பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 12, 2008

முதலவர் பதவி - சிபு சோரன் 48 மணி நேர கெடு

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசைக் காப்பாற்றிய சிபு சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் பதவியைக் கோரி வருகிறார்.

முன்னதாக நிலகரி அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டு வந்த சிபு சோரன், அது வேண்டாம் ( ஏன் என்றால் இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வருகிறது ) எனக்கு முதல்வர் பதவி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.

தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸுக்கு 48 மணி நேரம் கெடு கொடுத்துள்ளது.

தற்போது முதல்வர் பதவியை துறக்க மது கோடா மறுத்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் இவருக்கு மத்திய மந்திரி பதவி பேரம் நடத்துகிறது.

இன்று பேட்டி அளித்த சிபு சேரன்

மதுகோடாவை நாளைக்குள் பதவி விலகும்படி காங் கிரஸ் மேலிடம் முறைப்படி உத்தர விட்டு உள்ளது. அவர் பதவி விலகி விடுவார் என்று எதிர்பார்க்கிறேன். இல்லை என்றால் அவருக்கு அளிக்கும் ஆதரவை காங்கிரஸ் கூட்டணி விலக்கி கொள்ளும்.

அடுத்த முதல்-மந்திரியாக நான் பதவி ஏற்க உள்ளேன். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.


பணத்துக்கு பதில் முதல்வர் பதவி, மத்திய அமைச்சர் பதவி என்று பேரம் நடக்கிறது. பணம் கேட்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

0 Comments: