பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 10, 2008

SCV - RCV கயிறு இழுக்கும் போட்டி

ராயல் கேபிள் விஷன் ( நம்ம ரெட் ஜெயண்ட் மூவிஸ் மாதிரி இது எல்லாம் கூட தமிழ் வார்த்தை தான் கண்டுக்காதீங்க, ) என்ற நிறுவனத்தை நேற்று அழகிரி தொடங்கியுள்ளார்.

ராயல் கேபிள் விஷனை அழகிரி ஜிலு ஜிலுனு தொடங்கினாரா.. சுமங்கலி கேபிள் விஷனை ஒரு மாதிரி ஒரங்க்கட்டி மூலைல தள்ளி மூட வெச்சிடலாம்னு பார்ர்கிறார்.

மாறன் பிரதர்ஸ் கலைஞருடன் சுமுக உறவில் இருந்த அவர்களின் அந்த பொற்காலத்தில் சுமங்கலி என்ன ஆட்டம் போட்டதோ அதே ஆட்டம் இப்ப ராயல் போடுது..

எல்லா கேபிள் ஆபரேட்டர்ஸ்க்கும் ராயல ஆதரிக்க சொல்லி ரகசிய உத்தரவு போய்ருக்றதா பேச்சு

ராயல் மூலமா கணெக்‌ஷன் வாங்கினா சன் டீவி வராது, ஜெயா டீவி அதோட மாக்ஸ் ம்யூசிக், நியூஸ் சானல் எதுவுமே தெரியாது.. சன் டி வி யோட பிரபலம் காரணமா ராயல் சன் டிவியை காட்ட ஆரம்பிக்கும்னு பேசிக்றாங்க

மதுரை நெல்லை ஏரியாவில உள்ள சுமங்கலி பலத்தை அடியோட காலி பண்ண ராயல் கணக்கு பண்ணுது.. அத்தோட இதனால கலைஞர் டிவி பாப்புலர் ஆய்டும்னு கணக்கு பண்றாங்க..ஆரம்பிச்சு இத்தனை நாள்ல கலைஞர் டிவி அத்தனை ஒன்னும் பாப்புலர் ஆகல

இவங்க அடிக்கிற கூத்தில அரசு கேபிள் டிவி நடுவில மாட்டிக்கிச்சு.. ராயலுக்கு மரியாதையா தலை வணங்கி ராயல் இல்லாத இடமா அரசு கேபிள் டிவி வேலையை செய்ய்ம் போலத் தெரியுது.

9 Comments:

Anonymous said...

off topic..

People like Gnani assume they are a genius and think they can ink on anything without even understanding the core gist of things..

The chapter on Rajni was not for someone who redefined tamilcinema but onsomeone who became hero starting from a zero because of his hardwork...

God(of any religion) why dont you put some sense on people who write for 1000's of people...

Anonymous said...

http://www.rediff.com/news/2008/jun/10sun.htm

The Royal Cable Vision (RCV), a multiple system operator, was launched by Azhagiri's wife Kanthi in Madurai on Monday.

Soon after RCV was launched, reports from different parts of Madurai city said no cable network subscriber was able to tune into SUN TV.

RCV, however, claimed the network was launched after "deliberate attempts" by SCV to send weak signals of the "Kalaingar TV", named after Karunanidhi, which was launched in September last year following parting of ways between the Chief Minister and the Marans.

Meanwhile, RCV alleged that SUN TV was ignoring its request to provide their pay channels for viewers. Sun network, they charged, was deliberately delaying providing their channels to RCV.

With both RCV and SCV flexing muscles, many cable operators apprehend that real gainers would be the direct-to-home operators.

Anonymous said...

கேள்வி கந்தசாமி:

கமலின் ஒவ்வொரு படத்திற்கும் யாராவது சிலர் ஏதாவது தடை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனரே ? யார் இவர்கள் ? கமலுக்கு இண்டஸ்ட்ரியில் இவ்வாறு தடை ஏற்படுத்துவோர் யார் ? அவர்களுக்கு இதனால் என்ன லாபம் ?

யோசிப்பவர் said...

ரெட் ஜெயண்ட் அப்படின்னா "சரக்கு தீர்ந்து போன நட்சத்திரம்"னு அர்த்தம் வருதே. கவனிச்சீங்களா?!

Lucky said...

//

ராயல் கேபிள் விஷன் ( நம்ம ரெட் ஜெயண்ட் மூவிஸ் மாதிரி இது எல்லாம் கூட தமிழ் வார்த்தை தான் கண்டுக்காதீங்க, )

//

:) naaan kodda thought about the same...Tamil lla new words include aahi irrukaratthi patthi :)

Anonymous said...

'அவர்கள் உளறலுக்குக் காரணம் என்ன?'-கருணாநிதி

(ThatsTamil) - MK is back again using 'kudi' to term JJ.


சென்னை: கொள்ளையர்களை போலீசார் கைது செய்தால் அதைப் பாராட்டாமல்
சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக தூற்றித் திரிகின்றனர்.
உண்மையில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதா? அல்லது யாரோ
'ஊற்றிக் கொடுத்த' ஒன்று; இந்த உளறலுக்குக் காரணமா? என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கவிதை வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகப் போலீசார் ஒரு கொள்ளையை தடுத்தது மட்டுமல்லாமல்;
கொள்ளையர் நால்வரைக் கூண்டோடு கைது செய்தனர் என்றும்
துப்பாக்கிக் குண்டுகளைத் துப்பறியும் போலீசார்;
துருப்பிடித்த நிலையில் தோண்டியெடுத்தனர் என்றும்
ஏடுகளில் செய்திகள் வந்தால் போதும்;

நாடு காடாகி விட்டதென்றும்-
நாள்தோறும் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறதென்றும்
தேன் போலக் கொட்டித் தீர்க்கின்றார்; தேசப்பற்று மிக்கவர் போல!

பொல்லாத் திருடர்களை போக்கிலிகளின் கூட்டத்தாரை
போலீசார் வளைத்துப் பிடித்தனர் என்றால்; அவர்களைப்
போற்றிப் புகழ்தலன்றி கழக ஆட்சியை
தூற்றித் திரிகின்றார் எனும்போது

உண்மையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதா? அல்லது யாரோ;
ஊற்றிக் கொடுத்த ஒன்று; இந்த உளறலுக்குக் காரணமா?

காலிகளை, கயவர்களை, காவல்துறை கைது செய்து தண்டித்தால்
கை கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்காமல்-
கண்டனக் குரல் எழுப்பிச் சட்டம் ஒழுங்கு
கண்டபடி கெட்டு விட்டதென்று சாற்றுவது;
அரசியல் அசூயை அன்றி
அறிவுடையார் செயலல்லவே!

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.

We The People said...

ராயல் ஃபமிலி கலக்கறாங்க போல...

ராயல் என்டர்ப்ரைசஸ்
ராயல் கேபிள் விஷன்
ஒரே ராயல் தான் போல... தமிழகத்தின் முடி ஆட்சியாளர்களாகிவிட்டார்களோ!?

Unknown said...

//ராயல் ஃபமிலி கலக்கறாங்க போல...

ராயல் என்டர்ப்ரைசஸ்
ராயல் கேபிள் விஷன்
ஒரே ராயல் தான் போல... தமிழகத்தின் முடி ஆட்சியாளர்களாகிவிட்டார்களோ!?//

என்னிக்காவது ”ராயல் சாலன்ஞ்” வந்தால் மயக்கம் வரும்

Unknown said...

//ராயல் ஃபமிலி கலக்கறாங்க போல...

ராயல் என்டர்ப்ரைசஸ்
ராயல் கேபிள் விஷன்
ஒரே ராயல் தான் போல... தமிழகத்தின் முடி ஆட்சியாளர்களாகிவிட்டார்களோ!?//

என்னிக்காவது ”ராயல் சாலன்ஞ்” வந்தால் மயக்கம் வரும்