பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 07, 2008

ரஜினி மன்னிப்பு - சோ கருத்து

ரஜினி மன்னிப்பு பற்றி சோ இந்த வாரம் துக்ளகில்...

இதில் "துரோகம்' எங்கே இருக்கிறது?

ஹொகேனக்கல் குடிநீர் திட்டம் தொடர்பாக திரையுலகினர் நடத்திய "உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறபோது, கர்நாடக மக்கள் உள்ளம் புண்படுகிற மாதிரி பேசியதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது "தமிழர்களுக்கு துரோகம்' என்று சிலரால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த "உண்ணாவிரதப் போராட்டம்' நடந்தபோது, 16.4.08 "துக்ளக்' இதழின்
தலையங்கத்தில் நாம் எழுதிய கருத்துக்கள் இவை :

....பொதுக்கூட்டத்தில், எலும்பை நொறுக்கினாலும், திட்டப் பணியை நிறுத்தமாட்டோம் என்று சபதமிட்ட பிறகு....

....திரையுலகினரை வீர முழக்கம் செய்ய வைத்து, அந்த முழக்கங்களை கலைஞர் டி.வி.யில் நேரடியாகக் காண்பித்த பிறகு;

அந்த முழக்கங்களுக்காக, திரையுலகினரைச் சட்டசபையில் பாராட்டிய பிறகு;

தமிழகத்தில் மக்களின் உணர்ச்சிகளை நன்றாகக் கிளறிவிட்ட பிறகு....

...புதிய ஆட்சி வருகிற வரையில் காத்திருக்கலாமே என்று எழுதியதற்காக, தினமணியை முரசொலியில் திட்டித் தீர்த்த பிறகு;

– திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்....

.....கலைஞர், பகுத்தறிவாளர்; பகுத்தறிந்தார். "கர்நாடகத்தில் ஏற்கெனவே, கடினமான தேர்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிற காங்கிரஸ் கட்சி, இந்த ஹொகேனக்கல் பிரச்சனையையும் எதிர்கொண்டால், திண்டாடிப் போய்விடும்' என்கிற காங்கிரஸின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டார். மத்திய அரசில் தி.மு.க. வகிக்கிற மந்திரி பதவிகளை நினைத்துப் பார்த்தார். மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி தனக்கு எவ்வளவு தேவை என்பதைச் சிந்தித்துப் பார்த்தார். மத்திய அரசில் இன்னமும் பெறக்கூடிய பதவிகளைக் கணக்கிட்டுப் பார்த்தார். பகுத்தறிவு வென்றது. பிழைக்கும் வழி தெரிந்தது. அடித்தார் பல்டி! போட்டார் குட்டிக்கரணம்!!...

23.4.08 "துக்ளக்' இதழின் கேள்வி பதில் பகுதியிலிருந்து :

கேள்வி : திரையுலகினரின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, ரஜினிகாந்தின் கர்நாடகத்திற்கு எதிரான ஆவேசப் பேச்சு, உணர்வால் வந்ததா? நிர்பந்தத்தால்
வந்ததா? அல்லது எதிர்கால அரசியல் ஆசையினால் வந்ததா?

பதில் : இதில் அரசியல் ஆசை எதுவும் தெரிவதாக நான் நினைக்கவில்லை. சாதாரணமாக ஒரு பெரிய கூட்டத்தில் பேசுகிறபோது, கூட்டத்தினரின்
உணர்ச்சிகளுக்கு ஏற்ப பேசி, அவர்களுடைய அங்கீகாரத்தைப் பெறுகிற ஆர்வம், பலருக்கு ஏற்பட்டு விடுகிறது. அன்றைய கூட்டத்தில், எல்லோரும் உணர்ச்சிகளைக் கொட்டிப் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவரை ஒருவர் மிஞ்சுகிற எண்ணமும்
சேர்ந்துவிட்டது. ஆவேசப் பேச்சு என்ற வலையில் பலர் வீழ்ந்தனர். அதில் ரஜினியும் ஒருவர் என்பது என் கருத்து....

அன்று கலைஞரால், கலைஞருக்காக நடத்தப்பட்ட கலைஞரின் "போராட்டம்' அது. அதில் "அவர்களை (கர்நாடகத்தினரை) உதைக்க வேண்டாமா?' என்று பேசியது தவறு; அதை "துக்ளக்'கில் எழுதியதோடு மட்டுமல்லாமல், ரஜினியிடமும் சொல்கிற வாய்ப்பு கிட்டியது. அப்போது, அவரே, தான் அம்மாதிரி பேசியது தவறுதான் என்று உணர்ந்துவிட்டதும் புரிந்தது.

தான் உளமாற உணர்ந்து கொண்டதை, அவர் இப்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். தவறாகப் பேசியதை உணர்ந்து, அதற்காக வருத்தம் தெரிவிக்க ஒரு நேர்மைத் துணிவு தேவை. அது அவரிடம் இருப்பதால், தன் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில் "தமிழ் துரோகம்' எங்கிருந்து வந்தது? ஹொகேனக்கல் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழகத்திற்கு உரிமை கிடையாது என்றா அவர் சொல்லிவிட்டார்? உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதற்கு வருந்தியிருக்கிறார். அது பாராட்டத்தக்கது.

கலைஞர் அடித்த பல்டியும், திட்டத்தையே தள்ளி வைத்ததும் துரோகமாகத் தெரியாதவர்களுக்கு, ரஜினியின் நேர்மை, துரோகமாகத் தெரிவது, விந்தைதான்.
ஆகஸ்ட் 2 இட்லிவடை கருத்து .....
குசேலன் படத்தில் சூப்ப்ர் ஸ்டாராக நடிக்கிறார். ஆனால் அவர் பேச்சினால் நிஜ சூப்ப்ர் ஸ்டாராக ஆகிவிட்டார். சத்தியராஜ் போல் பினாத்த தைரியம் தேவையில்லை, தப்பாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதற்கு நிறைய தைரியம் வேண்டும். Hats off!


11 Comments:

Anonymous said...

can you cover the Jammu movement in a post?

Unknown said...

ஆமாம்..

தான் பேசியது தவறு என்று உணர்ந்து அதற்கு வருந்தவும் மன்னிப்பு கேட்கவும் தைரியம் மட்டுமில்லை வெளிப்படையான மனதும் வேண்டும்.

கர்நாடகாவில் குசேலனின் வியாபார வெற்றிக்காக ரஜினி மன்னிப்பு கேட்டார் என இதை எடுத்துக் கொள்ளக் கூடாது

காரணம் குசேலன் தமிழ்நாட்டில் தரும் வருமானத்தைக் காட்டிலும் கர்நாடக வசூல் ரொம்பவுமே குறைவாகத் தான் இருக்கும்

ரஜினியின் இந்தப் போக்கு வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் உரியது. இதை முன்னுதாரணமாகக் கொள்ளலாம் என்பதே என் கருத்து

Sri said...

Rajini is really great to do realise his fault and accept it openly. Dont know when the media will stop lying just to sell more issues. Nalladhu senja dhrogi. Politicsla irkaravan yemaathina adhu "just politics". enna nyayam idhu???

Anonymous said...

ITHUTHAAN THERINJA VISAYAM,AANAALUM CHO MATHIRIYANAVARKAL VILAKKI SONNAAL THAAN PACHAI THAMILANUKKU PURIKIRATHU.TAMILANIN ARIVU EPPADIPATTATHU ENDRU NANGU THERINTHU VAITHIRUPATHAAL THAN ,THIRAVIDA KATCHIKAL INDRU VARAI TAMILNAATAI AATCHI SEIKINDRANA.

Anonymous said...

அய்யா. ரஜினி தான் பேசிய பேச்சு தவறு என்று 'உணர்ந்தது' பாராட்டக்கூடிய விஷயம் தான். ஆனால் இவ்வளவு காலம் கழித்து சரியாக குசேலன் ரிலீஸ்'க்கு முதல் நாள் 'உணர்ந்தது' தான் இடிக்கிறது. உண்ணாவிரதம் முடிந்து அடுத்த நாளோ அடுத்த மாதமோ மன்னிப்பு கேட்டிருந்தால் அவரை பாராட்டி விழாவே எடுத்திருக்கலாம்!

Anonymous said...

இட்லிவடையும்,சோவும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்களே, ஒரு மூளை ஈருடல்
என்ற சந்தேகம் வருகிறது:).

Anonymous said...

'இட்லிவடையும்,சோவும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்களே, ஒரு மூளை ஈருடல்
என்ற சந்தேகம் வருகிறது:).'

இல்லவே இல்லை,இ.வ சோ போல்
வெள்ளந்தியா ஆள் கிடையாது, பயங்கர உஷார் மற்றும் விவரமான
பார்ட்டி.கமுக்கமா இருந்து காரியம்
செய்கிற ஆசாமி,சோ லொடலொட.

M Arunachalam said...

Muttal Anony, (1.40 pm)

Rajini has clarified the same point immediately (within 2 or 3 days) after fast day.

But, because the Kannada Veriyans started fresh agitation just before Kuselan release, in order to help prevent a law & order situation in Bangalore Rajini was again forced to clarify the stand.

If you don't know facts, don't blabber like a fool.

Kannan said...

Gnani will only praise about Kuselan movie.If he criticize the movie;Pyramid Saimira will cut him off from venture with Pyramid's One reel matter.Watch the debate between Gnani and Sumathi in Kumudam videos; we can understand Gnani better.

Anonymous said...

அய்யா அறிவாளி அருனாச்சலம் அவர்களே,
முட்டாள் அனானி @ 1.40pm தரும் பதில்:

ரஜினி அன்று (உண்ணாவிரதப்பேச்சுக்கு சில நாட்களுக்கு பிறகு) சொன்னது:
http://www.ibnlive.com/news/im-not-foolish-that-ill-abuse-kannadigas-rajini/62849-3.html
--> “If Karnataka doesn't show my films, it's not a loss for me"

http://entertainment.in.msn.com/southcinema/article.aspx?cp-documentid=1324914
--> "I did no wrong, won’t apologise: Rajni"

http://www.ibnlive.com/news/i-never-spoke-against-karnataka-rajinikanth/62811-3.html
--> "Do these people who are demanding my apology represent 5.5 crore Kannadigas?”
"I haven't done any wrong. But I am not averse to tendering an apology if I had committed any wrong,"
தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன் என்று சொன்னாரே தவிர, மன்னியுங்கள் என்று சொல்ல வில்லை!

நானும் ரஜினி ரசிகன் தான்.அவர் "நடிப்பை" திரையில் "மட்டும்" ரசிப்பவன்.

M Arunachalam said...

Rajiniyin Nadippai mattum Rasikkum Anony,

Pl read this:
"I haven't done any wrong. But I am not averse to tendering an apology if I had committed any wrong,".

As confirmed in Thuglak also, Rajini has "realised" subsequently that he shouldn't have used the word "kick them", which is what has been propagated by counterparts of Tamil perverts like you in Karnataka as if Rajini has told it against all Kannadigas.

Since this point has again been made an issue at the time of Kuselan's release & in order to prevent any untoward law & order situation in Bangalore due to the "indifferent" attitude of Bangalore police to provide protection to Kuselan-screening theatres, Rajini gave the clarification and DID NOT APOLOGISE.

So, he has never told that Hogenakkal water belongs to Karnataka or what he spoke on fast day was wrong.

All it requires to know the correct position is to read his clarification WITH some basic English knowledge & WITHOUT any bias.

But, the second requirement will be difficult for any TAMIL PERVERT because Rajini is a NATIONALIST & both these are mutually exclusive.