பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 13, 2008

ஆபாச படம் பார்த்த 4 பேர் கைது

ஆபாச படம் பார்த்த 4 பேர் கைது.

திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் ஆபாச படம் பார்த்ததாக 3 சாப்ட்வேர் பொறியாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 64 ஆபாச சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் சென்னையில் உள்ள விடுதிகளிலும், மேன்ஷன்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது ஒரு அறையில் 3 வாலிபர்கள் ஆபாசப் படத்தைப் போட்டு அதை ரசித்துப் பார்த்தபடி குடியும், கும்மாளமுமாக இருந்தனர். அவர்களிடம் இருந்த சிடிக்கள் பரிமுதல் செய்யப்பட்டு கைது செய்தனர்.

பிரைவேட்டாக இந்த மாதிரி சிடிக்கள் பார்த்தால் தப்பா ? யாராவது விளக்குவார்களா ?. இந்த மாதிரி சிடி தயாரித்தவர்கள் தப்பிவிட்டார்கள், பார்த்தவர்கள் பாவம் மாட்டிக்கொண்டார்கள்

10 Comments:

Anonymous said...

பிரைவேட்டாக பார்த்தால் தப்பில்லை, நாலு பேருக்கு தெரியற
மாதிரி கும்மாளம் போட்டு, சத்தம் போட்டு ஆட்டம் போட்டத்தான் தப்பு.
கவலைப்படாதீங்க இட்லிவடை உங்களையெல்லாம் போலிஸ் பிடிக்காது :).

Arun said...

அதுலயே இன்னொரு செய்தி இருந்துச்சு.. அத படிச்சீங்களான்னு தெரியல.. “அவர்கள் வீட்டிக்கு பக்கத்து வீட்டின் கதவை தட்டியபோது ஒரு வாலிபர் லுங்கியுடன் வந்து கதவைத் திறந்தார். அவர் தனியாக நீல படம் பார்த்துக் கொண்டிருந்ததால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 7 CDக்கள் பரிமுதல் செய்யப்பட்டன.”

என்ன கொடுமை சார் இது?!?!

Tech Shankar said...


எந்த ஒரு தவறுமே அடுத்தவருக்குத் தெரியவந்த பிறகுதான் தவறு என்று உணரப்படுகிறது.

அதுவரையில் தவறு செய்பவருக்கேகூட அது அபத்தமாகத் தெரியாது.


ராமய்யா... said...

This is against Individual Freedom..

By
Kalyanamagatha 'Theory'ai mattum tharpozhudu nambi kondirukkum sangam..

Anonymous said...

இந்த மாதிரி படங்களைப் பார்த்துவிட்டு பெண்களை தொந்தரவு செய்ய வாய்ப்பிருப்பதால் இது சட்டப்படி குற்றமாக இந்திய நீதித்துறை கருதுகிறது(செக்சன்னெல்லாம் தெரியாது).

ஆனால் அதே நேரத்தில் இவை குடும்ப படம் என்பதினால் குடும்பத்துடன் பார்க்கலாமாம். மனைவியுடன் படம் பார்த்த ஒருவரை மும்பை உயர்நீதி மன்றம் சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்துவிட்டது.

-- இப்பின்னூட்டம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நன்மை கருதி இடப்பட்டது.

Ravi said...

Even I feel this incident is unfortunate. I am sure it has to do with one of our Victorian era laws.

சந்தர் said...

இந்த செய்தி குறித்த என்னுடைய பதிவு http://baksa.blogspot.com/2008/08/blog-post.html ல் பார்க்கவும்.

Anonymous said...

ஆபாசம் என்பது எது வரை..?

Anonymous said...

ஏனுங்க அந்த வாலிபர்கள் பார்த்த படம் குசேலன் தானே? அதைத்தானே ஆபாசப் படம் நீலப் படம் என்றெல்லாம் சாரு சொல்லி கனி மொழி அக்காவுக்கு கடுதாசு எல்லாம் போட்டிருக்காரு? இனிமேல் குசேலன் பாக்குறவுங்க எல்லாம் (அப்படி யாருக்கும் ஆசை இருக்காது) ஜாக்கிரதையா இருங்க.

Anonymous said...

அட கடவுளே! என்ன கொடுமை இது!! போலீஸ் அட்டூழியத்துக்கு அளவே இல்ல. நாட்டுல நடமாடுற தீவிரவாதிகள புடிங்கடான்ன.. சும்மா தன் வீடுக்குல யாருக்கும் பிரச்னை தராம ஏதோ பாத்து என்ஜாய் பண்றவங்களை போய் புடிக்காங்க..!! இப்படியே போனா தமிழ்நாட்டுல விட்டா thoughtcrimeக்கு கூட jaila போட்டுடுவாங்க போலிருக்கு. நல்ல நாகரிக முன்னேற்றம் தான்!!