பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 02, 2008

ரஜினி ஒரு தமிழன் தான் - பி.வாசு ( குசேலன் கலக்ஷன் )

ரஜினி பேச்சுக்கும் குசேலன் கலக்ஷனுக்கும் சம்பந்தமா ?
ரஜினி என்ன பேசினார் என்று செலக்டிவாக எடுத்து பத்திரிக்கை வியாபாரம் செய்கிறது, அதை போக்கவே இந்த பதிவு.


ரஜினி பேசிய பேச்சு(பழசு)


ரஜினி எழுதிய கடிதம்


'அன்பும் பாசமும் மிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்!

ஒகேனக்கல் பிரச்னையின்போது, தமிழகத்தில் திரைப்பட நடிகர்-நடிகையர் உண்ணாவிரதம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் நான் பேசியது, கன்னட மக்களின் மனதைப் புண் படுத்தியுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளும்கூட. ஒரு கலைஞன் நாடு, மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லோருக்கும் பொதுவானவன். நான் நடித்துள்ள திரைப்படங்களை கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், கன்னடியர்களும் பிறமொழியினரும் பார்க் கிறார்கள்.

எனவே, யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் 'குசேலன்' படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,
ரஜினிகாந்த்


ரஜினி பேசிய பேச்ச(புதுசு)


ரஜினி மன்னிப்பு கேட்டாரா என்று நீங்களே இதை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்க.

பாலச்சந்தர் இன்றைய பேச்சு
இங்கே உங்களுக்கு ரஜினி பேட்டி அளித்ததாக வந்த பேப்பர் கட்டிங்குகளை கொண்டு வந்து காட்டியிருக்கிறேன். அவர் வருத்தம் தெரிவித்ததாகவும், மன்னிப்பு கேட்டதாகவும் ஒவ்வொரு பத்திரிகையும், ஒவ்வொரு விதமாக செய்தி வெளியிட்டுள்ளன.

கன்னட அமைப்புகளுக்கு ரஜினி எதற்காக கடிதம் எழுதினார் என்றால் பல கோடி ரூபாய் முதலீடு செய்து குசேலன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை பல கோடி ரூபாய் கொடுத்து விநியோகஸ் தர்கள் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனிப்பட்ட கருத்தை ஒதுக்கி படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தை நானும் பார்த்தேன். அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை. பாடம் கற்று கொண்டேன் என்று கூறியதை சாரி என்று போட்டு இதை ஒரு பிரச்சனையாக ஆக்கிவிட்டனர். இதை வைத்து சில பேர் கடுமையாக பேசியுள்ளனர்.

நமக்குள் சுவர் எழுப்பி கொள்ள வேண்டாம். நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்றார் அவர்.ரஜினிகாந்த் இன்றைய பேச்சு(மாலைமலர்)
சமீபத்தில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் நான் பேசியதாக வெளிவந்த செய்திகள் குறித்து பாலச்சந்தர் விரிவாக இங்கே பேசினார். இதற்கு மேல் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை.

இந்த விஷயத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க நான் விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். நான் கொடுத்த பேட்டியில் நான் பாடம் கத்து கிட்டேன் என்று கூறியிருந்தேன். இதை எதற்காக சொன்னேன் என்றால், ஒகேனக்கல் குடிநீருக்காக உண்ணாவிரதம் இருந்த போது உதைக்கனும் என்று பேசினேன். அப்படி பேசிய போது தண்ணீர் எடுக்க தடுப்பவர்களை என்று குறிப்பிட்டிருந்தால் இந்த பிரச்சனை அன்றே தீர்ந்திருக்கும் இதைத்தான் பாடம் கத்துக்கிட்டேன் என்று கூறினேன். அது எப்படி எல்லாமோ ஆகிவிட்டது.

பச்சை தமிழர்களின் ரியாக்ஷன்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அறிக்கை
தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு "
( கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் `ஜக்குபாய்' என்ற படத்தில் நடிக்கிறேன். இது, ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தின் கதைதான். இந்த படத்தின் படப்பிடிப்புக்காக, வருகிற 5-ந் தேதி நாங்கள் ஆஸ்திரேலியே போகிறோம் - சத்தியராஜ் )

சத்யராஜ் அறிக்கை
நடிகர் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்து தமிழக ரசிகர்களையும் அவமானப் படுத்திவிட்டார். என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்ட படக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கலைப்புலி சேகரன்
தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல.

பாரதிராஜா
ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதாலும், கர்நாடகத் தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற் காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார். இதில் வேறு எதுவும் கூறுவதற்கில்லை.

பி.வாசு
கடைசி வரை ரஜினி ஒரு தமிழன் தான் என்பது எனக்கு தெரியும். தமிழருக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் அவர் தமிழன் பக்கம் தான் இருப்பார். இதை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன்.

வீராச்சாமி டி. ராஜேந்தர்
தமிழர்கள் மத்தியில் ரஜினி தன்னை காட்டிக்கொள்ள நினைத்தார் ஹீரோவாக. இன்று கன்னட அமைப்புகளுக்கு பயந்து வருத்தம் தெரிவிப்பதாகப் பேசி தன்னை வெளிப்படுத்தி விட்டார் ஜீரோவாக. அ..டண்ணுணக்கா டணக்கு ணக்கா..

அங்கே எவ்வளவு நஷ்டம் ஏற்படுமோ அதை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டு தமிழ்த் திரைப்படஉலகின் மூலம் போராட வேண்டியதுதானே?

ரஜினி மன்னிப்பு கேட்க வைத்த கன்னட மக்களின் மொழிப்பற்றை ஒற்றுமையை பாராட்டுகிறேன். அந்த உணர்வு தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று வேதனைப்படுகிறேன்.

இந்தவிஷயத்தில் கன்னடர்களிடமிருந்து ரஜினி கற்றதாக சொல்கிறார் பாடம். இவரைப் போன்ற நடிகர்களிடத்தில் தமிழக மக்கள் கற்றுக் கொள்ளவேண்டும் பாடம். அவர் யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கன்னடத்தில்தான் கடிதம் எழுதியுள்ளார். இதிலிலிருந்து அவர் யார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும்

பாமக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுச்சாமி

தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளது ரஜினியின் மன்னிப்பு. கன்னட அமைப்புகளிடம் அவர் சரணாகதி அடைந்துள்ளதன் மூலம் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளார்

சென்னையில் குசேலன் எப்படி ?
சத்தியம் தியேட்டர் வாசலில் வெடி, கொடி, பேனர், பாலாபிஷேகம் எதுவுமில்லை. பேனர்களை கூட இன்று எடுத்துவிட்டார்கள் என்று பேச்சு. நாளை போய் பார்த்தால் தான் தெரியும்.

முழு படத்துல ஒரு இடத்துல கூட விசில் சத்தம் இல்லை டோட்டல் சைலண்ட். நேற்று மேட்னி ஷோ ( சாந்தம் ) என் பக்கத்தில் மூன்று சீட் காலி.

பல பேர் ஃபர்ஸ்ட் ஹாஃப்ல எழுந்து போனாங்க. திரும்ப வந்தாங்களான்னு தெரியாது.

படத்தோட ப்ளஸ்னு நினைச்ச ரஜினி - சுந்தர்ராஜன் டயலாக் சீன் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியாம். அப்ப உங்களுக்கு என்று எதுவும் இல்லையா ? ஏன் எங்களை உசுப்பிவிடணும் என்று ரசிகர்கள் கொதிப்பு என்று கேள்வி

மாயாஜால்ல டோட்டலா காலியாம். மன்னிப்பு கேட்டதால் தான் படம் ஃபிளாப் என்று நினைக்க வேண்டாம் ஓவரால் படம் நல்லால்லையாம்.

14 Comments:

ச.சங்கர் said...

கன்னடம் கொத்தில்லா.ரஜினி லெட்டர் & ஸ்பீச் தமிழுல ஹேளி

[vg] said...

Good analysis and g8 collections.

நல்லதந்தி said...

சூப்பர்ஸ்டார் என்ன பேசினார் என்பது இப்போது தான் முழுமையாக புரிகிறது.ஊடகங்கள் அவர் சொன்னதை துண்டுத் துண்டாக வெட்டி ஒட்டி வெளியிட்டதால் அவர் என்னமோ குசேலன் படம் வெளிவர முழுமையாக சரணாகதி அடைந்து மன்னிப்பு கேட்டது போல் வெளித்தோற்றம் உருவாக்கியுள்ளது.அதை நான் உட்பட அனைவரும் நம்பும் சூழ்நிலை உருவானது.நீங்கள் அவர் சொன்னதை முழுமையாக தமிழிலில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு,இணையத்தில் கொஞ்சமாவது அவர் நாறடிக்கப்படாமல் தடுத்தால் என்ன?

முரளிகண்ணன் said...

புலனாய்வு பத்திரிக்கைகளை மிஞ்சிவிட்டீர்கள்

மடல்காரன்_MadalKaran said...

எனக்கு தெரிந்து அவர் மன்னிப்பு/வருத்தம் கேட்டதற்கும்/தெரிவித்ததிற்கும் கலெக்ஷனுக்கும் சம்பந்தமே இல்ல. நல்லது செய்ய நினைச்சா நாலு பேர் நாலு விதமா பேசத்தான் செய்வாங்க.. உலக நியதி என்ன பண்ண..!

Sri said...

I agree with nallathanthi. naanum first thalaivar ippadi sollitaarennu varuthapaten. aana ippo thaan puriyudhu. Please dont spoil a good person's image. People like him r very rare to find.

அப்பா டக்கர் அமீர்பர் said...

இட்லி ரஜினி டுபக்குர் குசலன் படத்திற்காக தமிழனுக்கு அல்வா கொடுத்தார்,

Anonymous said...

//சூப்பர்ஸ்டார் என்ன பேசினார் என்பது இப்போது தான் முழுமையாக புரிகிறது.ஊடகங்கள் அவர் சொன்னதை துண்டுத் துண்டாக வெட்டி ஒட்டி வெளியிட்டதால் அவர் என்னமோ குசேலன் படம் வெளிவர முழுமையாக சரணாகதி அடைந்து மன்னிப்பு கேட்டது போல் வெளித்தோற்றம் உருவாக்கியுள்ளது.அதை நான் உட்பட அனைவரும் நம்பும் சூழ்நிலை உருவானது.நீங்கள் அவர் சொன்னதை முழுமையாக தமிழிலில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு,இணையத்தில் கொஞ்சமாவது அவர் நாறடிக்கப்படாமல் தடுத்தால் என்ன?//

செய்ய மாட்டீர்களா? please!

IdlyVadai said...

//நீங்கள் அவர் சொன்னதை முழுமையாக தமிழிலில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு,இணையத்தில் கொஞ்சமாவது அவர் நாறடிக்கப்படாமல் தடுத்தால் என்ன?//

அவர் கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் கன்னட பேச்சு யாராவது தமிழாக்கம் செய்து தந்தால் போடுகிறேன்.

குசேலன் படத்தில் சூப்ப்ர் ஸ்டாராக நடிக்கிறார். ஆனால் அவர் பேச்சினால் அவர் நிஜ சூப்ப்ர் ஸ்டாராக ஆகிவிட்டார். சத்திரராஜ் போல் பினாத்த தைரியம் தேவையில்லை, தப்பாக பேசியதற்கு மன்னிப்பு கேட்பதற்கு நிறைய தைரியம் வேண்டும். Hats off!

Loganathan - Web developer said...

Really it is all WRONG data , i have seen movie here, it was so house full all the shows

Anonymous said...

//மாயாஜால்ல டோட்டலா காலியாம். மன்னிப்பு கேட்டதால் தான் படம் ஃபிளாப் என்று நினைக்க வேண்டாம் ஓவரால் படம் நல்லால்லையாம்.//

நல்ல செய்தி சொன்ன இட்லிவடை வாய்க்கு சர்க்கரை போட வேண்டும். எனக்கு அறுபது ரூபாய் மிச்சம்.

M Arunachalam said...

IV,

First of all, Hats off to you for having understood the 'truth" and had the courage to openly say it. Yes. In this particular matter at least you have emulated Thalaivar. Hats off to you Sir.

To Nalla thanthi & Sri,

Remember Padayappa dialogue when Rajini's own friend gets caught while surruptiously helping Manivannan's gang by trying to cheat Rajini? You two are in that situation now.

The very fact that you don't have faith in Rajini in the first place & also judge him based ONLY on whether he supports Tamil cause or not, shows that you have NOT AT ALL understood Rajini that he is an Indian first & foremost.

You are unfit to call yourself as a Rajini fan henceforth. I can believe other "Tamil Veriyans" who post comments anonymously to condemn Rajini & his actions. At least, they are true to their "leaders", whoever they are.

But, you guys are worse than them. If you cease to be Rajini fans, it will be good riddance for Rajini.

Arun

Unknown said...

நனகே கன்னடா சன்னாக பரத்தே

ரஜினி லெட்டரை எனக்கு மெயில்ல அனுப்புங்க நான் மொழி பெயர்ப்பு அனுப்பறேன்.

IdlyVadai said...

Blogger சந்திரமௌளீஸ்வரன் ரஜினி லெட்டர், கன்னட பேச்சு எல்லாம் இந்த சுட்டியில் இருக்கு

http://idlyvadai.blogspot.com/2008/08/blog-post_02.html

மொழியாக்கம் செய்து தருவதற்கு நன்றி. லெட்டர் முடிந்துவிட்டது, ஒன்லி கன்னட பேச்சு பெண்டிங்.