பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 18, 2008

AIIMS மருத்துவ ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழப்பு

மருத்துவ ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழப்பு... படிக்கும் போது சோகமாக இருக்கிறது...

டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமான அகில இந்திய விஞ்ஞான கழக ஆஸ்பத்திரி - எய்ம்ஸ் உள்ளது. இங்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் மருத்துவ ஆராய்ச்சிகளும் நடக்கின்றன.

நோயாளிகளுக்கு புதிய மருந்துகளை கொடுத்து ஆராய்ந்து பார்ப்பது, புதிய மருத்துவ முறைகளை கடைப்பிடித்து சிகிச்சை அளிப்பது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறும்.

இப்படி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 49 குழந்தைகள் உயிர் இழந்து இருக்கிறார்கள் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் இந்த 49 பேரும் இறந்துள்ளனர்.

இந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 4142 குழந்தைகளிடம் 42 விதமான ஆராய்ச்சிகளை நடத்தி உள்ளனர். அதில் 2728 குழந்தைகள் 1 வயதுக்கும் உட்பட்டவர்கள். ஆராய்ச்சியின்போது 49 பேர் இறந்து விட்டனர்.

சமூக அமைப்பு ஒன்றில் தலைவர் ராகுல்சர்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல்களை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்திய தயாரிப்புகள் மட்டுமல்லாமல் 5 வெளிநாட்டு மருத்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதுவரை இந்த மாதிரி ஆராய்ச்சிகளில் சீனா தன் முதலிடத்தில் இருந்தது, ஆனால் தற்போது இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. ( According to the Planning Commission, 139 new trials were outsourced to India recently compared with 98 in China. )

தொடர்புடைய செய்தி: இங்கே

7 Comments:

Tech Shankar said...Yesterday I watched 'E' Tamil film in Kalaigner TV.

Now Your post reflect the same concept.

Sorry to say this.

நாரத முனி said...

// According to the Planning Commission, 139 new trials were outsourced to India recently compared with 98 in China//

அட பாவிங்களா இவங்க சோதன பண்ணுறதுக்கு நம்ம குழந்தைகள் தான் கிடைச்சாங்களா?? படிக்கும்போதே வயறு பத்திக்கிட்டு எரியுது!!

அன்புமணி ராமதாஸ் மட்டும் புள்ள குட்டிங்களோட லட்ச தீவுல ஓய்வு எடுக்க, ஏழ வீட்டு பிள்ளைங்க சாகனுமா? என்ன தேசமோ ? என்ன நியாயமோ?

அருண்மொழி said...

//அன்புமணி ராமதாஸ் மட்டும் புள்ள குட்டிங்களோட லட்ச தீவுல ஓய்வு எடுக்க, ஏழ வீட்டு பிள்ளைங்க சாகனுமா? என்ன தேசமோ ?//

ஹா ஹா ஹா. செம காமெடிபா.

AIIMSஸில் குழந்தை சாவுக்கு காரணம் அன்புமணியா? வேணுகோபாலா?

வேணுகோபால் AIIMSஸில் இருந்தவரை அன்புமணியால் AIIMSஸின் உள்ளே கு. கூட விடமுடியவில்லை.

குடுகுடுப்பை said...

சோதனை மருத்துவம் , மற்றும் steroid medicine கவனம் தேவை. இது சம்பந்தமான எனது பதிவு பாருங்கள்.

http://kudukuduppai.blogspot.com/2008/08/blog-post_18.html

seethag said...

இந்த ஆராய்ச்சியில் அன்புமணியின் பங்கு இல்லை.சொல்லப்போனால் வேணுகோபால் தான் நேரடியாகவில்லையானாலும் பொறுப்பாக முடியும், ஏனென்றால் அவர் தான் aiims தலைவர். இத்தகய அராய்ச்சிகள் செய்வது பற்றி 2001ல் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவர் குரல் எழுப்பியபின்னரே ஓரளவாவது விழிப்புணர்வு வந்தது..அப்போது புற்று நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தது.

http://www.hinduonnet.com/fline/fl1824/18241140.htm

Anonymous said...

Dear Arunmozhi,

venugopal was not AIIMS director during intermediate period. What was Ramadass doing?


Aarvee

Vellore

புருனோ Bruno said...

கொஞ்சம் இங்கே பாருங்கள்

புள்ளியியல், குட்டை பாவாடை, ஏ.ஐ.ஐ.எம்.எஸில் 49 குழந்தைகளின் மரணம் – ஊடகங்களில் சொல்லப்படாத உண்மை என்ன