பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 06, 2008

மிஷன் 90 டேஸ்

மிஷன் 90 டேஸ் என்ற மளையால படம் தற்போது மோசர் பேர் சிடி/டிவிடியில் கிடைக்கிறது ஆங்கில சப் டைட்டிலுடன் நேற்று பார்த்தேன்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கை மையமாக வைத்து எடுக்கபட்ட படம் தான் மிஷன் 90 டேஸ். இந்த படத்தை இயக்கியவர் மேஜர் ரவி ( மேஜர் ரவி இயக்கிய முதல் படம் அரண். இப்படத்தில் ஜீவா, மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பினார்கள். )

ராணுவ அதிரடிப்படையில் இருந்தவர் மேஜர் ரவி. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிரடிப்படையில் இவரும் இடம் பெற்றிருந்தார். சிவராசனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டை கமாண்டோ படையினர் முற்றுகையிட்டனர். உள்ளே புகுந்து அவர்களை உயிருடன் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால் அந்த சமயத்தில் கார்த்திகேயன் ஹைதராபாத்தில் இருந்தார். தான் வரும் வரை யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என அவர் உத்தரவிட்டார். இதனால் எங்களால் நடவடிக்கையில் இறங்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 36 மணி நேரம் நாங்கள் கார்த்திகேயனுக்காக காத்திருக்க நேரிட்டது.

திட்டமிட்டபடி நாங்கள் வீட்டுக்குள் புகுந்திருந்தால் இருவரையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் தான் நேரடியாக களத்தில் இறங்காமல், மற்றவர்கள் சிவராசன், சுபாவை பிடித்து விட்டால் தனக்கு பெயர் கிடைக்காமல் போய் விடுமே என்ற கார்த்திகேயனின் சுயநலம் காரணமாக இருவரையும் நாங்கள் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டது என்று முன்பு குற்றம்சாட்டினார். இதையே படமாக எடுத்துள்ளார்.

முக்கிய வேலை காரணமாகவே தான் ஹைதராபாத் சென்றிருந்ததாக தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயன். சிவராசன், சுபாவை விட அந்த சமயத்தில் வேறு வேலை அவருக்கு முக்கியமாகப் போய் விட்டதா? என்று கேட்கிறார் மேஜர் ரவி.

தெரிந்த கதையாக இருந்தாலும், விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள். மொட்டை முருகன், நளினி என்று எல்லோரும் வருகிறார்கள்.

படத்தில் நிறைய இடங்கள் தமிழிலேயே பேசுகிறார்கள், மம்மூட்டி வழக்கம் போல் நடிக்கிறார். கர்நாடகா போலீஸ் மற்றும் மற்றவர்களை காமெடியாக காண்பித்திருக்கிறார்கள். இந்த படத்தை தமிழில் எடுத்திருந்தால், ஒரு குத்து பாட்டு போட்டு சொதப்பியிருப்பார்கள். நல்ல வேளை அவர்கள் எடுக்கவில்லை.

2 Comments:

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

வாசு இப்படத்தை பார்த்துட்டாரா?

Sri Srinivasan V said...

நல்லவேளை.
யாருமே பார்கல போல.
நன்றி சொல்வோம்.