பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 08, 2008

08-08-08

என்ன என்று கீழே பாருங்கள்

* 10,708 தடகளவீரர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்கிறார்கள்.

* 39, போட்டி இடங்கள் பீஜிங் நகரில் உள்ளன. 6 நகரத்துக்கு வெளியே உள்ளது.

* 2500 பேருந்துகளும் 4500 மினி பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

* 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு புல் வெளி அமைக்கப்பட்டு உள்ளது.

* 6000 ஆயிரம் மெடல்கள் தயாரிக்க 13கிலோ தங்கம்,1340கிலோ வெள்ளி, 6930கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

* 2 லட்சம் பணியாளர்களுக்கு சுற்றுலா,விருந்தோம்பல் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

* 73 ஆயிரம் டாலர் பரிசு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறித்து தெரிவித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

* 1 லட்சத்து 50 ஆயிரம் டன் இரும்பு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தக்கூடிய இடங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

* 40 லட்சம் கரன்சி நோட்டுக்கள் ஒலிம்பிக் சின்னத்தை தாங்கி பேங்க் ஆப் சீனா வெளியிட்டுள்ளது.

* 50 பேருந்துகள் லித்தியம் பேட்டரியால் ஓடக்கூடியவை இவை சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பேரூந்துகள் பத்திரிக்கையாளர்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

* 1099 உறுப்பினர்கள் அடங்கிய சீன விளையாட்டு அணியில் 639 வீரரகள் தடகள் வீரர்கள்.இவரகள் 28 விளையாட்டுக்களில் 302 நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார்கள்.

70 ஆயிரம் வாலின்டியர்ஸ் பணிகளில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

2 Comments:

Anonymous said...

அய்யா, இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
-----------------------------------

சென்னை: உலகம் வெப்பமாதலை தடுக்க எக்ஸ்னோரா நிறுவனம் '88888' பிச்சார நிகழ்ச்சியை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

----------------------------------
The Link is :

http://thatstamil.oneindia.in/news/2008/08/08/tn-exnoras-88888-lights-out-campaign.html

-----------------------------------

Anonymous said...

//இரவு 8 மணியிலிருந்து 8 நிமிடங்களுக்கு மின்சார பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.//

அட அண்ணன் ஆர்க்காடு வீராசாமி உலகம் வெப்பமாதலை தடுக்கத்தான் கரண்ட கட் பண்ணிடுறாரா?