பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 05, 2008

ICUல் டிராபிக் ராமசாமி

ராயப்பேட்டை ஆஸ்பத்திரி ICUல் தற்போது டிராபிக் ராமசாமி இருக்கிறார். கடந்த மே 26 அன்று காலை 10.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தான் உண்ணாவிரதம், ஆனால் டிராபிக் ராமசாமி காலை 6 மணிக்கே வந்து அனும‌தி‌யி‌ல்லாம‌ல் உண்ணா விரதம் இருக்க முயன்றதாக சொல்லி போலீஸ் அவரை கைது செ‌ய்தது. பிறகு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

ICUவில் அரசுக்கு எதிராக சாகும் வரை உ‌ண்ணா‌விரத‌ம் இருக்கும் ராம்சாமி, நான் இங்கே மரணம் அடைந்தால் அது எனக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவேன். நான் அரசுக்கு எதிராக இதுவரை கோர்ட்டில் தான் மோதியிருக்கிறேன், ஆனால் அவர்கள் என்னிடம் நேராக மோதுகிறார்கள்.

ஒரு நாள் உண்ணா விரதம் என்றால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, அரசியல் தலைவர்கள் தான் காலை 10.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இருப்பார்கள், அதனால் தான் நான் 6 மணிக்கு சென்றேன் என்று சொல்லுகிறார் ராமசாமி.

கலைஞர் பிறந்த கொண்டாட்டங்களை எதிர்த்து கருப்பு கொடி ஏற்ற போவதாக சொல்லியதற்கு சில நட்களுக்கு முன் ராமசாமி மீது திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இன்னொரு கேஸ் அவர் மேல் போடப்பட்டது. ( மே 26 ராமசாமி கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் அதில்... ஆரம்பரமாக பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் வீட்டு முன்பு கருப்பு கொடி ஏற்ற போவதாக சொல்லியிருந்தார் )

ராமசாமி சொன்னது "ஒரு குடிமகன் என்ற முறையில் இதை எல்லாம் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்"

போலீஸ் கமிஷனர் சொன்னது "ராமசாமி தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இனிமேல் சட்டம் தனது கடமையை செய்யும்"

இட்லிவடை சொல்லுவது "சத்தியமேவே ஜெயதே"

3 Comments:

Anonymous said...

idlyvadayare ungal sarakku theernthuvittatha? nangalum paper
padippom. athanal neengal veru
pudiya seithigalai pathiyavum.

Anonymous said...

"வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் " ங்கற மாதிரி தான் இட்லி வடையோட சமீபத்திய பதிவுகளும்.. ஒண்ணும் ஸ்பெஷல் ஆக இல்லை.. எனவே பதிவு போடாமல் வெளி நடப்பு செய்கிறேன்..

Anonymous said...

"வர வர கழுதை @#$%*& போல ஆனாளாம்"

No suudu machi!!!!
Sathappan