அழைப்பை ஏற்றுக் கொண்டு கலந்து கொண்டிருக்கிறார்.

இது போன்ற அவமானத்தை, அவமரியாதையை எதிர்த்து இந்தியா ஒட்டு மொத்தமாக ஒலிம்பிக்சைப் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் இந்த அவமானத்தைப் பற்றி நம் பத்திரிகைகளோ, கட்சிகளோ பேசாமால் வாய் மூடிக் கிடக்கின்றன. எவ்வளவு வேண்டுமானாலும் அவமானம் செய்யுங்கள் நாங்கள் தாங்கிக் கொள்வோம் என்று வெட்கமில்லாமல் திரிகின்றனர் நம் பிரதமரும் கட்சிகளும்.

இட்லி வடை கூட சீனாவின் இந்த திட்டமிட்ட அவமானப் படுத்துதலைக் கண்டு கொள்ளாமல் சீனா புகழில் இறங்கியிருப்பது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரியது. இந்தியா ஒரு பதக்கம் கூடப் பெறாமல் போனால் கூட அது நமக்குக் கேவலம் கிடையாது ஆனால் ஒட்டு மொத்த நாடே சீனாவால் அவமதிக்கப் பட்டிருப்பது எவ்வளவு பெரிய மானக் கேடு? உடனே இது குறித்த முழு விபரங்களையும் தேடி இட்லி வடை தன் வாசகர்களுக்கு அறியத் தரும் என்று நம்புகிறேன்

Nilofer Anbarasu said...

Congrats Abhinav Bindra.

ஹரன்பிரசன்னா said...

//தமிழக வீரர்கள் குசேலன் பற்றி பேசிக்கொண்டிருக்க பஞ்சாப் வீரர் பிந்த்ரா இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
//

தமிழக வீரர்கள் குசேலன் பற்றிப் பேசிக்கொண்டிருக்க என்பது தேவையற்றது. தமிழக, பஞ்சாப் என்று எத்தனை வீரர்கள் சென்றாலும் அத்தனை பேரும் இந்தியாவைத்தான் முன்மொழிகிறார்கள். தேவையற்ற வகையில் நீங்கள் ஏன் பிரிக்கவேண்டும்? இதையே ஏதேனும் அரசியல்வாதி செய்திருந்தால் அதையும் ஒரு போஸ்ட் போட்டிருப்பீர்கள். ஒரு தங்கப்பதக்கத்தை யார் வென்றால் என்ன, வென்றது இந்தியா என்பதுதான் முக்கியம். அதை உடைக்கிறது உங்கள் வரி. பாஸ்கரன் தலைமையில் இந்திய அணி ஹாக்கியில் தங்கம் வென்றபோது, அந்த அணியில் இடம்பெறாத மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லை என்று சொல்வீர்களா? அப்போதும், இப்போதும் இந்தியாவே வெல்கிறது.

Nilofer Anbarasu said...

Abhinav's blog..
http://abhinavbindra.blogspot.com/