பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 02, 2008

குசேல கிரகணம்

நேற்று நான் குசேலன் படம் பார்த்த சமயம் சூரிய கிரகணம். விமர்சனம் கீழே...

படம் ஆரம்பித்து 30 நிமிஷத்தில்
* நல்ல கதை.
* கவிதாலயா லோகோவில் தங்கமாக ஜொலிக்கும் திருவள்ளுவர்.
* பசுபதி, மீனா அவர்களுடைய குழந்தைகள்.
* எந்நேரமும் அகத்திக்கீரை கட்டை சாப்பிடும் பசுபதி வீட்டு ஆடுகள்.

1 மணி நேரத்தில்
* குசேலன் டைட்டிலில் கத்திரிகோல் மேலும் கீழுமாக வெட்டுகிறது. அதனால் படம் 2:30 மணி நேரத்தில் முடிந்துவிடுகிறது ஒரே அறுதல். இன்னும் கத்திரிக்கோல் நிறைய முறை அதை செய்திருக்க வேண்டும்.
* ரஜினிக்காக நல்ல ஏ-கிளாஸ் கதையை பீ-கிளாஸ் கதையாக செய்திருக்கும் பி.வாசு.

1:30 மணி நேரத்தில்
* ஒரே தெரு அதில் உள்ள கடைகள் தான் கிராமம் என்று செட்டப் செய்த தோட்டா தரணி.
* டால்பின், நீர்வீழ்ச்சி போன்ற அமச்சூர் கிராப்பிக்ஸ், சிகப்பு, ஊதா
சிலைடுகளை போட்டு எடுக்கப்பட்ட கேமரா.
* ஜி.வி.பிரகாஷ் இசை இருக்கா என்று கேட்க வைக்கிறார்.

2 மணிநேரத்தில்
* காலேஜ் ஸ்டூடண்டாக வராமல், பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு நரிக்குறவர்களாக வரும் சின்னிஜெயந்த். முதலாளி லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், மேனேஜராக சந்தானம், இன்ஸ்பெக்டர் மனோபாலா என்று போட்டி போட்டுக்கொண்டு திரைக்கதையை நிரப்ப வருவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
* காடியாக டிரஸ் போட்டுக்கொண்டு வரும் வடிவேலு பாடியாக வரும் அவர் மனைவி சோனாவுடன் அடிக்கும் லூட்டி. கடத்திக்கொண்டு வந்து எல்லோருக்கும் மொட்டை அடிக்கும் வடிவேலு விவேக் மாதிரி ஆகிவிட்டார் ( சரக்கு தீர்ந்துவிட்டது ) அடுத்த காமெடி நடிகர் வர தமிழ் திரை உலகிற்கு வாய்ப்பு இருக்கிறது.
* வழுக்கிவிழும் டிரஸ் போட்டுக்கொண்டு வரும் நயந்தாரா. ஒரு பாடலுக்காகவே காணாமல் போகிறார், வடிவேலுவுக்கு மட்டும் இருக்கும் டிரஸை கழட்டி காமிப்பது, நீலாமபரியாக அண்ணாமலை-2விலும், ஜோதிகாவாக சந்திரமுகி-2வில் வரும் சீன்கள்.
* பேரீச்சம் பழம் கொட்டை, ஒன்பதாவது அதிசயம் போன்ற இரட்டை அர்த்த வசனங்கள்

2:30 மணி நேரத்தில்
* நல்ல கதையாக இருந்தால் அதை எந்த பெரிய டைரக்டராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நிரூபிக்கும் கடைசி 15 நிமிஷம்.
* கீதா, ஃபாதிமா பாபுவுடன் மூன்றாவதாக வரும் கன்னியாஸ்த்திரி, எஸ்.பியாக பிரபு, துணைநடிகராக விஜயகுமார், (ஒரு சீனில் நயந்தாராவுக்கு குடைபிடிக்கும்)மதன் பாப், நயன் காணாமல் போயிட்டார் என்று சொல்லும் மோகன் ராம் ஆகியோர் அதிகம் பேசாமல் இருந்ததற்கும், "குப்பசாமி, குப்பசாமி" என்று சந்தானபாரதி அடிக்கடி (குசேலன் படம் பற்றிய) உண்மையை பேசியதற்கும் ஒரு சபாஷ்.

பைக்கில் வரும் போது
பிகு: சொல்ல மறந்துவிட்டேனே, சூப்பர் ஸ்டாராக ரஜினி கஷ்டப்பட்டு நடிக்கிறார். கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டதாக நேற்று செய்தி, கூடவே ரஜினி ரசிகர்களிடமும் இவர் கேட்டிருக்கலாம்.

இட்லிவடை மார்க்: 5.5/10

57 Comments:

அருண்மொழி said...

இட்லிவடையாரே,

படத்திற்கு என்ன rating? அப்படியே இன்றைய தினமணி cartoonஐ எடுத்து போடுங்கள்.

IdlyVadai said...

அருண்மொழி மார்க்+கார்டூன் போட்டாச்சு - நன்றி.

அருண்மொழி said...

super fast updateக்கு நன்றி, இட்லிவடையாரே.

Anonymous said...

"தசாவதாரம் வெளியாகி ஐம்பதாவது நாள். திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சென்னை நகரில் மட்டும் சென்ற வார இறுதிவரை கமல் படம் வசூலித்தது 9.44 கோடிகள். குசேலன்தான் இந்த சாதனையை முறியடிக்க வேண்டும். "

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0807/31/1080731072_1.htm


"ரஜினி படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் முதல் காட்சி முடிந்து வெளியே வரும்போதே, தியேட்டருக்கு வெளியே மக்கள் வெள்ளம் அலை மோதும். ஆனால், நேற்று ஒரு சில தியேட்டர்களில் 50 பேர், 100 பேர் மட்டுமே காத்திருப்பதைப் பார்க்க முடிந்தது."

http://district.dinamalar.com/districtnews_main.asp?ncat=Coimbatore&ncat_ta=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88#55086

டவுசர் கிழிந்து போய் இருக்கும் குசேலன் எங்கிருந்து "ஆழ்வார்பேட்டை ஆண்டவன்" கமல்ஹாசனின் தசாவதார சாதனையை முறியடிக்க?

முதலில் பசுபதிக்கு அல்வா கொடுத்தாங்க. பட ரிலீசுக்கு முதல் நாள் "தமிழகத்து மக்களுக்கு" அல்வா கொடுத்து, பாலசந்தருக்கு இவரின் பல்டியால் டன் கணக்கில் அவல் கொடுத்திருக்கிறார். "பல்டி திலகம்" "தமிழநாட்டு துரோகி" "கன்னட வெறியன்" "பல்டி குரங்கு" ரஜினியை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்.

முன்னால் ஒரு பதிவில் "கனனடக்காரன்" என்று எழுதிய ஒரு அனானிக்கு பதில் சொன்ன "பிளீ"ச்சசீ"ங்பவுடரே" எங்க ஒடி ஒளிந்து விட்டாய்? குசேலன் படதை ஆளில்லாத தியேட்டரில் பார்த்து கும்மியடிச்சுட்டு இருக்கிறாயா?

குசேலன் பிளாப் ஆனதை பார்த்து ஷங்கர் "ரோபோவை" டிராப் செய்யப் போவதாக ஒரு செய்தி. இட்லி வடையாரே! கன்பர்ம் செய்து சொல்லுங்க.

"கன்னடியன்" ரஜினியின் நிஜ முகத்தை இப்போதாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்க எழுதியது போல இவர் "தமிழ்நாட்டைப் பிடித்த கிரகணம்" தான். விரைவில் கிரகணத்தை தொலைத்துக் கட்டுவோம்.

Anonymous said...

Kuselan=Wasssssssstttttttttttteeeee...
Amuthapriyan

Anonymous said...

இட்லிவடை மார்க்: 5.5/10

u mean -5.5/10

Anonymous said...

தேர்ந்த அரசியல்வாதி கூட தோற்றுப் போகும் வகையில் ரஜினியின் நடவடிக்கை உள்ளது.

என்னைப் போன்ற நடுநிலைவாதிகளை கூட ரஜினி ஏமாற்றி விட்டார். அவரோட படங்களை இனி பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

தொடர்ந்து அவரின் படங்கள் பிரச்சனையை சந்திக்கப் போகின்றன. அது தெளிவாகிவிட்டது. அவரை நம்பி இனி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலைதான் பாவம்.

"இருதலைக்கொள்ளி எறும்பாக" ரஜினி சிக்கிவிட்டார்.

"நுணலும் தன் வாயால் கெடும்." "யாகாவாராயினும் நா காக்க" இதையெல்லாம் தெரியாதவரா ரஜினி ? இருந்தாலும் எனக்குப் பேச தெரியாது, தெரியாமல் பேசி விட்டேன், என்றெல்லாம் பம்மாத்து வார்த்தைகளை கூறி மன்னிப்புக் கேட்டதனால் அவரின் "இமேஜ்" பாதாளத்திற்கு விழுந்துவிட்டது.

தினமணி கார்ட்டூன் நச்சுன்னு இருக்கு.

ஒரு ஐடியா இனிமேல் ரஜினி "ரிடையர்மென்ட்" பற்றி யோசிக்க வேண்டியதுதான். போதுமான அளவுக்கு புகழ், பணம் எல்லாம் சம்பாதித்து விட்டார். இனி என்ன? அரசியலுக்கு வரலாம்.

ஆனால் நிலைமை சிக்கலாகிவிட்டது. இனி அவர் சொல்வதை தமிழ் நாட்டில் யாரும் கேட்கப் போவதில்லை.

"ஆல் தி பெஸ்ட் "சிவாஜி ராவ் கெய்க்வாட்" !!"

Anonymous said...

இட்லி வடை விசிறி...

ஏம்ப அனானி ஏன் இந்த கொலவெறி..
அவனவன் வேலை பாக்கறத்துக்கே இங்க நேரம் இல்ல.. நீ என்னடான்னா சிறு பிள்ளதனமா பேசறீங்க.. அவர் படம் ஓட.. அங்குள்ள ரசிகர்கள் பார்க்க அவரு மன்னிப்பு கேட்டாரு.. இதப்போய் பெருசு பண்ணலாமா.. பணத்த கொடுத்தியா படத்த பார்த்தியானு போயிகிட்டே இரு..!

Anonymous said...

AUG 4 - 100% empty shows of Kuselan @ MAYAJAL

Show 10.30 - http://i33.tinypic.com/rkq62t.jpg
Show 11.00 - http://i38.tinypic.com/15mzrlk.jpg
Show 12.00 -http://i33.tinypic.com/2v3gck2.jpg
Show 12.30 -http://i37.tinypic.com/2cpaz6g.jpg
Show 13.29 -http://i36.tinypic.com/s2w934.jpg
Show 13.30 - http://i36.tinypic.com/20ie4xh.jpg
Show 14.00 -http://i36.tinypic.com/20ie4xh.jpg
Show 14.30 - http://i37.tinypic.com/281a0jk.jpg
Show 15.00 - http://i38.tinypic.com/16hn3aa.jpg
Show 15.30 - http://i38.tinypic.com/2hi9pw8.jpg
Show 17.00 -http://i37.tinypic.com/280qg3k.jpg
Show 18.00 - http://i37.tinypic.com/mvivfd.jpg
Show 18.30 - http://i35.tinypic.com/2udx09e.jpg
Show 20.00 -http://i33.tinypic.com/2qxrm9l.jpg

ஐயோ பாவம் ரஜினி.

அன்று ஜெ. வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்னார். இன்று ரஜினியை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

"ரஜினி சேப்டர் க்ளோஸ்"

தெரியுமா? கர்நாடகாவில் கலைஞர் ரெகமன்டேசன்ல, ரஜினிக்கு "கண்டக்டர் வேலை" ஆர்டர் போட்டாச்சு.

"டபுள் ரைட்" !!

Bleachingpowder said...

"பிளீ"ச்சசீ"ங்பவுடரே" எங்க ஒடி ஒளிந்து விட்டாய்? இருக்கிறாயா?//

நீ ஆனாதையா வந்துட்டு, சாரி ஆனானியா வந்துட்டு என்ன ஒளிஞ்சிகிட்டு இருக்கிறயானு கேட்டா எப்படி??

பின்னூட்டத்தில் அருண்மொழிய தவிர மத்த எல்லாருமே ஆனாத பயலுகதான் திரும்பவும் சாரி ஆனானி பயலுகதான்

உன்மையான பேருல வந்து கேள்வி கேட்கறதுக்கு இவ்வளவு பயம் இருக்குதில்ல. அது போதும்.

இப்போதைக்கு கீழே தரப்பட்டுள்ள பத்திரிக்கை விமர்சனங்களை படிச்சிட்டு குண்டு சோடா வாங்கி குடிச்சிகிட்டு இருங்க, அதுக்குல்ல நான் படத்த நாலாவது தடவையா பாத்துட்டு வந்து உங்கள வச்சுக்கிறேன்

Rediff
Review1: Rajnikanth's show all the way
http://www.rediff.com/movies/2008/aug/01ssk.htm

Review2: Watch Kuselan for Rajni
http://www.rediff.com/movies/2008/aug/01ssk1.htm

Review3: Pasupathy, the real star of Kuselan
http://www.rediff.com/movies/2008/aug/01ssk3.htm

Indiatimes – A standard South Indian masala with the prescribed dose of all ingredients
http://movies.indiatimes.com/moviereview/3316145.cms

Newstoday : Vasu scores again after Chandramukhi
http://newstodaynet.com/newsindex.php?id=9645%20&%20section=11

Sify - Many are going to love it, while for some others, it will inevitably fall short of expectations.
http://sify.com/movies/tamil/review.php?id=14728792&ctid=5&cid=2429

Dinamalar – PVasu-Rajini combo makes it again
http://www.dinamalar.com/cinema/kuselan_vimarsanam.asp

Malayala Manorama – Family audiences will love the film for its offbeat theme
http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/contentView.do

IBN- Buzz 18 – If you are a Rajini fan you have to watch it
http://www.buzz18.com/reviews/movies/kuselan-1st-day-1st-show/72231/0

NDTV: Kuselan though slow is extremely watchable if you forget the hype
http://www.ndtvmovies.com/reviews.asp?lang=hindi&id=328&moviename=Review%3A+Kuselan

Thatstamil
http://thatstamil.oneindia.in/movies/specials/2008/08/01-rajini-kuselan-film-review.html

Tamilcinema.com
http://www.tamilcinema.com/CINENEWS/REVIEW/2008/Kuselan.asp

Kathanayakudu – Review

Filmchamber.com – The film worth watching with the whole family
http://www.filmchamber.com/reviews.aspx?movie=Kathanayakudu

Telugucinema.com – Go without expectation; You will like it
http://www.telugucinema.com/c/publish/moviereviews/kathanayakudu_moviereview.php

Idlebrain.com – The success of the film depends on how the family crowds receive it
http://www.idlebrain.com/movie/archive/mr-kathanayakudu.html

Greatandhra.com – The film would certainly go into masses for 'Rajni Factor' in it
http://www.greatandhra.com/ganews/viewnews.php?id=8982&cat=1&scat=12

Totaltollywood.com – The film might disappoint those who expect a Rajani style film
http://totaltollywood.com/reviews/Kathanayakudu_2394.html

Anonymous said...

//தசாவதாரம் வெளியாகி ஐம்பதாவது நாள். திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.//

என்ன கொடுமை சார் இது. படம் தியேட்டர விட்டு போன பின்னாடியும் படம் ஓடுறதா விளம்பரம் போட்டுகிட்டு..
சிரிப்புதாங்க வருது.

குசேலன் குப்பையா இருக்கட்டும். ஆனா அந்த ச்ந்துலே தசாவதாரத்தைப் பத்தி பீத்திக்க வேணாம்.

ராஜ்குமார்

Kalyan said...

This is a very unfair comment.. what are u guys talking

go and see my friend review about kuselan on all media

http://onlysuperstar.blogspot.com/2008/08/hurraymedia-gives-thumbs-up-for-kuselan.html

This movie is a treat to all Common fans.. may not be to rajini fanatics but all good viewers will like this movie..

For all kamals fans, he has infact praised ur star in the movie after that dont u feel ashamed .. that ur not genuine at all in ur comments
BE GENUINE ..u dont need to praise for just praising at the same time u dont need to downplay because u are baised..VEKKAM VEKKAM

Bleachingpowder said...

ரஜினி படம் கர்நாடகாவில் ஓடினாத்தான் அவர் பிழைக்க முடியும் என்ற நிலமையில் அவர் இல்லை கர்நாடகாவில் படத்தை வாங்கிய வினியோகஸ்தகர்களுக்குக் நஷ்டம் வர கூடாது என்பதற்காகவே அவர் தொலைகாட்சியில் வருத்தம் தெரிவித்தார்.

ரஜினி ஹொக்கேனக்கல் விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதராவ பேசின போது மட்டும் நீங்க அவர தலைல தூக்கி வச்சா கொண்டாடினீங்க. அவர் என்ன பேசுனாலும் எதிர்க்கதான் போறிங்க. அப்புறம் என்ன இப்போ புதுசா ??

ஊரையே கூட்டி திரையுலகம் போராட்டம் நட்த்தினார்கள், ஆனால் அன்றிரவே கருணாநீதி இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம்னு சொன்ன போது, நீங்க எல்லாரும் வாயில ஈர மண்ணணயா வச்சிருந்தீங்க. போய் கேட்க வேண்டியதுதான அந்த தமிழின தலைவனிடம். அத கேட்க உங்க யாருக்கும் வக்கில்ல, வந்துடீங்க சும்மா ரஜினிய கொர சொல்ல.

ஏதோ நீங்க எல்லாரும் பேசறத பார்தால் ரஜினி "ம்"னு சொன்னா கர்நாடக அப்படியே தண்ணிய தொறந்து விட்டுருவாங்க மாதிரி பேசுரீங்க. அவருடைய தொழில் சினிமா. அதை அவர் சரியா பண்ணிட்டு வரார். இதுவரை தானுவை போல் எந்த தயாரிப்பாளரும் ரஜினியை வைத்து படம் பண்ணியதில் நஷ்டம் என்று சொன்னதில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவார் (இருக்கிறார்).

குசேலன் படம் சிறப்பாய் வந்திருக்கிறது என்று எல்லா பத்திரிக்கைகளுமே பாராட்டியுள்ளது. வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், உங்களை போல் சில வயித்தெரிச்சல் பேர்வழிகளை தவிர.

குசேலன் படத்தில் கூட கமலை பற்றி ரொம்ப உயர்வா பேசுவார் தலைவர். உங்களுக்கு எங்கே அந்த நன்றியுனர்வெல்லாம் இருக்க போகுது.

//"கன்னடியன்" ரஜினியின் நிஜ முகத்தை இப்போதாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும//

யோவ் யாருய்யா நீ, கன்னடிகன் என்றால் என்ன கேவலமா, அங்கே இருக்கும் மக்களும் நல்லவர்கள்தான். இங்க கருணாநிதியும், ராமதாசும் காடு வெட்டி குருவும் எப்படியோ அப்படிதான் அங்கே வாட்டாள் நாகராஜும், கன்னட ரக்ஷிக கட்சியும். மற்றபடி எல்லா மக்களும் நல்லவர்களே.

ரெண்டு மாநில மக்களையும் உசுப்பேத்தி நம்ம அரசியல்வாதிகள்தான் குளிர்காய்கிறார்கள், இது புரியாம பேசாதடா முட்டா தமிழா!

//"ரஜினி படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் முதல் காட்சி முடிந்து வெளியே வரும்போதே, தியேட்டருக்கு வெளியே மக்கள் வெள்ளம் அலை மோதும்//

அதான் நீயே சொல்லீட்டியே அப்புறம் நான் என்ன சொல்றது

//ஆனால், நேற்று ஒரு சில தியேட்டர்களில் 50 பேர், 100 பேர் மட்டுமே காத்திருப்பதைப் பார்க்க முடிந்தது."//

அது கண்ணுல மஞ்சகாமால வந்தா அப்படிதான் ஆயிரம் பேர் ஐம்பது பேரா தெரியும்.

//டவுசர் கிழிந்து போய் இருக்கும் குசேலன் எங்கிருந்து "ஆழ்வார்பேட்டை ஆண்டவன்" கமல்ஹாசனின் தசாவதார சாதனையை முறியடிக்க? //

அடப்பாவி தசவதாரம் முழுக்க முழுக்க கமல் கதாநாயகனா நடிச்ச படம். ஆனா குசேலன்ல தலைவர் கெஸ்ட் ரோல்தான். தலைவர் கெஸ்ட் ரோல்ல நடிச்ச படத்த, நீங்க, உங்க வெற்றியின் உச்சம்னு நீங்க சொல்ற தசாவதாரத்தோட கம்பேர் பண்ணும்போதே நாங்க ஜெய்சுட்டோம்.

//"தமிழநாட்டு துரோகி" "கன்னட வெறியன்" "பல்டி குரங்கு" ரஜினியை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்//

இட்லி வடையாரே, உங்களுக்கே இது நியமாய இருக்கா?? தமிழ்நாட்டில் முப்பது வருடமா புகழ் பெற்றிருக்கும் ஒரு நடிகனை, இவ்வளவு கீழ்தரமா ஒருவன் விமர்சிக்கிறான், அதையும் நிங்கள் அனுமதித்துள்ளீர்களே. I Still wonder, how did you publish this comment. Do you really agree with the comment posted ?? Hope you will respond. இவ்வளோ வெறுக்கும் அளவிற்கு அவர் தமிழ்நாட்டிற்கு என்ன தீங்கு செய்துவிட்டார்.

Anonymous said...

Iyyo!!!! people praising Dasavatharam? A Horrible Movie,Waste of Time & Money.
The people who have commented on Rajini are "J" of him.
It was pathetic to see kamal in Dasa.You can not compare Rajini with an eek like kamal.
Rajini is always the SUPER STAR and no body can replace him.
Wait and see the dream run of Kuselan.Dasa can not even touch the figures of Kuselan.Watch my words.Here in U.S. Dasa is a utter Flop.

முரளிகண்ணன் said...

பிளீச்சிங் பவுடர் நல்லா கழுவுறீங்க, உங்க தலைவர் மேல் பட்ட கறையை

Anonymous said...

நீ ரொம்ம்ம்ப நல்லவம்ப்பா!

Anonymous said...

Dear Bleaching Powder..ரஜினி பற்றி இப்படி எல்லாம் பேஅசரங்கலேன்னு நான் ரொம்ப பீல் பண்ணேன். உங்க கமெண்ட் ரொம்ப சூபெர்ப். கலக்கீடீங்க...நெத்தி அடி எல்லா அநோனிகளுக்கும்.\

//கர்நாடகாவில் படத்தை வாங்கிய வினியோகஸ்தகர்களுக்குக் நஷ்டம் வர கூடாது என்பதற்காகவே அவர் தொலைகாட்சியில் வருத்தம் தெரிவித்தார்.//
The above line should everybody and all anonys...thirunthungappa...

//கருணாநீதி இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம்னு சொன்ன போது, நீங்க எல்லாரும் வாயில ஈர மண்ணணயா வச்சிருந்தீங்க. போய் கேட்க வேண்டியதுதான அந்த தமிழின தலைவனிடம். அத கேட்க உங்க யாருக்கும் வக்கில்ல, வந்துடீங்க சும்மா ரஜினிய கொர சொல்ல.//

Superb point...I hope Inemela yaarume rajiniya pathi thappa pesa maatanga...

Thanks a lot Bleaching Powder...Continue pannungo...

Anonymous said...

“Had I mentioned that my remarks on the Kannadigas do not apply for people in Karnataka in general and only to the miscreants, this issue wouldn’t have cropped up,” This is what Rajini Regretted and never aplogised. Unfortunately media blew it out of proportion for their gains.

Anand

Sri said...

I agree 100% with bleachingpowder's comments. Indha media thaan overa mattera maathiduchu. see this from kumudam.. கன்னட அமைப்பினரின் எதிர்ப்பால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அவர் `விளக்கம்' தெரிவித்திருக்கிறார். இதை மீடியாக்கள் `மன்னிப்பு' என்று பரப்பியதுதான் எங்களை மிகவும் பாதித்துவிட்டது!

priyamudanprabu said...

Bleachingpowder said...

Rediff
Review1: Rajnikanth's show all the way
http://www.rediff.com/movies/2008/aug/01ssk.htm

2 1/2 ஸ்டார்தான் தந்துள்ளது
அதாவது
not bad quit good

அப்புறம் சிலர் இங்கே ரஜினியை கண்டபடிவிமர்சிக்கிறார்கள்,சிலர் ஓவராஅக போற்றி பாடுகிறார்கள்
ஏன் அப்படி?????
அவர் வெறும் வியபாரி,தன் லாபத்துக்காக எப்படிவேனுமுனா பேசுவார்,ரஜினிக்கு அதுதன் தொழில் அவர் அதை செய்கிறார் அவ்வளவே.அவர் நல்ல நடிகரும் அல்ல ,கலைஞனும் அல்ல.வியபாரி.அவரை வருங்கால முதல்வர் என பாடித்திரிய்ம் முட்டாள் ரசிகனின் மேல்தான் எல்லாதவறும் .இதுவரை "நான் அரசியலுக்கு வரவே மாட்டேன்" என்று வாய்திறந்து சொல்லாது மட்டுமெ அவர் செய்த மாபெறும் தவறு.அதுவும் அவர் வியபார யுக்தியே
http://priyamudan-prabu.blogspot.com/

expertdabbler said...

>>“Had I mentioned that my remarks on the Kannadigas do not apply for people in Karnataka in general and only to the miscreants, this issue wouldn’t have cropped up,”

He need not have issued this statement. It is understood that he spoke against people like Vatal Nagaraj, Yediyurappa.

Its not like all the tamilians are against all kannadigas. Thats nonsense.

"thappu nadanthiduchu, naan paadam kathukitten, inimel ipdi ellam pesa maaten..." nu solradhellam thannilai vilakkama?...

If at all he wanted to make it explicitly clear, he had all the time in the world from April till August to clarify. And yet he chooses to 'regret' when KRV threaten on the eve of his movie release.

The fact that Rajini is compared with someone like MK shows that his so called 'clean image' is going down among the neutral observers of TN.

FYI, Vijaykanth had the guts to question MK on that. None of the other actors dincluding Rajini id that.

expertdabbler said...

Some other examples of rajini's political goof ups include his 'voice' for DMK alliance during the 1998 parlimentary elections in the wake of coimbatore serial blasts. ADMK alliance won the majority of the seats. In another bye-election he ordered his fans to work against PMK and in favor of ADMK in 6 seats. PMK won all 6.

He had a separate fast without joining with the other actors and actresses during Neyveli protests and said he will contribute Rs. 1 crore for inter-linking of rivers.
Not sure what happened after that.

Aana oru vishayam othukanum, ipdi podhu medai la pesi mattum enna aayida pogudhunu thamizh jananga purijinjukanum... Oru M kum prayojanam kedayadhu..

nadigargal vyabaram dhaan baadhikudhu.

Ipdi vyabarigal, arasiyal vaadhigal laam solradhai kettutu avangalukku paal abishekam panra jananga irukum varai thamizh naatai andha andavanaal kooda kaapatha mudiyadhu...

Anonymous said...

உங்கள் விமர்சனத்தை பார்த்தால் இந்த படம் தசாவதாரத்தை விட மட்டமாக இருக்கும் போல தெரிகிறது. முன் கூட்டியே எச்சரித்ததற்கு நன்றி.

Bleachingpowder said...

//பிளீச்சிங் பவுடர் நல்லா கழுவுறீங்க, உங்க தலைவர் மேல் பட்ட கறையை//

தலைவர் மேல பட்டது கறையில்ல வெறும் தூசி தான். இதை சும்மா ஊதுனால போதும் முரளிகண்ணன் :-)

நான் bleachingpowderரை வச்சு கழுவனும்னா அது சத்தியராஜ், டி.ராஜேந்தர் போற்றவர்களின் வாயைத்தான்

Anonymous said...

Thanks Mr.P.Vasu for not showing Manorama Aachi as Pasupathi mother...

Anonymous said...

இடலி வடை உங்கள் விமர்சனம் biased. நீங்கள் கமல் ரசிகர் என்று நன்றாக தெரிந்து விட்டது. தசாவதாரத்தை சிறந்த படம் என்று சொன்ன நீங்கள் குசேலனை வாருவது இட்லி வடை கமல் ரசிகர் என்று வெளிபடித்தி விட்டது..

குலேசலன் படம் வெற்றி உங்கள் கண்களை உறுத்துவதில் ஆச்சர்யம் இல்லை

Anonymous said...

Nethi Adi bleaching powder.
Your last comment Superb.Nobody is able to give convincing answers.irst let them answer to you,then they can talk of rajini.

Anonymous said...

குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன் .
ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா ?
இன்னொரு பாபா . பாபாவைக்கூடஇன்னொருதரம் பாக்கலாம் ஆனா
குசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம் .

Gowri Shankar said...

இட்லி வடையை தொடர்ந்து நான் படிக்கிற போதும், தலைவரைப் பற்றி வருகிற செய்திகளை மட்டும் நான் படிப்பதில்லை. அது எப்படியும் நடுநிலையாக இருக்காது என்பதால். தலைவரைப் பற்றி யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். அவர் பெசியதிலிருந்த உண்மையை ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. சரத்குமார் பெரிய இவரு மாதிரி அறிக்கை விடறார்.... கர்நாடகாவில போய் அடி வாங்கிட்டு வந்தவரு தான இவரு? என்ன செய்ய முடிஞ்சது? "பாபா" பிரச்சனை வந்தப்போ என்ன பண்ண முடிஞ்சது? நம்ம தமிழ் நாட்டுல இப்படி நடக்கும்போதே ஒரு மண்ணும் பண்ண முடியல, இதுல அடுத்த மாநிலத்துல நடக்குற பிரச்சனைய நாட்டாமை பண்ணிருவாராம். இதுல, சத்யராஜ் வேற.... அவருக்கு என்ன பிரச்சனையோ... மைக் கெடச்சா போதும்னு ஏதாச்சும் உளறிகிட்டு இருக்காரு. டி.ஆர் பத்தி எல்லாம் பேசுறதே வேஸ்ட். பேசுறவன் எல்லாம் பேசுங்க.... காலத்தை வென்றவர் தலைவர்.

Bleachingpowder said...

Rishanthan said,
//குசேலன் முதல் நாள் முதல் காட்சி பாத்தேன் //

நன்றி.

//ஒரு நல்ல படத்த இப்பிடியெல்லாம் நாசமாக்க முடியுமா ?//

அத நீங்க கமல் கிட்டதான் கேட்கனும். அவருதான் இதுல expert.

//பாபாவைக்கூடஇன்னொருதரம் பாக்கலாம் //

திரும்பவும் நன்றி.

//குசேலன் படத்த ஒருதரம் முழுசா பாத்ததே பெரிய விடயம்//

ஏன் கதை புரியலையா... கேயாஸ் தியரி, பட்டர்ஃளை effectல படம் எடுத்தா தான் உங்களுக்கு கதை புரியுமா

கிரி said...

ப்ளீச்சிங் பௌடர் எல்லோரையும் போட்டு கழுவு கழுவுனு கழுவறீங்க ஹா ஹா ஹா

//நான் bleachingpowderரை வச்சு கழுவனும்னா அது சத்தியராஜ், டி.ராஜேந்தர் போற்றவர்களின் வாயைத்தான்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய். (கொஞ்சம் ஸ்ட்ராங்கா போடுங்க ;-) )

Anonymous said...

Dear Idlyvadai,

Each and everybody is having different different taste. Our arguments should never hurt anybody. I am not rajni fan. But i like kuselan movie. It is story based movie. Being a moderator you should read all the comments and have to edit the unwanted.

கார்க்கிபவா said...

படம் பார்த்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதே இல்லை...ரஜினியை புறக்கணிப்பவர்கள் அவர் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? இவர்கள் எல்லாம் படத்தை பார்க்கும் முன்னரே விமர்சனத்தை எழுதி விடுவார்கள்..

இந்த மாதிரி அனானிகளுக்கெல்லாம் தலைவர் ஸ்டைலில் ஒரு சர்தார்ஜி கதை சொல்றேன்.

ஒரு சர்தார்ஜி டாக்டர் கிட்டே போனான்.டாக்டர் எனக்கு உடம்புல எங்க தொட்டாலும் வலிக்குது.என்ன பன்னலாம்னு கேட்டான்.டாக்டர் அவன தொட்டு பார்க்க போனாராம்.அதுக்கு அவன் இருங்க டாக்டர் நானே தொடரன்.நீங்க‌ வலிக்கிர மாதிரி தொடுவிங்கனு சொன்னானாம்.டாக்டரும் ஒரு ஒரு இடமா தொட சொன்னா எல்லா இடமும் வலிக்குதுனு சொன்னானாம்.உடனே உடம்பு ஃபுல்லா x-ray எடுத்து பார்த்த எல்லாம் சரியா இருந்துதாம்.டாக்டருக்கு இவன் ஒரு சர்தாருனு லேட்டாதான் ஞாபகம் வந்தது.அவன் விரல x-ray எடுத்து பார்த்தா அந்த எலும்பு உடைஞ்சு போயிருந்துச்சாம்.

இந்த மாதிரி அனானி எல்லாம் ஞானிகள்..சாரி,ஞானி இல்லை ஞாநி..குமுதம் ஓ போடும் ஞாநி...குறை சொல்றதுகுன்னே இருக்கிறவங்க..இவங்க கோட போய் சண்டை போடுறீங்களே bleaching powder..பார்த்து blue cross ல உங்கள புடிச்சிட்டு போய்ட போறாங்க..

Anonymous said...

Super Movie.

Anonymous said...

Dear Idlyvadai,

Our Arguments should never hurt anybody. I am anot rajni fan, but i like kuselan. This is story based movie. We have to appreciate rajni for his different character. We have to encourage him for his different silent role. Being a moderator you have to edit some unwanted comments from the users.

Bleachingpowder said...

//இவங்க கோட போய் சண்டை போடுறீங்களே bleaching powder..பார்த்து blue cross ல உங்கள புடிச்சிட்டு போய்ட போறாங்க..//

ஹா..ஹா..ஹா நீங்க வேற கார்க்கி. மூட்ட பூச்சிய நசுக்குனதக்கெல்லாமா blue cross வருவாங்க.

கார்க்கிபவா said...

//ஹா..ஹா..ஹா நீங்க வேற கார்க்கி. மூட்ட பூச்சிய நசுக்குனதக்கெல்லாமா blue cross வருவாங்க.//

அது சரி..எறும்பு அடிக்க 47ஆ?

Anonymous said...

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-ten-movies/tamil-cinema-topten-movie-kuselan.html

Bleachingpowder said...

//அது சரி..எறும்பு அடிக்க 47ஆ?//

ஆஹா..பின்றீங்களே கார்க்கி...

Anonymous said...

படம் ப்ளாப்புடா.

http://www.ibnlive.com/news/rajini-magic-failing-kuselan-struggles-at-bo/70500-8.html

அதனாலதான், "பல்டி ஸ்டார்" நேற்றே அமெரிக்காவுக்கு ஒடிட்டாரு.


kuslean = chowchalaiyum!!!

கிரி said...

Kuselan Rocking Tamil Nadu
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-ten-movies/tamil-cinema-topten-movie-kuselan.html

Kollywood stars frustrated with Kuselan’s success
http://www.kollywoodtoday.com/news/kollywood-stars-frustrated-with-kuselans-success/

Kuselan at 12th Position in UK Boxoffice
http://www.screenrush.co.uk/boxoffice/boxofficedetail_gen_pays=5004.html

'Kuselan' marches on SUCCESSFULLY in USA
http://www.indiaglitz.com/channels/tamil/article/40517.html

http://entertainment.oneindia.in/tamil/exclusive/2008/rajinikanth-kuselan-usa-040808.html

Kuselan in Malaysia Top 10 Boxoffice
http://www.cinemaonline.com.my/charts/charts.asp?search=top

Kuselan has bagged 19 crores
http://www.tamilsuperhits.com/cinenews.php?id=2456

Kuselan No.1 in Kerala
http://www.indiaglitz.com/channels/malayalam/article/40469.html

Bleachingpowder said...

//படம் ப்ளாப்புடா.//

ஏண்டா வாய குடுத்து வாங்கிட்டது பத்தாதா. முதலா விரல வாயில இருந்து எடுத்துட்டு பேசுடா என் பங்காளி.

Guest Roleல தலைவன் நடிச்சதுக்கே உங்களுக்கெல்லாம் இப்படி பேதி புடுங்குதே. இன்னும் இருக்குடா உங்களுக்குகெல்லாம்.

Bleachingpowder said...

//kuslean = chowchalaiyum!!!//

தசவதாரம் = முகமுடி திருடன் !!!

Anonymous said...

இன்னா மே , ஆரப்பாத்து ஓடிப்பூட்டார்னு பினாத்துற. தலிவரு வருவாரு பாரு ரோபோவுல. சும்மா அதிரும்ல. ஆமா மே தலிவரு பல்டி ஸ்டாரு தான் மே. உங்காள் 8 அடி பாஞ்சா தலிவரு 64 அடி சும்மா பல்டி போட்டு பாயிவாறு.
தெரிஞ்சிக்கோ

Anonymous said...

யோவ் இட்லிவட, இன்னாயா டைட்டில் வச்சிருக்க குசேல கிரகணம்னு. நீ கிரகணத்துல படம் பாத்தா டைட்டில் இப்டி வைப்பியா ? மாத்த்துயா .

Unknown said...

hello Bleching powder

what is ur answer for the below BEHINDWOODS articles?

http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-08-01/dasavatharam-05-08-08.html

கார்க்கிபவா said...

//what is ur answer for the below BEHINDWOODS articles?

http://www.behindwoods.com/tamil-movie-news-1/aug-08-01/dasavatharam-05-08-08.html//

அய்யோ அய்யோ!!!போய் அதை ஒழுங்கா படிங்க..அது ஒரு வாசகர் எழுதினதுனு அவங்களே தெளிவா போட்டு இருகாங்க...உங்கள மாதிரி ஏதோ ஒன்னுதான் மண்டை காய்ஞ்சு எழுதி இருக்கு...கிரகம்டா சாமீ

Anonymous said...

rajini pugal padi unakku enna kidaika pogutu.. pera paru bleaching powder..

Bleachingpowder said...

//rajini pugal padi unakku enna kidaika pogutu.. pera paru bleaching powder..//

எனக்காவது சொல்றதுக்கு ஒரு பேரு இருக்குது. ஆனா நீ அனாத பய. முதல் நீ யாரு, உன் பேர சொல்லு. அத சொல்றதுக்கே உனக்கு இவ்ளோ பயம். நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட

Anonymous said...

குப்புற விழுந்த 'குசேலன்' வசூல்


'குசேலனில் எனது பங்கு 25 சதவீதம்தான்' என்று ரஜினியும், 'இது முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் படம்தான்' என்று இயக்குனர் வாசுவும் வெளியிட்ட கருத்துக்களில் முதலாமவர் சொன்னதுதான் பலித்துள்ளது.


படத்தின் முக்கிய கதாபாத்திரமான பசுபதியைகூட படத்தின் விளம்பரங்களில் அதிகம் பயன்படுத்தாமல் ரஜினியை பூஸ்ட் செய்தே 'குசேலன்' வியாபாரத்தை நட்ததிக்காட்டினார் வாசு. நமக்கு லாபம் வந்தால் சரிதான் என வாசுவின் போக்கில் போனது குசேலனை தயாரித்த நிறுவனங்களும்.


ரஜினி படமாச்சே முடிமுதல் அடிவரை எல்லா ரைட்சுகளையும் விற்று காசாக்கிவிடலாம் என கணக்குப்போட்ட பிரமிட் சாய்மீரா நிறுவனமும் 61 கோடிக்கு வாங்கி வெளியிட்டது. இதில் கவிதாலயா மற்றும் செவன்ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், வாங்கி வெளியிட்ட பிரமிட் சாய்மீராவுக்கோ 20 கோடி ரூபாய்வரை கையை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது.


அதேபோல் அவுட்ரேட் முறையில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு 50 சதவீதம் வரையும், M.G.முறையில் வாங்கிய தியேட்டர்காரர்களுக்கு 60 சதவீதம் வரையும் நஷ்டத்தை ஏற்படுத்துமாம் குசேலன்.


'சந்திரமுகி' படத்திலும ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லாத கதைதான். அதுமட்டும் எப்படி ஓடியது? என்று யோசித்தால் குசேலனுக்கு ஏற்பட்ட நெகட்டிவ் சிந்தனைகள்தான் இதன் தோல்விக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


ஆரம்பத்திலேயே இது எனது படம் அல்ல என்று ரஜினி அறிவித்ததும், கர்நாடக பிரச்சனையில் ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் 'குசேலன்' தோல்விக்கு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


ஆகஸ்டில் வெளிவரும் தனது படங்கள் பெரிய தோல்வியை சந்திக்கும் என்ற ரஜினியின் செண்டிமென்ட் ஆரூடமும் பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/06082008-6.shtml


" HOW IS IT? " ? = "SUPER""BULTY STAR" RAJNI - "KHADAM KHATHAM"

Anonymous said...

THIS WEEKEND IN U.K.
[Based on screen averages]

RANK FILM AVERAGE
1 Kuselan £ 6,258
2 Ugly Aur Pagli £ 1,823
3 Kismat Konnection £ 1,007
4 Mission Istaanbul £ 886
5 Thoda Pyaar Thoda Magic £ 717
6 Money Hai Toh Honey Hai £ 664
7 Jaane Tu Ya Jaane Na £ 316

U.S.A. BOX-OFFICE
Weekend: August 1 - 3, 2008.

Bleachingpowder said...

அட நாராயணா நாட்டுல இந்த ஆனானி தொல்ல தாங்க முடியல. ஆபிஸ்ல ஒழுங்கா ஆணி புடுங்க வுடமாட்டேங்கிறீங்களே.

சரி மேட்டருக்கு வருவோம்.

//குப்புற விழுந்த 'குசேலன்' வசூல்//
சினி சௌத் சொன்னான் சனி சௌத் சொன்னான் இங்க வந்து கதை விட கூடாது. படம் பட்டைய கிளப்புதுனு NDTV,Sify சொல்லீட்டாங்கனு நாங்களும் சொல்லுவோம்ல.

வெப்சைட்ட வுட்டு தள்ளு, சாயாங்காலம் ஆச்சுனா குசெலன் படம் ஒடுற தியேட்டர போய் பாரு ராஜா. தலைவனுக்கு தாய்குலத்தோட ஆதரவும்,குழந்தைகளோட ஆதரவும் இருக்குற வரை கலெஷ்சன்ல தலைவர யாரும் அசைக்க முடியாது.

Anonymous said...

குசேலன் - இன்னொரு பாபா?

வெளியான மூன்றாவது நாளே பாக்ஸ் ஆ·பிஸில் முதலிடத்தைக் கைப்பற்றியது குசேலன். சென்னையில் மூன்று நாள் வசூல் எண்பத்தி ஒன்றரை லட்சம்! ஆனால், நான்காவது நாள்?

அனைத்து திரையரங்குகளும் வெறிச்! எப்போது போனாலும் கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கலாம். சென்னை மல்டி பிளிக்ஸில் முதல் நாள் 43 ஷோ திரையிட்டவர்வர்கள், நான்காவது நாள் இருபத்து மூன்று ஷோவாக குறைத்துக் கொண்டனர். பிறநகர் திரையரங்குகளில் மூன்று ஷோவாக சுருங்கி, காலைக்காட்சியை மம்மி ஹாலிவுட் படம் ஆக்ரமித்துள்ளது.

இன்றைய உத்தேச கணக்குப்படி அறுபது கோடி ரூபாய்க்கு படத்தை வாங்கிய பிரமிட் சாய்மீராவுக்கு 20-25 கோடிகள் நஷ்டம். அவுட்ரேட் முறையில் படத்தை விநியோகித்தவர்களுக்கு ஐம்பது சதவீதம் வரை நஷ்டம். எம்.ஜி. முறையில் படத்தை திரையிட்டவர்களுக்கு நஷ்டம் முப்பது சதவீதம்.

இது உத்தேச கணக்கு. நாளை நஷ்டத்தின் அளவு கூடலாம், குறையலாம். ஆனால் நஷ்டம் உறுதி என்கிறார்கள், விஷயமறிந்தவர்கள்.

குசேலன்... நிஜமான வறியவன்!

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/0808/07/1080807062_1.htm

Anonymous said...

Kuselan Thrown out of SATYAM in 6 days AUG 2-AUG 7 2008

இட்லி வடை கன்பார்ம் செய்ங்க. உண்மையா?

ங்கொய்யால ! "பீ" வாசு என்னோட கையில் சிக்கிட்டான்னா, அவனோட குரவலையை கடிச்சுத் துப்பிடுவேன். மவனே தலைவர் இமேஜையே கெடுத்துட்டான்.

இனி ஒரு தடவை கூட இந்தப் "பீ"யோட படத்துல நடிக்கக் கூடாது.

Anonymous said...

@ above anony,

yes, MUMMY 3 part is running in satyam theatre.

Only 6 days KUSELAN ran there. This is FIRST TIME in TAMILNADU HISTORY that RAJNI movie is taken out of theatre "within a WEEK".

What a SHAME to SUPER STAR!

Anonymous said...

குசேலன் படத்தால் நஷ்டம்; தியேட்டர் அதிபர்கள் முற்றுகை போராட்டம்

ரஜினியின் சிவாஜி படத்துக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் `குசேலன்' படம் கடந்த 1-ந்தேதி ரிலீஸ் ஆனது. மதுரையில் 5 தியேட்டர்களிலும், தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது.

பிரமிட் சாய்மீரா மற்றும் கவிதாலயா நிறுவனம் தயாரித்து உள்ள இந்தப் படம் திரையிடுவது தொடர் பாக தியேட்டர் உரிமை யாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அப் போது இது முழுக்க முழுக்க ரஜினி படம் தான். சிவாஜி படத்தை விட ஒரு மடங்கு வசூல் அதிகரிக்கும் என கூறி மினிமம் கியாரண்டி (எம்.ஜி) முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனிடையே படம் ரிலீசாவதற்கு சில நாட்களுக்கு முன்பு குசேலன் படம் குறித்து கருத்து தெரி வித்த ரஜினிகாந்த் இந்த படத்தில் எனது பங்கு 25 சதவீதம் தான். இது ரஜினிகாந்த் படம் அல்ல, பசுபதி படம் என கூறி இருந்தார்.

ரஜினியின் இந்த அதிரடி அறிவிப்பால் தியேட்டருக்கு ரசிகர்களின் வருகை குறை வாக இருப்பதாகவும், வசூல் பெருமளவு பாதித்து நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறி மதுரையில் தியேட் டர் உரிமையாளர்கள் ஆதங்கப்பட்டனர். நேற்று அவர்கள் ஒன்று திரண்டு மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள பிரமிட் சாய்மீரா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தியேட்டர் உரிமை யாளர்கள் கூறியதாவது:-

குசேலன் படத்தை திரையிட நாங்கள் பணம் கட்டிய பிறகு ரஜினி பேட்டி அளித்து உள்ளார். இதனால் நாங்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடிய வில்லை.

பாங்கிகள் மற்றும் தனியார் பைனான்சியர் களிடம் 75 சதவீதம் கடன் வாங்கி இந்த படத்தை திரையிட்டு உள்ளோம். இது வரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

எனவே எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு மினிமம் கியாரண்டியை டெபாசிட் தொகையாக மாற்றி வருவாயில் எங்களுக்கு உண்டான சதவீதத்தை கணக்கிட்டு தர வேண்டும்.

இல்லாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி சென்னை யில் உள்ள தலைமை அலு வலகம் முன்பு உண்ணா விரதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடு வோம். இந்த விசயத்தில் ரஜினி தலையிட்டு பகிரங்க அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: WWW.MAALAIMALAR.COM


//இது வரை வட்டியுடன் சேர்த்து 90 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது//

"ரசினி" ரசிகர்களே ! இதுக்கு என்ன பதில்?

தமிழ் திரைஉலகில் ரஜினியின் அத்தியாயம் முடிந்து விட்டது. இனி அவரின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது. குசேலன் தோல்வி அதற்கான அச்சாரம். ரோபோ என்கிற "போகோ" வந்தால் அது உறுதியாகிவிடும். இப்பொழுதே அவர் பெங்களூரு போக "பேக்கிங்" செய்ய ரெடியாக இருக்கட்டும்.

'ரசினி" ரசிகர்களே, போய் உங்க "தாத்தாவுக்கு" சாரி தலைவனுக்கு பேக்கிங்ல ஹெல்ப் செய்யுங்க.

Anonymous said...

how to unlock iphone 4
unlock iphone 4
unlock iphone 4

http://www.roughstock.com/audio/george-strait-here-for-a-good-time http://matadortravel.com/forum/europe/student-apartment-paris
the software you are installingfor this hardware ACPI uniprocessor PC has not not passed the window logo testing to verify its compatibility windows XP continuing your installation of this software may impair or destabilize the correct operation of your system ether immediately or in the future. Microsoft strongly recommends that you stop this installation now and contact the hardware vendor for software that has passed the windows logo testing thats what it tells me i started to do system restore when my P.C started crashing like a week ago and this is the 2nd time i do system restore today cause my P.C crashes .. can any one help me out what do i have to do or download anything ? i have norton 05' scanned my system for virus and notting pops up i really need help can some one help me out please ????????????
iphone 4 unlock unlock iphone 4

unlock iphone 4 [url=http://unlockiphone44.com]how to unlock iphone 4[/url] unlock iphone 4 iphone 4 unlock