பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 10, 2008

குசேலன் விகடன் விமர்சனம் + மார்க்

பால்ய நண்பனைப் பார்க்கத் தவிக்கும் குசேல - கிருஷ்ணனின் கதை!
சவரத் தொழிலாளியான ஏழை பசுபதியும், புகழின் உச்சியில் ஊஞ்சலாடும் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினியும் பால்யகால நண்பர்கள். தன் ஊருக்கே படப்பிடிப்புக்காக வருகை தரும் ரஜினியை, வறுமையினாலும் தாழ்வு மனப்பான்மையாலும் சந்திக்கத் தயங்குகிறார் பசுபதி. ரஜினியைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைகள் அவரை நெருக்க, அதற்கான முயற்சிகள் ஃப்ளாப் ஆகின்றன. சந்தித்தாரா என்பதே நட்பில் நனைத்தெடுத்த க்ளைமாக்ஸ்!

மலையாளத்தில் வந்த 'கத பறயும் போள்' கதையை கமர்ஷியல் கைகளால் ஆரத் தழுவியிருக்கிறார் பி.வாசு. அசோக்குமார் என்ற சூப்பர் ஸ்டாராகவே ரஜினி வருகிறார் என்பதுதான் படத்தின் மெகா ஹைலைட். சூட்டிங்கில் அவரைப் பார்க்கத் திரள்கிற கூட்டம் செய்கிற ரகளையில் ஆரம்பித்து, ஒரிஜினலான ரஜினியின் கேரக்டரைப்பற்றி அவரை விட்டே பேசவைத்தது வரை ஐடியாக்கள் ஓ.கே-தான். 'தலைவா... நயன்தாராவையே பார்க்காத... எங்களையும் பாரு தலைவா' என ரசிகர்கள் கத்த, படு ஸ்டைலாகத் திரும்பி ரஜினி செய்கிற நெளிசலான மேனரிஸங்கள் ஸ்டார் அப்ளாஸ். திரையில் இத்தனை அமைதியான ரஜினியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு!

வறுமையில் வாடும் பசுபதி எதற்கெடுத்தாலும் பயந்து குறுகி ஓடுகிற காட்சிகள் கதைக்கான டச்சிங். பள்ளிக்கூட மேடைக் காட்சி மட்டுமே படத்தின் பெரிய ப்ளஸ். இழந்த நட்பின் வலியை ரஜினி குரல் உடைந்து, கண்ணீர் வழியச் சொல்லும்போது தியேட்டரே கலங்குகிறது!

ஆனால், சூப்பர் ஸ்டாராக ரஜினியே கிடைத் திருக்கிறார் என்கிற தைரியத்திலேயே பி.வாசு குஷியாகி முழு திருப்தி அடைந்துவிட்டார் போலும்! எக்கச்சக்க லாஜிக் மிஸ்ஸிங். படம் முழுக்க 'குசேலன்' பட யூனிட் என்கிற பெயர் தென்படுகிறது. ஆனால் ஒரு ஸீனில், 'அண்ணாமலை பார்ட் 2', கொஞ்ச நேரம் கழித்து, 'சந்திரமுகி பார்ட் 2' என ரீலுக்கு ரீல் ஓட்டுகிறார்கள் ஜிகினா ஃபிலிம்.

ரியல் சூப்பர் ஸ்டாராக வரும் ரஜினி, ஓஷோ புக் படிக்கிறார், ஜப்பான் ரசிகர்களைச் சந்தித்துப் பேசுகிறார், தூங்கவிடாமல் டார்ச்சர் செய்ததற்காகவே, நரிக்குறவர்களைக் கூப்பிட் டுப் பேசுகிறார். மற்றபடி சாதாரண ரசிகர்களுக்கு டாட்டா காட்டுவதற்கே யோசிக்கிறார். ரசிகர் களிடம் இருந்து அந்நியப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பதில் ஆரம்பிக்கிறது மைனஸ். இது போதாதென்று ரஜினியின் இமேஜைக் கண்ட மேனிக்குப் பொலி போட்டுப் பொங்கல் வைத்திருக்கிறார்கள். ஆர்.சுந்தர்ராஜன் பர்சனலாக வீசும் கேள்விகளுக்கு ரஜினி சொல்லும் பதில்கள், 'வெண்டைக்காய் பந்தலில் வேப்பெண்ணெய் மழை பெய்த' மாதிரி சூப்பர் மழுப்பல்... சுத்த சொதப்பல்!

'அதெல்லாம் வசனகர்த்தா எழுதிக் கொடுத்தது. டைரக்டர்ஸ் உருவாக்கினது. அதை நான் பேசினதா நினைச்சா, அது உங்க தப்பு!' என்று இதுவரை தான் அடித்த வரலாற்றுப் புகழ் 'பன்ச்'கள் பற்றி விளக்கம் சொல்லி, ரசிகர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்தியதற்காக ரஜினியைப் பாராட்டலாம்!

பசுபதிக்கும் ரஜினிக்கும் இடையேயான நட்பின் அழுத்தத்தைப் புரியவைக்க... படத்தில் க்ளைமாக்ஸ் வரையில் ஒரு சாம்பிள்கூட இல்லாததால், ஊர் மக்களோடு சேர்ந்து நமக்கும், பசுபதி புருடா விடுகிறாரோ எனத் தோன்றுகிறது. பசுபதியின் வறுமையையும் இயல்பாகச் சொல்லாததால், கதையோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஏழை பசுபதியின் மனைவி மீனா, அபார்ட்மென்ட் ஆன்ட்டி மாதிரி இருக்கிறார். குழந்தைகளும், சர்ச் பார்க்கில் படிக்கிற தோரணையில் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ஆர்வத்தில் கன்னியாஸ்திரீகள் சீரியல் வில்லிகள் மாதிரி நடந்துகொள்வது, பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பம் மட்டன் பிரியாணி தந்து ஐஸ் வைப்பது என்பது மாதிரி நிறைய இடங்கள், அமெச்சூர் டிராமா! அல்லது, பாத்திரப் படைப்புகள் காமெடியா சீரியஸா என்று புரியவைப்பதில் ஏற்பட்ட சறுக்கல்.

படத்தின் நிஜமான ஹீரோ பசுபதி. அந்த பாவமான பார்வை காரணமாக 'வெயில்' பசுபதி இடைஇடையே ஞாபகத்துக்கு வந்தாலும், தாழ்வு மனப்பான்மையோடு குழந்தைகளைக்கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதிலும், க்ளைமாக்ஸில் மேடையில் பேசும் ரஜினிக்கு நிகரான உணர்ச்சிக் கொந்தளிப்போடு உருகுவதிலும் அத்தனை நெகிழ்ச்சி.

நயனுக்கு ஸோலோ சாங் வைக்கப் பிடிச்சாங்களே ஒரு சிச்சுவேஷன்... சும்மா கணக்கு காட்டத்தான் உதவி இருக்கிறது.

ரஜினியைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அரற்றும் லெவலில், வடிவேலுவின் காமெடி ஏரியா கச்சிதம். ஒளிந்து நயன்தாராவை ரசிக்கும் காட்சியில், கேமராவின் கோணம் காமெடி ரசத்தை காமரசமாக்குவதுதான் உறுத்தல். லிவிங்ஸ்டன் குரூப், சந்தானம் அடிக்கிற லூட்டிகளில் ஆங்காங்கே கிச்சுகிச்சு.

பசுபதியின் வீட்டில் தொடங்கி ரஜினியின் கெஸ்ட் ஹவுஸ் வரை படம் முழுக்க செயற்கை செட்டுகள்... பத்தாக்குறைக்கு லிவிங்ஸ்டன் குரூப்பில் ஆரம்பித்து பல பாத்திரங்களில் எக்கச்சக்க செயற்கை.

'ஓம் சாரிரே...', 'செல்லம்' பாடல்களில் ஜி.வி.ப்ரகாஷ்குமார் ஹாய் சொல்கிறார். பின்னணி இசையில் அவர் தேற்றிக்கொள்ள நிறைய இருக்கிறது. பசுபதியின் வறுமையைக் காட்டுவதிலும், ரஜினியின் செழுமையைக் காட்டுவதிலும் அரவிந்த் கிருஷ்ணாவின் கேமரா அத்தனை அழகு. அதுவும் அவுட்டோர் இடங்களில் கலர் மேஜிக் செய்திருக்கிறார்.

ரஜினியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற குழப்பத்தில் கதையின் இயல்பைத் தொலைத்து விட்டார்கள். அதனால் படம்,கம்பீர மான யானையைக் கடைவீதிக்கு அழைத்துச் சென்ற கதையாகி விட்டது!
( நன்றி: விகடன் விமர்சன குழு )
மார்க் போட்டுவிட்டு எழுத தொடங்கியிருப்பார்கள் போல
---------------
பிகு: விகடன் மார்க் மற்ற படங்களுக்கு...
குருவி - 39/100
சண்டை - 39/100
அரசாங்கம் - 41/100
அ.எண் 305ல் கடவுள் - 42/100
யாரடி நீ மோகினி - 42/100
கண்ணும் கண்ணும் - 42/100
சந்தோஷ் சுப்பிரமணியம் - 44/100
தசாவதாரம் - 43/100
வல்லமை தாராயோ - 39/100
சுப்பிரமணியபுரம் - 44/100
முடியாண்டி - 41/100

24 Comments:

priyamudanprabu said...

39/100 அப்போ படம் fail ஆயிடுச்சா??

அதுசரி
யாரடி நீ மோகினி - 42/100
இது எதுக்கு,இந்த குப்பைக்கும் 42????
தயாரிப்பாளர் தெரிந்தவரா??????

இட்லிவடை நீங்களும் மார்க் போடுங்களேன்

priyamudanprabu said...

பிகு: விகடன் மார்க் மற்ற படங்களுக்கு...
குருவி - 39/100
சண்டை - 39/100
அரசாங்கம் - 41/100
அ.எண் 305ல் கடவுள் - 42/100
யாரடி நீ மோகினி - 42/100
கண்ணும் கண்ணும் - 42/100
சந்தோஷ் சுப்பிரமணியம் - 44/100
தசாவதாரம் - 43/100
வல்லமை தாராயோ - 39/100
சுப்பிரமணியபுரம் - 44/100
முடியாண்டி - 41/100
/////////////////////////////////////////
நான் கொஞ்ச நாளா தேடிகிட்டு இருந்தேன்.கொடுத்ததுக்கு நன்றி
சிவாஜி - 43 மார்க்
(இதையும் சேத்துக்குங்க)
அதைவிடவுமா குசேலன் மோசம்?
அட கொடுமையே
என்னால சிவாஜி படத்த முழுசா பாக்குறதுக்கே ரொம்ப கஸ்டமா இருந்துச்சு.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அருண்மொழி said...

இட்லிவடையாரே அப்படியே நீங்கள் கொடுத்த மார்க்கையும் பக்கத்தில் update செய்யுங்கள். We can compare who is fair!!!

Anonymous said...

யாரு பரீட்சை எழுதினாங்க இவுங்க மார்க் போடுறதுக்கு..
சில சமயம் குப்பையும் கோமேதகம்னு புகழுவாங்க ..
சில நல்ல படங்களையும் நல்லவே இல்ல .. அப்படி பண்ணியிருக்கனும்.. இப்படி பண்ணீயிருக்கனும்னு சொல்லுவாங்க.. இப்போதைக்கு அவுங்களுக்கு ரஜினி மேல காண்டு.. அதனால் 39 அதுவே ரஜினி அந்த வார விகடன் அட்டை படமா இருந்தா 93 போட்டாலும் ஆச்சரியப் படக்கூடாது.. இவுங்க வச்சிருக்கற standardக்கு எல்லாம் படம் எடுக்க முடியாதுங்க ... ஒரிஜினல் மார்க் போடறது மக்கள்..

Anonymous said...

சினிமா நிருபர் அள்ளி போட்டிருக்கிற மார்க்கை இங்கே போய் பாருங்க...! குசேலனுக்கு 45 மார்க்காம்...!

IdlyVadai said...

இட்லிவடை மார்க்: 5.5/10

priyamudanprabu said...

இட்லிவடை மார்க்: 5.5/10
கொஞ்சம் அதிகம்
4/10 இது ஒகேவா?
ஒரு ஓட்டெடுப்பு வைக்கலாம்

Anonymous said...

Sachin 42/100
malaikottai 43/100
ATM 40/100
Vel 41/100
Arul 41/100
king 41/100
Tiruppachi 40/100
Sivakasi 42/100
Pokkiri 42/100

Anonymous said...

vijay padamna 40kku kuraiyaama poduvaanga
vaseegara 41/100
thamizan40/100
Badhri 40/100

priyamudanprabu said...

விஜய் ஒரு சூசூசூசூசூசூசூசூப்பர் நடிகர்
அவருக்கு 100/100 தரலாம்

M Arunachalam said...

Since morons own vikatan group now thru a binami, its standard will also be moronic only.

Anonymous said...

கோல்டு கொஸ்ட் தங்க காசு மோசடியில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தொடர்பு??

நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு உண்டு என்பதர்க்கான ஆதாரம்

http://in.youtube.com/watch?v=6wsSuLqveg8&feature=related

Anonymous said...

saterji ya eppo relish pannuveenga.kuselan result kelunga.poradikkuthu

Anonymous said...

//அதுசரி
யாரடி நீ மோகினி - 42/100
இது எதுக்கு,இந்த குப்பைக்கும் 42????
தயாரிப்பாளர் தெரிந்தவரா??????
-பிரபு//
நியாயமான கேள்வி.

Anonymous said...

ஒரிஜனல் மார்க் மக்கள் கொடுத்தது: "0". பூஜ்யம்.குசேலன் படத்தால் நஷ்டம்; தியேட்டர் அதிபர்கள் முற்றுகை போராட்டம்

ரஜினியின் சிவாஜி படத்துக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் `குசேலன்' படம் கடந்த 1-ந்தேதி ரிலீஸ் ஆனது. மதுரையில் 5 தியேட்டர்களிலும், தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது.

பிரமிட் சாய்மீரா மற்றும் கவிதாலயா நிறுவனம் தயாரித்து உள்ள இந்தப் படம் திரையிடுவது தொடர் பாக தியேட்டர் உரிமை யாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அப் போது இது முழுக்க முழுக்க ரஜினி படம் தான். சிவாஜி படத்தை விட ஒரு மடங்கு வசூல் அதிகரிக்கும் என கூறி மினிமம் கியாரண்டி (எம்.ஜி) முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனிடையே படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன்பு குசேலன் படம் குறித்து கருத்து தெரி வித்த ரஜினிகாந்த் இந்த படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல, பசுபதி படம் என கூறி இருந்தார்.

ரஜினியின் இந்த அதிரடி அறிவிப்பால் தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறை வாக இருப்பதாகவும், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறி மதுரையில் தியேட் டர் உரிமையாளர்கள் ஆதங்கப்பட்டனர். நேற்று அவர்கள் ஒன்று திரண்டு மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தியேட்டர் உரிமை யாளர்கள் கூறியதாவது:-

குசேலன் படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்து உள்ளார். இதனால் நாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடிய வில்லை.

பாங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர் களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இந்த படத்தை திரையிட்டு உள்ளோம். இது வரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

எனவே எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு மினிமம் கியாரண்டியை டெபாசிட் தொகையாக மாற்றி வருவாயில் எங்களுக்கு உண்டான சதவீதத்தை கணக்கிட்டு தர வேண்டும்.

இல்லாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி சென்னை யில் உள்ள தலைமை அலு வலகம் முன்பு உண்ணா விரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வோம். இந்த விசயத்தில் ரஜினி தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: WWW.MAALAIMALAR.COM

மக்கள் எப்பவும் தெளிவாகத்தான் இருக்காங்க. அவர்களை "எந்த கொம்பனாலும்" ஏமாற்ற முடியாது.

Anonymous said...

Vikatan is for the intellectually weak minds. The editor and his team cannot even write decent articles in tamil without mixing english words. They cannot afford to give lower marks for Kuchelan or criticise it extensively as they are after friends and family of rajini for their news and pics on rajini.

Anonymous said...

5.5/100 would be opt

அமுதன் said...

குருவி - 39/100
சண்டை - 39/100
அரசாங்கம் - 41/100
அ.எண் 305ல் கடவுள் - 42/100
முடியாண்டி - 41/100

இந்த படங்களை விடவும் மோசமாகவோ இல்லை தரத்தில் சமமாக உள்ளதாம் குசேலன்... விகடன் circulation குறைந்து போகத் தான் போகிறது. பிறகு ரஜினி பேட்டி ஒன்று வந்தே தீரும். பார்க்கத்தான் போகிறீர்கள்.

Anonymous said...

////////////////////////////
கோல்டு கொஸ்ட் தங்க காசு மோசடியில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தொடர்பு??
///////////////////////////////
olunga paarunga sammanthame illaatha vedio

Anonymous said...

Vikatan mark sarithaan

"45- 60 mts Rajini varathala paathi mark thaan pottirukkom." Hi Hi Vetti Vikatan
Intha latchanathula Gnani-nnu oru ulaga maga Gnaani Rajini ithu maathiri kathaiyulla padama choose panni nadikanumnu aalosana vera kumudamla pesurarau.
Mutalla Kuselan Rajiniyoda full time moviyo illa 10X1X 3 hrs roles-ulla moviyum illa.

ப்ரியா கதிரவன் said...

mudiyandi ya?
adhu enna padam?

Anonymous said...

Kuruvi ellam oru padam. aduku 39 marku!!! Schoole potta drama vuda kevalama irruku... Oruthane pudikalene vittrundaga... Idumadiri alikandinga.

Anonymous said...

Dear Idlyvadai,

Leave all theses silly matters. India's Abhinav Bindra won India's first ever individual Olympic gold medal today in the men's 10 metres air rifle event. Give importance to this matter. Give rest to rajinikanth

Anonymous said...

Gold medal after 28 yrs nu pootu irukeenga poola
to my knowledge this is the first individual gold medal that we are winning.
pls correct me if iam wrong