பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 24, 2008

பெருமாள் கலைஞர்தான் !

'பெருமாள்' கேசட் வெளியிட்டு விழாவில் கலைஞர் பெருமாள் பற்றி பேசியுள்ளார் அதை ஜெயா டிவியில் நேற்று போட்டார்கள் என்றூ கமெண்டில் ஒருவர் கேட்டிருந்தார். நான் இப்பொழுது எல்லாம் சன் டிவி பார்ப்பதால் அதை மிஸ் செய்துவிட்டேன். சரி என்ன தான் பேசியுள்ளார் என்று தேடியதில் கிடைத்த செய்திகள் படங்கள் இங்கே.....

`பெருமாள்'
விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேச்சு:

சென்சார் சங்கடம்

இந்த காலத்தில் தணிக்கை என்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. திரைத் துறையில் ஆரம்ப காலத்தில் நான் கதை வசனம் எழுதுகின்றவனாக 75, 80 படங்களுக்கு எழுதியிருக்கிறேன். என்றாலும் கூட தொடக்க காலத்திலே 1957 பராசக்தி வெளிவந்த காலத்தில் இருந்து, இந்த துறையிலே நான் அதிகமாக சங்கடப்பட்டது தணிக்கை அதிகாரிகளிடத்திலே தான்.

``திரும்பிப்பார்'' நடிகர் சிவாஜி கணேசன் நடித்த படம். அண்ணா சாலையில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் மேல் மாடியில் தணிக்கை அலுவலகம் இருந்தது. லிப்டும் கிடையாது. 5 மாடிகள் ஏறிச் செல்ல நூற்றுக்கணக்கான படிகளை கடந்து தான் செல்ல வேண்டும். அந்த படத்தை தணிக்கை செய்ய சென்ற போது தணிக்கை அதிகாரிகள் அந்த படத்தில் 4 ஆயிரம் அடி வெட்ட வேண்டும் என்றபோது, எந்தெந்த பகுதிகளை வெட்ட வேண்டும் என்பதற்காக நானும், டைரக்டர் காசிலிங்கம் மற்றும் நண்பர்கள் அந்த மாடிக்கு செல்ல ஒவ்வொரு நாளும் அத்தனை படிகளையும் கடந்து கொண்டிருந்தோம்.

ஒரு நாள் நான் தணிக்கை அதிகாரியிடம், இப்படி ஏறி வருவதை பார்த்துக் கூட உங்களுக்கு கருணை ஏற்படவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் திருப்பதி மலையில் ஏறிச் சென்றால் எவ்வளவு புண்ணியமோ, அதுபோல இங்கு ஏறி வருவதும் உங்களுக்கு புண்ணியம் தான் என்றார். என்னுடைய கொள்கையை உணர்ந்து என்னை கேலி செய்வதற்காக சொன்னார் அவர். உடனே நான், திருப்பதியிலும், இங்கேயும் ஒரே `ரிசல்ட்' தான் என்று கூறினேன்.

வசனத்திற்கு வெட்டு

அன்றைக்கு இருந்த ஜாம்பவான்கள் ஏவி.எம்.செட்டியார், டி.ஆர்.சுந்தரம், ஜூபிடர் சோமு போன்றவர்கள் எல்லாம் முயற்சித்து 4 ஆயிரம் அடி வெட்டினால் படம் எப்படி ஓடும், மிச்சம் என்ன இருக்கும் என்று கேட்டபின் 2 ஆயிரம் அடி வெட்டினார்கள்.

அந்த படத்தில் ஒரு வசனம் இடம்பெறக் கூடாது என்றார்கள். என்ன வசனம் என்றால் ``கொள்கை முழக்கம் செய்வதற்காக கோபுரம் ஏறி நிற்கும் தலைவர்களே, அந்த கொள்கையில் இருந்து எத்தனை முறை வழுக்கி விழுந்திருக்கிறீர்கள் என்று ஒரு முறை திரும்பிப் பாருங்கள்'' இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. சிவாஜி தீயவராக இருந்து கடைசியாக திருந்தி தானும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து, அதைப் போல மற்றவர்களும் திரும்பிப்பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுவது போல் எழுதப்பட்ட வசனம்.

இந்த உரையாடலை ஏன் வெட்ட வேண்டும் என்று தணிக்கை அதிகாரியை கேட்ட போது, ``ஒரு காலத்தில் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்திலே இருந்து வழுக்கி விழுந்தார். அவரைத் தான் நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள்'' என்றார். ராமானுஜர் விழுந்ததற்கும், கொள்கையில் இருந்து ஒருவன் தவறி விடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லியும் கூட கேட்கவில்லை, வெட்டி விட்டார்கள்.

சுதந்திரம் கிடைத்திருக்கிறது

நான் வசனம் எழுதுகின்ற எந்த படமாக இருந்தாலும் அது சென்சாருக்கு எப்போதும் தப்பியதில்லை. இப்போது படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது தைரியம் வருகிறது. சென்சார் என்று ஒன்றும் இல்லை, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை, நடப்பதைத் தானே காட்டுகிறார்கள், அதை ஏன் சென்சார் செய்ய வேண்டும் என்கின்ற அந்த அளவிற்கு இன்றைக்கு கலையுலகத்திலே ஒரு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அந்த சுதந்திரத்தை இவர்கள் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்கே படம் பார்த்தவர்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

தமிழனை நினைக்க வேண்டும்

பாக்கியராஜ் பேசும்போது, உளியின் ஓசை வரை எடுத்துச் சொல்லி, அவற்றிலே இன்னும் நான் எழுதுகின்ற வசனங்கள் உயிரோடு இருக்கின்றன என்பதை எடுத்துச் சொன்னார். நாளைய தினம் நடைபெற இருக்கின்ற உண்ணா நோன்பு போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டு அந்த உண்ணா நோன்பின் நோக்கத்தை நிறைவேற்ற எண்ணுகிறார்களோ, நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிலே உயிரோடு இருப்பவர்கள் தான். நேரடியாக கலந்து கொள்ளாவிட்டாலுங்கூட, அதைப் பற்றி நினைக்க வேண்டும். இன்றைக்கு தமிழனுக்கு தமிழ்நாட்டிலே பிறந்தவனுக்கு, தமிழகத்திலே வாழ வழியில்லாமல் பிற நாடுகளுக்குச் சென்றால் கூட, அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தமிழன் தத்தளிக்கிறானே, அந்தத் தமிழனைப் பற்றி நினைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கச் சொல்லிவிட்டு இவர் உற்சாக விழாவிற்கு சென்று விட்டார் என்று கூட நாளைக்கு எழுதலாம். அப்படி எழுதுவதைக் கூட - என்னைத் தாக்கி எழுதுவதைக் கூட - நான் இப்படி வந்தது தவறு என்று சொல்வதைக் கூட உங்களுக்காக நான் செய்கின்ற தியாகங்களிலே ஒன்று தான் அதைத் தாங்கிக் கொள்வது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பெயர்

பெருமாள்' படத்தின் பாடல் காட்சி இங்கு போட்டுக் காட்டப்பட்டது. "பெருமாள்' இப்படிபட்ட காட்சிகளைத் தான் விரும்பியிருக்கிறார் என்று புராணங்களில் படித்திருக்கிறேன்; படங்களில் பார்த்திருக்கிறேன்.

இந்தியாவிலே தமிழ்நாட்டிலே தான் வரியில்லாத திரைப்படம் - வரி அறவே ரத்து செய்யப்பட்ட திரைப்படத்தை காணுகிறீர்கள். ஒரு காலத்தில் ராஜாஜி மண்டபத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கட்டினால் தான் நீங்கள் உள்ளே நுழைந்து ஷூட்டிங் எடுக்க முடியும் என்றிருந்தது. இப்போது ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் என்கின்ற அளவிற்கு சலுகைகள் செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்வளவிற்கும் பிறகு நான் என்ன உங்களைக் கேட்கிறேன். தயவு செய்து திரைப்படத்தை தமிழ்ப் பெயரைச் சூட்டி எடுங்கள் என்று கேட்கிறேன். இதுகூடக் கேட்கக் கூடாதா? அப்படி கேட்பதும் சாதாரணமாக அல்ல. தமிழ்ப் பெயரை வைத்து நீங்கள் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பீர்களானால், அதற்கு வரி ரத்து என்று ஒரு சலுகை கொடுத்துக் கேட்கிறேன். அப்படி தமிழுக்கு சலுகை அளித்தும் கூட, நண்பர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல தமிழிலே பெயர் இல்லாமல் வடமொழி பெயர், அல்லது ஆங்கிலப் பெயர் - ஒரு படத்திற்குப் பெயர் ``ஏ.பி.சி.டி.'' என்று வந்திருக்கிறது.

70 படங்களுக்கு இப்போது மானியத் தொகை அளிக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும். அந்த 70 படங்களில் 35 படங்கள் ஒரு பகுதி, இன்னொரு 35 படங்கள் மற்றொரு பகுதி - முதல் பகுதியில் இடம்பெற்ற 35 படங்களை ஏற்கனவே நம்முடைய நீதிபதிகளும் மற்றும் கலையுலக நண்பர்களும் உறுப்பினர்களாக ஆராய்ந்து அறிவித்த படங்களின் பெயர்கள். அதிலே 10 படங்களாவது தமிழிலே இல்லாத படங்கள். ஆனால் மானியம் கொடுக்க வேண்டுமே என்பதற்காக அவர்களுக்கெல்லாம் மானியம் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலாவது - இந்த மானியத்திற்கு எடுக்கின்ற படங்கள் தனித் தமிழ் பெயரிலே இருக்க வேண்டுமென்று சொல்ல மாட்டேன், குறைந்த பட்சம் தமிழ் என்று நினைக்கின்ற அளவிற்காகவது அந்தப் படங்களின் பெயர்களை அமைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலே தமிழிலேயே படம் எடுப்போம், தமிழிலேயே பெயர் வைப்போம் தமிழ்ப் பண்பாட்டைக் காப்போம் என்கிற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்னுடைய ஒத்துழைப்பு, இந்த அரசின் ஒத்துழைப்பு நிரந்தரமாக உங்களுக்கு இருக்கும்.

பேரனை வாழ்த்துவது ஆபத்தானது

என்னுடைய பேரன் அறிவுநிதியையும் வாழ்த்துகின்றேன். இப்போது பேரனையெல்லாம் வாழ்த்துவது ரொம்ப ஆபத்தானது, இருந்தாலும் கூட இந்தப் பேரன் அப்படி நடக்க மாட்டான் என்ற நம்பிக்கையோடு இந்தப் பேரன் நல்ல முறையிலே எதிர்காலத்தில் வாழ்வான், வாழ வேண்டும், என்னுடைய நிலையில் அவன் ஒருவனாவது என் பெயரைச் சொல்வான் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

ராம.நாராயணன்-பாக்யராஜ்

விழாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கி பேசும்போது, ``கலைஞர் சம்பாதித்த பணத்தை எல்லாம் கலை உலகுக்கே திருப்பி கொடுக்கிறார். `உளியின் ஓசை' படத்துக்காக அவருக்கு கிடைத்த சம்பளத்தை, நலிந்த கலைஞர்களுக்காக திருப்பிக் கொடுத்து விட்டார். அதுபோல் மண்ணின் மைந்தன், கண்ணம்மா ஆகிய இரண்டு படங்களுக்கும் கிடைத்த சம்பளத்தை சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுத்து விட்டார். எங்களுக்கு உண்மையிலேயே பெருமாள், கலைஞர்தான்'' என்றார்.

விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ்

தமிழில் பெயர் வைத்தால் வரி சலுகை என்று கலைஞர் அறிவித்த பிறகுதான் நல்ல தமிழ் பெயர்களை கொண்ட படங்கள் வருகிறது. அவரை சினிமா விழாக்களில் பார்ப்பது, கூடுதல் சந்தோஷத்தை தருகிறது.

`உளியின் ஓசை' படத்தில் அவர் எழுதிய வசனங்களில் இளமையும், குன்றாத அதே துடிப்பும் வற்றாத ஜீவநதியாக இருந்தது. அந்த கதையை நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன். அது ஒரு சிறுகதை அளவுக்குத்தான் இருந்தது. அதை எப்படி முழுமையான படமாக கொண்டுவர முடியும்? என்று நினைத்தேன். கலைஞர் எந்த அளவுக்கு சிந்திக்கிறார்? என்பதை, அந்த படத்தை பார்த்தபோது புரிந்துகொண்டேன்.

பிகு:
=> "கோயில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது" -1952-ல் வெளியான ‘பராசக்தி’

=> "பறக்கத் தெரியும் என்பதற்காக சூரியனில் பாயக்கூடாது" -2008-ல் வெளியான ‘உளியின் ஓசை’விழா காட்சிகள்

தமிழ் நாட்டுக்கு நீங்க கொஞ்சம் மின்சாரம் தர முடியுமா ?
திமுக விழான்னு சொன்னாங்க அதனால் அதான் இந்த காஸ்டியூம்.

பட காட்சிகள்
[
"பெருமாள்' இப்படிபட்ட காட்சிகளைத் தான் விரும்பியிருக்கிறார் என்று புராணங்களில் படித்திருக்கிறேன்.- கலைஞர்


பெருமாளுக்கு கிடைத்த காட்சிகள் சில, இட்லிவடை வாசகர்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தில்.. கீழே நமிதா காட்சிகள்...


( நன்றி: தினத்தந்தி, தினமலர், முரசொலி, Indiaglitz, suleka and Namitha )

7 Comments:

இரா. வசந்த குமார். said...

Mr(s)(இந்த வந்து ப்ளூரல்க்குங்க)... IdlyVadai...

நீங்க ரொம்ப காலமா பதிவுகள் இடறீங்க. உங்க வலைப்பதிவை நிறைய பேர் பாக்கறோம். புதுசா வர்றவங்களும் கண்டிப்பா உங்களை பார்க்காம இருக்க முடியாது. நமக்கு அரசியலும், சினிமாவும், அரசியல்ல சினிமாவும், சினிமாவில் அரசியலும் இல்லாம இருந்தா வாழ்க்கையே ஸ்தம்பிச்சிடும்.

உங்க வலைப்பதிவுல ஒவ்வொரு தடவை பார்க்கும் போதும் பிக்சர்ஸ் மாறி மாறி வருது. நல்லா இருக்கு. ஆனா அதுக்கெல்லாம் ஒரு சின்ன நன்றி கீழ போட்டா நல்லா , ஒரு எதிக்ஸா இருக்கும்னு நினைக்கிறேன்.

ஒரு தடவை சிலம்பரசனோட 'போடா போடி' ஸ்டில்ல இட்லிவடை வருது. அதுக்கு கீழ சின்னதா 'நன்றி ::' அப்டின்னு சொல்லி ஒரு லிங்க் குடுத்து விட்டீங்கனா, நல்லாயிருக்கும்னு படுது.

ஏன்னா கிரியேட்டிவ் ஆளுங்களுக்குத் தெரியாம நாம அதை யூஸ் பண்ணினாலும், ஒரு தேங்ஸ் எல்லோரையும் திருப்திபடுத்திடும் இல்லையா?

நன்றி.

Anonymous said...

Jalranna adhu Ramanarayan and Bagyarajkku athupadi ayiduchu...Ippadi Jaalra podranga...2perum.
Oru hindhu vaga irunthukondu...MK va poi PERUMAL nu sollirukane...idiot...!

Anonymous said...

This is ok why there is no post about serial killings in chennai???Please post

Thanks

V RadhakrishnaN

ப்ரியா கதிரவன் said...

//`உளியின் ஓசை' படத்துக்காக அவருக்கு கிடைத்த சம்பளத்தை, நலிந்த கலைஞர்களுக்காக திருப்பிக் கொடுத்து விட்டார்.

Romba perundhanmai.Pullarichuduchu.

IdlyVadai said...

//ஏன்னா கிரியேட்டிவ் ஆளுங்களுக்குத் தெரியாம நாம அதை யூஸ் பண்ணினாலும், ஒரு தேங்ஸ் எல்லோரையும் திருப்திபடுத்திடும் இல்லையா?//

நீங்க சொல்லுவது சரி. அவர்களுக்கு நன்றி என்று சைடில் போட்டிருக்கேன். நன்றி

Anonymous said...

பெருமாள் திரைப்படத்தை கலைஞர் டி.வியில் விரைவில் பார்க்கலாம் :).

உளியின் ஒசை படம் இன்னும் ஒடுகிறதா ?

Anonymous said...

நீங்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கையில் வெளிவந்த கருணாநிதி பேச்சுக்கும் ஜெயாடிவியில் காண்பித்த விடியோ க்ளிப்பிங்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஜெயா டிவி செய்தியாளர்கள் காண்பித்த கிளிப்பிங்கில் கருணாநிதி பேசியது கொஞ்சம் ஆபாசங்களை வரவேற்பது போலவே இருந்தது. அதை விடியோ எடுத்து உங்களுக்கு அனுப்பலாம் என இருந்தேன் ஆனால் முடியவில்லை. 'இப்படிப்பட்ட கிளுகிளு காட்சிகளை எடுத்தால் தான் இந்தக் கால இளைஞர்கள் ரசிப்பார்கள், தியேட்டருக்கு வருவார்கள் - அதனால் இம்மாதிரி நிறைய படங்கள் எடுக்கவும், இந்தப் படத்திற்கு பெருமாள் என பெயர் வைத்தது சரிதான். அவரும் இதுமாதிரி' என்பது போன்றம் முத்துக்களை உதிர்த்தார்.

ஜெயாடிவியும் திரையில் ஒரு பாதியில் நீங்கள் வெளியிட்டுள்ள படங்களையும் இன்னோரு பாதியில் கருணாநிதி அதைப் பார்த்து ரசித்தவாறே பேசுவதைப் போலவும் காட்டினார்கள். அந்த செய்திக்கான கமெண்டரியும் 'இந்துக்களை புண்படுத்துவது கருணாநிதிக்கு வழக்கமாகிவிட்டது' என்பது போல தயாரித்திருந்தனர்.