பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 04, 2008

மேலும் சில ரஜினி நியூஸ்

ரஜினி நேற்று இரவு திருப்பதி கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்று சாமியை பக்தியுடன் கும்பிட்டார். சிறிது நேரம் அங்கு இருந்தார் அதன் பிறகு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறிய தகவல்.

குசேலன் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தெலுங்கில் கதாநாயகடு என்ற பெயரில் வெளிவந்துள்ளது. குசேலன் படம் வெற்றி பெற்றால் கோவிலுக்கு வருவதாக வே�டி இருந்தேன். அப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து வேன்டுதலை நிறைவேற்ற வந்தேன்.அடுத்து "ரோபோ''வில் நடிக்கிறேன். இதன் படப் பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறேன்.கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்....

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர்.

வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர்.

கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் ரஜினியின் நலம் விரும்பிகள் சிலர் கேட்டுக் கொண்டதால், தொலைக்காட்சியில் தோன்றி, தனது பேச்சுக்கு விளக்கம் தெரிவித்தார் ரஜினி.

அதில், ஒட்டு மொத்த கன்னடர்களையும் தான் தாக்கிப் பேசவில்லை என்றும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குவோரையும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரையும் உதைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியதை தவறாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு தனக்கு மிகப்பெரிய பாடம் என்றும், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், குசேலன் திரைப்படம் எவ்விதப் பிரச்சினையுமின்றி வெளியாக ஒத்துழையுங்கள் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சத்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு, இளம் இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரஜினி உயர்ந்த மனிதர் -பாரதிராஜா

ரஜினிக்கும் எனக்கும் கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதன், மனிதாபிமானத்தில் முதலிடத்தில் நிற்பவர் என்பதில் எந்த மாறுபாடும் கிடையாது.

இப்போது அவர் கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்துப் பேசியதை அவருடைய மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். சினிமாவின் நன்மைக்காகப் பேசிய ரஜினியைக் குறை கூறுவதோ கண்டித்துப் பேசுவதோ தேவையற்றது. அதற்கான தகுதியும் இங்கு யாருக்கும் கிடையாது.

நண்பர் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் மன்னிப்புக் கேட்கக்கூடியவர் அல்ல. எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் மனிதரும் அல்ல. இதை நான் அவருடன் பழகியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.

வருத்தம் தெரிவிப்பது மனித நேயத்தின் மிக உயர்ந்த பண்பு. நிஜத்திலும் நான் பார்த்த மிக உயரிய மனிதர்களுள் முதலிடத்தில் நிற்பவர் ரஜினி. அடித்த கரங்களுக்கே பூமாலை போடும் அளப்பரிய குணம் அவருக்கு மட்டுமே உண்டு.

எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை வெற்றிகரமாக சந்தித்து வெளியில் வந்த வீரன் இந்த மனிதன். இந்தச் சூழ்நிலையையும் நேர்கொள்ளக்கூடிய சக்தி அவரிடம் உண்டு.

இதே ரஜினி உண்ணாவிரதத்தில் பேசிய அடுத்த நாளே அவரது கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. அப்போது மருந்துக்குக் கூட ஆதரித்துப் பேச ஒருவரும் முன்வரவில்லை.

சூப்பர்ஸ்டார் என்ற அவரது இமேஜூம், அவரது அதிகபட்ச சம்பளமும்தான் இங்குள்ள சிலருக்குப் பிரச்சினை என்றால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அது 30 வருடங்கள் அவர் கஷ்டப்பட்டதன் விளைவு. மக்கள் கொடுத்தது. புரிந்து கொண்டு பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

( தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நல்ல கதைகள் இல்லை. புதிய எண்ணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கதையைவிட்டுவிட்டு தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் தமிழில் தற்போது படம் தயாரிக்கிறார்கள். சமீபத்தில் வெளிவந்த கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

கதை எழுதுபவர்கள் எல்லாம் இயக்குனர்களாக மாறியதுதான் இதற்கு காரணம். தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்களின் முக்கியத்துவம் குறைந்து நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது - பாரதிராஜா போன மாதம் கொடுத்த பேட்டி )


)
சீமான்:

இப்ப அவர் என்ன சொல்லிட்டார்னு இவங்கல்லாம் குதிக்கிறாங்க... இந்த விளக்கத்தைக் கூட அவர் சொல்லாம விட்டிருக்கலாம். அதனால அவருக்கொண்ணும் நஷ்டமில்லை. ஆனா, இதனால ஒரு வன்முறை வெடிச்சி தியேட்டர்காரங்களும், அப்பாவி ரசிகர்களும், படத்தை விநியோகம் பண்ணியவர்களும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே வருத்தம் தெரிவிச்சார்.

வருத்தம் தெரிவிக்கிறதுக்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களா நாம். ரஜினி ஒரு அரசியல்வாதியல்ல. அவரும் மனிதர்தானே... இங்கே தமிழ்நாட்டில் தமிழர்களோடு வசிக்கிற ஒரு தமிழ் நடிகரை எதற்காக இப்படி அவமானப்படுத்த வேண்டும்.

குசேலன் திரைப்படத்துக்கு வந்த பிரச்சனையை தமிழினினத்துக்கே வந்த சோதனையாகத்தான் நான் பார்க்கிறேன். அதை நாமெல்லோரும் முன்வந்து தீர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் ரஜினி, தனி மனிதராகவே நின்று அதைத் தீர்த்த விதத்தைப் பாராட்டுகிறேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

யாரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்குப் பெயர் பகுத்தறிவுமல்ல என்றார்.

அமீர்:

எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்து, கண்மூடித்தனமாகப் பேசுவதில் நம்மவர்களுக்கு இணையே இல்லை.

ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார், தமிழர்கள் பணமெல்லாம் அவருக்குப் போகிறது என்று புலம்புகிறார்கள் சிலர். ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்றால், அதைக் கொடுக்கும் அளவுக்கு அவர் மூலம் தமிழர்களாகிய நாம் சம்பாதிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காகவே சொந்தப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டவர் ரஜினி.

அவரைச் சுற்றியுள்ள தமிழர்கள்தானே அவரை வைத்துச் சம்பாதிக்கிறார்கள். ஒரு ரஜினி படம் வருகிறதென்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் புதுவாழ்வு கிடைக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒருவர், தன் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களுக்காகப் பேசியதை மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று கூறி, அதில் பப்ளிசிட்டி தேடுவது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

ரஜினி இந்த மண்ணின் மைந்தர் - பி. வாசு

நான் பல வருடங்கள் ரஜினியுடன் நெருங்கிப் பழகியவன். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரு அவமானமென்றால் முதலில் நின்று குரல் கொடுக்கக் கூடிய மனம் படைத்தவர் ரஜினி. எண்ணத்தால் முழுக்க முழுக்க தமிழராகவே வாழும் அவரைப் பார்த்து எழுப்பப்படும் எந்தக் கத்தல்களும் எடுபடாமலேயே போகும்.

நாமெல்லோரும் சேர்ந்து போராடித் தீர்த்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை தனிமனிதராகத் தீர்த்து வைத்திருக்கும் அவரைக் குறை சொல்லிக் கஷ்டப்படுத்துபவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

என்னுடைய பணக்காரன் படத்தில் அவருக்கு ஒரு வசனம் வைத்திருப்பேன். 'இனி வாழ்வோ சாவோ, எனக்குப் பிடிச்ச இந்த மண்லதான் அது நடக்கணும். அதனால ரிட்டர்ன் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு'. அது சினிமாவுக்காக வைத்த டயலாக் அல்ல.. ரஜினியின் மனதைப் படித்ததால் வைத்தது, என்றார்.

தென்னிந்திய பிலிம்சேம்பர் தலைவர் கேஆர்ஜி, கலைப்புலி தாணு, வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
( நன்றி : தட்ஸ் தமிழ் )

9 Comments:

நாரத முனி said...

ஜெயமாலா நடிச்ச ஜம்பு இன்னிக்கும் பேமசான படம். எப்பவாவது ராஜ் டிவில போட்டா பாருங்க

enRenRum-anbudan.BALA said...

காலணாவுக்கு லாயக்கில்லாத இந்த சத்யராஜின் (தலைவர் பற்றிய )கமெண்ட் (அதாவது, ரஜினி "மன்னிப்பு" (அவர் கேட்கவில்லை என்பது வேறு விஷயம்:)) கேட்டது தமிழர்களுக்கு அவமானம்!!!) காமெடியாக உள்ளது ! இவர்கள்(சரத்,சத்யராஜ்,ராஜேந்தர்(நம்பர் 1 காமெடியன்)) தான் மறத்தமிழர்களின் பிரதிநிதி போல காட்டிக் கொள்வது ரொம்ப பரிதாபம். இந்த விஷயத்தில் விஜயகாந்த் எதுவும் பேசாமல், சரியாக நடந்து கொண்டுள்ளார் !

நான் ஏற்கனவே,எனது பழைய பதிவில் கூறியது இங்கே:
http://balaji_ammu.blogspot.com/2008/04/432-et-al.html
********************
ரஜினி மேல் சத்யராஜுக்கு இருக்கும் பொறாமையும், காழ்ப்பும், அவரது அன்றைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. "பெரியார்" படத்தில் நடித்து விட்டதாலேயே தனக்கு ஒரு 'சிறப்புத் தகுதி' வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் கூட்டத்தில் அத்தனை தாறுமாறாகப் பேசியும், அவரது பேச்சை ஒதுக்கித் தள்ளிய கன்னட வெறியர்கள், ரஜினியின் சாதாரணமான பேச்சை திரித்து, அவர் மீது பாயத் தொடங்கி உள்ளனர்! இந்த ஒரு விஷயத்திலேயே, சத்யராஜ் பேச்சுக்கு எந்த அளவு மதிப்பு உள்ளது / முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது கண்கூடு!
*********************

அன்புடன் பாலா

தீபக் said...

ர‌ஜினி செய்த‌ ஒரே த‌வ‌று "உதைக்க‌" என்று அவ‌ர் உப‌யோக‌ப்ப‌டுத்திய‌ ஒரே வார்த்தை. ஒரு தேர்ந்த‌ அர‌சிய‌ல்வாதி போல் அவ‌ர் ந‌ட‌ந்து கொள்கிரார் என்று சில‌ர் கூறுவ‌து கேட்டு சிரிப்ப‌தைத் த‌விர‌ வேரொன்றும் என‌க்கு தோன்ற‌வில்லை.

ச‌த்திய‌ராஜ் அன்று மேடையில் பேசிய‌தை youtube'இல் பார்த்து என‌க்கும் புல் அரித்து போன‌து என்ன‌வோ உண்மைதான். ஆனால் அத‌னை திரும்ப‌ இர‌ண்டொரு தடவைகள் கேட்டு பார்த்த‌ பின்பு பச்சைத்த‌மிழ‌னுக்கு த‌மிழையும் த‌மிழனையும் விட‌ ஒரு க‌ன்ன‌ட‌ன் ச‌ம்பாரிக்கும் பசசை நோட்டுக‌ள் தான் மிக‌ப்பெரிய‌ பிர‌ச்ச‌னை என்ப‌து தெளிவாக‌ விள‌ங்கிய‌து. எல்லாமே த‌மிழிலும் த‌மிழ் நாட்டிலும் இருக்கும் போது எத‌ற்கு அடுத்த‌வ‌னைத் தேடி போக வெண்டும் என்று கூறும் புர‌ட்சித்த‌மிழ‌ன், புர‌ட்சி "ம‌லையால‌" தலைவ‌னை போற்றுவ‌து ஏனோ புரியாத‌ புதிர்.

த‌மிழ‌னை எங்கு அடித்தாலும் த‌மிழ‌ன் திரும்ப‌ அடிக்க வேண்டும் என்று சொல்லி சிபிராஜை ஈழ‌த்திற்கு அனுப்பி வைத்து விட்டு தான் பெங்க‌லூருக்கு புர‌ப்ப‌ட்டுச் சென்ற‌ புர‌ட்சித்த‌மிழ‌ன் என்றும் வாழ்க‌!

முட்டாள் கூ... என்று மேடையில் பேசி புல் அரிக்க‌ வைத்து விட்டு போன‌வ‌ருக்கு ஒரே ஒரு செந்த‌மிழ் ப‌ழ‌மொழி ம‌ட்டும் கூற‌ என‌க்கு ஆசை "கேக்க‌ர‌வ‌ன் கேனக்கூ....."

பி.கு.: த‌மிழில் த‌வ‌றுக‌ள் இருந்தால் ம‌ண்ணிக்க‌வும். எழுதி 8 வ‌ருட‌ங்க‌ள் இருக்கும் (12ம் வ‌குப்பு இருதித்தேர்வு :))

Anonymous said...

oru santhegam, tamilargal mattum thaan ippadi vaettiyaa paesuvaangalaa? illai ulagatthil ippadi vaeru yaarum irukkangala? bathil sollungalaen

மடல்காரன்_MadalKaran said...

தமிழ் பொண்ணு அவர்களே.. ஒரு சிலர் பேசறத வச்சிகிட்டு ஒட்டு மொத்த தமிழர்களும் அப்படின்னு சொல்ல கூடாது.
தண்ணி குடுக்காத கர்னாடக அரசியல் வாதிகளால ஒட்டு மொத்த கன்னடர்களும் கெட்டவங்களா?

அன்புடன், கி.பாலு

Anonymous said...

intha blogil tamilil type saivathu yaeppadi?

Anonymous said...

//intha blogil tamilil type saivathu yaeppadi?//

Anony, please clik the below link u can type in tamil

http://www.google.com/transliterate/indic/Tamil

Example: Arasiyal dhurogigal = அரசியல் துரோகிகள்

Anonymous said...

சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகளுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை பிரமிட் சாய்மிரா நிறுவனம் இன்று காலை ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சிறப்பகு காட்சியை குழந்தைகளோடு சேர்ந்து காண வந்திருந்தார் முதல்வர் கருணாநிதியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி.

படம் முடிந்த பிறகு நிருபர்களிடம் கூறுகாயில், மிக அற்புதமான திரைப்படம் குசேலன் என்று பாராடினார். படத்தின் இறுதிக் காட்சியில் தான் நெகிழ்ந்துவிட்டதாகவும், ஒருகட்டத்தில் தன்னையும் மீறி கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்தார்.

தமிழில் ஒரு அற்புதமான முயற்சிக்கு வழிகாட்டியிருக்கிறார் ரஜினிகாந்த் அவர்கள். இந்த மாதிரி நல்ல படங்கள்தான் மக்களின் ரசனையை உயர்த்தும் என்றும் அவர் கூறினார்.

தமிழ் மையம் அமைப்பின் ஜெகத் கஸ்பர் ராஜூம் இந்தப் படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தார். மிக அருமையான, ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் என்றார் அவர்.

Anonymous said...

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-ten-movies/tamil-cinema-topten-movie-kuselan.html