பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 29, 2008

கம்யூனிஸ்டின் கேவலமான கொள்கை

பந்த் நடத்துவதற்கு எதிராக கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்ஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தண்டித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கோல்கத்தாவில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பேசிய புத்ததேவ்,ஸ்ட்ரைக் நடத்துவதை தாம் ஆதரிக்கவில்லை என்றும்,கதவடைப்பு நாட்டிற்கு உதவதாது என்றும் கூறியதோடு, துரதிருஷ்டவசமாக தாம் ஸ்டிரைக்கை ஆதரிக்கும் கட்சியை சேர்ந்தவராக இருப்பதால், ஸ்டிரைக்கிற்கு தமது கட்சி அழைப்பு விடுக்கும்போது தாம் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டியதாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

புத்ததேவின் இந்த கருத்து அவர் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஸ்டிரைக் என்பது வேலை செய்யும் பிரிவினரின் அடிப்படை உரிமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்நிலையில், கட்சியின் கொள்கைக்கு மாறாக கருத்து தெரிவித்த புத்ததேவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநில பொதுச் செயலாளர் பீமன் போஸ்க்கு அக்கட்சித் தலைவர்கள் கடிதம் எழுதினர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் மாநில கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ, புத்ததேவிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டபோது, அவர் தமது பேச்சுக்காக மன்னிப்பு கோரினார்.

இருப்பினும் புத்ததேவ் தெரிவித்த கருத்துக்காக அவரை தண்டிக்க முடிவு செய்த கட்சி மேலிடம், புத்ததேவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் ஸ்டிரைக் குறித்து புத்ததேவ் தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும், ஸ்டிரைக் செய்வது வேலை செய்யும் பிரிவினரின் அடிப்படை உரிமை என்ற நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விதிப்படி, அக்கட்சியை சேர்ந்த ஒருவர் தெரிவித்த கருத்தில் பகிரங்கமாக திருத்தமோ அல்லது நீக்கமோ செய்து அறிவிப்பு வெளியிட்டால் அது, அக்கருத்தை தெரிவித்தவரை தண்டிப்பதாகும் என பொலிட் பீரோ உறுப்பினர் ஷியாமல் சக்கரபர்த்தி கோல்கத்தாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read More...

நோ கமெண்ட்ஸ்கமெண்ட் 1 : 'ரொம்ப நல்லா கவிதை எழுதறீங்க... ஆனா, தயவுசெய்து என்னை பற்றி எழுதிடாதீங்க...' ( நன்றி: குமுதம் )

கமெண்ட் 2: ஏன் கருப்பு துண்டுக்கு பதில் மஞ்சள் துண்டு போடுகிறீர்கள் ? ( பகுத்தறிவு ? )

Read More...

கருப்புச் சட்டையில் காவிப்பிரசாரமா கமல் ? - வேலுபிரபாரகன்

கட்டுரை கீழே...
Read More...

அதிமுகவிலிருந்து எஸ்.வி.சேகர் நீக்கம் எப்போது ?

படம்

செய்தி கீழே....

திருமண விழா ஒன்றில் முதலமைச்சர் கருணாநிதியுடன், அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி. சேகர் கலந்து கொண்டதை அடுத்து அவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு, நடிகர் நெப்போலியனை தோற்கடித்து எம்எல்ஏ ஆனவர் நடிகர் எஸ்.வி. சேகர்.
தொகுதியில் நடக்கும் அதிமுக நிகழ்ச்சிகளுக்கு தன்னை அழைக்காததால் எஸ்.வி. சேகர் கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழு கூட்டத்திற்கு அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. கட்சியில் தான் ஓரங்கட்டப்பட்டதை உணர்ந்து எஸ்.வி. சேகர் எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா முடிவு செய்து பிப்ரவரி மாதம் 13ந் தேதி தலைமைச் செயலகத்துக்கு வந்தார்.

இந்த விஷயத்தை அறிந்த கட்சி தலைமை உடனடியாக ஆட்களை அனுப்பி எஸ்.வி. சேகரை அங்கிருந்து பொதுக் குழுவுக்கு அழைத்து வர உத்தரவிட்டது. அதனையடுத்து பதவியை ராஜினாமா செய்யாமல் அவர், பொதுக் குழுவில் கலந்து கொண்டார்.

சட்டமன்றத்தில் நீண்ட காலமாக பேசுவதற்கு அவருக்கு கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அவருக்கு பேச ஒருநாள் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர், அரசை கடுமையாக விமர்சிக்காமல் நகைச்சுவையுடன் பேசினார். அதை கண்டு திமுகவினரே சிரித்தனர்.

எனினும் எஸ்.வி. சேகர் அதன் பின்பும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார். எஸ்.வி. சேகரின் மகள் திருமணத்திற்கும், அவரது மகன் அஸ்வின் சேகரின் திரைப்படம் தொடர்பான விழாவுக்கும் ஜெயலலிதாவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் எஸ்.வி. சேகரின் குடும்ப திருமணத்திற்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி வந்திருந்தார். கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமியுடன் எஸ்.வி. சேகர் இருந்த புகைப்படம் எல்லா நாளிதழ்களிலும் இன்று காலை வெளியாகியது. குறிப்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில் முதல் பக்கத்தில் அந்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சரை சேகர் வரவேற்று அழைத்து சென்றார்.

இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து விலக்கப்படக்கூடும் என்ற செய்தி பரவியுள்ளது.
இது குறித்து எஸ்.வி. சேகரிடம் கேட்ட போது, எனது சகோதரரின் மனைவியான கிரிஜா வைத்தியநாதன் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியாவார். அவரது மகன் திருமணத்திற்கு முதலமைச்சரை அவர் அழைத்திருந்தார். என் தந்தையின் மறைவுக்கு பிறகு எனது குடும்ப தலைவர் என்ற முறையில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை நான் கவனித்து வந்தேன். திருமணத்திற்கு வந்தவர்களை கவுரவிப்பது நமது பொறுப்பு என்ற வகையில் நான், முதலமைச்சரை வரவேற்றேன் என்று கூறினார்.

அதிமுகவில் சேர்வதற்கு எனக்கு தூண்டுகோளாக இருந்தவர் ஜெயலலிதா தான். அவர் இடும் கட்டளை எதுவாக இருந்தாலும் அதை நான் ஏற்று கொள்வேன் என்றும் எஸ்.வி. சேகர் கூறினார்.

Read More...

யார் பிச்சைக்காரர் ? சோ விளக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதிநிதி ராஜ்யசபை உறுப்பினராவதற்கு அளித்த ஆதரவை, தான் போட்ட பிச்சை என்று கூறியிருக்கிறார், தமிழக முதல்வர். எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையால் முதலமைச்சராகி; முதலில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு பிச்சையாலும், பிறகு பா.ஜ.க. போட்ட பிச்சையாலும், மத்தியில் அமைச்சர் பதவிகளை அனுபவித்து; இப்போது காங்கிரஸ் போட்ட பிச்சையில் மத்திய அமைச்சர்கள் பதவிகளைப் பெற்று; இங்கே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பா.ம.க. ஆகியோர் போட்ட கூட்டுப் பிச்சையினால் ஆட்சி அமைத்து; இப்போது காங்கிரஸ் போட்டு வருகிற பிச்சையினால் முதல்வராகத் தொடர்ந்து வருகிற ஒருவர், தான் பிச்சை போட்டதாகப் பேசியிருப்பது – சரியான பிச்சைக்காரத்தனமாக இருக்கிறது.
( நன்றி: துக்ளக், எச்சரிக்கை பகுதி )

Read More...

Thursday, August 28, 2008

ரஜினி சர்வே முடிவுகள்

ரஜினி சர்வேக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றி. மற்ற சர்வேயை காட்டிலும் இதற்கு அதிக வாக்குகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.முடிவுகள் கீழே....


சனிக்கிழமை ஜூவியில் முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் :-)

Read More...

Wednesday, August 27, 2008

கம்யூனிட்டி பைபிள் - புயலை எழுப்பும் புதிய பைபிள்

கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று. இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம். "இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்'' என்றார் அவர்.

`மேலும் விளக்கமாகக் கூறுங்கள்' என்றோம் நாம்.

"வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார். இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்' என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம். அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்'' என்றார் ரபேல்.

"இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது. பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர். குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா? அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.

பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர். மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூகம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?
பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்' என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர். பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும், இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும். ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன. இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்? இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே? இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?'' எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், ``கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர். அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார். இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன. இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்'' என்றார் உறுதியாக.

கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )


நிச்சயம் கம்யூனிட்டி பைபிள் ஏதோ ஒரு திட்டமிட்ட அஜண்டாவுடன் வெளிவருகிறது.

கீதை, விசிஷ்டாத்வைதம் பற்றி தமிழ் எழுத்தாளர்கள் எழுதுகிறார்களே நம்ம பங்கிற்கு ஏதாவது புதிய(புருடா)பைபிள் எழுதலாமே என்று ஆர்வ கோளாராக கூட இருக்கலாம்.

Read More...

விவரமான தசரதனும்-விவரமில்லாத நெடுமாறனும்

இன்றைய முரசொலி, பழ.நெடுமாரன் ஸ்பெஷல் அவருக்காக ஒரு கவிதை மற்றும் இரண்டு கட்டுரை - குளிப்பாட்டி-நடுவீட்டில் விட்டாலும் என்று கட்டுரை முடிகிறது.

கட்டுரை 1 - விவரமான தசரதனும்-விவரமில்லாத நெடுமாறனும்.
கட்டுரை 2 - ஒரு நரைமயிரின் மகத்துவமும் மகாத்மியமும்!

இந்த இரண்டு கட்டுரையும் புரிய வேண்டும் என்றால் இந்த பதிவை படிக்க வேண்டும்.

“விவரமான தசரதனும்-விவரமில்லாத நெடுமாறனும்”அறிவுரை வழங்குவது என்பது பொதுவாக நல்ல குணம்தான்.

ஆனால், முதலாவதாக, அப்படி அறிவுரை வழங்குகிறவர்களுக்கு சில தகுதிகள் வேண்டும்.


இரண்டாவதாக, அப்படிப்பட்ட அறிவுரையை யாருக்கு வழங்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.அறிவே இல்லாதவர்கள் அறிவுரை வழங்க முற்படுவதும், அறிவின் சிகரமாக திகழ்கின்றவர் களை நோக்கி அறிவே இல்லாதவர்கள் அறிவுரை வழங்குவதும் முட்டாள்தனமாகும்.


தெரிந்தோ, தெரியாமலோ இந்த இரண்டு குற்றங்களுக்கும் ஆட்பட்டு இருக்கிறார், பழ.நெடுமாறன் என்பவர்.

பழ.நெடுமாறன், தமிழக அரசியலில் ஊசிப்போன பண்டம். அவர் எழுதிய ஒரு கட்டுரையை ‘தினமணி’ ஒரு நடுபக்கத்தில் வெளியிட்டு தன் பெருமையை குறைத்துக் கொள்ளுவதா என்பதுதான் என் கவலை.

( ஊசி போன பண்டத்துக்கு முரசொலியில் ஒரு கவிதை + 2 கட்டுரை பேஷ் பேஷ் )

கட்டுரையில்தான் என்ன அரிய பெரிய கண்டுபிடிப்பு இருக்கிறது.

இராமாயணத்தில் தசரதனின் காதோரம் ஒரு மயிர் நரைத்திருந்ததை தசரதன் கண்டுவிட்டானாம்.

அய்யோ! வயதாகிவிட்டதே என்று கூறி, இராமனுக்கு முடிசூட்ட முற்பட்டானாம்.

ஆனால் தலைவர் கலைஞர் வயதாகிவிட்ட பின்னரும், அடுத்தவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் இருக்கிறாராம்.

எனவே, தலைவர் கலைஞர் புதிய தசரதனாம்.

இப்படி ஒரு கண்டுபிடிப்பு அவர் கட்டுரையில்.

இது கண்டுபிடிப்பல்ல; காழ்ப்பு-பொறாமை.
( நல்ல வேளை இவர் பார்ப்பனராக இல்லை, இல்லை என்றால் அவர்கள் குணம் என்று சொல்லியிருப்பார் )

அவரோடு பிறந்த நன்றிகெட்ட தன்மை.

காதோரம் மயிர் நரைத்தவர்கள் எல்லாம் இந்திய நாட்டு அரசியல் அரங்கிலிருந்தும், பதவியிலிருந்தும் இறங்கிவிட்டார்களா?

காதோரம் மயிர் நரைப்பதுதான் அரசியலில் "ரிட்டையர்மெண்டா"
( காதே இல்லாதவர்களுக்கு காதோரம் நரை எப்படி இருக்கும் )

பண்டித ஜவஹர்லால் நேருவும், பட்டேலும், மேற்கு வங்க ஜோதிபாசுவும்-ஏன் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராசரும்-பக்தவச்சலமும்-வெங்கடராமனும், மயிர் நரைக்கும் முன்பே பதவியிலிருந்து இறங்கிவிட்டவர்களா?
( என்ன ஒரே மயிரா இருக்கு )

ஏன்? நெடுமாறன் குறிப்பிட்ட இராமாயணக் காலத்து தசரதன், காதோரம் மயிர் நரைத்ததைக் கண்ட பின் வயதாகிவிட்டது இனி பதவி வேண்டாம் என்ற நல்லெண்ணத்திலா இராமனுக்கு முடிசூட்ட நினைத்தான்?

தசரதனின் சூதுமதியை "நாவலர் சோமசுந்தர பாரதியார்" தாம் எழுதிய "தசரதன் குறையும் கைகேயி நிறையும்" என்ற ஆராய்ச்சி நூலில் அற்புதமாக, ஆதாரத்தோடு படம் பிடித்து காட்டியிருக்கிறார்.

"தசரத சக்கரவர்த்தி கைகேயியைத்தான் விரும்பு வேட்குங்கால், தன் அயோத்தியர சாங்கத்தை அவளுக்கு சுல்கமாகத் தந்தான்"

(‘சுல்கம்’என்பது மணமகன் மணமகளுக்கு திருமணத்தின் போது தரப்படும் சீதனமாகும்)

அப்படி என்றால், அறத்தின்படியும்-சட்டத்தின்படியும்-பழைய நெறியின் படியும் அயோத்தி அரசு பரதனுக்குத்தான் உரிமை. ஆனால் பரதனுக்குரிய ராஜ்ஜியத்தை தசரதன், இராமன், மீதுள்ள பற்றால், பரதன் இல்லாத சமயம் பார்த்து இராமனுக்கு தர செய்த ஏற்பாடுதான் காதோரம் மயிர் நரைத்தது என்ற சாக்குபோக்கு!

இதை நாவலர் பாரதியார், வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சருக்கம்-4, சுலோகம் : 24-27 லிருந்து எடுத்து,

"பரதன் தேசாந்திரம் போயிருக்கிறான். என்றைக்குப் பரதன் மாமன் வீட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் அபிடேகத்திற்கு தக்க காலம் என்பது என் கருத்து. அவன் பட்டணத்திற்கு திரும்ப வராதிருக்கும் வரைதான் உன் பட்டாபிடேகத்திற்கு தகுந்த காலம் என்று எனக்கு தோன்றுகிறது. ஆகையால், நாளையே உனக்கு இளவரசபிடேகம் செய்ய நிச்சயித்திருக்கிறேன்" என்று தசரத மன்னன் இராமனிடம் கூறினான் என்று எழுதியிருக்கிறார்.

இந்த இடத்தில் விவரமான தசரதனை விவரமில்லாத நெடுமாறன் புரிந்துகொள்ள வேண்டும்.

"இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான்."

என்று எழுதி இருக்கிற நெடுமாறன் அவர்களே!

இப்பொழுது தெரிகிறதா-தசரதனின் பதவி பற்றற்ற தன்மை?

தசரத மன்னனுக்கு இருந்த சங்கடம் தலைவர் கலைஞருக்கு இல்லை.

எனவே, அவர் எவ்வளவு காலம் பதவியில் இருப்பது என்பது அவரது விருப்பம் அல்ல. அது எங்களுடைய விருப்பம்.

இந்த விவரமெல்லாம் நெடுமாறனுக்கு தெரிய நியாயமில்லை.

காலமெல்லாம் அவர் கட்சிக்குக் கட்சி தாவுவது-உண்ட வீட்டுக்கே துரோகம் செய்து ஒரு கட்சி தொடங்குவது, அதையும் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைப்பது, எவன் வீட்டுத் திருமணமானாலும் மார்பில் சந்தனம் பூசிக்கொண்டு நடுத்தெருவில் மல்லுக்கு நிற்பது-இப்படியே அவர் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

வாழ்க்கையே முரண்பாடாக அமைத்துக் கொண்ட நெடுமாறன் அவர் எழுதிய கட்டுரையில் அவர் வைத்த வாதத்தில்தான் எத்தனை முரண்பாடுகள்?

தலைவர் கலைஞர் ஏன் தசரத மன்னனைப் போல் காதோரம் மயிர் நரைத்த பின்னும் பதவியிலிருந்து விலகவில்லை என்றும் கேட்கிறார்.

தலைவர் கலைஞர் பதவியிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன் என்று சொன்னால்-

முதலமைச்சர் ஏன் அப்படி சொல்கிறார் தெரியுமா?

விலைவாசி உயர்வு, காவேரி-முல்லைப் பெரியாறு-ஈழப் பிரச்சனை-மீனவர் பிரச்சனை-கச்சத்தீவு பிரச்சனை-சேது கால்வாய் பிரச்சனை-போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை-அதனால்தான் ஓய்வுபெற விரும்புவதாக முதல்வர் கூறுகிறார் என்றும் நெடுமாறன் எழுதுகிறார்.

ஏதோ இந்த பிரச்சனை எல்லாம் கலைஞர் இந்த முறை முதல்வராக வந்த பின் முளைத்த பிரச்சினையைப் போலவும்-அதைத் தீர்க்க வழி தெரியாது கலைஞர் திண்டாடி-பதவியே வேண்டாம் என்று ஒதுங்குவது போலவும் நெடுமாறன் எழுதுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனமான வாதம் என்பது எவரும் புரிந்துக் கொள்ளலாம்.

இதேபோல்தான் அமைச்சர்களைப்பற்றி தலைவர் குடும்பத்தைப் பற்றி சேற்றை வாரி இறைத்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டு இருக்கிறார்.

கழகத்தில் நெடுமாறன் இருந்த காலத்திலிருந்தே தலைவர் கலைஞரை அவருக்குப் பிடிக்காது.

அண்ணாவிற்கு பிறகு தலைவர் கலைஞர் கழகத் தலைவரான பின்பு அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றிருக்கின்ற காரணத்தால், நெடுமாறனையும் ஒரு பொருட்டாக மதித்து வந்தார்.

சட்டமன்றத்தில் மரியாதை கொடுத்தார்.

ஜெயலலிதா இவரை சிறையில் அடைத்தபோது இவர் அரசியல் அனாதையானார்.

அப்பொழுதும், கலைஞர் இவருக்கு ரட்சகரானார்.

ஆனாலும், நெடுமாறன் சுபாவம் மாறவில்லை.

என்ன செய்வது? அடுத்த தேர்தலில் நாம் தோற்போம் என்று இந்த அரசியல் வாழாவெட்டி நமக்கு சாபமிடுகிறார்.

எதையோ குளிப்பாட்டி-நடுவீட்டில் விட்டாலும்-அது வாலை குழைத்துக் கொண்டு போகும் என்பார்களே அந்த கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு நரைமயிரின் மகத்துவமும் மகாத்மியமும்!

க ம்பராமாயணத்தில் ராமனின் பெருமைகள் பேசப்படுகிறது. சீதை - கற்பின் கலை என்று போற்றப்படுகிறாள். அனுமனின் புகழ் பாடப் பெற்றிருக்கிறது. தம்பி லெட்சுமணன், நாவாய் செலுத்தும் குகன், ராவணனை வழிமறித்துப் போரிட்ட ஜடாயு என்ற கழுகு, ராமனுக்கு உதவி செய்வதற்காக ஆருயிர் அண்ணனுக்கே துரோகம் இழைத்து விட்டு ராமன் பக்கம் சேர்ந்த சுக்ரீவன், விபீஷணன் பற்றியெல்லாம் - அவர்களது மகத்துவம் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாய் - பாடல் பாடலாய் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது.

ராமனின் தந்தையான தசரத மகாராஜாவின் காதோரத்து மயிர் - அதாவது இந்தக் காலத்து பாஷையில் சொல்வதானால் - கிருதாவில் முளைத்த வெள்ளை மயிரின் ‘மகத்துவம்’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறனை மிகவும் கவர்ந்திருக்கிறது!

மறைந்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் (அ.ச.ஞா.) 1940களிலேயே கம்பராமாயணப் பாத்திரங்களால் கவரப்பட்டு ‘தம்பியர் இருவர்’ ‘அரசியர் மூவர்’ ‘ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’ என்ற தலைப்புகளில் லெட்சுமணன் - பரதன், கோசலை - கைகேயி - சுமத்திரை - ராவணன் போன்ற கதாபாத்திரங்களை கம்பன் எப்படி வர்ணிக்கிறான் தனது கவிதைகளில் என்பது பற்றி அற்புதமான இலக்கிய விமர்சன நூல்களை எழுதியிருக்கிறார்.

காலஞ்சென்ற எஸ்.ராமகிருஷ்ணன் ‘சிறியன சிந்தியாதான்’ என்ற தலைப்பில் கம்பன் படைப்பு பற்றி எழுதியிருக்கிறார்.

இன்னும், டி.கே.சி., ம.பொ.சி., பி.ஸ்ரீ., இஸ்மாயில் போன்றோரும் - கம்பனின் கதாபாத்திரங்கள் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிவிட்டதாலோ என்னவோ -

பழ.நெடுமாறன் வியந்து பாராட்ட தசரதனின் காதோரத்து நரைமயிர்தான் கிடைத்தது போலும்!

தசரதன் ஒருநாள் கண்ணாடியின் முன் நின்று தனது முகத்தைப் பார்த்தபோது காதோரத்தில் நரைமயிர் அவன் கண்ணில் படுகிறது. அந்த நரைமயிர் அவனுக்கு அதுவரையில் இல்லாத வகையில் ஒரு ஞானோதயத்தை அவனுக்குப் பிறக்க வைக்கிறது. அது என்ன?

"அடடா, நமக்கு வயதாகி விட்டது ; நமது மகன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது" - என்ற ஞானோதயம்தான் அது.

"மன்னனே யவனியை மகனுக்கீந்து நீ

பன்னருந்தவம்புரி பருவ மீதெனக்

கன்ன மூலத்தினிற் கழற வந்தென

மின்னெனக் கருமைபோய் வெளுத்த

தோர் மயிர்"

என்ற கம்பனது இந்தப் பாடல் வரிகள் நெடுமாறனைப் பரவசப்படுத்தியிருக்கிறது.

உடனே அவருக்குக் கம்பன் நினைவெல்லாம் பறந்து போய்விட்டது. கலைஞரின் நினைவு முன்னைவிட அதிகமாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது.

நரைமயிரைக் கண்ட மாத்திரத்தில் தசரதன் பதவி துறக்க முன்வந்தானே; கருணாநிதி அந்த உதாரணத்தை ஏன் இன்னமும் பின்பற்றவில்லை - என்று கடுப்பாகி - கனல்தெறிக்க கலைஞர் எதிர்ப்புக் கட்டுரை ஒன்றினை ‘தினமணி’யில் எழுதிவிட்டார்.

நெடுமாறன் எப்போதுமே - தி.மு.க.வுக்கு எதிரானவர், கலைஞரை அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆகவே கம்பராமாயணத்தில் அவர் கண்ட நரை மயிர்கூட அவரை கலைஞருக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதத் தூண்டி விட்டதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. ஆகவே - அவரது வாடிக்கையான கலைஞர் எதிர்ப்பால் விளைந்த அந்தக் கட்டுரையைப் பற்றி விமர்சிப்பதை விட - அவரது உள்ளங் கவர்ந்த அந்த நரைமயிரின் மகத்துவம் அல்லது மகாத்மியம் எப்பேர்ப்பட்டது என்பதைப் பற்றி மட்டும் இங்கே பரிசீலிக்கலாம்.

- தசரதன் அந்த நரைமயிரைப் பார்க்காமல் இருந்திருந்தால் - அல்லது பார்த்தபிறகும் நரைமயிர்தானே என்று நினைத்து அதைப் பிடுங்கி எறிந்திருப்பானானால்

- தசரதனுக்கு ராம பட்டாபிஷேகம் பற்றிய நினைவு உடனடியாக வந்திருக்காது.

- ராமனுக்கு முடிசூட்டு விழா என்று அறிவித்திருக்க மாட்டான்.

- முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளைக் கவனித்த கூனிக்கு ராமனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி தோன்றியிருக்காது.

- கூனி கைகேயியை சந்தித்து அவளது நல்ல மனதைக் கெடுத்திருக்க மாட்டாள்.

- கூனியின் கோள்மூட்டலுக்கு கைகேயி இரையாகியிருக்கமாட்டாள்.

- தசரதனிடம் இரண்டு வரங்களை நினைவுபடுத்தி ‘ராமனைக் காட்டுக்கு அனுப்பு’ என்று கைகேயி கட்டளையிட்டிருக்க மாட்டாள்.

- ராமன் காடேக வேண்டிய நிலையே உருவாகியிருக்காது.

- ராமனோடு சீதையும் காட்டுக்குப் போக வேண்டிய நிலையும் பிறந்திருக்காது.

- காட்டில் ராவணனின் அருமைத்தங்கை சூர்ப்பனகையை ராம - லெட்சுமணர்கள் சந்திக்க வேண்டியிருந்திருக்காது.

- சூர்ப்பனகையின் முலையையும் - மூக்கையும் வெட்டி அவளை மானபங்கப்படுத்திய கொடுஞ்செயலும் நிகழ்ந்திருக்காது.

- சூர்ப்பனகை தனது அண்ணன் ராவணனிடம் ராம - லெட்சுமணர்கள் - பெண் என்றும் பாராது தன்னை மானபங்கப்படுத்திய அக்கிரமம் பற்றிப் புகார் செய்திருக்கமாட்டாள்.

- தங்கைக்கு ராம - லெட்சுமணர்கள் இழைத்த கொடுமையால் சினம் கொண்ட ராவணன், சீதையை அவள் தங்கியிருந்த குடிலோடு இலங்கைக்குத் தூக்கிச் சென்ற சம்பவமும் நடந்திருக்காது.

- சீதையை மீட்க சுக்ரீவனின் உதவியை நாடவேண்டிய அவசியமும் ராமனுக்கு ஏற்பட்டிருக்காது.

- அதற்காக சுக்ரீவனின் அண்ணன் வாலியை கோழைத்தனமாக மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருந்து யுத்த தர்மத்துக்கும் - ராஜ நீதிக்கும் புறம்பான வகையில் கொலை செய்த குற்றத்திற்கும் ராமன் ஆளாகியிருக்கமாட்டான்.

- யுத்தத்தில் ஜெயிப்பதற்காக - ராவணனது தம்பியை - விபீஷணனைப் பதவி ஆசை காட்டித் தன் பக்கம் இழுத்துக் கொண்ட மாப்பழியையும் ராமன் சுமந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

- யுத்த முடிவில் - அசோக வனத்திலிருந்து தன்னைச் சந்திக்க ஆவலோடு ஓடி வந்த தனது மனைவி சீதையைக் ‘கற்பிழந்தவள்’ என்று அபாண்டமாய் குற்றஞ்சாட்டி - அவளை நெருப்புக் குண்டத்தில் - அக்னிப் பிரவேசம் செய்ய - காட்டுமிராண்டித்தனமாகக் கட்டளையிடவும் - ராமனுக்கு நேர்ந்திருக்காது.

- அயோத்திக்கு வந்து அரசனாக முடி சூட்டிக் கொண்ட பின்னர் - யாரோ ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவளை சீதைக்கு ஒப்பிட

- உடனடியாக ராமன் - தனது மனைவியை மீண்டும் சந்தேகித்து - சீதை நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராது - "அவளைக் காட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள்" என்று கர்ண கொடூரமாகக் கட்டளையிட்டிருக்கமாட்டான்.

- காட்டில் பிறந்த லவன் - குசன் என்ற அவனது மகன்களே ராமனின் சபைக்கு வந்து தகப்பன் ராமனை இழித்துரைக்கும் அவலம் நிகழ்ந்திருக்காது.

அட; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ராமாயணம் என்ற கற்பனைக்கே இடமிருந்திருக்காது.

ஒரு மயிர் - அதுவும் நரை மயிர் தசரதன் கண்ணில் பட்டதால் - அடுக்கடுக்காக நிகழ்ந்த அவலங்கள் - அசிங்கங்கள் - களங்கங்கள் - அவப்பெயர்கள் - அநீதியும் அக்கிரமும் கலந்த அத்துமீறிய நடவடிக்கைகள் எல்லாம் விரும்பத்தகாத சம்பவங்கள் எல்லாம் நடந்தேறின!

இத்தனைக்கும் காரணமான அந்த நரை மயிரின் மகத்துவத்தைத்தான் பழ.நெடுமாறன் தற்காலத் தமிழக அரசியலோடு ஒப்பிட்டு "அய்யோ கலைஞர் பதவி விலகவில்லையே" என்று தினமணி கட்டுரை மூலம் அங்கலாய்த்திருக்கிறார்.

இதன்மூலம் இன்றைய தமிழகத்திலும் கம்ப ராமாயண காலத்து அசிங்கங்கள் - அநாகரீகங்கள் - ஒழுங்கீனங்கள் எல்லாம் அரங்கேற வேண்டும் - தமிழகத்தின் சிறப்புகள் எல்லாம் சீர்குலைய வேண்டும் என்று விரும்புகிறாரோ நெடுமாறன்?


(ஒரு மயிருக்கு இரண்டு கட்டுரை, நல்ல வேளை தசரதனுக்கு நிறைய நிரைமயிரு இல்லை :-)

Read More...

Tuesday, August 26, 2008

சிரஞ்சீவி பேச்சு - லைவ்

பிரஜாராஜியம் - சிரஞ்சீவியின் புதிய கட்சி பெயர்
Some of the excerpts of his speech:

* I will always remain your servant. It is a historic moment. A proud moment for Andhra.

* I founded hundreds of blood and eye banks.

* Let's concentrate on positive things and fight divisive forces.

* God has blessed me. Asked me to do this. I seek your support.

* Happy Andhra Pradesh is my motto. Modernisation and industrialisation will be on my agena.

* My party is of the people, for the people and by the people.

* Social justice is the main agenda of my party.

* I take an oath in the name of Lord Venkateshwara that I will be with you. You don't need a leader. You need a servant. It is my motive. I want to restore the honour of politics.

* We should be transparent in public life. We should be with the weaker sections. Even after 60 years of freedom, there has not been any improvement.

I don't know politics. I can't understand it. But I know the suffering of people.

* I have done all roles in cinema. I have seen the entire world. I don't want anything more.

* I had just two pairs of trousers in my college.

* I survived in Madras with less than Rs 100 per month. People need a person from such background to lead them. My roles in cinema always represented weaker sections.

* I am from a very humble background. We had just 5 acres of land. My father was a police constable.

* This sound will reverberate across Andhra.

* I know the pulse beat of the Telugu people. I promise a clean and effective movement.

* Youth power is my power. Women will get more attention.

* This sound will reverberate across Andhra.

* I represent weaker sections. Today's meeting is a historic meeting.

* I am like the brother of all Andhraites. Telugu people made me what I am today.

* I don't know to how to thank you all. I will never forget your kindness.

* My mother taught me about life. I don't bother about caste, religion and class.

* My achievement will be your achievement.

* As an actor, I struggled. I am a servant of the people.

# Please bless my movement. You have always blessed me. Mother Theresa has always been my inspiration. I believe in her.
லைவ் பேச்சு கீழே...

முடிந்துவிட்டது :-)


Read More...

இந்த வாரக் குட்டும், திட்டும்

இந்த வாரக் குட்டு - விரமணிக்கு by ஞாநி - ஓ-பக்கங்கள்.
இந்த வாரக் திட்டு - ஞாநிக்கு by வீரம

இந்த வாரக் குட்டு

பெரியாரின் எழுத்து, படைப்புகள் எதுவும் இன்னும் நாட்டுடைமையாக்கப்படாமல் இருப்பதற்காக, `பெரியார் பல்கலைக்கழக மாணவமணி' கலைஞர் கருணாநிதிக்கும், `பல்கலைக்கழகத்தின் மொத்தக் குத்தகைதாரர்' கி.வீரமணிக்கும் இ.வா.குட்டு.

குடியரசு இதழ் தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடக் கூடாது என்றும், உரிமை தன்வசம் உள்ள அமைப்பிடமே உள்ளது என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்திருப்பது ஓர் அற்பமான செயல்.

தன் கருத்தைத் தனக்குப் பின்னரும் பரப்புவதற்காகவே கடும் உடல் நலக் குறைவுடன் சிக்கனமாக வாழ்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார் பெரியார். அவற்றை விட மிகப் பெரிய சொத்து அவருடைய கருத்துகள். அவை மக்களின் பொதுச் சொத்து. எவரும் அவற்றை வெளியிட்டுப் பரப்பலாம் என்ற நிலையை உடனடியாக தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இலவச டி.வி பெட்டி தருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய்களை வீணாக்கும் அரசு, வீரமணிக்கு ஒரு கோடி ரூபாயாவது கொடுத்து, பெரியாரை விடுவிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வரும் செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாளுக்குள் கலைஞர் கருணாநிதி செய்யத் தவறினால், மீண்டும் குட்டுவேன். செய்தால் 129 பூச்செண்டுகள் அளிப்பேன்.
( நன்றி: குமுதம், ஓ-பக்கங்கள் )


ஏனிந்த பிழைப்போ!

அடடே, ஒரு பூணூலுக்குப் பெரியார் கொள்கைமீது அளவற்ற பாசமும், மரியாதையும் பிய்த்துக் கொண்டு அடிக்கிறது.

பெரியாரைத் தூக்கிப் பிடிப்பதுபோல் காட்டி - பெரியார் இயக்கத்தின்மீது சேறு வாரி இறைப்பது என்பது - ஆபி டுபே சொல்லி, அதை அண்ணா அருந்தமிழல் ஆரிய மாயையில் வெளிப்படுத்தினாரே - வஞ்சக வேந்தே போற்றி! என்ற அந்த வரிதான் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

குடிஅரசு இதழ் தொகுப்புகள் வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கே உண்டு என்று வீரமணி அறிக்கை வெளியிட்டு விட்டாராம் - அதனை எதிர்த்துதான் இந்தப் பூணூல் திருமேனி தாண்டிக் குதிக்கிறது (குமுதம், 27.8.2008).

பெரியார் கொள்கைமீது அவ்வளவு பற்றா? பெரியாரின் எந்தக் கொள்கையை இவர் பரப்புகிறார் அல்லது பின்பற்றுகிறார்?

சென்னை தொலைக்காட்சிக்காக அய்யா படம் தயாரிக்கவில்லையா என்று சொல்லலாம்; அதற்கான கூலியைப் பெற்றுக்கொண்டுதான் அதனைத் தயாரித்தார். அதற்காக பெரியார் திடலும், மானமிகு வீரமணியும் செய்த உதவி முக்கியமானது.

பெரியாரைப்பற்றிய வரலாறு பரவாமல் தடுக்கத்தான் அந்த உதவிகள் செய்யப்பட்டனவா?

குமுதம் இதழில் வெளியிடப்படுபவைகளை வேறு ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்ததற்காக, தான் நடத்திய ஒரு இதழில் (அதையாவது ஒழுங்காக நடத்தத் துப்பு இல்லை - அளந்து கொட்டுவது மட்டும் ஆயிரம் மரக்கால்!) ஒரு அறிவிப்பைக் கொடுத்தார். அவ்விதழில் வெளிவரும் எதையும் குமுதம் பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டார்.

சரிதான், மானஸ்தர் என்று நினைத்தோம்.

ஆனந்தவிகடன் அந்த ஆளுக்குக் கல்தா கொடுத்தவுடன் (ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்க முடியாத சுபாவக் கோளாறு!) அன்றைக்கு எந்த குமுதத்துக்கு வாய்ப்பூட்டுப் போட்டாரோ, அந்தக் குமுதத்தின் காலடியில் சரண் அடைந்துவிட்டார். பார்ப்பானுக்கும், மானத்துக்கும் என்ன சம்பந்தம்? யாசகம் செய்வதையே புருஷ லட்சணம் என்று பெருமைப்படும் பரம்பரையிடத்தில் மானமாவது - வெட்கமாவது!

காரியம் ஆகும்வரை காலைப் பிடிப்பது. காரியம் ஆன பிறகு காலை வாருவதா?

நல்ல கூட்டமடா இது!
( நன்றி: விடுதலை, 25.8.08 )

பார்ப்பானை எதிர்ப்பது தான் வீரம், சிலருக்கு மணி அடிப்பது தான் தொழில் - அதனால் தான் அவர் பெயர் வீரமணி

Read More...

அன்னைத் திமிங்கிலம்!

அன்னைத் திமிங்கிலம்! - கலைஞர் கவிதை.
ஒரு மினி மிருகக்காட்சி சாலை பார்த்த எஃபெக்ட் :-)

அன்னைத் திமிங்கிலம்!

நாய், தன் குட்டிகளை நக்கி வளர்க்கும்;
தாய்ப் பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கத் தவியாய்த் தவிக்கும் -
பூனை கூடப் பொல பொலவென்று குட்டிகளைப் போட்டாலும்
புழுப் போலத் துடித்துவிடும், அவற்றைப் போஷிக்க முடியாவிட்டால்!
புலி, கரடி சிங்கம் போன்ற பொல்லா விலங்குகளுக்கும்
புத்திர வாஞ்சையென்பது இயற்கையின் இயல்பேயாகும்!
சினையாயிருந்து குஞ்சுகள் பொறித்து சின்ன மீன்களைக் கூடத் தாய்மையினால்
இணை பிரியாமல் தம்முடன் ஊர்வலமாய் அழைத்துச் செல்லும் பெரிய மீன்கள்!
பரிதாபச் செய்தியொன்று; தொலைக்காட்சியில் இன்று!
பசிபிக் கடலில் திமிங்கில மொன்று;
இனிதாய்ப் பிள்ளைதனைப் பெற்று விட்டு,
எங்கோ அலைகளில் சிக்கிக் காணாமற் போய் விடவே;
குட்டித் திமிங்கிலமோ தாயின் பாலின்றிப் பரிவு இன்றி -
எட்டு மணி நேரம் தாண்டி உயிரோடிருப்பது மிக அரிதாம் -
ஆஸ்திரேலியா நாட்டரசு; அலைகடலில் தாய்த் திமிங்கிலத்தை;
அதன் குட்டிக்காதரவாய் அழைத்து வர அரும்பாடுபடுவதாய்ச் செய்தி வரினும் -
அலையோசை தாண்டி அன்னைத் திமிங்கிலத்தின் காதில்
அச் செய்தி இன்னும் விழ வில்லை போலும்!

Read More...

ஆழ்வார்கள் புராணம்! கருணாநிதி கவிதை

ஜெ குட்டி(சின்ன) கதையில் மன்னர் என்றால் கலைஞர் கவிதை(?) எழுதுவதில் மன்னர். இன்று அவர் எழுதிய கிசுகிசு கவிதை யாரை குறிப்பிடுகிறது ?

விடுதலைப் போர் நாயகராம்

விருதுநகர் மாவீரர் காமராஜரின்

விசுவாசமிக்க சீடர் என்று

விரிவுரைகள் பல நிகழ்த்தி; பின்னர்

வேறு கொடி பிடிப்பேன் என்று - அவர்

விலாவில் குத்திய விபீஷ்ண ஆழ்வார்!!

அண்ணாவின் அணி வகுப்பில் நானும் ஒருவன் என நவின்று

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

மூப்பனாரின் காலடியே மோட்சமென்றும் சொர்க்கமென்றும்

முகஸ்துதி பல செய்து மோசடியால் புதுக்கொடி ஏற்றிவிட்ட எட்டப்பன்!

குன்றனைய குமரி அனந்தரின் புகழ் மறைக்க

குறுக்குச் சுவர் கட்டி, தடை மீறிய தமிழ் ஈழப் பயணமென;

தவிக்க விட்டு கடல் நடுவே அவரை;

தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்!

வலியின்றி புலிக் கூட்ட முதுகினிலே

குத்திக் கொண்டே பணம் பறிக்கும் இனத் துரோகி!

தரணிதனில் பல புராணங்கள் இருக்க

தசரதன் புராணத்தில் இவர் இறங்கி

அவன் காதோரம் நரைத்த மயிரின் கதையை- தன் கட்டுரைக்கு

விதையாக்கி விஷத்தைக் கக்கியிருப்பதுதான் பெரும் விந்தை!

சீராக்கவே முடியாத சீழ் பிடித்த சிந்தை!

கூராக்கவே இயலாத மூளையில் விஷம் ஒரு மொந்தை!சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு 3-வது முறையாக டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. - செய்திஒரு வாரமாக தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலரை எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவிட்டு, "நாய்க் கவிதை, திமிங்கலக் கவிதை' எழுதிக்கொண்டிருக்கிறார். - ஜெயலலிதா


கவிதைக்கு விடை
புதிய தசரதனின் பதவித் துறப்பு - பழ. நெடுமாறன்
கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக் காட்டுவதே ஆகும்.

தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாக பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார்.

மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ

பன்னருந் தவம்புரி பருவ மீதெனக்

கன்ன மூலத்தினிற் கழற வந்தென

மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர்

""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப் போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று'' என பாடுகிறான் கம்பன்.

கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அரியணையில் இருந்து இறங்கித் துறவுகோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூடுகிறார்கள். அப்படி கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசரதனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான்

அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்

துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின்

பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ

""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சரியோ'' என்கிறான்.

ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அரியணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன்.

கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால் இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார்.

""5 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை''யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படி கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உரியதாகும். 1993-ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார்.

2001-ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால் 2006-ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். 2008-ஆம் ஆண்டில் தனக்கு பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும்.

ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்?

""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது - அவருக்கும் நல்லது'' என நினைத்து அனைவரும் அமைதி காத்து விட்டார்களா?

முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதிரியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, சேதுக் கால்வாய் பிரச்னை போன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புரியாத புதிர்தான்.

சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது.

தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புரியக் கூடியது.

அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக?

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டு சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் திமுகவின் வெற்றி பெரிய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பம் இல்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது.

ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேரிட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார். அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்?

இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புரிந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அரியணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால் தசரதன் தானே முன் வந்து அரியணையைத் துறக்க முற்படுகிறான்.

ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெரியும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.

Read More...

சிரஞ்சீவி அரசியலில் குதிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது - வடிவேலு

நடிகர் சிரஞ்சீவி இன்று புதிய கட்சியை தொடங்கு கிறார். திருப்பதியில் இன்று நடைபெறும் கட்சி தொடக்க விழாவில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவிக்கிறார். மற்ற தமிழ் நடிகர்கள் சும்மா இருக்க வடிவேலு...

சிரஞ்சீவி மனித நேயமிக்க வர். அவர் அரசியலுக்கு வருவதால் ஆந்திராவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் நல்லது. அவருக்கு நன்றாக தமிழ் தெரியும்.நடிகர் ராஜசேகரை அவரது ரசிகர்கள் தாக்கியபோது, சிரஞ்சீவியே ராஜசேகரை நேரில் சென்று பார்த்து மன்னிப்பு கேட்டார். அந்தளவுக்கு பெரும் மனப் பான்மையுடையவர். அவர் கட்சி ஆரம்பிப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற் கிறேன். அவர் கட்சி ஆரம்பிப்பதால் ஆந்திராவும், தமிழகமும் நல்ல பலனை பெறும்.

Read More...

சீமான் கூட்டத்தில் சோடாபாட்டில் வீச்சு

சினிமா டைரக்டர் சீமான் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சோடாபாட்டில் வீசி தாக்கினார்கள். இதைத்தொடர்ந்து டைரக்டர் சீமானை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.தி.க. பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சினிமா டைரக்டர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது பெரியாரின் கொள்கைகளை விளக்கி பேசினார். ஜாதி பிரிவுகள் இருக்க கூடாது என்றும், இந்து இதிகாசங்கள் குறித்தும் விமர்சித்து பேசியதாக தெரிகிறது.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

சோடாபாட்டில் வீச்சு

தொடர்ந்து சீமான் பேசிக்கொண்டு இருந்தார். சிறிதுநேரத்தில் மேடையை நோக்கி வந்த சிலர் சோடாபாட்டில்களையும், கற்களையும் வீசினார்கள். இதனால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. போலீசார் விரைந்து சென்று, டைரக்டர் சீமானை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சோடாபாட்டில் வீசியதில் ஆறுச்சாமி, கோபால், உமேஷ், பாலன் ஆகிய 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பாதுகாப்பாக அழைத்து கொண்டு போய் 'தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடணும் )

இந்த சம்பவத்தை தொடர்ந்து, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு பிரிவினர் வைத்து இருந்த பேனர்கள், மற்றும் சுவரொட்டிகள் கிழித்து எறியப்பட்டன. இருகோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

போலீஸ் தடியடி, மற்றும் கோஷ்டியினர் தாக்கியதில் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பா.ஜனதா கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் மற்றும் கடவுள்கள் பற்றி பேசியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து இந்து கடவுள் பற்றி விமர்சித்து பேசியதாக டைரக்டர் சீமான் மற்றும் பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நடந்த சம்பவம் குறித்து, டைரக்டர் சீமான் கூறும்போது, "முற்போக்கு சிந்தனை கருத்துகளை கூறும்போது சிலர் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜாதி பிரிவுகளால் எழுந்துள்ள நிலைமையையும், பெரியாரின் கொள்கையை கடைபிடிப்பதால் மனிதசமூகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் விளக்கினால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதற்காக எனது கருத்துகளை தெரிவிக்காமல் இருக்கப்போவதில்லை'' என்று கூறினார்.

Read More...

அரசியலில் இதெல்லாம்...

பார்க்க படங்கள்..ஜார்கண்ட் முதல்-மந்திரியாக சிபுசோரன், நாளை பதவி ஏற்கிறார். நம் நாடு உருப்படுமா ?

Read More...

Monday, August 25, 2008

கேப்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

ே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு இட்லிவடையின் வாழ்த்துகள். இந்த வீடியோ அவருக்கு பிறந்த நாள் பரிசு...


Read More...

மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்...

தண்ணீர் விட்டோ வளர்த்தோம், குருமூர்த்தி, பாகம்-1 ( அலையன்ஸ் பதிப்பகம் ) வந்த கட்டுரை இது. ( பக்கங்கள் 24-53 )
டைப் அடித்து அனுப்பிய பெயர் சொல்ல விரும்பாத நண்பருக்கு நன்றி.

முன்குறிப்பு:
1. இதைப் படிக்கும்போது கிறிஸ்த்துவ மத நம்பிக்கைகளை விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
2. தட்டச்சு பிழைகள் ( நிறைய ) இருக்கலாம்.
3. கட்டுரை ரொம்ப பெரிசு
அன்று எம்.ஜி.ஆரின் திட்டம் - இன்று ஜெயலலிதாவின் சட்டம்

என்ன செய்வது? நான் ஒன்று நினைக்க, ஜெயலலிதா ஒன்று நினைக்கிறார், செயவும் செய்கிறார். அந்தோனியா பிரச்சனையை ஜெயலலிதா கிளப்ப, நான் அந்தோனியா, மற்றும் அவருக்கு நாடாளும் தகுதி பெற்ற குடியுரிமை, அன்னிய நாடுகளில் இது பற்றிய நிலைமை என்ன என்பதெல்லாம் பற்றி அலசி, விரிவாக நான்கு கட்டுரைகளை எழுதி 'சோ' விடம் கொடுத்துவிட்டு, இன்னும் சில நாள்கள் 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்' தொடரைப் பற்றி உடனுக்குடன் கவலைப்பட வேண்டியதில்லை என்று நிம்மதியாக வீடு திரும்பினேன். ஆனால், மறுநாள் நான் பத்திரிகையில் படித்தது ஜெயலலிதா கொண்டு வந்த மதமாற்ற சட்டம் பற்றிய செய்தி.

அதன் பிறகு அதை எதிர்த்து பத்திரிகைகளின் தலையங்கங்கள், மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், தலைவர்களின் அறிக்கைகள், கிறிஸ்துவ ஆதரவுப் பிரச்சாரம், மதமாற்ற ஆதரவுப் பிரச்சாரம் ஒருபுறம்; பள்ளிக் கூடத்தை மூடுவோம்; மாணவர்கள் திண்டாடட்டும் என்று சில பாதிரியார்களின் மிரட்டல் மறுபுறம்; இது போல் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து, பாரத நாட்டின் மேல் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிற அளவுக்கு, சில கிறிஸ்துவ மதகுருமார்களின் பொறுப்பற்ற பேச்சு இன்னொரு புறம் - என்று இருந்தன. இதையெல்லாம் படித்த பிறகும் சரி முதலில் இதைப் பற்றித்தான் எழுதவேண்டும்; அந்தோனியாவிடம் சில வாரங்கள் கழிந்தபின் செல்லலாம் - என நான் முடிவு செய்தேன். சொல்லப்போனால் என்னை அப்படி முடிவு செய்ய வைத்தது ஜெயலலிதா. அதற்கு பக்க வாத்தியங்களாக செயல்பட்டவர்கள் மதமாற்ற தடை சட்டத்தை எதிர்க்கும் கிறிஸ்துவ பாதிரியார்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் தான்.

முதலில் ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தின் சாராம்சம் என்ன என்பதைப் பார்ப்போம். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆசைகாட்டிம் மோசடி செய்து, மிரட்டிம் மதமாற்றம் செய்வது குற்றம். யார் அப்படி செய்கிறார்களோ, அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். அப்படி தவறாக மதம் மாற்றப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்ட மக்களானால், மதமாற்றம் செய்கிறவர்களுக்குக் கூடுதல் தண்டனை. இதுதான் அந்த சட்டத்தின் முதல் சாரம்சம். யார் தவறான முறையில் மதமாற்றம் செய்தாலும் - அவர்கள் ஹிந்துக்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவர்களாக இருந்தாலும் சரி - இந்த சட்டம் அவர்களை ஒரே மாதிரிதான் தாக்கும்.

ஆனால் இது, ஏதோ கிறிஸ்துவர்கள் செய்யும் மதமாற்றத்தை மட்டும் தடுக்கும் போலவும், மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவ மதபோதகர்கள் மட்டும்தான் தண்டிக்கப்படுவார்கள் போலவும் - பிரச்சாரம் நடக்கிறது, மோசடி செய்து, ஆசைகாட்டி, மிரட்டி மதமாற்றம் செய்பவர்களைக் குறிவைக்கும் ஒரு சட்டத்தை கிறிஸ்துவ மத குருமார்களையும் அந்த சட்டம் தங்கள் மாதா கோவில்களையும் குறி வைக்கும் சட்டம் என்று பழிப்பது என்பது அவர்கள் தங்களைத் தாங்களே பழித்துக் கொள்வது போல் அல்லவா? இது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை !.


போலி மதச் சார்பற்ற கட்சிகளும், தலைவர்களும் எப்படி சிறுபான்மையினரின் ஓட்டை ஜேப்படி செய்வது என்ற போட்டியிலேயே எப்போதும் இருப்பதால், அவர்களும் சேர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராகவும், மத மாற்றுபவர்களுக்கு ஆதரவாகவும் நீலிக் கண்ணீர் வடிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதே போல 'மதச்சார்பற்ற' - அதாவது ஹிந்துமத விரோத - பத்திரிகைகளும் இதே தொனியில் எழுதுவதிலும் புதிது ஒன்றும் இல்லை. ஆக எல்லோராலும் ஆதரிக்கப்பட வேண்டிய ஒரு சட்டம், ஏதோ ஜிந்து மதத்திற்கு சாதகமாகவும், கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களுக்கு பாதகமாகவும் இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி - அந்த சட்டத்தை தூற்றுவது துரதிர்ஷ்டம். இதைப் பற்றி பின்பு பார்க்கலாம்.

மேற்கொண்டு இந்த சட்டத்தைப் பற்றியும், அதன் சாரம்சம், அதன் அவசியம், அதன் பின்னணி பற்றியும் எழுதுவதற்கு முன்னால், ஒரு விஷயத்தை விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏதோ இந்த சட்டம் பா.ஜ.க வின் 'ஹிந்துத்துவ' அடிப்படையில் கொண்டுவரப்பட்டது போலவும், அத்வானியைத் திருப்திப் படுத்துவதற்காக ஜெயலலிதா இந்த அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது போலவும், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்திகளும், வதந்திகளும் வந்தபடி இருக்கிறது. இது ஒரு அப்பட்டமான பொய்.

ஜெயலலிதா இப்போது கொண்டு வந்துள்ள மதமாற்றத்தடை சட்டம், சுமார் 20 வருஷங்களுக்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் வரவேண்டிய சட்டம். இது 20 ஆண்டுகள் தாமதமாக வந்திருக்கிறது. இது எப்படி? தமிழ் நாட்டில் முதல் முறையாக மதமாற்றம் சம்பந்தமாக ஏற்பட்ட கலவரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த மண்டைக் காடு கலவரம். இது கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஹிந்துக்களுக்கும், ஹிந்துக்களுக்குமிடையே நடந்த கலவரம். இது நடந்தது 1983 -இல். எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்து வந்த காலம். அந்தக் கலவரம் பற்றி ஆய்வு செய்ய என்.ஜி.ஆர். ஒரு விசாரணைக் கவிஷன் அமைத்தார். நீதிபதி வேணுகோபால்தான் விசாரணை செய்யும் தனி நபர் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

நீதிபதி வேணுகோபால்தான் அந்த தனிநபர் கமிஷன் என்பது மிக முக்கியம். எனென்றால், அவர் ஈ.வெ. ராமசாமி பெரியாரின் சீடர். நாத்திகர், திராவிட இயக்கத்தில் தீவிர பற்றுள்ளவர். பல திராவிட தலைவர்கள், அறிவு ஜீவிகள் போல அவர் ஹிந்து மதத்தின் பேரில் வெறுப்பில்லாதவராக அவர் இருந்திருக்கலாம். ஆனால் அதில் அதிகமாக மரியாதை இல்லாதவர். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் எம்.ஜி.ஆர். அவரை நியமித்தார். ஹிந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே நியாயம் செய்ய பழுத்த திராவிட பண்புடைய ஒருவரை நியமித்தால்தான், சச்சரவு வராது என்பதால்தான் எம்.ஜி.ஆர் திரு. வேணுகோபால் அவர்களைத் தேர்ந்தெடுத்து, கமிஷன் நியமித்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

மண்டைக்காடு கலவர கமிஷனின் அறிக்கையில், தீவிர விசாரணைக்குப் பின் கன்னியாகுமரியில் கிறிஸ்துவ மதமாற்றத்தின் காரணமாகத்தான், சமூக அமைதி குலைந்திருக்கிறது என்ற உண்மையை, ஆதாரப்பூர்வமாக விளக்கிக் கூறியிருந்தார் நீதிபதி வேணுகோபால் அவர்கள். இதுபோன்று சமூக அமைதி குலையாமல் இருக்க வேண்டுமானால், கலவரங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், வேணுகோபால் அவர்கள் பரிந்துரைத்தது இதுதான்; அதாவது 'ஆசை காட்டி, மோசம் செய்து, கட்டாயப்படுத்தி, செய்யப்படும் மதமாற்றங்களைத் தடைசெய்ய சட்டம் கொண்டுவரவேண்டும்' - என்பதுதான். இந்த கமிஷனின் அறிக்கை சவர்ப்பிக்கப்பட்டது 1984 இல். அதாவது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே. எப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, அந்த சட்டத்தின் மாதிரி நகல் ஒன்றையே அந்த அறிக்கையுடன் சேர்த்து சமர்ப்பித்திருந்தார் நீதிபதி வேணுகோபால் அவர்கள்.

ஆக, ஜெயலலிதா கொண்டு வந்துள்ள கட்டாய மத மாற்றத்தடை சட்டம் ஹிந்துக்துவத்தை அடிப்படையாகக் கொண்டதோ, அல்லது ஹிந்துட்துவத்தினால் உந்தப்பட்ட சட்டமோ அல்ல. ஒரு நாத்திகரால், அதுவும் திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய அறிவுஜீவியால், ஈ.வெ.ரா. பெரியாரின் சீடர் ஒருவரால் செய்யப்பட்ட நீதி விசாரணையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட சட்டம்தான் இது. ஆக இந்த சட்டம்


ஹிந்துத்துவ சட்டம் அல்ல; இது திராவிட, அதுவும் நாத்திக திராவிட, சட்டம்தான்.

எம்.ஜி.ஆர் மண்டைக்காடு கலவர கமிஷனை நியமித்து, அதன் அறிக்கை வந்தவுடன் அதை கிடப்பில் போடவில்லை. அதை நடை முறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அதாவது அதில் கூறியிருந்தபடி மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்தார். இது பற்றி எனக்குத் தெரிந்த விவரங்களை இங்குக் கூறலாம் என்று நினைக்கிறேன்.

வேணுகோபால் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, காஞ்சிபுரத்திலிருந்து என்னுடைய நண்பர்களும், காஞ்சுப் பெரியவரிடத்தில் தீவிர பக்தி கொந்த ராதாகிருஷ்ணன் மற்றும் வைத்தியநாதன் - இருவரும் என்னை வந்து பார்த்து, வேணுகோபால் கமிஷன் அறிக்கையில் மதமாற்றத் தடைச்சட்டம் கொந்து வருமாறு பரிந்துரைத்திருந்தபடி, எம்.ஜி.ஆர். 'அவர்கள் சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும்; மேலும் எம்.ஜி.ஆர்., காஞ்சிப் பெரியவரிடம் அதுபற்றி ஆலோசனையும், ஆசியும் கேட்டிருப்பதாகவும் கூரினார்கள். அந்த அடிப்படையில் அந்த சட்டம் எப்படி அமையவேண்டும் என்பது பற்ரி ஒரு விளக்கம் எழுதி, அதை எடுத்துக் கொண்டு பெரியவர் என்னை காஞ்சிபுரம் அன்றே வரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் - அவர்கள் கூறினார்கள். தவிரவும் பெரியவர் என்னை 'நியோகி கமிஷன்' அறிக்கையையும் எடுத்துக் கொண்டு வருமாறு கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

'நியோகி கமிஷன்' அறிக்கையின் ஒரு நகல் என்னிடம் இருந்தது. வெணுகோபால் கமிஷன் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருந்தது போல, மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில அரசாங்கத்தால் கிறிஸ்துவ மிஷனரிகளின் மதமாற்றச் செயல்களைப் பற்ரி ஆய்வு நடத்த நியமிக்கப்பட்ட கமிஷன் தான் 'நியோகி கமிஷன்'. அந்த கமிஷன் பற்றி விளக்கமாக பின்பு பார்க்கலாம். முக்கியமானது என்னவென்றால், நியோகி கமிஷனும் வேணுகோபால் கமிஷன் போல தவறான மதமாற்றங்களைத் தடை செய்ய சட்டம் தேவை என்று பரிந்துடைத்திருந்தது.

நம் நாட்டு வடகிழக்குப் பகுதியில் மதமாற்றத்தால் ஏற்பட்டு வரும் தேச விரோத இயகங்களைப் பற்றி படிக்கும் போது 'நியோகி கமிஷன்' என்ற ஒரு ஆய்வுக் கமிஷன் நியமிக்கப்பட்டு, அந்த கமிஷன் 1956 - லெயே தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது எனக்குத் தெரிய வந்தது. அப்போது மிகவும் சிரமம்பட்டு அந்த அறிக்கையின் நகலைத் தேடிப் பிடித்தேன். ஆனால் என்னிடமே 'நியோகி கமிஷன்' அறிக்கை இருந்தது எனக்கே மறந்து போய்விட்டது.

ஆனால் பெரியவருக்கு எப்படி தெரிந்தது, அவர் 'நியோகி கமிஷன் ரிப்போர்ட் பற்ரி என்னிடம் கேட்கச் சொன்னபிறகுதான், எனக்கே என்னிடம் அந்த ரிப்போர்ட் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. பெரியவர் கேட்டது எனக்கு ஆச்சரியம் தான். சில மணி நேரங்களில் நியோகி கமிஷன் ரிப்போர்ட் தவிர வேணுகோபால் கமிஷன் ரிப்போர்ட் - இரண்டிலும் எந்த அடிப்படையில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்களோ, அந்த அடிப்படையில் என்னுடைய விளக்கத்தையும் எழுதிக் கொண்டு, நண்பர்களுடன் இரவு 7.30 மணிக்குக் காஞ்சிபுரம் சென்றேன்.

பெரியவர் நான் கொண்டு போயிருந்த நியோகி கமிஷன் அறிக்கை, வேணுகோபால் கமிஷன் அரிக்கை மற்றும் விளக்கம் எல்லாவற்றையும் வரி வரியாகப் படித்தார்.

(அவர் எப்படிப் படித்தார். அங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் இந்த கட்டுரைக்கு அவசியமில்லை. என்றாலும் என்னுடைய அனுபவத்தை இங்கு எழுதுவது சரி என்றே நினைக்கிறேன். அன்று முழுவதும் அங்கு மின்சாரம் இல்லை. அவர் படுத்திருந்தபடியே, ஒரு கையை சட்டம் போல உயர்த்தி புத்தகத்தை வைத்துக் கொண்டு, இன்னொரு கையிலிருந்து டார்ச் லைட்டை கீழேயிருந்து அந்த புத்தகத்தில் மேல் அடித்து, நான் கொண்டு போயிருந்த எல்லாவற்றையும் படித்து முடித்தார்.

முடிக்கும்போது மணி காலை 3.30. படிக்க ஆரம்பித்தது இரவு 8.30. எங்கள் எல்லோரையும் கொசு கடித்து, நாங்கள் எல்லோரும் சொரிந்துகொண்டு, எங்கள் உடலெல்லாம் அரிப்பும் எரிச்சலும், ஆனால் அவரை கொசு ஒன்றும் செய்யவில்லை. அவரது படிப்பு எதனாலும் தடைப்படவுமில்லை. அந்த வயதில் அவருக்கு அப்போது 90 - அவர் படுத்து எப்படி படித்தாரோ அப்படி படுத்துக் கொண்டு நான் பல முறை படிக்க முயற்சி செய்தபோது என்னால் 1/2 மணி நேரத்திற்கு மேல் கையை நேராக மேலே வைத்துக் கொண்டு படிக்க முடியவில்லை. இந்த அனுபவத்தை நான் பலமுறை நினத்துப் பார்த்திருக்கிறேன். அனுபவத்தை விட்டு விலகி மீண்டும் என்ன நடந்தது என்று பார்ப்போம். )

'நியோகி கமிஷன் மற்றும் வேணுகோபல் கமிஷன் அறிக்கைகளின் ஆதாரத்தில், நான் தயார் செய்த விளக்கம் அம்.ஜி.ஆருக்கு அனுப்பப்பட்டது என்று பின்பு நான் கேள்விப்பட்டேன். ஆனால் எம்.ஜ்.ஆர். அந்த மதமாற்ற சட்டத்தை உடனே கொண்டு வரவில்லை. நிறுத்தி வைத்தார். ஏன் என்பதற்கு நான் கேள்விப்பட்ட விளக்கம் இதுதான். மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியாக அ.இ.அ.தி.மு.க இருந்தது. 'காங்கிரஸ் அரசு இதுப்போல் சட்டம் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த சட்டம் மொண்டு வரும் திட்டத்தைத் தள்ளி போட்டார்' என்பது விபரம் அறிந்தவர்கள் பலருக்கும் தெரியும். அப்போது எம்.ஜ்.ஆர். போட்ட திட்டம்தான், இப்போது ஜெயலலிதா மூலமாக சட்டமாக வந்திருக்கிறது.

ஏன் அந்த சட்டம் அப்போது அவவில்லை என்பது முக்கியமில்லை. அப்போதே வரவேண்டிய சட்டம் இது என்பதுதான் முக்கியம். இந்த சட்டம் கொந்து வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரே முடிவு செய்து செயல்பட்டார் என்மது அதைவிட முக்கியம். இவை எல்லாவற்றையும் விட ஈ.வெ.ரா. பெரியாரின் சீடரும், திராவிட அறிவு ஜீவியுமான நீதிபதி வேணுகோபால் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது இந்தச் சட்டம். ஆகவே, இந்த சட்டம் பற்றி இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகளெல்லாம் அர்த்தமற்றவை, பொய்யானவை என்பதுதான் உண்மை.

இந்த சட்டம் பற்றியும், அதன் அவசியத்தைப் பற்றியும் இதுபோல தடைச்சட்டங்கள் வேறு எங்காவது இருக்கின்றனவா என்பது பற்றியும், இதுபோன்ற தடை சட்டங்களைப் பற்ரி நீதிமன்றங்கள் என்ன தீர்ப்பளித்துள்ளன என்பது பற்றியும் பார்ப்போம்.

'மத சுதந்திரம் சுதந்திரம் அல்ல' மதம் மாற்றும் - சுப்ரீம் கோர்ட்


ஜெயலலிதா கொண்டு வந்துள்ள சட்டம், அவர் ஒருவரும் தானாக மதம் மாறுவதைத் தடுக்கவில்லை. தடை செய்யவில்லை. ஆசைகாட்டி, மோசம் செய்து, கட்டாயப்படுத்தி செய்யப்படும் மதமாற்றத்தைத்தான் அது தடை செய்கிறது என்று பார்த்தோம். தவிர, இந்த சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இருந்தது - என்பது நீதி விசாரசணையின் மூலமாக அரியப்பட்ட உண்மை. ஆனாலும் அரசியல் காரணங்களுக்காக, என்.ஜ்.ஆர். தான் திட்டமிட்டபடி இந்த சட்டத்தை கொண்டுவராமல் தள்ளிப் போட்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த சட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், இதற்கு பிள்ளையார் சுழி போட்டது - சங்கராச்சாரியார் இல்லை, ஹிந்துத்துவம் இல்லை. திராவிட பாரம்பரியத்தில் ஊறி வளர்ந்த நீதிபதி வேணுகோபால் அவர்களால் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவு என்றும் பார்த்தோம். உண்மை இப்படி இருந்த போதும், கிறிஸ்துவ மதகுருமார்களும், போலி மதச்சார்பற்ற கட்சிகளும், தலைவர்களும் மற்றும், 'ஹிந்து' போன்ற பத்திரிகைகளும் கங்கணம் கட்டிக்கொந்து, கூட்டாக இந்த உண்மைகளை எல்லாம் மறந்து அல்லது மறைத்து, பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதனால், இந்த சட்டத்தின் அவசியம், இதன் பின்னனி - ஆகியவை பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதா கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் நமது நாட்டில் மூன்று மாநிலங்களிலே 30, 40 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அமலாக்கப்பட்டு, அதன் மூலம் அந்த மாநிலங்களில் கட்டாய மதமாற்றங்கள் தடை செய்யப்பட்டு வருகிறது. மதமாற்றத் தடுப்புச் சட்டம் மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொண்டு வரப்பட்டது.

முதலில் இந்த சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய பிரதேச அரசு, ஏதோ திடீரென்று ஒருநாள் காலையில் விழித்துக் கொந்து இந்த சட்டத்தைக் கொண்டு வந்துவிடவில்லை. விவரம் தெரியாத ஆதிவாசி எனப்படும் வனவாசி ஜாதிகல் அதிகமாக இருக்கிற மத்திய பிரதேசத்தில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பாதிரிகள், அவர்களை மோசடி செய்து மதம் மாற்றுவதாக பல செய்திகள் வந்ததால், அரசு ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து, கிறிச்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தது.

டாக்டர் பவானி சங்கர் நியோகி என்ற மூத்த நீதிமதி தலைமையில் அமைக்கப்பட்ட அந்த கமிஷனுக்கு நியோகி உள்பட மொத்தம் ஆறு உறுப்பினர்கள். அதில் வார்தாவில் கல்லூரியில் பேராசிரியராக இருந்த எஸ்.கே. ஜார்ஜ் என்னும் காந்தியவாதியான கிறிஸ்துவரும் ஒரு உறுப்பினர். அந்த கமிஷன் 14 மாவட்டங்களுக்கும் 77 இடங்களுக்கும் செய்று ஆய்வு நடத்தியது; 770 கிராமங்களிலிருந்து வந்த 11, 360 பேரைச் சந்தித்ட்தது; தவிர, 375 நிறுவனங்களிடமிருந்தும், தனி நபர்களிடமிருந்தும், வந்த விளக்கங்களையும், விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொண்டு விசாரணை நடத்தியது.

அந்த 375 நிறுவனங்களுக்கும், மற்றும் தனி நபர்களுக்கும் கமிஷன் தன்னுடைய கேள்விகளை அனுப்பி விடைகளைப் பெற்றது - இதில் 55 கிறிஸ்துவ நிறுவனங்களும் அடங்கும். இவ்வளவு விரிவான விசாரணைக்குப் பின் 1956-ஆம் ஆண்டு நியோகி கமிஷன், தன்னுடைய விசாரணை அறிக்கையை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்தது. இது ஒரு பிரம்மாண்டமான, உண்மையான, நேர்மையான முயற்சி. நியோகி கமிஷனின் பரிந்துரைக்கப்பட்ட முடிவுகள் பல. அதில் உதாரணத்திற்குச் சிலவற்றை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

மதமாற்றத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பண உதவி கிடைக்கிறது. கிறிஸ்துவ நிறுவனங்கள் மத உரிமையைப் பயன்படுத்தி ஏராளமான, ஒன்ருமறியாத மக்களை ஏமாற்றி, ஆசை காட்டி மதம் மாற்றுகின்றன. அதாவது மதம் மாறினால் வேலை; மதம் மாறினால் மாணவர்களுக்கு இலவச ஹாஸ்டல், புத்தகம், படிப்பு, மருத்துவ உதவி .. என்கிற அடிப்படையில் மதம் மாற்றப்படுகிறார்கள்.

இந்த மதமாற்றம், நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் இல்லாமல், இதற்கு அரசியல் நோக்கமும் இருக்கிறது. நம் நாட்டு கிறிச்துவ நிறுவனங்கள் அனைத்துமே, அன்னிய நாட்டுச் சர்ச் ஆணைப்படிதான் நடக்கின்றன.

இதற்கெல்லாம் ஆதாரம் காட்டிம் இது போன்ரு மோசடி செய்து, கட்டாய மதமாற்ரம் செய்வதைச் சட்டப்படி தடை செய்யவேண்டும் என்பதையும் 'ந்யோகி கமிஷன்' பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் 1968 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசு, இப்போது ஜெயலலிதா கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்ற சட்டம் போல ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. (ஏன் மத்திய பிரதேசம் 11 ஆண்டுகளுக்கு ஒன்ரும் செய்யவில்லை? ஒரே காரணம் 1964 வரை நேரு அவர்களின் ஆட்சி மத்தியில் இருந்ததுதான்) ஆனால் அதற்கு முன்னாலேயே கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது - ஒரிஸ்ஸா மாநிலம்தான். அது 1967 லேயே இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த இரண்டு சட்டங்களையும் எதிர்த்து கிறிஸ்துவ பாதிரிகள் சுப்ரீம் கோட்டில் வழக்கு தொடர்ந்ததி, 1977ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இரண்டு சட்டங்களும் 'அரசியல் சாஸானப்படி சரியானதே' என்று தீர்ப்பு அளித்து, 'மத சுதந்திரம் என்பது மதம் மாற்றும் சுதந்திரம் அல்ல' என்று பட்டவர்த்தனமாகக் கூறியது. 'கட்டாய மதமாற்றம் அல்லது ஆசை காட்டி, மோசம் செய்து மதம் மாற்றுவது சமூக அளவில் அமைதியைக் குலைக்கும். அதனால் அது போன்ற மதமாற்றங்களைத் தடை செய்வதற்கான சட்டம் இருக்கவேண்டும்' என்று தீர்ப்பு கூறியது உச்ச நீதிமன்றம், அதன் பிறகு அருணாச்சலப் பிரதேசத்திலும் இது போன்ற கட்டாய மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களின் மிக முக்கியமான அம்சம், யார் யாரெல்லாம் மதம் மாற்றப்படுகிறார்களோ, அவர்கள் மதம் மாறியது பற்றிய விவரம் பதிவு செய்யப்படவேண்டும் என்பதுதான். இபப்டிப் பதிவு செய்வதன் அவசியத்தை, ஒரிஸ்ஸாவில் 'ஸ்டெயின்ஸ்' என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்துவ மதபோதகர் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க அமைக்கப்பட்ட வாத்வா கமிஷன் எடுத்துக்கூறியது. 'ஒரிஸ்ஸாவில்' நடந்த பல மதமாற்றங்களைப் பதிவு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் நிலைமை மோசமாகியிருந்திருக்காது' என்பது கமிஷனின் முடிவு. அதாவது கட்டாய மதமாற்றாத் தடை செய்யும் சட்டத்தை, சரி வர நிர்வாகம் செய்யவில்லை என்பதுதான் இதன் விளக்கம். இதிலிருந்து கட்டாய மதமாற்றம், எப்படி தடுக்கப்படவேண்டிய ஒன்று என்பது புரியும். தமிழ்நாட்டில் இப்போது ஜெயலலிதா கொண்டு வந்துள்ள சட்டத்திலும், மத மாற்றங்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் - அதே காரணங்களுக்காகத்தான் - ஜெயலலிதா தமிழ்நாட்டில் இந்தக் கட்டாய மதமாற்ற சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். எந்தப் பின்னணியில் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஒன்று - இது போல சட்டங்கள் பிற மாநிலங்களீல் அமலில் இருக்கின்றன. இரண்டு - அந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டங்களை உச்ச நீதி மன்றம் நியாயமானவையே என்று தீர்ப்பு கூறியுள்ளது. மூன்று - தமிழ்நாட்டிலும் இதுபோல சட்டம் வரவேண்டும் என்பது நீதிபதி வேணுகோபால் கமிஷன், எம்.ஜி.ஆர் காலத்திலேயே பரிந்துரை செய்து, அது நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆரே இதுபோல் சட்டம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து, அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைத்தார். அதைத்தான் இப்போது ஜெயலலிதா அமல்படுத்தியிருக்கிறார். இதுதான் உண்மையான நிலை.

ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள இந்த கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம், ஏதோ தமிழ்நாட்டில் மாத்திரம் வந்துவிட்டது போலவும்; அதுவும் ஹிந்துக்களுக்குச் சாதகமாகவும், கிறிஸ்துவர்களுக்கு பாதகமான எண்ணத்தோடும் இது கொண்டு வரப்பட்டது போலவும்; இது ஏதோ அரசியல் சட்டப்படி தவறான சட்டம் என்பது போலவும்; இது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு விரோதமான செயல் போலவும்; கிறிஸ்துவ மதகுருமார்களிலிருந்து போலி மதச்சார்பின்மை பேசுகிற அரசியல் குறும்பர்கள் வரை எல்லோரும் உரத்த குரலில் சொல்லும் பொய்யைத் தவிர, வேறு எதுவுமே நம் காதுகளில் விழவில்லை.

எங்கு பார்த்தாலும் ஒரே சத்தம். எது போன்ற சத்தங்கள்? 'மிருகத்தனமான சட்டம்'; 'சிறுபான்மையினரை நசுக்கும் சட்டம்'; 'இதை எதிர்க்க பள்ளிக்கூடங்களை மூடுவோம்'; 'மாணவர்கள் தவிக்கட்டும்' - யார் இவ்வாறு பேசுவது? ஏதோ தெருவில் போகும் பொறுப்பில்லாத மக்கள் இல்லை. கிறிஸ்துவ மதகுருமார்கள்; ஆன்மிகவாதிகள். உண்மை பேசவேண்டிய இவர்கள் ஏன் இப்படி பொய்க்கூச்சல் போடவேண்டும்? பதுங்கிக் கிடக்கும் காரணத்தைப் பார்ப்போமா?

அப்படிப் பார்க்கும்போது இயேசு கிறிஸ்துவையும், கிறிஸ்துவ மத நிறுவனங்களான சர்ச்சுகளையும் ஒன்றாகச் சேர்க்காமல், பிரித்துப் பார்க்கவேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கும், கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. பொதிந்து கிடக்கும் உண்மையை வெளியே கொண்டு வர கிறிஸ்து மத நிறுவனங்களையும், கிறிஸ்துவ குருமார்களையும், இயேசு கிறிஸ்துவிடமிருந்து சிறிது பிரித்து அவர்களின் உண்மையான நோக்கத்தையும் விஸ்வரூபத்தையும் பார்க்கவேண்டும். அப்போது தெரியும் ஆசைகாட்டி மோசம் செய்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்கிற நியாயமான ஒரு சட்டத்தைக்கூட அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று!

அமைதியை நாடுபவர்கள் போலவும், மற்ற மதங்களின் பேரில் விரோதம் இல்லாமல் செயல்படுபவர்கள் போலவும் காட்டிக்கொண்டு மதமாற்றம் செய்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டு வேலை செய்யும் பல கிறிஸ்துவ மத குருமார்கள் போதகர்கள், நிறுவனங்களைப் பற்றி ஹிந்துக்களும், - ஏன் கிறிஸ்துவர்களும் கூட - தெரிந்துகொள்ளவேண்டும். இது ஹிந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லது. இதைப் பற்றி இனி பார்ப்போம்.


மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்...

ஒரு வேண்டுகோள், இதைப் படிக்கும்போது கிறிஸ்த்ஹுவ மத நம்பிக்கைகளை நான் விமர்சனம் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கிறதோ, எந்த நம்பிக்கைகள் மற்ற மதத்தினருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கும் கிடையே பிரச்சினைகளை உருவாக்குகின்றனவோ, அவைகளைப் பறித்தான் இங்கு குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு மதத்திற்கும் நம்பிக்கை மாத்திரம் உண்டு. ஆனால் அது மற்ற மதங்களைப் பாதிக்கக்கூடாது அவ்வளவுதான்.

ஜெயலலிதா கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் ஆசை காட்டி, மோசம் செய்து, மிரட்டி எவரையும் மதமாற்றம் செய்யக்கூடாது என்றுதானே கூறுகிறது. இது எல்லா மதத்திற்கும் நல்லதுதானே! எப்படி எல்லா மதத்தினரையும் ஒரே மாதிரி பாதிக்கும் ஒரு சட்டத்தைப் பற்றி, எதிரும் புதிருமான கருத்துகள் நிலவுகின்றன - அதுவும் ஆன்மீக வாதிகளிடையே அரசியல்வாதிகள் கூட ஒருவர் ஆதரித்தால், மற்றவர் எதிர்க்கவேண்டும் என்று வேண்டுமென்றே எதிர்க்கலாம். ஆனால் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கவேண்டும்?

இந்த கேள்விகளுக்கு சரியான விடை வேண்டுமானால், இந்தப் பிரச்சினையைத் தெளிவாக அலசவேண்டுமானால், ஒரு நிபந்தனை, கிறிஸ்துவ ஸ்தாபனங்களைப் பற்றிப் பொதுவாக இருக்கும் ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்டு - அவர்கள் செய்யும் சேவை என்னும் போர்வையை நீக்கிவிட்டு - உலக கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களின் ஆதார நம்பிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால் தான், ஏன் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்திற்கு நம்நாட்டு கிறிஸ்துவ அமைப்புகள் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்பது புரியும்.

மேலும் நடைமுறையில் மாத்திரம் இல்லாமல், நம்பிக்கை அடிப்படையிலும் கிறிஸ்துவ மதம், ஹிந்து மதத்தை எந்த கண்ணோட்டத்தோடு பார்க்கிறது, அதற்கு மாறாக ஹிந்து மதம் கிறிஸ்துவ மதத்தை எப்படிப் பார்க்கிறது - என்பதனையும் பட்டவர்த்தனமாக எடுத்துச் செல்லவேண்டும். மத மாற்றம் செய்யும் அகில உலக கிறிச்துவ நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன; அவர்கள் மதத்தை எப்படி வியாபாரப் பொருளாக்கி, மதங்களின் உறவுகளை சந்தைக் கலாசாரமாக்கி தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்; எப்படி இந்த குறிக்கோளுக்கு அவர்கள் எது செய்தாலும் - பள்ளிக்கூடமோ ஆஸ்பத்திரியோ குஷ்ட ரோக நிவாரணமோ - அது பக்க வாத்யம்தான் என்பது புரியும்.

அது மாத்திரம் அல்ல, கிறிஸ்துவ ஸ்தாபனங்களுக்கு உலக அளவிலான திட்டங்கள், ஒவ்வொரு நாட்டிலுள்ள கிறிஸ்துவ ஸ்தாபனங்களும், உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் வரையறையில்தான் இயங்கும். அது தானாக ஒன்றும் செய்யமுடியாது. இந்தில் எந்தத் தனி நாட்டின் கிறிஸ்துவ நிறுவனங்களுக்கும் சுதந்திரம் கிடையாது.

எல்லா சர்சுகளும், உலக சர்ச் அமைப்புக்குக் கீழேதான். உலக சர்ச்சுகளின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டுத்தான் நம் நாட்டு சர்ச்சுகள், (ஆர்ச் பிஷப்புகள்) செயல்படுகின்றன. உலக சர்ச்சுகள் மதமாற்றம் செய்யவேண்டிய கட்டாயத்தினால், சந்தைக் கலாசாரத்தை மதத்துடன் இணைத்துவிட்டார்கள். இந்த மதச்சந்தை வியாபாரத்தின் தாத்பர்யத்தையும், விளைவையும் பற்றித் தனியாக விளக்கி எழுதியிருக்கிறேன். இந்த மத சந்தைக் கலாசாரத்திற்கு ஆரம்பக் காரணம், மற்ற மதத்தலைவர்களை எப்படியாவது மதம் மாறாச் செய்து, தன் மதத்தில் சேர்த்துவிட வேண்டுமென்கிற கட்டாய தர்மம் கிறிஸ்துவ மத நம்பிக்கையில் இருப்பதுதான். இதுதான் இப்போது மதங்களூக்கிடையே தீவிர போட்டியை உருவாக்கியிருக்கிறது.

இந்தப் போட்டியை சர்வதேச அளவில் முதலில் ஆரம்பித்து, மிகவும் வெற்றிகரமாக நடத்திவருவது கிறிஸ்த்ஹுவ மத ஸ்தாபனங்கள். அவர்கள் ஏன் கிறிஸ்துவர்களாக அல்லாதவர்களை கிறிஸ்துவர்களாக மாற்றுவதை ஒரு தர்மமாக, கடமையாக நினைக்கிறார்கள்? இதற்கான காரணங்கள் என்ன? இதை அலசிப்பார்த்தால் நம்முடைய பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். இரண்டு காரணங்களால் பிற மதத்தவர்களை கிறிஸ்த்ஹுவர்களாக மாற்றவேண்டும் என்கிற கட்டாயம், மத ரீதியாக கிறிஸ்துவ மத ஸ்தபானங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

முதல் காரணம்: கிறிஸ்த்துவ மதத்தின் மாற்ற முடியாத அடிப்படையான நம்பிக்கை, கிறிஸ்துவ மதம் மாத்திரம்தான் உண்மையான் மதம், அது ஒன்றுதான் வழி; மற்ற மதங்கள் எல்லாம் பொய்; அவை சாத்தானின் சதி - என்பதுதான்.

கிறிஸ்துவ மதத்தின் மூலமாக மனிதன் மோட்சம் அடைய முடியும். வேறு மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் சாத்தானின் கும்பல்கள். அவர்களுடன் உறவோ, பழக்கமோ கூடாது. மேலும் இந்த ஒரே உண்மையான மதத்தை உலகம் முழுவதும் பரப்ப, எல்லோரையும் கிறிஸ்துவர்களாக மாற்ற, கிறிஸ்துவ மதம், கிறிஸ்துவப் பாதிரிகளுக்குக் கட்டளையிடுகிறது. இந்த அடிப்படையான நம்பிக்கையைக் காரணம் காட்டித்தான் Encyclopaedia of Britannica என்கிற அறிவுக் களஞ்சியமான தொகுப்பு, கிறிஸ்துவ மதத்தை 'சகிப்புத் தன்மையில்லாத' மதம் என்று வர்ணிக்கிறது. 'இந்தத் தொகுப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், இது கிறிஸ்த்ஹுவ அறிஞர்களால் தொகுக்கப்பட்டது. அதனால், இதுபற்றிக் குற்றம், குறை கூற முடியாது.ல் உன்னுடைய மதம் மாத்திரம்தான் உண்மை. மற்றதெல்லாம் பொய் என்கிற நம்பிக்கை, அந்த உண்மையான மதம் எங்கும் பரவ வேண்டுமென்றால், பொய்யான மதங்கள் அழியவேண்டும். இந்த அடிப்படையிலே, கிரேக்க, ரோமானிய மதங்களிலிருந்து சாமானியமான பழங்குடி மதங்கள், ஐரோப்பா வடக்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, அப்பிரிக்கா போன்ற இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டன. இந்த அழிவுகள் பற்றி நூற்றுக்கணக்கான ஆய்வுகளும், புத்தகங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்குக் காரணம், மற்ற மதங்களெல்லாம் பயனற்ற மதங்கள் என்பது கிறிஸ்த்ஹுவ போதகர்களின் நம்பிக்கை. (இந்த அழிவுகள் பற்றி மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் Encyclopedia of Britannica-வின் 4வது தொகுப்பில் பல இடங்களில் குறிப்பாக பக்கங்கள் 491-492ல் காணலாம்.)

இரண்டாவது காரணம்: கிறிஸ்துவ மதத்தில் மற்றொரு நம்பிக்கை இயேசு கிறிஸ்து மீண்டும் உலகுக்கு வருவார், வந்து 1000 ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்பது. அதன் பிறகு பிரளயம் வரும். அப்போது புதைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள் எல்லாம் உயிர் பெற்று வருவார்கள், யார் யார் நல்லது செய்திருக்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கும் மற்றவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். (ஆனால் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்கள் நல்லது செய்தாலும் நரகத்திற்குத்தான் செல்வார்கள், இது காந்திக்கும் பொருந்தும்.) ஆனால் இவ்வளவும் நடக்க, இயேசு கிறிஸ்த்ஹு உலகிற்கு திரும்பவும் வந்து ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டும். (இதைத்தான் Millennium என்று கூறுகிறார்கள்.)

ஆனால் இயேசு எப்போது திரும்ப வருவார்? எப்போது உலகம் முழுவதும் பரவி கிறிஸ்துவ மதம் மாத்திரம் நிலவுகிறதோ அப்போதுதான் திரும்ப வருவார். சாத்தான் நம்பிக்கைகள் உலகின் எந்தப் பாகத்திலிருந்தாலும் அவை இருக்கும் வரையில் இயேசு கிறிஸ்து திரும்ப வரமாட்டார் என்பதுதான் அந்த நம்பிக்கை. இந்த நம்பிக்கையை Eschatological expectation என்று கிறிஸ்துவ மறையில் கூறுவார்கள். இப்போது புரிகிறதா மதமாற்றம் செய்வதில் கிறிஸ்துவ ஸ்தாபனங்களும் பாதிரிகளும் ஏன் புரியாததொரு வேகங்காட்டுகிறார்கள் என்று? இயேசுவை உயிருடன் பார்க்கவேண்டுமென்கிற ஆவல், மற்ற மதத்தவர்கள் எல்லோரையும் கிறிஸ்துவர்களாக மாற்ற வேண்டும் என்கிற கட்டாயமாக மாறி, அதுவே மதமாற்ற வெறியாக உருவெடுக்கிறது.

இந்த Eschatological நம்பிக்கை, கிறிஸ்துவ மதத்தை, மதமாற்றத்தின் மூலமாக, காட்டுத் தீ போல உலகில் எப்படி பரவ வைத்தது என்பது, அதே Encyclopaediaவில் விவரமாக எழுதப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மற்ற மதங்கள் எல்லாம் இயேசு உலகில் வருவதற்குத் தடங்கல்கள் என்கிறா Eschatological நம்பிக்கைதான் கட்டாய மதமாற்றத்திற்கு உந்துதலாக இருக்கிறது. எப்படி இந்த Eschatological நம்பிக்கை, வெறியாக மாறி, கிறிஸ்துவ மதம் பரவ உதவியிருக்கிறது என்பதைக் காட்ட Encyclopaedia தொகுப்பில் கூறப்பட்டுள்ள சரித்திர பூர்வமான ஒரு நிகழ்ச்சியை - அதுவும் நம் நாடு சம்பந்தப்பட்டது - இங்கு நினைவு கூரலாம் என நினைக்கிறேன்.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று வெள்ளைக்காரர்கள் நமக்கு எழுதி வைத்ததை, இதுவரை வரலாற்றுப் புத்தகத்தில் நாம்படித்து வருகிறோம். ஆனால், கொலம்பஸ் அமெரிக்காவைத் தேடிப் போகவில்லை. கப்பலில் ஏறிய அவர் பாரத நாட்டுக்குச் செல்லவேண்டுமென்றுதான் புறப்பட்டார். ஏன் அவர் பாரத நாட்டுக்குப் புறப்பட்டார்? இயேசு கிறிஸ்து உலகுக்கு மறுபடியும் வரவேண்டிய தருணம் வந்துவிட்டதாக கொலம்பஸ் நம்பினார். ஆனால் ஒரு தடங்கல் இருப்பதால், இயேசு வரமுடியவில்லை என்றும வர் நம்பினார். அது என்ன தடங்கல்? பாரத நாட்டில் சாத்தான் (ஹிந்து மதம்) குடி கொண்டு, இயேசு வருகையைத் தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான். அதனால் எப்படியாவது (வாஸ்கோடகாமா சென்ற நீண்ட வழியில் செல்ல நேரமில்லாததால்) ஒரு குறுக்கு வழியில் பாரத தேசம் சென்று, இயேசு வருவதற்கு தடங்கலாக இருக்கிற சாதாரண ஹிந்து மதத்தை, கிறிஸ்துவ வழிமுறைகளால் விலக்கிவிடவேண்டும் என்கிற வெறியிலேதான், அவர் பாரதநாடு செல்லக் கீளம்பி, அமெரிக்காவில் போய் இறங்கினார். (இது பற்றிEncyclopacdia-வில் தொகுப்பு 4-இல் பக்கம் 504-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.)

அதையே இந்தியா என்று நம்பி, அங்கிருக்கும் மக்களை இந்தியர்கள் என்று நினைத்து, அவர்களை மிருகங்களை வேட்டையாடுவது போல தீர்த்துக்கட்டினார். அப்போது கிறிஸ்துவ நிறுவனங்கள் இந்த வழிமுறையைக் கையாண்டனர். அவர் துவக்கி வைத்த இந்தப் பணி 2 நூற்றாண்டுகளிலே பூர்த்தியடைந்து வடக்கு, தெற்கு அமெரிக்காவிலிருந்தே, பழங்குடியினர் முழுமையாக தீர்த்துக்கட்டப்பட்டனர். கிட்டத்தட்ட 11கோடி பேரிலிருந்து 20கோடி பேர் வரை தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்பது இப்போதைய கணிப்புகள். மயன் கலாச்சாரம், செவ்விந்தியர்கள் கலாச்சாரம் எல்லாம் இன்று உயிருடன் இல்லை. அவைகளை மியூஸியத்தில்தான் பார்க்க வேண்டும்.

இது போன்ற ஒரு கொடுமை உலக வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. கி.பி 1500-ஆம் ஆண்டு அந்த பழங்குடியினரின் எண்ணிக்கை 13.5 கோடி என்று கணிக்கப்பட்டது - கிட்டத்தட்ட அன்றைய பாரதத்தின் (பாகிஸ்தான், வங்காளதேசம் உட்பட) ஜனத்தொகையும் அந்த அளவுதான். நாம் இப்போது கிட்டத்தட்ட 125கோடி. ஆனால் அமெரிக்கப் பழங்குடியினரின் எண்ணிக்கை 50,000-க்குக் கீழே. அதாவது 125கோடியாகி இருக்க வேண்டியவர்கள், இப்போது 50,000 பேர் மட்டும்தான் உள்ளனர். இந்த விவரங்கள் American Indiao Holocaust and Survival என்கிற புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. ஆனாலும் இதை அதிகம் பேருக்குத் தெரியாமலேயே மறைத்து வைத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001-அன்று நடந்த பயங்கரத்தைப் பற்றி கிளின்டன் அவர்கள் பேசும்போது, "நாம் முன்னால் செய்த கொடுமையின் கர்மம்தான் நம்மைத் தாக்குகிறது போல இருக்கிறது." என்று கூறினார். இந்தக் கொடுமைக்கெல்லாம் அடிப்படையான காரணம், கிறிஸ்துவ நம்பிக்கையில் மற்ற மதங்கள் தேவையற்றவை, சாத்தானின் விஷமங்கள் என்பது மாத்திரம் இல்லாமல்-அவை இயேசுவின் வருகைக்குத் தடங்கல்கள் என்ற தீவிர நம்பிக்கைதான். மதமாற்றத்தின் அடிப்படைக் காரணமும் இதுதான்.

இந்த தீவிரமான நம்பிக்கை ஏதோ 400 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருக்கும் தவறான எண்ணம்; அது இப்போது இல்லை: என்று நினைக்க வேண்டாம். 20-ஆம் நூற்றாண்டிலே கூட இதே தீவிரமான நம்பிக்கைதான் கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் பலவற்றையும் உந்துகிறது - என்று கூறுகிறது. Encyclopacdia தொகுப்பு (P-504, Vol-iv).
இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் - என்ன செய்தும் மதம் மாற்றலாம், தவறு இல்லை. ஏனென்றால் மற்ற மதங்கள் எல்லாம் சாத்தான் மதங்கள்தானே; அதற்கு இந்தச் சட்டம் தடங்கல். இதுது¡ன் உண்மையான காரணம்- ஜெயலலிதா கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்ப்பதற்கு! மதச்சார்பற்ற தலைவர்களும், கட்சிகளும் இந்த உண்மைகளை வெளிவர விடமாட்டார்கள். ஆனால் வெளிவராத குற்றத்தினால் உண்மையை மறைக்க முடியாது.

அடுத்ததாக மதமாற்றம் செய்ய என்னென்ன மாதிரியான உத்திகளை, கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் கையாளுகின்றன என்று பார்ப்போம்.

இது வியாபார தந்திரம்தானே

ஆன்மீக விஷயமான மத நம்பிக்கையில், எப்படி சந்தை கலாச்சாரம் வந்து சேர்ந்தது? இதை சிறிது விளக்கமாகவே பார்க்க வேண்டும். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை எப்படியாவது மதம் மாற்றி தன் மதத்தில் சேர்த்து விட வேண்டும்- என்று மதம் மாற்றுவதைய தர்மமாக ஒரு மதம் கொண்டால், அந்த மதம் மற்றும் அந்த மதத்தை சார்ந்த ஸ்தாபனங்கள் எப்படி நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவரும் ஆன்மீக கலாசார முறையிலிந்து மாறுபட்டு இருக்கும். இயங்கும் என்று பார்ப்போம்.

முதலில் மதம் மாற்றுவதே அந்த மதத்தின் தொழிலாக மாறும். அதிலிருந்து ஆன்மீகம் மறையும். பிறது அந்த தொழிலுக்கான குணங்கள் வழி, விதி முறைகள், அமைப்புகள் பயிற்சிகள், பயிற்சி பெற்ற ஊழியர்கள், பிரசுரங்கள் மற்ற மதத்தைப் பற்றிய இழிவான எண்ணத்தை தங்கள் மனதிலும், தங்களுடைய மத்தை சேர்ந்தவர்களின் மனதிலும் ஏற்படுத்துவது; இது போன்ற பெரிய திட்டத்திற்கான பணம், நெருக்கம், பணப்புழக்கம்... இப்படியெல்லாம் பிரம்மாண்டமான போட்டி தயாரிப்புகள் எல்லாமே, இந்த மதத்தின் ஆத்மாவிலும் வழிமுறைகளிலும் புகுந்து விடுகிறது. இப்படித்தான் மதம் என்பது வியாபார பொருளாகிறது. மத ஸ்தாபனங்கள், வியாபார ஸ்தாபனங்கள் ஆகின்றன.

சந்தையில் வியாபாரிகளுக்கிடையே எப்படி பொறாமை, போட்டி, சதி, ஒருவர் மற்றவரை குறை சொல்வது மற்றவர்களின் பொருள் பற்றி இழிவாகப் பேசுவது என்பவை சர்வ சாதாரணமாக ஆகிறதோ, அதேபோல் மதங்களுக்கிடையே அதீத உறவு முறைகள் பரவுகின்றன. ஒரு மதம் இந்த சந்தை கலாச்சாரத்தை கண்டு பிடித்தால், மற்ற மதங்களும் அதையே செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஒரு துளி விஷம் கலந்தால் எப்படி ஒரு குடம் பாலும் விஷமாகிறதோ, அதுபோல ஒரு மதம் சந்தை கலாச்சாரத்தை கடைபிடித்தால், அந்த விஷம் எல்லா மதங்களுக்கும் பரவுகிறது.

பின்னர், வியாபாரிகள் எப்படி பிறருடைய வாடிக்கைக்காரர்களைத் தம்மிடம் இழுப்பது என்பது பற்றியே சிந்தித்து, அதற்கான விதிமுறைகளை, விளம்பரங்களை கையாள்கிறார்களோ அதேபோல் மத ஸ்தாபனங்கள் தங்களுடைய மதத்திற்கு மக்களை ஈர்க்கவும், வந்தவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் - அதற்காக எது செய்தாலும் அது தர்மமே என்றும் - அந்த வியாபார முறைகளை எல்லாம் மதத்தின் தார்மீக முறைகளாக அங்கீகரித்து அனுசரிக்கின்றனர்.

இதனால்தான் மதங்கள் வியாபாரம் போல சந்தை கலாசாரத்திற்கு ஆளாகின்றன. விளைவு மதமாற்றம். மதம் (அல்லது கடவுளே கூட) வியாபார பொருளாக ஆகிவிடுகின்றது. அதாவது மதத்தைவிட மதமாற்றம் முக்கியமாகிவிடுகின்றது. மதத்தின் அடிப்படை நம்பிக்கைகளைவிட, அதனால் ஏற்படவேண்டிய குணங்களை விட, ஏன் ஆன்மீகத்தின் வளர்ச்சியைவிட, நம் மதத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது, அதாவது ஆன்மீகத்தைவிட எத்தனை தலைகள் என்கிற எண்ணிக்கைதான் முக்கியமாகி விடுகிறது.

மற்ற மதங்களைப் பற்றித் தவறான, தாழ்வான எண்ணம் இல்லாமல், அப்படிப்பட்ட எண்ணங்களைத் தன்னுடைய அமைப்பைச் சார்ந்தரவர்கள் மனதில் உருவாக்காமல், மந்தையாகவோ அல்லது மற்ற பெரிய அளவிலோ மதம் மாற்றுவது என்பது இயலாத காரியம். அதாவது எல்லா மதங்களும் சமமே என்று நினைக்கும் எந்த மதமும், மதம் மாற்றுதலில் ஈடுபடாது. என்னுடைய மதம் உயர்ந்த மதம் என்று நினைப்பது தவறல்ல. ஆனால் மற்றவர்கள் மதம் காட்டுமிராண்டு மதம், அதை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நினைப்பதிலேதான் தீவிரவாதம் வளருகிறது; வன்முறை பிறக்கிறது.

மேலும், பிற மதங்களிலிருந்து எப்படி ஆள் பிடிப்பது, அவர்களை எப்படித் தன் மதத்திற்குக் கொண்டுவருவது என்பன போன்ற நடவடிக்கையெல்லாம், மதத்தை வியாபாரமாக்குவது மட்டுமல்லாமல், அரசியலாக்கவும் செய்கிறது! ஆள் சேர்பதற்கு அரசியல் கட்சிகள் என்ன செய்கின்ற்னவோ, அதையே மதங்களும் செய்யவேண்டி வருகிறது. இப்படித்தான் தெய்வங்கள், மார்க்கெட்டிற்கு, சந்தைக்கு இழுக்கப்படுகிறார்கள். இதைத்தான் தன் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசும்போது ஜெயலலிதாவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மதம் மாறுவது தவறு!

எப்படியாவது மற்றவரை மதம் மாற்றிவிடவேண்டும் என்கிறா வெறி ஒரு பக்கம் இருக்க மதம் மாறுவது, மதம் மாற்றுவது பற்றி ஹிந்து தர்மத்தின் நிலை என்ன? கிறிஸ்துவ மதத்திற்கும், ஹிந்து தர்மம் அது சார்ந்த மற்ற மதங்களுக்கும் எதிர்மாறான நிலைகள். ஹிந்து மதத்தின் புராதனமான நிலையை சிருங்கேரி சங்கராச்சாரியராக இருந்த சந்திரசேகர பாரதி (இப்போதைய மகா சன்னிதானத்தின் குருவின் குரு) அவர்களுக்கும், கிறிஸ்துவரான ஒரு வெள்ளைக்காரருக்கும் நடந்த சம்பாஷணை மூலம் அறியலாம்.

அந்த கிறிஸ்துவர், தான் ஹிந்துவாக மாறவேண்டும் என்று விரும்பி சங்கராச்சாரியை வழிகேட்டபோது, சந்திரசேகர பாரதி கூறியது (சுருக்கமாக) இதுதான். "நீங்கள் உங்கள் மதத்திலிருந்து மாறவேண்டும் என்று நினைப்பதே தவறு. உங்கள் மதத்திலிருந்து கொண்டே, அந்த நம்பிக்கையைப் பின்பற்றியே, ஹிந்து மதத்தின் மூலமாக எந்த நிலையை அடையவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை அடைய முடியும்" என்று கூறி, அவரை கிறிஸ்துவராகவே இருக்கும்படி வேண்டினார் சங்கராச்சாரியார். அதாவது மதம் மாறுவதே தவறு என்று நினைக்கும் ஒரு மதம், அதில் மதமாற்றம் என்னும் பேச்சுக்கே இடமில்லை; ஆனால் மறுபுறமோ மதமாற்றத்தையே கடமையாக்கிக் கொண்டுள்ள ஒரு மதம். இதனால்தான் ஹிந்து ஸ்தாபனங்கள் கட்டாய மதமாற்றத் தடையை வரவேற்கின்றன; கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் எதிர்க்கின்றன.

இப்போது ஹிந்துவாக மதம் மாறுவது என்பதெல்லாம் ஹிந்து ஸ்தானங்கள் தற்காப்பு நடவடிக்கையாகச் செய்கின்றனவே தவிர, மற்ற மதத்தை அங்கீகரிக்கும் எந்த ம்தமும், மற்ற மதத்தை மதிக்கும் எந்த மதமும், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடவே முடியாது. மதமாற்றுவதை மத நம்பிக்கையாகக் கொண்டால் அது மதவெறியாகிறது. கிறிஸ்துவ மத ஸ்தானங்களுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலை இதுதான்.

மதமாற்றத்தைத் தடுக்காவிட்டால்...?

மதமாற்றம் செய்யவில்லை என்றால் பாவம் என்கிற அளவில் கிறிஸ்த்ஹுவ மத ஸ்த்ஹாபனங்கள் செயல்படுகிறபோது, எப்படியாவது கிறிஸ்துவரல்லாதவர்களை மதம் மாற்றி, கிறிஸ்துவர்களாக அக்கவேண்டியது தங்களுடைய தர்மம் என்று தீவிரவாதமாக, அந்தப் பல நிறுவனங்கள் மதமாற்றம் செய்யும்போது, எங்கிருந்து வந்தது சிறுபான்மை உரிமை?

இந்த மைனாரிட்டி ஸ்தாபனங்களுக்குப் பின் மறைந்துகிடக்கும் அளவிட முடியாத சக்தியை, பணபலத்தை, ஆள்பலத்தை, அரசியல் பலத்தைக் கொஞ்சம் பார்ப்போம். இவர்களுக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான மதமாற்றும் இயந்திரம் - உலகளாவிய மத மாற்றும் ராணுவம் இருந்துகொண்டு, மதமாற்றம் செய்ய உலகையே கிறிஸ்துவ மதமயமாக்க உந்துகிறது - இந்த உலகம் தழுவிய மதமாற்றும் இயந்திரமான அகில உலக கிறிஸ்துவ சர்ச்சுகள்.

ரூபாய் 7,50,000 கோடி. இந்த சர்ச்சுகளுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் உழு நேர ஊழியர்கள். இந்த எண்ணிக்கை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்த சர்ச்சுகள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்சுகள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டுபிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல். நம்பமுடிகிறதா? எத்தனை பல்கலைக்கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? 1500 பல்கலைக்கழகங்கள். எத்தனை ரஸர்ச் நிறுவனங்கள்? 930க்கும் மேல்.

உலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை. தவிர மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989ல். அதாவது 13 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம். அதற்குப் பிறகு, கம்யூனிஸ்ட் நாடுகளெல்லாம் கிறிஸ்துவ நாடுகளாக மாறி, சர்ச்சுகளுக்கு மேலும் மவுசும், பணமும் வசதிகளும் பெரியிருக்கிறது. இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே, இந்த உலகம் தழுவிய மதமாற்றம் செய்யும் ராணுவம், உலகிலேயே பெரிய ராணுவம், சினாவின் சிவப்பு சாட்டை ராணுவம். நீங்கலாக, பணத்தளவில் இது உலகிலேயே மிகப்பெரிய பன்னாட்டுக் கம்பெனிகளில் ஒன்று.

இன்னொரு விஷயம். வெளிநாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சர்ச்தான் பிரதானமாகச் செயல்படும். ஒரு சர்ச் சென்றால் ஒரு நாட்டின் சர்ச் என்று அர்த்தம். ஒரு நாட்டின் அரசியலையும் அதன் சர்ச்சையும் பிரிக்க முடியாது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் சர்ச்சை, தன் நாட்டுக்குள் அனுமதிக்காது. இது பலருக்குத் தெரியவே தெரியாது. ஏனென்றால் கிறிஸ்துவ மதம் ஒன்றாக இருந்தாலும், சர்ச் அமைப்பு அந்தந்த நாட்டின் அரசியலையும், அரசாங்கத்தையும் சார்ந்து செயல்படுவதால், ஒரு நாட்டின் சர்ச்சை, அடுத்த நாடு அனுமதிக்காது.

உதாரணமாக, கிரேக்க நாட்டில் orthodox சர்ச் மாத்திரம்தான் பிரதானமான சர். அந்த நாட்டில் அந்த சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு, அதாவது கிறிஸ்துவ மதத்திற்குள்ளேயே மாறுவதையே, மதமாற்றம் என்று அந்த நாட்டு அரசியல் சாஸனப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. காரணம், வேறு நாட்டு சர்ச் வந்தால் அந்த நாட்டு அரசியலும் வரும் என்கிற காரணம்தான். ரஷ்ய orthodox சர்ச்சிலும் இதே நிலைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. லூத்ரன் சர்ச் ஜெர்மனியைச் சார்ந்தது. Bapist சர்ச் அமெரிக்காவைச் சார்ந்தது. Anglican சர்ச் இங்கிலாந்தைச் சார்ந்தது. இப்படி கூறிக்கொண்டே போகலாம். எல்லா சர்ச்சுகளுக்கும் கிறிஸ்துவம் பொதுவாக இருந்தாலும், அந்தந்த நாட்டின் நலனையும் அரசியல் தத்துவத்தையும் நாடியே செயல்படும்.

இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளாமல் நமது நாட்டு அறிவு ஜீவுகளும், போலி மதச்சார்பின்மைத் தலைவர்களும், கட்சிகளும் உலகிலுள்ள எல்லா சர்ச்சுகளையும் நம் நாட்டில் அனுமதித்து, அவை ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்றம் செய்யவகை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, நம் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இருந்த வரை, இங்கிலாந்தினுடைய Anglican சர்ச் மாத்திரம்தான் பிரதானமாக அனுமதிக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. நமது மதச்சார்பில்லாத அரசாங்கம் வந்தவுடன், உலகிலுள்ள மற்றஎல்லா நாடுகளின் சர்ச்சுகளும் இங்கு அனுமதிக்கப்பட்டு - ரோமன் கத்தோலிக்க சர், அமெரிக்காவின் Bapist சர்ச், ஜெர்மனியின் லூத்ரன் சர்ச், பெந்தகோஸ்டல் சர்ச் போன்ற மிகத் தீவிரமாக மதமாற்றம் செய்யும் உலகிலுள்ள சர்ச் அமைப்புகள் எல்லாம் அங்கு சென்று, அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு, நம் நாட்டு மலைவாசிகள் - அமெரிக்க வனவாசிகளை கி.பி.1900 வரை கிறிஸ்துவ அமைப்புகள் வேட்டையாடியது போல கிறிஸ்துவர்களாக மதம்மாற்றினர்.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இன்று நாகாலாந்து (பெயரைப் பாருங்கள், 'இங்கிலாந்து' போல்), மிஜோரம் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களும் முழு கிறிஸ்துவ மாநிலங்களாக மாறிவிட்டன. மிஜோரத்தில் காங்கிரஸ் கட்சியின் 1987அம் ஆண்டு அறிக்கையில், கிறிஸ்துவின் ஆட்சி அமைப்போம் என்று அறிவித்தது. இதுவும் செக்யூலரிஸம்! இந்த அர்த்தமற்ற மதச்சார்பில்லா நெறியை நம்மால்தான் கடைப்பிடிக்க முடியும். இந்த மாநிலங்கள் கிறிஸ்துவ மெஜாரிட்டி அல்லது முழு கிறிஸ்துவ மாநிலங்களாக மாறிய பிறகு, அவர்கள் நம் நாட்டிலிருந்து பிரிந்து செல்ல முயற்சி செய்தார்கள்.

நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை அங்குப் பல சர்ச்சுகள் தூண்டிவிட்டு, வெளீநாட்டிலிருந்து பணமும், துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் சப்ளை செய்து, நாட்டையே துண்டாடும் முயற்சியில் கூட ஈடுபட்டார்கள். இன்னும்கூட செய்துகொண்டிருக்கிறார்கள். நாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய இந்த போலி மதச்சார்பின்மை என்கிற அர்த்தமில்லாத கொள்கையை, ஓட்டுக்காகவே கடைப்பிடித்து, நம் கழுத்தில் நாம் சுருக்குப் போட்டுக் கொள்வது போல நாம் இன்றுவரை செயல்பட்டு வருகி|றோம். ஓட்டுக்காகவே அரசியல் கட்சிகள் அனுசரிக்கும் இந்தப் போலி மதச்சார்பினை ஒன்றே போதும் நம் நாட்டுக்கு வேட்டு வைப்பதற்கு.

அதற்குமேலும் பாருங்கள். இந்த மத மாற்றம் அகில உலக மத ராணுவத்தின் இந்தியக் கிளை எப்படியிருக்கிறது என்று! லட்சத்திற்கும் மேற்பட்ட மதம் மாற்றும் ஊழியர்கள் (evangelists) எங்களிடம் இருக்கிறார்கள் - இப்படிக் கூறுகிறது ஒரு சர். முழுநேர ஊழியர்களின் அமைப்புகள் 420லிருந்து 2041ஆக 19 ஆண்டுகளில் உயர்ந்திருக்கிறது - அதாவது 700 சதவிகித வளர்ச்சி. இதுவும் ஒரு சர்ச்சின் பிரலாபம். 'கி.பி. 2000ஆம் ஆண்டு, 2000 சர்ச்சுகளை மைப்போம்' - இப்படியொரு சர்ச் கூறுகிறது. தமிழ்நாட்டில் சர்ச் இல்லாத இடத்தில் 1000 சர்ச்சுகள் அமைப்போம் - இப்படி இன்னொன்று சொல்கிறது. இந்த இந்தியக் கிளை அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்களிலிருந்து வருகிறது. இதற்குச் சரியாகக் கணக்குக் கேட்கக்கூட நம்முடைய போலி மதச்சார்பற்ற அரசுகளுக்குத் திராணி கிடையாது. இப்படிப் பணம் வாங்கும் இந்திய சர்ச்சுகள் வெளிநாட்டு சர்ச்சுகளுக்கு கொத்தடிமை போலத்தான் செயல்படவேண்டும், செயல்படுகின்றன.

இந்த கிறிஸ்துவ உலக ராணுவத்தின் இந்தியப் பிரதிநிதிகள் எப்படிப் பேசுகிறார்கள், பார்க்கலாமா? "பாரத நாடு முழுவதும் மதம் மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆண்டுகளுக்கு - அதாவது 1971வரையில் உயர்ந்து வந்தது. ஆனால் அதற்குப் பிறகு மதமாற்றம் குறைந்திருக்கிறது" என்று அங்கலாய்ப்பு வேறு. "இதற்கு விதிவிலக்கு வடகிழக்குப் பகுதிதான். அங்குதான் தொடர்ந்து மதமாற்றம் அதிகமாகிக்கொண்டே போகிறது" என்ற பெருமை. "மிகப்பெரிய அளவில் மந்தையானமதமாற்றம் தலித் மக்கள் மத்தியில் நடந்த பிறாகு - அவர்களை மதம் மாற்றுவது குறாஇந்திருக்கிறது" -என்ற ஏக்கம். இவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகளைப் பாருங்கள் - '100 ஆண்டுகள் சீராக உயர்ந்த மதமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை' 'தொடர்ந்து அதிகமாகும் மதமாற்றம்' 'மந்தையான மதமாற்றம்' (Mass conversion.) பயந்து நடுங்கும் சிறுபான்மையினரின் வார்த்தைகளா இவை? சிந்தியுங்கள்.

இந்த ஆக்கிரமிப்பு செய்யும் படை போல, உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் செயல்படுவதைப் பார்த்து, பிரபல எழுத்தாளர் அருண்ஷோரி அவர்கள் Mass Conversion in India என்கிற புத்தகத்தில், இந்த முறைகள் அமெரிக்க, ராணுவ அமைப்பான பென்டாகன் (Penfagon) தீட்டும் திட்டம் போன் இருக்கிறதே தவிர, ஓர் ஆன்மீக அமைப்பின் வழி முறையாகத் தெரியவில்லை என்று கூறுகிறார். இவ்வளவு பிரம்மாண்டமான உலக சர்ச் நிறுவனங்களின் முழு ஆதரவு கெ஡ண்ட நம் நாட்டு கிறிஸ்துவ நிறுவனங்களின் முழு ஆதரவு கொண்ட நம் நாட்டு கிறிஸ்துவ நிறுவனங்களா, திக்கற்ற மைனாரிட்டி அமைப்புகள்? உலகிலுள்ள பணக்கார நாடுகளெல்லாம் ஆதரிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள் நமது ஆதரவு நாடும் சிறுபான்மை அமைப்புகள்? எங்காவது கிறிஸ்துவர் மீது ஒரு கல் விழூந்தால், நம் நாட்டில் கிறிஸ்துவர்கள் கொல்லப்படுகிற஡ர்கள் என்று கிறிஸ்துவ உலகம் முழுவதும் குரல் எழுப்பி நமது நாட்டையே கதி கலங்க வைக்கும். நமமு நாட்டின் மானத்தைக் கப்பலேற்றக் கூடிய சக்தி படைத்த இந்த கிறிஸ்துவ நிறுவனங்களா, நமது நாட்டின் ஆதரவை நம்பியிருக்கும் மைனாரிட்டி அமைப்புகள்? இல்லவேயில்லை. கிறிஸ்துவ அமைப்புகளைப் பார்த்து பயப்படாத உலக நாடுகளே இல்லை. முஸ்லிம் நாடுகள் கூட பயப்படுகின்றன.

நமது போலி ஓட்டுப் போட்டியில் மயங்கியிருக்கும் மதச்சார்பற்ற அரசியலும், அரசியல் கட்சிகளும் தலைவர்களும் என்ன செய்ய முடியும்? கிறிஸ்துவ உலகத்தில்ன முழு ஆதரநவயும் கணக்கில்லாத பண உதவியையும் பெறும் நம் நாட்டிலிருக்கும்-ஆனால் வெளிநாட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் கிறிஸ்துவ ஸ்தாபனங்களை, நமது நாட்டு மைனாரிட்டி ஸ்தாபனங்கள் என்று கூறுவதே பொருத்தமில்லாதது. மைனாரிட்டி ஓட்டு மொத்த ஓட்டுக்கு, ஓரு மாற்று கண்டுபிடித்தாலொழிய, நம்முடைய மிரண்டு கிடக்கும் அரசியலை மீட்கவே வழியில்நல. இதுதான் இன்று ஆன்மீக ஹிந்துக்களை அரசியல் ஹிந்துக்களாகவும், ஹிந்து அமைப்புகளாகவும் மாற்றிக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கு இருக்கும் கிறிஸ்துவ பாதிரிமார்களும், குருமார்களும் ஏன் குரல் எழுப்புகிறார்கள்? எதற்காக? தங்களுடைய மதத்தைப பரப்பும் உரிமை வேண்டியா? அல்லது மற்ற மதங்களை அழிப்பதற்கான அதிகாரத்தை வேண்டியா? உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் சரித்திரத்தைப் பார்த்தால், மற்றவர்களை அழிப்பதற்குத்தான் அவர்கள் அதிகாரம் வேண்டுகிறார்கள் என்பது தெரியவரும். இப்படித்தான் உலக கிறிஸ்துவ ஸ்தாபனங்கள் பல மக்களையும் கலாச்சாரங்களையும் பூண்டோ டு அழித்தார்கள். இது சரித்திர பூர்வமான உண்மை.

அமெரிக்கா பற்றி பார்த்தோம். இப்போது கிறிஸ்துவ ஸ்தாபனங்களின் 200 ஆண்டு பணியினால், கோடானு கோடி பழங்குடியினர் அழிக்கப்பட்டு, அமெரிக்கா ஒரு வெள்ளைக்கார நாடாக, ஏன் ஒரு முழு கிறிஸ்துவ நாடாகவே திகழ்கிறது. ஐரோப்பாவில் பழங்குடியினர் முழுவதாக அழிக்கப்பட்டனர். இன்று தென் அமெரிக்காவில் 97 சதவிகிதம் கிறிஸ்துவர்கள்தாம். அங்குள்ள பழங்குடியினரின் கலாச்சாரமும் முழுமையாக அழிக்கப்பட்டது. வீழ்ந்த ஧ராமானிய, கிரேக்க கலாச்சாரமும் அழிந்தன. பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 சதவிகிதம், கொரியாவில் 32 சதவிகிதம், ஆஃப்ரிக்காவில் 52 சதவிகிதம் கிறிஸ்துவர்கள். இவர்கள் பலரின் கலாசாரங்கள் மியூசியத்திலும், லைப்ரரியிலும்தான் இருக்கிறது: உயிருடன் இல்லை.முகலாயர்கள் காலத்திலும் சரி, வெள்ளைக்கார ஆட்சியிலும் சரி, தப்பித்த நமது மதமும், கலாச்சாரமும் இந்த மேற்கு நாடுகளின் பூரண ஆதரவுடன் செயல்படும். மதமாற்றும் உலக சக்திகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டம் போன்ற சட்டங்கள் தேவை. அது தவிர, ஹிந்து மக்களிடையே விழிப்புணர்ச்சியும் தேவை. இந்த அகில உலக மதமாற்றும் அமைப்புகளின் சக்தியை எதிர்க்கொண்டு வெற்றியடைந்து, நமது கலாச்சாரத்தை காப்பாற்றாவிட்டால், நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் (அந்த அழிந்த கலாசாரங்கள் போல) மியூசியத்திலும், லைப்ரரியிலும் தான் காண முடியும். இவைதானம் ந஡ம் வரலாறு மூலமாக அறியும் பாடம். நாம் இதை அறிய, மறுத்தால் நாமும் மியூசியத்திற்குச் செல்ல வேண்டியதுதான்.

( நன்றி: தண்ணீர் விட்டோ வளர்த்தோம், பாகம்-1, அலையன்ஸ் பதிப்பகம் )

Read More...